வியாழன், 31 ஜனவரி, 2019

இதுதான் தாழ்த்தப்பட்டோர் நிலை

அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் கடைசி நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் பணியாளர் நலத்துறை விவரங்கள் குறித்து மத்திய அமைச்சர் மாண்புமிகு வி.நாராயணசாமி அவர்கள் நாடாளுமன்றத்தில் வெளியிட்ட புள்ளி விவரம் இதோ:


ஃ 149 உயர் அரசு செயலர் அலுவலர் பதவிகளில் தாழ்த்தப்பட்டவர் ஒருவர் கூட இல்லை.

ஃ கூடுதல் செயலாளர் பதவிகள் 108இல் 2 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர்.

ஃ 477 இணைச் செயலாளர்களில் 31 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் (6.5 விழுக்காடு) - கிடைக்க வேண்டியது 15%). 15 பேர் பழங்குடியினர் (3.1 விழுக்காடு) - கிடைக்க வேண்டியதோ 7.5%.

ஃ 500 இயக்குநர் பதவிகளில் 17 பேர் மட்டுமே தாழ்த்தப்பட்டோர் (2.9%) - கிடைக்க வேண்டியதோ 15%. பழங்குடியினர் 7 பேர் மட்டுமே (1.2%) - கிடைக்க வேண்டியதோ 7.5%.

நேரடியாக நிமிக்கப்பட்ட 3251 அய்.ஏ.எஸ். அதிகாரிகளில் 13.9 விழுக்காடு தாழ்த்தப்பட்டோர், 7.3 விழுக்காடு பழங்குடியினர். (இரு பிரிவினருக்கும் சட்டப்படி கிடைக்க வேண்டியதோ 22.5%).

சட்டப்படி கிடைக்க வேண்டியவர்களுக்குக் கிடைக்க வேண்டிய இடங்கள் கிடைக்கவில்லை. கிடைக்கக் கூடாதவர்களுக்கோ சட்ட விரோதமாக 10 விழுக்காடு இடஒதுக்கீடாம்!

-  விடுதலை ஞாயிறு மலர், 26.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக