* எத்தனையோ வட இந்தியத் தலைவர்களை தமிழக மக்கள் அவர்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அந்தத் தலைவர்களெல்லாம் தமிழர்களை எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்பதையோ (அ) அவர்கள் எப்படி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள் என்பதையோ நாம் கண்கூடாக அறிந்ததில்லை. ஆனால்வி.பி.சிங் ஒருவர்தான் தமிழர்களின் இதயத்தோடு மட்டுமல்லாமல் உணர்வுகளோடும் உரிமைகளோடும் ஒன்றாய் இணைந்தவர்.
* பல ஆண்டுகளாய் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு விடிவு கிடைக்காத வேளையில் தான் அங்கம் வகிக்கும் ஜனதா தளம் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் போதே "காவிரி நடுவர் மன்றம் " அமைக்க உத்தரவிட்டார். அதன் மூலம் தமிழக விவசாயிகளின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றார்.
* ஒரு முறை அவர் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று புலிகளை வைத்து அரசியல் முகவரி தேடியவர்களின் சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் புலிகள் பயங்கரவாதிகள் தானே? என்று வினா எழுப்பப்பட்டது. பளிச்சென்று வி.பி.சிங் "யார் யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்டு முத்திரை குத்த என்னிடம் அந்த ரப்பர் ஸ்டாம்ப் இல்லை" சொன்னார்.
* ஈழத்தை அமளிக் காடாக மாற்றி தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை திரும்பப் பெற்றார்.
* 1989ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 10 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய முன்னணி ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கி தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்தார். ராஜீவ் காலத்தில் இணை, துணை அமைச்சர்களாகத்தான் தமிழர்கள் இருந்தனர். அதிலும் அதிக M.P. தொகுதிகள் தந்தது
தமிழகமே.
* தமிழகத்தின் சமூக நீதித் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்டு பிற்பட்டோர்க்கான மண்டல் பரிந்துரையினை அமல்படுத்தினார். ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது அவர் ஆற்றிய அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புதமான உரை இன்று படித்தாலும் அவரின் ஆழ்ந்த சமூக நீதிக்கான புரிதலைத் தெரிந்து கொள்ளலாம்.
* மண்டலுக்கெதிரான அத்வானியின் ர(த்)த யாத்திரையை தடுத்து நிறுத்தி மத ரீதியான பதட்டத்தைத் தணித்தார்.
* சென்னை விமான நிலையத்தின் பெயர்களாக காமராஜர் மற்றும் அண்ணா பெயரைச் சூட்டி அழகு பார்த்தார்.
* அவரது ஆட்சிக் காலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு வந்தது. அவரது நூற்றாண்டை ஆண்டு முழுதும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்ததோடல்லாமல் அவரது நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உத்தரவிட்டார். பாரத ரத்னா என்ற விருதுக்கு உண்மையான அர்த்தம் Dr.அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுத்த போது தான் தெரிந்தது. 1989 நாடாளுமன்றத் தேர்தல் சுற்றுப் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலைகள் வைக்கப்பட்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
* அவரது 11 மாத ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு மாநில ஆட்சியையும் 356வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்காமல் உண்மையான ஜனநாயகம் மலரச் செய்தார்.
* கருப்புப் பணம், ஊழல், வெளிநாட்டில் பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு போன்றவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுத்தார்.அம்பானி, அமிதாப் பச்சன், வாடியா என்று யாரையும் இவர் ராஜீவ் ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்த போது விட்டு வைக்கவில்லை. பாதுகாப்பு மந்திரியான போது போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தார். இதனால் ராஜீவுக்கு இருந்த "Mr.Clean" என்ற பிம்பம் சரிந்தது,
* எந்தப் பதவியாக இருந்தாலும் தான் கொண்டுள்ள லட்சியத்தை அடையப் பயன்படுத்துவார். இல்லை எனில் விலகி விடுவார்.
* தேவகவுடா பிரதமர் பதவி விலகியவுடன் மற்ற தலைவர்கள் மீண்டும் வி.பி.சிங்கை பிரதமராக்க முனைந்த போது பிடிவாதமாக மறுத்தார். "நான் அரசியலுக்கு வந்ததன் நோக்கம் நூற்றாண்டுகளாக அரசியல், சமூக, பொருளாதார அதிகாரம் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றை வழங்குவதே ஆகும். அவர்கள் எதைக் கேட்கிறார்களோ, எதைப் பெறுகிறார்களோ அது அவர்களுக்கு நியாயமாக உரியது. அந்த சமூகத் தலைவர்கள் அதிகாரம் பெற்று அதைச் சிறப்பாகப் பயன்படுத்தும் போது என் வரலாற்றுப் பங்களிப்பு முழுமை பெறுகிறது. எனவே பதவி முக்கியமில்லை"என்றார்.
* ஆயிரக்கணக்காண டெல்லி குடிசைவாசிகள் அவர்களது வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டதல்ல சிறுநீரகச் செயலிழப்பு ஏற்ப்பட்டது அவர் மரணத்திற்குக் காரணமாகி விட்டது.
* தமிழத்தில் உள்ள திராவிடர் இயக்கத் தலைவர்கள் மேலும் தமிழர்கள் மேலும் தனி அன்பைச் செலுத்திய வி.பி.சிங்கின் முழுமையான பெயரான
"விஸ்வநாத் பிரதாப் சிங் " என்ற பெயரை பலருக்கு கி.வீரமணி சூட்டி மகிழ்ந்தார்.
* அவரது ஓவியங்கள் கவித்துவமானது. அவரது கவிதைகள் ஓவியத் தன்மை வாய்ந்தது. "ஒரு துளி வானம் ஒரு துளி கடல்" என்பது அவரது கவிதை நூலின் தலைப்பு.வானமும் கடலும் துளியாகத் தெரிந்த அவருக்குப் பதவி ஒரு தூசு தான்.
* வி.பி.சிங் உயிரோடு இருந்த போது அவரது மகன் அஜய் சிங் "செயின்ட் கீட்ஸ்" என்ற தீவில் சொத்து வாங்கியதாக அவதூறு கிளப்பினர்.ஆவணங்கள்
போலியாகத் தயாரித்தனர். ஆனால் பின்பு அதைத் தயாரித்தவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். தன் மொத்த சொத்துக்களை பூமிதான இயக்கத்திற்குத் தந்த அவரின் மகனா வெளிநாட்டில் உள்ள தீவில் நிலம் வாங்குவார்?
வி.பி.சிங் அரசியலின் அதிசயம்.
தமிழர்கள் நாம் நன்றியுடன் நினைவில் கொள்வோம்.
வாழ்க வி.பி.சிங் .
-விடுநலை,27.11.16
செவ்வாய், 29 நவம்பர், 2016
தமிழ்நாட்டு மக்களும் வி.பி.சிங்கும் ... சு.குமாரதேவன்.,,,
திங்கள், 28 நவம்பர், 2016
சாரதா சட்டம்
20.07.1930- குடிஅரசிலிருந்து....
சாரதா சட்டம் பிறந்து அமலுக்கு வந்து 3 மாதம் ஆகி 4ஆவது மாதம் முடிவதற்குள்ளாகவே அதற்கு பாலாரிஷ்டம் வந்துவிட்டது.
என்னவெனில் ராஜாங்க சபையில் அட்டத்தின் ஜீவ நாடியை அறுத்தெரியும் மாதிரியில் அதாவது பெண்களுக்கு 14 வயதிற்குள்ளும் ஆண்களுக்கு 18 வயதிற்குள்ளும் விவாகம் செய்ய மனசாட்சியோ குடும்பநிலையோ அவசியப்பட்டால் அந்தபடி செய்ய சட்டத்தில் இடம் கொடுக்க வேண்டும் என்று ஒரு திருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அதற்குச் சர்க்கார் சலுகை காட்டி அம்மசோதாவை மாகாண கவர்மெண்டு களுடையவும் பொதுஜனங்களுடையவும் அபிப்பிராயம் தெரிவதற்காக வெளியில் விநியோகிக்க வேண்டும் என்று சர்க்காராரே ஒரு திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றி வைத்திருக்கின்றார்கள்.
இந்தப் பிரேரேணை சர்க்காரார் கொண்டுவந்ததால் அவர்கள் அதற்கு அனுகூலமாய் ஓட்டுக் கொடுத்து நிறைவேற்றிக் கொண்டதில் அதிசயமொன்றுமில்லை. ஆனால் இப்படிப்பட்ட திருத்தம் கொண்டு வர வேண்டிய அவசியம் சர்க்காருக்கு என்ன ஏற்பட்டது என்பதுதான் நாம் இப்போது யோசிக்க வேண்டியதாகும். ஏதோ ஒரு சாக்கைச் சொல்லி இந்த சந்தர்ப்பத்திலிருந்து தப்புவித்துக் கொள்ளலாம் என்பதே அவர்களது எண்ணமாய் இருந்திருக்க வேண்டும்.
சட்டத்திற்கு அனுகூலமாய் இருந்து திருத்த மசோதாவை தோற் கடிக்கச் செய்து விட்டால் இந்த ஒரு நெருக்கடியான சந்தர்ப்பத்தில் வைதீகர்கள் (பார்ப்பனர்கள்) சட்ட மறுப்புக் காரர்களுடன் சேர்ந்து விடுவார்கள் என்றும் அப்படிக்கில்லாமல் ஒரு சமயம் திருத்த மசோதாவை நிறைவேறும்படி செய்துவிட்டால் சீர்திருத்தக் காரர்கள் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்ந்து விடுவார்கள் என்றும் கருதியே தந்திரமாக நெருக்கடியைச் சமாளித்துக் கொள்ளவே இந்தத் தந்திரம் செய்திருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.
நிற்க. மனசாட்சியை உத்தேசித்து நடக்க ஒவ்வொருவருக்கும் இடம் கொடுக்கும் படி சட்டத்தைத் திருத்துவதனால் இந்தியன் பீனல்கோடும் சிறைச்சாலைகளும் அழித்து பொசுக்கவேண்டும் என்றுதான் சொல்லுவோம். திருடனுடைய மனச்சாட்சி திருடத்தான் சொல்லும். அயோக்கியனுடைய மனசாட்சி அயோக்கியத்தனம் செய்யத்தான் சொல்லும்.
மூடனுடைய மனசாட்சி முட்டாள்தனமான காரியத்தைத் தான்செய்யச் சொல்லும். ஆகவே இவர்களுடைய இஷ்டப்படி எல்லாம் நடக்க இடம் கொடுப்பதனால் சட்டமும் தண்டனையும் எதற்காக வேண்டும்? என்று கேட்கின்றோம். ஆகவே சர்க்கார் சாரதா சட்ட விஷயத்தில் ஏதாவது தளர்ச்சியைக் காட்டுவார்களானால் அது அவர்களது கேட்டிற்கே அறிகுறியாகும்.
தந்தை பெரியார் பொன்மொழிகள்
4 இந்தியாவில் ஏழை மக்களுக்காகத் தாழ்த்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் பாடுபடுகின்றேன் என்று சொல்லுகின்றவர்கள் யாரானாலும் அதற்கு ஆதாரமும் அடிப்படையுமான ஜாதிப் பாகுபாட்டையும் மதத் தன்மை யையும் ஒழிக்கச் சம்மதிக்கவில்லையானால் அவர்கள் எல்லோரும் யோக்கியர்கள் என்று நாம் சொல்லிவிட முடியாது.
-விடுதவை,26.11.16
ஞாயிறு, 27 நவம்பர், 2016
பிரேசில் நாட்டில் கறுப்பின மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு
500 ஆண்டு கால போராட்டத்திற்கான வெற்றி
பிரேசில் நாட்டில் நீதிபதி பதவிகள் உட்பட
கறுப்பின மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு
(தகவல்: டாக்டர் சோம இளங்கோவன், அமெரிக்கா)
புதன், 9 நவம்பர், 2016
மனுவாதிகளிடம் மல்லுகட்டிய மெக்காலே
உண்மையில் நடந்ததென்ன?
வியாழன், 3 நவம்பர், 2016
பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு
பிற ஏட்டிலிருந்து....
பல்கலைக்கழகங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு
பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்கள் நியமனங் களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டுக் கொள்கையில் அரசமைப்புச் சட்டத்திற்கு எதிராக அறிவிப்பை வெளியிட்டுள்ள யுஜிசிக்கு ஜார்க்கண்ட் துணைவேந்தர் நந்தகுமார் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கிவரும் பல்கலைக்கழக மானியக்குழு உதவிப் பேராசிரியர்கள் நியமனங்களில் மட்டுமே பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதுகுறித்து ஜார்க்கண்ட் மத்தியப் பல்கலைக்கழக துணைவேந்தர் நந்தகுமார் மத்திய மனித வள மேம் பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
யுஜிசியின் அறிவிப்பானது மத்திய அரசின் இட ஒதுக்கீட்டுக் கொள்கையை மீறுவதாக உள்ளது. ஜார்க்கண்ட் மத்தியப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் களுக்கான காலிப் பணியிடங்களை நிரப்புவ தற்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் விளம்பர அறிவிப்பை வெளியிட தெளிவை ஏற்படுத்த வேண்டும் என்றும் அவர் அக்கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் தேசியக் கொள்கையை மாற்றுகின்ற அதிகாரத்தை யுஜிசி பெற்றுள்ளதா? என்று அவருடைய கடிதத்தில் கேள்வியை எழுப்பியுள்ளார். ஜார்க்கண்ட் துணை வேந்தர் நந்தகுமார் தன்னுடைய கடிதத்தில் குறிப் பிடும்போது, மத்திய அரசின் அனைத்து நிலைகளிலும் காலியாக உள்ள பணிகள், பதவியிடங்களில் பிற் படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டியது கட்டாயமாக உள்ளது. உதவிப் பேராசிரியர்கள் அல்லது கூடுதல் பேராசிரியர்கள் அல்லது பேராசிரியர்கள் பதவிகளில் தனித்தனியே ஒதுக்கீடு என்று கிடையாது.
தேசியக் கொள்கையின்படி, காலிப்பணியிடங்களில் நேரடியாக நியமனங்கள் செய்யப்படல் வேண்டும். காலிப்பணியிடங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. யுஜிசியின் சார்பில் பணி நியமனம்குறித்து இரண்டு கடிதங்கள் பல் கலைக் கழகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 23.3.2016 அன்று ஒரு கடிதமும், 3.6.2016 அன்று மற்றொருகடிதமும்அனுப்பப்பட்டுள்ளது.அக் கடிதங்களில் யுஜிசி குறிப்பிடும்போது, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினத்தவர்களுக்கான இட ஒதுக்கீடு உதவிப் பேராசிரியர்கள், கூடுதல் பேராசிரியர்கள், பேராசிரியர்கள் நியமனங்களில் அனைத்து நிலை களிலும் பின்பற்றப்பட வேண்டும் என்றும், இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு, முதல் கட்ட நிலையில்மட்டும் பின்பற்றப்பட வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பாக ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லாலு பிரசாத் இதே பிரச்சினையில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டை இல்லாமல் செய்ய முயல்கிறது என்று மத்திய அரசைக் குற்றம் சாட்டியிருந்தார். யுஜிசி யின் மூத்த அலுவலர்கள் கூறும்போது, 2007ஆம் ஆண்டு முதல் இதே நிலையைத்தான் பின்பற்றி வருவதாகக் குறிப்பிட்டார்கள். யுஜிசியின் அறிவிப்பிற்கு துணைவேந்தர் பேராசிரியர் நந்த குமார் தன்னுடைய கடுமையான எதிர்ப்பைத் தெரி வித்துள்ளார்.அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமான யுஜிசியின் அறிவிப்பை திரும்பப் பெறவேண்டும் என்றும், உடனடியாக இதுகுறித்த வழிகாட்டுதல்களை யுஜிசிக்கு மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் அனுப்பிட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.மத்திய அரசின் இறுதி முடிவு வரும்வரை பல்கலைக்கழத்தில் கூடுதல் பேராசிரியர்கள், பேராசிரியர்களுக்கான காலிப்பணியிடங்களை நிரப்பு வதற்கான எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளப் போவதில்லை என்றும் துணைவேந்தர் நந்தகுமார், தம் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
- நன்றி: “தினஇதழ்”, 31.10.2016 தலையங்கம்.
-விடுதலை,2.11.16