பக்கங்கள்

ஞாயிறு, 27 நவம்பர், 2016

பிரேசில் நாட்டில் கறுப்பின மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு

உலகெங்கும் சமூகநீதிக்கான அங்கீகாரம்!
500 ஆண்டு கால போராட்டத்திற்கான வெற்றி
பிரேசில் நாட்டில் நீதிபதி பதவிகள் உட்பட
கறுப்பின மக்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு
ரியோ டி ஜெனிரோ  ஜூன் 11 உலகின் மறு பக்கத்தில் உள்ள பிரேசில் நாடு நீண்ட போராட் டத்திற்குப் பிறகு    சமூக நீதிக்கான சரியான  பாதையை அடைந்துள்ளது. பிரேசிலின் அனைத்துப் பணிகளிலும் 20 விழுக் காடு (ஆஃப்ரோ-_பிரே சிலியன்)கலப்பின பூர்வீக குடிகளுக்காக ஒதுக்கி யுள்ளது.    பிரேசில் நாட்டில் 1600ஆம் ஆண்டில் -ஆப்பிரிக்காவில் இருந்து கரும்புத் தோட்டங்களில் பணிபுரிய பெருமளவு கறுப்பின மக்கள் ஸ்பா னிய காலனி ஆதிக்கத்தின ரால் கொண்டு வரப்பட் டனர். ஸ்பானியர்களின் இன அழிப்புக் காரண மாக பிரேசிலின் பூர்வக் குடிகளான செவ்விந்தி யர்கள் 90 விழுக்காடு கொல்லப்பட்டனர். இதனால் (ஆஃப்ரோ-_பிரேசிலியன்) கலப்புக் கறுப்பினம் உருவாகியது. இந்த நிலையில் ஸ்பானியர்களின் முழுக் கட்டுப்பாட்டில் வந்த பிரேசிலில் நீண்ட காலமாக ஆஃப்ரோ-_பிரேசிலியன் மக்களுக்கு எந்த ஒரு உரிமையும் வழங்காது அவர்கள் மூன்றாம் தரகுடிமக்கள் போல் நடத்தப்பட்டனர். பிரேசில் பூர்வக்குடியினர் மற்றும் பெரும்பான்மை யான ஆஃப்ரோ-_பிரேசி லியன் மக்களுக்கு இடையே வர்க்கரீதியான பேதங்களை உருவாக்கி, அதன் மூலம் தங்களுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையும் வராமல் பார்த்துக்கொண்டது ஸ்பானிய காலனி அரசு.
பிரேசிலில் உள்ள மக்கள் பிரிவு
இந்த நிலையில் இந்த நூற்றாண்டின் தொடக் கத்தில் உலகெங்கும் காலனி ஆதிக்கம் முடி விற்கு வந்தும், தென் ஆப்பிரிக்கா, மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் தொடர்ந்து மறைமுக அடிமை ஆட்சி நடை பெற்று வந்தது. பல்வேறு போராட்டங்களின் மூலம் மக்கள் தங்களது உரிமை களை மீட்டெடுக்கத் துவங்கினர். அரசு மற்றும் தனியார் துறைகளில் முக்கியமாக நீதித்துறையில் சொற்ப இடமே பதவி வகிக்கும் மண்ணின் மைந்தர்களுக்கு சம உரிமை வழங்க  நடை பெற்ற நீண்ட நெடிய போராட்டம் தற்போது வெற்றியடையத் துவங்கி யுள்ளது.  மொத்தமுள்ள மக்கள் தொகையில் பிரேசில் பூர்வீக குடியினர் 30 விழுக்காடு, ஆஃப்ரோ-பிரேசிலியன் 50 விழுக் காடு - _ ஸ்பானியர்கள் 20 விழுக்காடு என உள் ளனர்.  கலப்பின மக்களுக் கான உரிமைகள் இந்த நூற்றாண்டின் பிற்பகுதி யில் வெடிக்கத் துவங்கின. பல்வேறு வகையில் போராட்டங்கள் நடந்து வந்த போதும் ஆட்சி அதிகாரத்தை தங்களின் கைகளில் கொண்டுள்ள ஸ்பானியர்கள் தங்களின் நிலையில் சிறிதும் இளக வில்லை. இந்த நிலையில் நீதிமன்றங் களில் கலப் பின மக்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து தொடர்ந்து நடந்தவந்த போராட்டத் தின் காரணமாக கடந்த ஆண்டு பிரேசில் நீதி பதிகள் கவுன்சில் கூடி விவாதித்தது. எடுத்துக் காட்டாக  18,600 நீதி பதிகள் அடங்கிய பிரே சில் நீதித்துறையில் வெறும் 260 எண்ணிக்கையில் கலப்பின நீதிபதிகள் உள்ளனர். இந்த பெரும் சமூக வேறுபாட்டைக் களைய கடந்த ஓராண்டாக
பிரேசில் உச்சநீதிமன்றமும் (சுப்ரீம் ஃபெடரல் கோர்ட்) அதிபர் தில்மா ரூசேஃப் தலைமையில் அமைந்த குழு ஃபெடரல் செனட், சேம்பர் ஆப் டெபுடீஸ் அடங்கிய குழுக்கள் பல் வேறு விவாதங்களையும் கருத்துக் கணிப்புகளையும் நடத்தி, புதிய சட்டத் திருத்ததை உருவாக்கியுள்ளது. இதன் படி கலப்பின ஆஃப்ரோ-_பிரே சிலியன் மக்களுக்காக 20 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.  இந்த புதிய சட்ட திருத்தத்தின் படி பிரேசிலில் உள்ள 26 மாகாண மாநிலங்களில் உறுப்பினர் பதவிகளில் 20 விழுக்காடு ஆஃப்ரோ_-பிரேசிலியன் மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. அதேபோல் மாநிலக் கட்டுப்பாட் டில் உள்ள வங்கிகள், அரசு நிறு வனங்கள், அஞ்சல் அலுவலகங்கள், பிரேசில் அரசின் நேரடிக் கட்டுப் பாட்டில் உள்ள (சென்ட்ரல் பேங்க்) வங்கிகள் போன்றவற்றிலும் கலப்பின மக்களுக்காக 20 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதே போல் பிரேசிலின் அதி உயர் சக்தி வாய்ந்த நீதித்துறையில் 20 விழுக் காடு இட ஒதுக்கீடு நூற்றாண்டு காலமாக சமூக நீதிக்கான போராட் டத்தில் ஈடுபட்டு வரும் கலப்பினப் பூர்வ குடிகளின் வெற்றியாக கருதப்படுகிறது.
சமூக சமத்துவம்
இது குறித்து பிரேசில் அதிபர் தில்மா ரூசேஃப் கூறியதாவது: இது ஒரு நல்ல துவக்கமாகும் பிரேசிலில் குடிமக்களிடையே சமூக சமத்துவம் உருவாக இந்த இட ஒதுக்கீடு பெரிதும் உதவியாக இருக்கும் என்றும் சுமார் 80 ஆண்டுகளாக இருந்த வந்த பொரு ளாதார சமூகக் குழப்பங்கள் இதன் மூலம் முடிவுக்கு வரும் என்று கூறினார்.    2010-ஆம் ஆண்டில் நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளி, பல்கலைக் கழகங்கள், மற்றும் உயர் தொழில் பயிலகங்களில் கலப்பின பூர்வீக மக்களுக்கு 50 விழுக்காடு இட ஒதுக் கீடு வழங்க சட்ட திருத்தம் மேற் கொள்ளப்பட்டு வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்பட்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.   முக்கியமாக இந்த 20 விழுக்காடு இட ஒதுக்கீடு சட்ட திருத்தம் அந்த நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் படி தனியாருக்கும் பொருந்தி வரும், ஆகையால் தனியார் நிறுவனங்களும் இந்த 20 விழுக்காடு இட ஒதுக்கீட்டு விதியைக் கட்டாயம் கடைபிடிக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதன் மூலம் 500 ஆண்டுகளாக நடைபெற்று வந்த சமூகநீதிப் போராட்டம் வெற்றிப்படியின் தொடக்க நிலையைத் தொட் டுள்ளது. வளர்ச்சியடைந்த நாடு களின் பட்டியலில் உள்ள பிரேசில் நாட்டிலே இப்போது தான் சமூக நீதிக்கு விடிவு பிறந்துள்ளது.  2000 ஆண்டுகளாக மறுக்கப் பட்டு வந்த சமூகநீதிக்காக தந்தை பெரியாரும் அம்பேத்கரும் போராடி நமக்கு 60 ஆண்டுகளுக்கு முன்பே பெற்றுத் தந்தை நாம் நன்றியுடன் நினைவு படுத்திப் பார்க்கவேண்டும்.
(தகவல்: டாக்டர் சோம இளங்கோவன், அமெரிக்கா)
-விடுதலை,11.6.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக