பக்கங்கள்

செவ்வாய், 28 பிப்ரவரி, 2017

பதவி உயர்வில் இடஒதுக்கீடு ரத்து எதிரொலி:

10,000 தலித் ஊழியர்கள் கர்நாடகாவில் பதவியிறக்கமாம்!

பெங்களூரு,பிப்.28பதவி உயர்வில் இட ஒதுக்கீடு ரத்துஎன்றஉச்சநீதிமன்றஉத் தரவால் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டதலித்அரசு ஊழியர்கள் பதவி இறக்கத்தைச் சந்திக்கும்நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆதர்ஷ் கே கோயல், யு.யு.லலித் ஆகி யோர் அடங்கிய அமர்வு, கடந்த 1978 ஆ-ம் ஆண்டு ‘அரசு பணியில் இட ஒதுக்கீடு மூலம் எஸ்.சி., எஸ்.டி. பிரி வினருக்கு பதவி உயர்வு வழங்கப்படும்' என கர்நாடக அரசு கொண்டு வந்த சட்டம் ரத்து செய்யப்படுகிறது. பணி மூப்பின் அடிப்படையிலேயே பதவி உயர்வு வழங்கப்பட வேண்டும். எனவே 3 மாதத் திற்குள் வழங்கப்பட்ட பதவி உயர்வு அனைத்தையும் கர் நாடக அரசு திரும்பப்பெற வேண்டும் என உத்தரவிட்டது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்தரவால் 10 ஆயிரம் முதல் 15 ஆயிரம் வரையிலான தலித் மற்றும் பழங்குடியின அரசு ஊழியர்கள் பதவி இறக்கத்தைச் சந்திக்கும் நிலைஏற்பட்டுள்ளது.இந்த வழக்கில் முறையாக வாதி டாமல் அலட்சியமாக இருந்தமாநிலஅரசைகண் டித்து போராட்டம் நடத்தப் போவதாக தலித் அரசு ஊழியர்கள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
-விடுதலை,28.2.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக