ஞாயிறு, 10 டிசம்பர், 2017

ஜாதி மறுப்புத் திருமண மானியம் பெற வருமான உச்ச வரம்பு நீக்கம்!


புதுடில்லி, டிச.10  ஜாதி பிரச் சினையை ஒழிக்கவும், கலப்பு திருமணத்தை ஊக்குவிக்கவும், தலித்தை திருமணம் செய்யும் ஜாதி மறுப்பு மணத்துக்கு வழங்கப்படும், மானியத்துக்கான வருமான உச்ச வரம்பை, மத்திய அரசு நீக்கியுள்ளது.

இவ்வாறு ஜாதி மறுப்பு மணம் புரிவோருக்கு, மத்திய அரசு, 2.5 லட்சம் ரூபாயை மானியமாக வழங்குகிறது. 
ஜாதி மறுப்பு திருமணத்தை ஊக்கு விக்கும் வகையில், 2013இல் கொண்டு வரப்பட்ட, டாக்டர் அம்பேத்கர் ஜாதி மறுப்பு  திருமணம் மூலமான சமூக ஒற்றுமை திட்டத்தில், 2.5 லட்சம் ரூபாய் மானியத்தை, மத்திய அரசு வழங்குகிறது. இதில், மணப்பெண் அல்லது மண மகனில் யாராவது ஒருவர், தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவராக இருக்க வேண்டும்.

இந்த மானியத்தை பெறு வதற்கான வருமான உச்ச வரம்பு, 5 லட்சம் ரூபாயாக இருந்தது. ஆண்டுக்கு, 500 பேருக்காவது இந்த மானியத்தை வழங்க, மத்திய அரசு இலக்கு நிர்ணயித் துள்ளது. ஜாதி மறுப்பு மணம் புரியும் தைரியமான முடிவு எடுப் பதை கவுரவிக்கவும், அவர்கள் திருமண வாழ்க்கைக்கு உதவும் வகையிலும், இந்த மானியம் வழங்கப்படுகிறது.

முதல் திருமணத்துக்கு மட்டுமே இது வழங்கப்படுகிறது. மேலும், இந்து திருமணச் சட் டத்தில் பதிவு செய்திருக்க வேண் டும்.

இதற்காக, திருமணமாகி ஓராண்டுக்குள் விண்ணப்பிக் கலாம். தற்போது, இந்த திட்டத் துக்கான வருமான உச்ச வரம்பை, மத்திய சமூக நீதித் துறை நீக்கி உத்தரவிட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: பல்வேறு மாநிலங் களில், ஜாதி மறுப்பு மணம் புரிவோருக்கான நிதியுதவிக்கு, எந்த வருமான உச்ச வரம்பும் கிடையாது. ஆண்டுக்கு குறைந்த பட்சம், 500 பேருக்கு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 2014 - 2015இல், அய்ந்து பேருக்கு மட்டுமே நிதி அளிக்கப்பட்டது.

கடந்த, 2015 - 2016இல், 522 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, அதில், 72 பேருக்கு வழங்கப் பட்டது. 2016  -  2017இல், 736 விண்ணப்பங்களில், 45 பேருக்கு வழங்கப்பட்டது. இந்த ஆண்டில் இதுவரை பெறப்பட்ட, 409 விண்ணப்பங்களில், 74 பேருக்கு நிதி வழங்கப்பட்டுள்ளது.

குறிப்பிட்ட விதிமுறைகளை பின்பற்றாததாலும், போதிய விழிப்புணர்வு இல்லாததாலும், குறைந்த எண்ணிக்கை உள்ளவர் களுக்கே, இந்த நிதி வழங்கப் பட்டுள்ளது.

மேலும், வருமான உச்ச வரம்பு ஒரு தடையாக இருப்பதாகவும் கூறப்பட்டது. அதையடுத்து, இந்த நிதியைப் பெறுவதற்கான வருமான உச்ச வரம்பு நீக்கப்பட்டுள்ளது.

ஏமாற்றுவதை தடுக்க, இணையரின் ஆதார் எண்ணும், வங்கிக் கணக்கு எண்ணும் சமர்ப்பிக்க வேண்டும். இந்து திருமணச் சட்டத்தில் பதிவு செய்தவர்களுக்கு மட்டும் இந்த நிதி வழங்கப்படும். சிறப்பு திருமண சட்டத்தில் பதிவு செய்திருந்தால் வழங்கப் படாது.

மேலும், அவர்களுடைய விண்ணப்பத்தை, எம்.பி., அல் லது, எம்.எல்.ஏ., அல்லது மாவட்ட ஆட்சியர் பரிந்துரைக்க வேண் டும்.

இவ்வாறு ஆட்சியர்கள் கூறினர்.

- விடுதலை நாளேடு, 10.12.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக