பாட்னா,டிச.5 அரசு பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக் கும் வகையில் அரசமைப்புச் சட்டத்தில்திருத்தம்கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கைக்கு பிகார் முதல்வர் நிதீஷ் குமார் ஆதரவு தெரிவித்துள்ளார்.
பிகார் தலைநகர் பாட்னாவில் திங்கள்கிழமை நடைபெற்ற வாரந்திர மக்கள் குறைகேட்பு நிகழ்ச்சியில், முதல்வர் நிதீஷ் குமார் பங்கேற்றார். பின்னர், அவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது, அரசு பணி பதவி உயர்வில் இடஒதுக்கீடு அளிக்கும் வகையில் அரசமைப் புச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர வலியுறுத்தி, பிரத மர் மோடிக்கு கடிதம் எழுத திட்டமிட்டுள்ளதாக மத்திய அமைச்சரும், லோக் ஜனசக்தி கட்சித் தலைவருமான ராம் விலாஸ் பாஸ்வான் தெரிவித்த கருத்து தொடர்பாக நிதீஷ் குமாரிடம் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
அதற்குபதிலளித்து,நிதீஷ் கூறியதாவது:
பதவி உயர்வில் இடஒதுக்கீடு வழங்குவதற்கு, நாங்கள் எப் போதுமே ஆதரவானவர்கள். பிகார் அரசுப் பணிகளில் பதவிஉயர்வின்போதுதாழ்த்தப் பட்டோர் மற்றும் பழங்குடியின ருக்கு இடஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டப் பிரிவை அறிமுகப்படுத்தினோம். ஆனால்,அந்தசட்டப் பிரிவை, உயர்நீதிமன்றம் ரத்து செய்து விட்டது. தற்போது அந்த விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இடஒதுக்கீடு விவகாரத்தில், பாஸ்வானின் முடிவை நாங்கள் வரவேற்கிறோம். நமது நாட்டில் நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்கப்பட வேண்டும்.
கல்வி,சமூக ரீதியில் பின் தங்கியோருக்குசமமானவாய்ப் புகளைகிடைக்கச் செய்வதே இட ஒதுக்கீட்டின் அடிப்படை யாகும். தற்போதைய கால கட்டத்தில் அரசுத் துறையை விட தனியார் துறையில் தான் அதிக வேலைவாய்ப்புகள் உள்ளன. எனவே, தனியார் துறை வேலைவாய்ப்பிலும் இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்றார் நிதீஷ்குமார்.
- விடுதலை நாளேடு,5.12.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக