பக்கங்கள்

வெள்ளி, 27 ஏப்ரல், 2018

இடஒதுக்கீட்டை சென்னை அய்.அய்.டி.யில் பின்பற்றாமல் பணி நியமனம் மேற்கொண்டால் கடும் நடவடிக்கை: உயர்நீதிமன்றம் எச்சரிக்கை



சென்னை, ஏப்.25 சென்னை ஆழ் வார்பேட்டையை சேர்ந்தவர் முனைவர் முரளிதரன். இவர், சென்னை அய்.அய்.டி. இயக் குநராக முனைவர் பாஸ்கர் ராமமூர்த்திநியமனம்செய்யப் பட்டதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். இவரது நியமனம் அய்.அய்.டி. விதிமுறைகளை பின்பற்றி மத்திய அரசு மேற் கொள்ளவில்லை என்றும் குற் றம் சுமத்தியிருந்தார்.

இந்த வழக்கை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து முரளிதரன், சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும், கூடுதலாக மற்றொரு மனுவையும் தாக்கல் செய்தார்.

அந்த மனுவில், அய்.அய்.டி. இயக்குநராக பாஸ்கர் ராம மூர்த்தியை நியமித்தது செல் லாது என்று நான் தொடர்ந்த வழக்குநிலுவையில் இருக்கும் போதே,அய்.அய்.டி.நிறுவனத் தில் பல்வேறு பதவிகளை பாஸ்கர் ராமமூர்த்தி நிரப்பியுள் ளார். தற்போதும் பலரை நிய மிக்கிறார்.

இடஒதுக்கீட்டு முறையை பின்பற்றாமல், இந்தபணியிடங்கள்நிரப்பப் படுகின்றன. பேராசிரியர்கள் பதவிகளுக்குபொது விளம்பரம் எதுவும்கொடுக்காமல், இட ஒதுக்கீட்டு முறையைபின் பற்றாமல், ஆட்களை நியமித் துள்ளார். எனவே, இதில் மிகப்பெரிய முறைகேடு நடந் துள்ளது என்று கூறியுள்ளார்.

மேலும் அந்த மனுவில், அய்.அய்.டி. நிறுவனத்தில் பேராசிரியர்உள்ளிட்டபதவி களுக்குநடைபெற்றநியமனத் தில் நடந்துள்ள மோசடிகள் குறித்து சி.பி.அய். விசார ணைக்கு உத்தரவிட வேண் டும்.இடஒதுக்கீட்டுமுறையை பின்பற்றாமல், மேற்கொண் டுள்ள பணி நியமனத்தை ரத்து செய்யவேண்டும் என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதிகள் ஹூலுவாடி ஜி.ரமேஷ், எம். தண்டபாணி ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் ஆஜராகி வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்தஇடைக்காலஉத் தரவில், பேராசிரியர் பணியிடங் களை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை செயலாளர், இடஒதுக் கீட்டு முறையை பின்பற்றி நிரப்பிக்கொள்ளலாம். ஆனால், பணி நியமனம் என்பது இந்த வழக்கின் இறுதி தீர்ப்புக்கு கட்டுப்பட்டது.

ஒருவேளை பணி நிய மனம்,இடஒதுக்கீட்டு கொள் கையை பின்பற்றாமல் மேற் கொள்ளப்பட்டால், கடும் நட வடிக்கையை எதிர்கொள்ளநேரி டும். விசாரணையை ஜூன் 6- ஆம் தேதிக்கு தள்ளிவைக்கிறோம் என்று கூறியுள்ளனர்
- விடுதலை நாளேடு, 27.4.18

வியாழன், 19 ஏப்ரல், 2018

தமிழகத்தில் சாதி உருவாக்கமும்  சமூக மாற்றமும்(1)

நூல்: தமிழகத்தில் சாதி உருவாக்கமும்  சமூக           மாற்றமும் (பொ.ஆ.800-1500)

ஆசிரியர்: நொபொரு கராஷிமா, எ.சுப்பராயலு

வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-600 098. கைப்பேசி: 044-26251968, 26258410, 26241288.

மின் அஞ்சல்:  info@ncbh.in

பக்கங்கள்: 84, விலை: ரூ.70/-

  

புதிய ஓம்படைக்கிளவிகளின் எழுகையும் சாதி உருவாக்கமும்

குப்தர்/வாகாடகர் மரபில் ஓம்படைக்கிளவிகள்

(ஓம்படைக்கிளவி:  கையடை வாக்கு, பெரியோர் சொல்லும் புத்தி; ஓம்படை: காவல், கையடை; ஓம்படல்: சம்மதம்; கிளவி: அகப்பொருட்டுள்ள _ சொல்.)  - தமிழ் அகராதி இந்தியாவில் பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்கும் வழக்கம் எப்போது தொடங்கியது என நமக்குத் தெரியாது; ஆயினும் இவ்வழக்கம் கங்கை வெளியிலும் வடக்கு தக்காணப் பீடபூமியிலும் குப்தர்/வாகாடகர் காலத்துப் பொதுத்தன்மை ஆகும். பல அரசர்கள், உயர்குடியினர் வழங்கிய தானங்கள் பற்றிய ஆவணங்களைச் செப்புப் பட்டயங்களிலும், கல்வெட்டுகளிலும் பொறித்துள்ளனர். நிலம் வழங்குகை பற்றியும் சில நேரத்தில் வேறு சில வழங்குகை பற்றியும் குறிப்பிடும் (பெருமளவிலான செப்புப் பட்டயச்) சாசனங்களில், வழங்குகை பற்றிய விவரங்களைத் தொடர்ந்து, சாசனத்தின் இறுதிப் பகுதியில் இத்தானத்திற்கு ஊறு விளைவிக்கத் துணிபவர் பற்றிய ஓம்படைக்கிளவி1 இடம்பெற்றுள்ளது. குப்தர் செப்புப் பட்டயச் சாசனத்தில் உள்ள ஓம்படைக்கிளவிகளின் மூன்று உதாரணங்கள் பின்வருமாறு:

1.            வேள்விகள் வேட்பதற்காகப் பார்ப்பனர் களுக்கு நிலம் கையகப்படுத்தியதைக் குறிப்பிடும் முதலாம் குமாரகுப்தரின் தாமோதர்ப்பூர் சாசனம்  (CII III:22): தானமளிக்கப்பட்ட நிலத்தைத் தானோ பிறன் மூலமோ அபகரித்துக் கொள்பவன் அவனுடைய பித்ருகளுடன் மலத்திலும் அழுகலிலும் நெளியும் புழுவாகப் பிறந்து உழல்வான்.

2.            விளக்கு வழங்கியதைக் குறிப்பிடும் ஸ்கந்த குப்தரின் இந்தூர் சாசனம் (CII III:30): இந்தத் தானத்திற்கு ஊறு விளைவிக்கிறவன் எவனோ அவன் பசுவை (அல்லது) குருவை (அல்லது) பார்ப்பானைக் கொன்றவன் (ஆகிய பாவத்தை அடைந்து), பஞ்சமாபாதகங்களையும் பிற உபபாதகங்களையும்2 இழைத்தோர் கிடந்து உழல்கின்ற கீழுலகிற்குச் செல்வான்!

3.            பார்ப்பனக் குடியிருப்பாகக் கிராமத்தவ ருடைய நிலம் கையகப்படுத்தப்பட்டதைக் குறிப்பிடும் புத்த குப்தரின் மற்றொரு தமோதர்ப்பூர் சாசனம்  (EI XV:7-3): இந்த நிலத்தை நேரடியாகவோ பிறர் மூலமாகவோ அபகரிப்பவன், அவனுடைய பித்ருகளுடன் மலத்திலும் அழுகலிலும் புழுவாகப் பிறப்பான்! அபகரித்தவனும் அவனை ஏற்றுக் கொண்ட நரகத்தில் அறுபதினாயிரம் வருசம் உழல்வார்கள்!

அரச தானங்கள் பற்றி குறிப்பிடும் வாகாடகர் செப்புப் பட்டயச் சாசனங்களில் உள்ள ஓம்படைக்கிளவிகளின் இரு உதாரணங்கள் பின்வருபவை:

1.            பார்ப்பனர்களுக்கு அரசி வழங்கிய கிராமத் தானத்தைக் குறிப்பிடும் இராணி பிரபாவதி3 குப்தரின் பூனா சாசனம் பின்வரும் வியாசர் இயற்றிய ஓம்படைக்கிளவி சுலோகத்தை மேற்கோள் காட்டுகிறது (CII V:1): நேராகவோ பிறர் மூலமோ நில தானத்தை எடுத்துக் கொள்பவன் பத்தாயிரம் பசுக்களைக் கொன்ற பாவத்திற்கு ஆளாவான்!

2.            பார்ப்பனர்களுக்கு அரசர் வழங்கிய கிராமத் தானத்தைக் குறிப்பிடும் இரண்டாம் பிரவாரசேனரின் சாசனம் வியாசர் பாடிய பின்வரும் கவிதையைத் தந்துள்ளது (CII V:7):  தானத்திற்கு ஊறு விளைவிப்பவன் எவனோ அவன் அறுபதினாயிரம் வருசத்திற்கு நரகில் கிடந்து உழல்வான்! தான் கொடுத்த நிலத்தையோ அல்லது பிறன் கொடுத்த நிலத்தையோ அபகரித்துக் கொள்பவன் பத்தாயிரம் பசுக்களைக் கொன்ற பாவத்தை அடைவான்! தென்னிந்தியாவில் குப்தர்கள், வாகாடகர்கள் ஆகியோரின் உத்தியைப் பின்பற்றி, அதாவது குப்தர்/வாகாடகர் நில தானம் அளிக்கும் முறையைக் கைக்கொண்டு ஆறாம் நூற்றாண்டு தமிழகத்தில் வலிமையான ஆட்சியைப் பல்லவ அரச வம்சத்தினர் நிறுவினர். இரண்டாம் நரசிம்மவர்மனின் ரேயுருச் செப்பேடு பின்வரும் ஓம்படைக் கிளவியைத் தந்துள்ளது. (பசெமு: 83-86, [88]: பிராம்மணன் சொத்து கொடிய விஷம்; வேற எந்த விஷமும் விஷமாகாது. விஷம் ஒருவனைக் கொல்லும்; பிரம்ம சொத்தோ புத்திர பௌத்திரர்களையும் (கொல்லும்). தான் அளித்தது பிறர் அளித்தது எதுவாயினும் பூமியை அபகரிக்கும் ஒருவன் அறுபதினாயிரம் ஆண்டுகள் மலத்தில் புழுவாகப் பிறந்து உழல்வான். இதே போன்ற ஓம்படைக்கிளவி இரண்டாம் நந்திவர்மன் (பல்லவ மல்லன்)-_இன் கசாக்குடிச் செப்பேட்டிலும் இடம் பெற்றுள்ளது (பசெமு:155_169 (180): தான் கொடுத்ததோ பிறன் கொடுத்ததோ எதுவாயினும், அபகரிக்கும் ஒருவன் அறுபதினாயிரம் வருஷம் மலத்தில் புழுவாகப் பிறந்து உழல்வான்.

ஒன்பதாம் நூற்றாண்டில், தமிழகத்தில் பல்லவர்களை வெற்றிகொண்ட சோழ அரசக்குடிகள் நிலதானம் வழங்கும் கல்வெட்டுகளில் ஓம்படைக் கிளவிகள் அதிக அளவு இல்லையாயினும், சோழ அரசர்கள் பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்கியதைக் குறிப்பிடும் எஞ்சியிருக்கும் தானச் செப்பேடுகளில் சில ஓம்படைக்கிளவிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. ஆயினும் அரசக் குடிகள் மட்டுமல்லாமல், உயர்குடிகளும் பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்கியது முதலான தானங்களைக் குறிப்பிடும் சில சோழர் கல்வெட்டுகளில் ஓம்படைக்கிளவிகளைப் பார்க்க முடிகிறது. இந்த ஓம்படைக்கிளவிகளில், தீபகற்ப இந்தியாவின் புவிச்சூழலைப் பிரதிபலிக்கிற இந்தத் தானத்திற்கு அதம் பண்ணினார் கங்கை இடைக் குமரி இடை செய்தார் செய்த பாவமெல்லாம் பண்ணினார் என்ற தொடரே அதிகமாகத் தென்படுகிறது. ஆயினும் வேறு சில வெளிப்பாடுகளையும்கூட காண முடிகிறது. எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

1.            பணம் பெற்றுக் கொண்டு ஊரார், கோயில் விளக்கெரிப்பதற்கு எண்ணெய் அளிக்கவும் எண்ணெய் சேகரிப்போருக்கு உணவிடவும் உடன்பட்டுள்ளதைக் குறிப்பிடும் முதலாம் ராஜராஜனின் திருமால்புரம் கல்வெட்டு, இந்த உடன்பாட்டை மீறுவோர் கெங்கைஇடைக் குமரிஇடை செய்தார் செய்த பாபம் படுவோம்4 என்ற ஓம்படைக் கிளவியைக் குறித்துள்ளது  (SII XIII:29. NA). 
2.       குளம் பராமரிப்புக்காக வரி அளிப்பதைக் குறிப்பிடும் சுந்தர சோழனின் புத்துடபாடி மகாதேவமங்கலம் கல்வெட்டு, இந்த ஏற்பாட்டிற்கு உதவாதவன் ஏழ் நரகத்துக் கீழ் நரகம் புகுவான் என்று கூறுகிறது.  (SII XIII:173A, NA).

3.            சபை நிர்வகிக்கும் கோயில் நிலத்திற்கு வரிவிலக்கு அளிப்பதைக் குறிப்பிடும் சுந்தர சோழனின் திருவெறும்பூர் கல்வெட்டு, வரிக்கொள்வோம் என்றானையும் கொள்ளப் பணித்தானையும், ஊர் கண்டகர் ஆவாராகவும் என்று குறிப்பிடுகிறது.  (SII XIII:114, Tp).

பாவங்களின் பெருக்கமும் புதிய ஓம்படைக் கிளவிகளும்

இதே நிலைமை சோழர் அரசாட்சியில், சில நூற்றாண்டுகளுக்கு, ஆரம்ப காலக் கல்வெட்டுகளில் தொடர்வதைக் காணமுடியும். என்றாலும் சோழர் ஆட்சியின் இடைப்பகுதி கல்வெட்டுகள் சில, முடிவுகளை எதிர்ப்பவர்களிடமிருந்து தண்டம் வசூலித்தல் போன்றவற்றை தண்டனையாகக் குறிப்பிடுகிறது.5 ஆயினும் பன்னிரண்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில், கல்வெட்டுகளில் ஓம்படைக்கிளவி வெளிப்பாடுகளில் மாற்றங்கள் இடம் பெறுகின்றன. பதின்மூன்றாம் நூற்றாண்டில் அம்மாற்றங்கள் முனைப்பாகத் தெரிகின்றன. துரோகி என்னும் சொல் தொழில்படுவது ஒரு குறிப்பான மாற்றத்தை வெளிப்படுத்துகிறது. பதினோராம் நுற்றாண்டில் முதலாம் ராஜராஜனின் கல்வெட்டில் துரோகி என்னும் சொல் இடம்பெறுகிறது (EI XXI:168). ஆயினும் அந்த இடத்தில் அச்சொல் ஓம்படைக் கிளவிக்காகப் பயன்படுத்தப்படவில்லை. பன்னிரண்டாம் பதின்மூன்றாம் கல்வெட்டுகளில் துரோகி என்னும் சொல், ராஜ துரோகி, இனத் துரோகி, நாட்டுத் துரோகி, சைவத் துரோகி, குருத் துரோகி என்னும் கூட்டுச் சொற்களாக இணைந்து கல்வெட்டுகளின் ஓம்படைக்கிளவிப் பகுதியில் இடம் பெறுகின்றது. ஐந்து எடுத்துக்காட்டுகள்:

1.            பாண்டிய மண்டலத்தில் புகுந்துவிட்ட ஈழப் (இலங்கைப்) படை சோழ மண்டலத்திற்குள் வரக்கூடாது என்று நடைபெற்ற ஆராப்பாக்கம் கோயில் பூசையில் தலைவர் (ராயர்) வழங்கிய கிராமத் தானத்தைக் குறிப்பிடும் ஆராப்பாக்கம் கல்வெட்டு, யாவனொருவன் இந்த தானம் பரிபாலியா தொழிகிறான் அவன் பித்ரு பாவமும் குரு பாவமும் பிராமண பாவமும் சிவத்துரோகமும் பண்ணினார் என்ற ஓம்படைக்கிளவியைத் தந்துள்ளது  (SII VI:456, AD1168 Cg).  இராமேஸ்வரம் கோயிலைச் சேதப்படுத்தி யதால் இலங்கையின் படையும் சிவத் துரோகியாகக் குறிப்பிடப்பட்டு உள்ளது.

2.            கோயிலைச் சீர் செய்வதற்கு ஆகும் செலவைப் பகிர்ந்து கொள்வது பற்றி பல இனங்களும் தங்கள் இன சபையில் முடிவெடுத்ததைக் குறிப்பிடும் குடுமியான் மலைக் கல்வெட்டு, இந்த முடிவை மீறுபவன் சிவத் துரோகியும் நாட்டுத் துரோகியும் இனத் துரோகியும் ஆவான் என்று குறிப்பிட்டுள்ளது  (IPS:285 AD 1229 Pd). 

3.          பார்ப்பன நிலச் சொந்தக்காரர்களுக்கும் வெள்ளாள உழவர்களுக்கும் இடையே வெள்ளாமைக்கு வழங்கும் குடிமைப் பணம் பற்றிய உடன்பாட்டைக் குறிப்பிடும் மன்னார்குடி கல்வெட்டு, இந்த உடன்பாட்டை மீறுவோர் நாட்டுத் துரோகியும் குருத் துரோகியும் (கிராமத் துரோகியும்) ஆவார் என்று எச்சரித்துள்ளது (SII VI:58 AD 1239 Tj).

4.               எல்லா சாதிகளின் முன்னும் நாட்டுச் சபையில் தம்பியின் மூன்று மகன்களுடன் நாட்டுத் தலைவர் (நாடாள்வார்) பகை பாராட்டியதைக் குறிப்பிடும் செங்கமம் கல்வெட்டு, மூன்று சகோதரர்களுடன் எவரேனும் கூட்டுச் சேர்ந்தால் அவர் ராசத் துரோகியும் நாட்டுத் துரோகியும் ஆகக் கருதப்பட்டு தலைவரின் எதிரி ஆவார் என்று அறிவிக்கிறது  (SII VII:118 AD 1258 NA). 

5.         பதியிலார், தேவரடியார் முதலான கோயில் பணியாளர்களிடையே மடாதிபதி விதித்த கோயிற் பணி நியமனத்தைக் குறிப்பிடும் திருவொற்றியூர் கல்வெட்டு, இந்த முடிவை மீறுவோர் சிவத் துரோகியாகவும் நாட்டுத் துரோகியாகவும் இனத் துரோகியாகவும் நடத்தப்படுவார் என்று இறுதியில் எச்சரித்துள்ளது  (AR 1912:203, HS:468-71, AD 1342 Cg).

இவை பார்ப்பனர்களுக்கு நிலம் வழங்குகை, கோயில் விளக்கெரித்தல் நல்கை போன்றவற்றில், எதிர்காலத்தில் அவற்றுக்கு ஊறு விளைவிப் போரிடமிருந்து அச்சுறுத்திக் காப்பதைப் போன்ற ஓம்படைக் கிளவிகள் அல்ல; நாட்டின் பல்வேறு குழுமங்களும் பங்கேற்கும் சபையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் அல்லது விரோதம் உடைய இரு தரப்பாரிடையே ஏற்பட்ட உடன்பாடு ஆகியவற்றைக் காப்பதற்கே இந்த ஓம்படைக் கிளவிகள் என்பதை இந்த எடுத்துக்காட்டுகள் தெளிவாகக் காட்டுகின்றன. ஒப்புக்கொண்ட தீர்மானம் அல்லது உடன்பாட்டிற்குத் தீங்கு இழைத்தவரின் பாவம் எதுவோ, அதன்படி துரோகியின் இயல்பைக் காட்டும் எட்டு முன்னொட்டை மேலே காட்டியவற்றைப் போன்று கல்வெட்டுகளிலிருந்து நாம் சேகரித்துள்ளோம். அந்த முன்னொட்டுகள் பின்வருவன: சிவத்துரோகி, ராசத்துரோகி, குருத் துரோகி, நாட்டுத் துரோகி, கிராம அல்லது ஊர்த் துரோகி, இனத் துரோகி, மாத்ரு  துரோகி. இந்த முன்னொட்டுகளில் சில, பிராமணியக் கருத்துநிலையின் மரபார்ந்த அர்த்தங்களையும் கடந்து சென்று, புதிதாக வெளிப்படும் மதிப்பீடுகளின் பரந்த கீழ் அடிவானத்தைக் காட்டுவதாக இருக்கலாம் என்பதால், அவை பற்றி மேலுமான ஆய்வுக்குக் காத்திருத்தல் வேண்டும்.

பன்னிரண்டாம் நூற்றாண்டு வரை, கல்வெட்டுகளில் குறிப்பிடப்படும் பாவம் என்பது தானத்திற்கு ஊறு விளைவித்தல் என்று அர்த்தம் தந்தது. இங்கு தானம் என்பது நடைமுறையில் பிராமணர்கள், தெய்வங்களுக்கு வழங்கும் கொடையையே குறித்தது. பார்ப்பனியக் கருத்துநிலையில் தானமே பெரும் மதிப்புடைய கொடை ஆகும்.

6 அதற்கு ஊறு விளைவித்தல் மனுஸ்மிருதியில் குறிப்பிடப்படும் பஞ்சமா பாதகங்களுக்கு இணையானது ஆகும். ஆயினும், பாவம் செய்தவரை அல்லது இழைக்கப்பட்ட பாவத்தை எதிர்த்துக் குறிப்பிடுவது அவசிய மானதால், பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளில் பாவம் பற்றிய கருத்து மிக விரிவடைந்தது. பல்வேறு மக்கள் குழுமங்கள் செய்து கொண்ட உடன்பாடுகள், மேற்கொண்ட தீர்மானங்கள், கொடுத்த கொடைகள் உள்ளிட்ட பல ஏற்பாடுகளைப் பற்றி குறிப்பிடும் எண்ணற்ற கல்வெட்டுகள் பெருகியதனால், பாவங்களின் பெருக்கமும் வரையறுத்தலும் நோக்கிய இந்த மாற்றம் வேகமாக நடைபெற்றது அல்லது அக்கல்வெட்டுகளின் பெருக்கத்துடன் சேர்ந்து அம்மாற்றமும் நிகழ்ந்துவிட்டது (Karashima 1966). ஆகவே இந்தப் பாவங்களின் பெருக்கமும் வரைய றுத்தலும், பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டுகளின்போது துரோகி என்னும் சொல் வழக்குடன் இணைந்து, கல்வெட்டுகளில் பல புதிய ஓம்படைக்கிளவி வெளிப்பாடுகளின் எழுகையை வெளிப்படுத்தின.

கெங்கையிடை குமரியிடை செய்தார் செய்த பாவமெல்லாம் கொள்வார் என்ற முந்தைய வெளிப்பாடு, கெங்கைக் கரையில் குரால், பசு குத்தினார் பாவம் கொள்வார் என்ற புதிய ஒன்றாக மாறி, கல்வெட்டுகளில் ஒரே மாதிரியான அல்லது தகுவழக்கான ஓம்படைக் கிளவி வெளிப்பாடுகள் தொடர்ந்து கொண்டிருந்தன. இந்தப் புதிய ஒரே மாதிரியான ஓம்படைக்கிளவி வெளிப்பாடு, தலைவர் (உடையார்) கோயிலுக்கு வழங்கிய வரித் தன்மத்தைக் குறிப்பிடும்  SII VII:150 (AD 1147, SA)  படைத்தலைவரும் நகரத்தாரும் கோயிலுக்கு வழங்கிய வரி (ஆய)க் கொடையைக் குறிப்பிடும் SII V: 492 (AD 1187. NI), தலைவர் கோயிலுக்கு வழங்கிய வரிக் கொடையைக் குறிப்பிடும் SII IV: 849 (AD 1204. Cg),   தலைவர் (நல்லெசுவரர்) தன்னுடைய ஏவலாளின் (கன்மியின்) மூலம் திருவிடையாட்டமாகக் கோயிலுக்கு வழங்கிய நிலக் கொடையைக் குறிப்பிடும்  SII V: 504(AD 1208. NI)   கல்வெட்டுகளில் உள்ளதைப் போன்று இன்னும் பல கல்வெட்டுகளிலும் உள்ளது.

ஆயினும் மிகக் குறிப்பிடத் தகுந்த மாற்றம், பல்வேறு விதமான கட்டற்ற, அதிக துல்லியமான _ பச்சையானதும்கூட _ ஓம்படைக் கிளவிகளின் வெளிப்பாடு எழுச்சிப் பெற்றது ஆகும். மேலே மேற்கோள் காட்டிய, பார்ப்பனியச் சட்டகத்திற்குள் நிற்கும் ஒரே மாதிரியான ஓம்படைக்கிளவித் தொடர் களுடன்7, பார்ப்பனியக் கருத்து நிலையிலிருந்து விலகிச் செல்லும் இந்தப் புதிய கரடுமுரடான வெளிப்பாடுகள் பல முரண்படுகின்றன. அல்லது குறைந்தபட்சம் பார்ப்பனிய வட்டத்திற்குள் புதியவையாக அவை உள்ளன. எட்டு எடுத்துக்காட்டுகள் பின்வருமாறு:

1.            நீண்ட காலம் விரோதம் பாராட்டிய இரு கோயில்கள், நாட்டுப் பெருஞ் சபையில் சமாதானம் அடைந்ததைக் குறிப்பிடும் திருமயம் கல்வெட்டு, இந்த உடன்பாட் டுக்குத் தீங்கு விளைவிப்போர், நாட்டுத் துரோகி, மாத்ரு துரோகி, ராசத் துரோகி ஆகி, இளமையிலே கேட்பாரற்றுச் செத்து போவார் என்று சொல்கிறது (IPS:340, AD 1223, Pd).  

2.    நாட்டுமக்கள், மலையமான்கள், இன்னும் பிறரும் இணைந்து செய்துகொண்ட தொண்ணூற்றெட்டு இடங்கைச் சாதிகள்8 ஒற்றுமை உடன்படிக்கையைக் குறிப்பிடும் வாலி கண்டபுரம் கல்வெட்டு, உடன்பட்டோரின் நல்லது கெட்டதுகளைப் பகிர்ந்துகொள்வோம் என்றும், இந்த உடன்படிக்கைக்கு எதிராகத் திரும்பும் எவராயினும் கீழ்ச்சாதியினும் கீழ்ச்சாதி ஆவார் என்றும் உடன்படிக்கை செய்து கொண்டதைக் குறிப்பிடுகிறது (AR 1943/44: 268, AD 1233, Tp). 
3.                கோயில் திருவிழாவுக்கு உள்ளூர் மக்கள் அளிக்க வேண்டிய வரிக்கொடையைப் பற்றிய உடன்படிக்கையைக் குறிப்பிடும் மற்றொரு வாலிகண்டபுரம் கல்வெட்டு, இந்த உடன்படிக்கைக்கு எதிராக மாறுவோர் எவரோ அவர் நாட்டுத் துரோகியாகவும் சிவத் துரோகியாகவும் கருதப்பட்டு, கிராமத்திலிருந்து விலக்கப்படுவார் என்று அறிவிக்கிறது 

(AR 1943/44:268, AD 1233, Tp). 

4.          தலைவர் (உடையார்) வழங்கிய கிராமத் தானத்தைக் குறிப்பிடும் திருவண்ணாமலைக் கல்வெட்டு, இத்தானத்திற்கு மாறுவான் மோவாய்புக்கு முலை எழுந்தானுமாய்,9 ஒருவனுக்கும் ஒருத்திக்கும் பிறந்தானும் அல்லாதானாய், கோமாங்கிசத்தை புஜிப்பானுமாய், கெங்கையிடை குமரியிடை குரால் பசு கொன்றான் பாவம் கொள்வான் என்று எச்சரிக்கிறது  (SII VIII:80, AD 1233, NA). 

5.      படைத்தலைவர் வழங்கிய நான்கு கிராமங்களுக்கான வரித் தள்ளுபடியைக் குறிப்பிடும் வாலிகண்டபுரம் கல்வெட்டு, இத்தானத்திற்கு அதம் பண்ணுவான் எவனோ அவன் தன்மிணாட்டியைக் குதிரைக்குப் புல்லு பறிக்கிற புலையனுக்குக்10 கொடுப்பான் என்று சொல்கிறது (AR 1943/44:279, AD 1240(?), Tp). 

6.                தலைவர் கோயிலுக்கு கிராமத் தானம் வழங்கியதைக் குறிப்பிடும் மற்றொரு வாலி கண்டபுரம் கல்வெட்டு, இத்தன்மத்துக்கு மாறுசெய்வான் ஏழாம் நரகில் விழுவான், அவனுடைய மிணாட்டியைக் குதிரைக்குப் புல்லு பறிக்கிற பன்மையானுக்குக்11 கொடுப்பான் என்று கூறுகிறது  (AR 1943/44:281, AD 1243(?), Tp).

7.            ஏற்கனவே சான்று காட்டிய, எல்லா சாதிகளின் முன்னும் நாட்டுச் சபையில் தம்பியின் மூன்று மகன்களுடன் நாட்டுத் தலைவர் (நாடாழ்வார்) பகை பாராட்டியதைக் குறிப்பிடும் செங்கமம் கல்வெட்டு, மூன்று சகோதரர்களை ராசத் துரோகிகளும் நாட்டுத் துரோகிகளுமாக்கி, இவர்களுக்கு ஏதேனும் உதவிசெய்தாராகில், அவர்களை இராச துரோகிகளுமாக்கி நாயிலும் பன்றியிலும் கடையாகக் குத்துநூக்கடவோமாகவும் இவர்கள் பெண்டுகளை மூக்கும் முலையும் அறுத்துவிடக் கடவோமாகவும் என்று அறிவிக்கிறது  (SII VII:118, AD 1258, NA). 

8.              நாடு, கிராமம், நகரம் ஆகியவற்றின் சபைகளிடையே மேற்கொள்ளப்பட்ட உடன்படிக்கையைக் குறிப்பிடும் ரத்தினகிரி கல்வெட்டு, இந்த உடன்படிக்கைக்குத் தீங்கிழைப்பவன் பிராமணனே ஆயினும், கண்கள் பிடுங்கப்படும், மூக்கு அறுக்கப்படும்... அவன் பன்றியாகக் கருதப்படுவான்... வீரர்களால் கொல்லப்படுவான்... இந்த உடன்பாட்டை அழித்தவர் எவரோ அவர்கள் இறந்த பின், அவர்கள் பிணங்கள் பன்றிகளுக்கும் நாய்களுக்கும் உரியதாக எண்ணப்படும் என்று அறிவிக்கிறது  (AR 1914:153 காலம் கிடைக்கவில்லை, பதின்மூன்றாம் நூற்றாண்டுக்குரியது, Tp). இந்தக் கல்வெட்டு மிக மோசமாகச் சிதைந்துள்ளது. ஆகவே, இதில் கூறப்படும் உடன்படிக்கையின் முழு உள்ளடக்கம் அல்லது கல்வெட்டின் உண்மையான முழுப் பொருளை அறிந்து கொள்ள முடியவில்லை.

இந்தத் துல்லியமான வெளிப்பாடுகள் சில, அளிக்கப்படும் உண்மையான தண்டனை அல்லது கைக்கொள்ளப்படும் பழி வாங்குதல், ஓம்படைக்கிளவி குறிப்பிடும் அசாதாரணமான மனத்தடை ஆகியவற்றைக் குறிப்பிடுகிறது என்றுகூட கருதலாம்; ஆனால், மனத்தடை என்பதற்குள் போகாமல், இந்த ஓம்படைக்கிளவி வெளிப்பாடுகளில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் மீது கவனம் கொள்வோம். பன்னிரண்டாம் பதின்மூன்றாம் நூற்றாண்டு கல்வெட்டுகளில் இந்த மாற்றம் எப்படி நிகழ்ந்தது? மேலே காட்டியதைப் போன்று, சில குழுமங்களால் மேற்கொள்ளப்பட்ட ஒற்றுமை பற்றிய அறிவித்தல் உள்ளிட்ட பல்வேறு குழுச் சபைகளில் மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், வணிகக் குழுக்கள் மேற்கொண்ட திருவிழாச் செலவு பகிர்தல் குறித்த முடிவுகள் ஆகியவை அதிகரித்துச் செல்வதன் விளைவாக, கல்வெட்டுகளில் குறிப்பிடும் இவ்விசயங்கள் பன்மடங்காகி, கல்வெட்டுகளில் குறிக்கப்படும் பாவங்களின் பெருக்கமும் பல்கிப் பெருகிச் சென்றுள்ளது என்று புலப்படுகிறது.

(தொடரும்...)