பக்கங்கள்

திங்கள், 16 ஏப்ரல், 2018

வருணம் ஜாதியானது எப்படி! - அம்பேத்கர்



கி.மு. 185இல் புஷ்ய மித்திரன் என்ற பிராமணப் படைத் தளபதி மவுரியப் பரம் பரையில் வந்த தன் மன்னனைக் கொலை செய்து விட்டு சுங்க மரபை நிறுவினான். இதைப் புஷ்யமித்திரன் என்ற தனி மனி தனின் செயலாக அம்பேத்கர் பார்க்கவில்லை. புஷ்யமித்தி ரனின் இந்தச் செயலை "பிரா மணியப் புரட்சி" என்று அடை மொழியிட்டு அழைக்கும் அம் பேத்கர் புஷ்யமித்திரனின் புரட்சி புத்த சமயத்தைத் தூக்கி எறிவதற்காக பிராமணர்கள் தூண்டிவிட்ட அரசியல் புரட்சி என்கிறார்.

புஷ்ய மித்திரனைக் கரு வியாகக் கொண்டு பிராமணியம் வெற்றி பெற்ற பின்னர் மேற் கொண்ட தீச்செயல்களைப் பின் வருமாறு ஏழு தலைப்புகளில் அம்பேத்கர் பட்டியலிடுகிறார்.

(1) ஆட்சி செய்வதற்கு மன்னனைக் கொல்லுவதற்கும் பிராமணனுக்கு உரிமையுண்டு என்றே அது நிலை நிறுத்தியது..

2) பிராமணர்களை தனி சலுகைகள் பெற்ற ஒரு வகுப் பாக அது மாற்றியது. 3) அது வருணத்தை ஜாதி யாக மாற்றியது. (4) வெவ்வேறு ஜாதிகளி டையே போராட்டங்களையும், சமூக விரோத உணர்வுகளையும் அது உருவாக்கியது. (5) அது சூத்திரர்களையும் பெண்களையும் தாழ்ந்த நிலைக் குத் தள்ளியது. 6) படிப்படியான ஏற்ற, தாழ்வு முறையை அது தோற் றுவித்தது. 7) மரபொழுங்குகளை அடிப்படையாகக் கொண்டதாக வும், நெளிவு சுழிவானதாகவும் இருந்த சமூக அமைப்பை அது மாற்றிச் சட்டத்துக்கு உட்பட் டதாகவும் கடுமையானதாகவும் செய்தது.

"வருண தரும முறையை ஜாதியாக உருமாற்றம் செய் ததுதான் பிராமணியம் தனது வெற்றிக்குப் பின் முதன்மையாக ஈடுபட்ட மிகப் பெரிய சுயநல நோக்குள்ள செயலாகும்"

இதுபற்றி அண்ணல் அம் பேத்கர் சிறப்பாகக் குறிப்பிடுவது முக்கியமானதாகும்.

"பிராமணியம் வருணத்தை ஜாதியாக மாற்றியது என்று  நான் கூறும்போது அந்தஸ்தையும், தொழிலையும் பரம்பரையாக வருவதாக அது மாற்றி விட்டது என்பதையே குறிப்பிடுகிறேன்.

1) முதல் கட்டத்தில் ஒருவ னுடைய  வருணம். அதாவது அந்தஸ்தும், தொழிலும் ஒரு குறிப்பிட்டக் கால அளவே நீடித்தது. 2) இரண்டாவது கட்டத்தில் ஒருவரது வருணம் அவரது ஆயுட்காலம் வரை நீடித்தது. 3) மூன்றாவது கட்டத்தில் பரம் பரை அடிப்படையில் வரும் சொத்து போல் வருணம் ஆகி விட்டது" என்றார் அண்ணல் அம்பேத்கர்.

புரிகிறதா பார்ப்பனியத்தின் பலமான அடித்தளம்!

- மயிலாடன்

குறிப்பு: சென்னைப் பல் கலைக் கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் (27.11.2009) பேராசிரியர் ஆ. சிவசுப்பிர மணியம் ஆற்றிய ஆய்வுரை யிலிருந்து இது).

-விடுதலை நாளேடு, 15.4.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக