பக்கங்கள்

செவ்வாய், 25 ஜனவரி, 2022

பார்ப்பன ஆதிக்கம் என்றால் என்ன?

*#பார்ப்பனிய #ஆதிக்கம் #என்றால் #என்ன?*

*"சென்னை உயர்நீதி மன்றம். பார்ப்பனஆதிக்கமும் - சமூகநீதியும் "*
                      
*(1861 - 1973 = 112 ஆண்டு காலம்)...!*

*தோழர்களே வணக்கம்...!!*
 
*சென்னை உயர்நீதி மன்றம் 1861 இல் துவங்கி 1948 வரை 87 ஆண்டுகள் வரும் வரையிலும் - நீதிக்கட்சி ஆட்சிக்கு வரும் வரையிலும் நீதிபதிகளாக இருந்தவர்கள்*

1)டி.முத்துசாமி அய்யர்.
2) சுப்பிரமணிய அய்யர்.
3)பாஷ்யம் அய்யங்கார்.
4)எ.ஏம். குமாரசாமி சாஸ்திரி.
5)வி. கிருஷ்ணசாமி அய்யர்.
6)ஏ.சுந்தரம் அய்யர்.
7)டி.சதாசிவ அய்யர்.
8)டி.வி.சேசாஸ்திரி அய்யர்.
9)எஸ்.வரதாச்சாரி.
10)எஸ்.கிருஷ்ணசாமி அய்யர்.
11) பதஞ்சலி சாஸ்திரி.
12)எம்.சந்திரசேகர் அய்யர்.
13)டி.எஸ்.வெங்கட்ராம அய்யர்.
14)எஸ்.பஞ்சாப கேசு அய்யர்.
15).வி.இராஜ கோபால் அய்யர்‌.
16)பி.பாலகிருஷ்ண அய்யர்.
17)ஏ.எஸ். பஞ்சாகேச அய்யர்‌.
18)பி.எஸ். இராமசாமி அய்யர் ‌.
19)என்.இராஜகோபால அய்யங்கார்.
20) குப்புசாமி அய்யர்.
21) அனந்த நாராயண அய்யர்‌.
22)ஜெகதீஸ் அய்யர்.
23) சீனிவாச அய்யர்.
24) இராமகிருஷ்ண அய்யர்.

*87 ஆண்டுகள் மக்கள் தொகையில் 3%மட்டுமே உள்ள பார்ப்பனர்கள் (அய்யர்அய்யங்கார்- சாஸ்திரி - சர்மா என ) மிகப்பெரும் எண்ணிக்கையில் ஆதிக்கம் செலுத்தி வந்தனார்*

*1948 இல் சென்னை மாகாண அரசை காங்கிரஸ், ஓமந்தூர்இராமசாமி ரெட்டியார் முதலைச்சைராக ஆண்டு வந்தது.*
அவர் சமூக நீதியில் ஆழ்ந்த பற்றும், 
பார்ப்பனர் அல்லாத மக்கள் உயர்ந்த
பதவிகளுக்கு வர வேண்டும் என்று
விருப்பம் கொண்டிருந்தவர்.* அப்போது
சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு நீதிபதி காலியானது.

*அந்த இடத்தில் சிதம்பரம் (சைவப்பிரிவு)
- பிரபல குற்றவியல் வழக்குரைஞர் நாக
- பூசனம் சோமசுந்தரம் (பிள்ளை) என்ற முற்ப்படுத்தப்பட்ட சமூகத்தை தமிழரை
நியமிக்க மத்திய அரசுக்கு பரிந்துரை
செய்தார். 

தோழர்களே! கவனியுங்கள்;

ஒரு தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகப்
பிற்படுத்தப்பட்டவர்களிலிருந்து கூட அல்ல..!
ஒரு முற்படுத்தப்பட்டவரைத்தான் ,
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு 
முதலமைச்சர், நியமன பரிந்துரை செய்ய அதிகாரம் உள்ளவர், மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தார்.

* அன்று மத்தியில் நேரு பிரதமர்.சர்தார்
வல்லபாய் பட்டேல் ‌உள்துறை அமைச்சர்.
இந்த சூழிலில் மத்திய அரசில் இலாகா இல்லாத அமைச்சராக இருந்த குலக்கல்வி சூதுமதிபடைத்த குல்லகபட்
டர் இராஜகோபால ஆச்சாரியும், - இன்னொரு பாதுகாப்புத்துறை அமைச்சரும், நேருவின் நெருங்கிய நண்பருமான கோபால்சாமி அய்யங்கார்
மருமகனான வீ.கே. திருவேங்கடாச்சாரி
யைமீண்டும் நீதிபதியாக , நியமனம் செய்ய வேண்டும் என்றும் சிபாரிசு செய்கிறார்கள்.

*பிரதமர் நேரு ஒருதலைப்பட்சமாக
முதலமைச்சரை அழைத்து; " நீங்கள் பிராமணர் அல்லாதார் அரசை ஜாதி
அடிப்படையில் நடத்ப்பார்கிறீர்கள் என்று
உள்துறை அமைச்சர் வல்லபாய் பட்டேல்
முன் கண்டிக்கிறார். இராஜகோபால ஆச்சாரியின் பரிந்துரையை ஏற்க முயல்
கிறார் நேரு..

*முதலமைச்சர் ஓமந்தூரார் பிரதமர் நேருவிடம் இரண்டு வெள்ளைத்தாள் 
களைக் கேட்டு வாங்கி, ஒன்றில் மக்களால்  தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அமைச்சராகிய நான் பரிந்துரைத்த
நாகபூசனம் சோமசுந்தரத்தின் நியமனத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்...!

* இல்லையென்றால் என்னுடைய முதல்வர் பதவியை ராஜினாமா செய்கி-றேன் என்று இரண்டு கடிதங்களை  கொடுத்தார்...

*உடனிருந்து உள்துறை அமைச்சர் பட்டேல் நேருவிடம்; "இந்த இராஜினாமா
வை ஏற்றால் , சென்னை மாகாணத்தில்
பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் மிகப்பெரிய
எழுச்சியை காங்கிரஸின் மத்திய,மாநில
அரசுகளுக்கு எதிராக தோற்றுவிப்பார்" என எச்சரித்தார். அதனை ஏற்று நேரு நியமனத்திற்கு ஒப்பதல் அளித்தார்.

*ஒரு முற்ப்படுத்தப்பட்ட தமிழர் உயர்நீதிமன்ற நீதிபதியாக வருவதற்கு முதலமைச்சர் தன் பதவியை ராஜினாமா
 செய்யகிற எல்லை வரை போய்தான் இந்த பதவி தமிழருக்கு வந்தது.!

*அப்படி என்றால் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எப்படி இது போல் உயர்பதவிக்கு வர முடிந்தது என்பதை நாளை பதிவில்....

#தொடரும்......!

*இந்த முதல் பகுதி பதிவுக்கு உதவிய சான்று ஆவணங்கள் நன்றியுடன்...!

1) உயர்நீதிமன்ற நீதிபதிகளின்    பெயர்கள் பொறித்த கல்வெட்டு

2) அன்றைய திராவிடர் கழகப்பிரச்சாரச்
       செயலாளர்;"சொல்வேந்தர்" திருச்சி
         நீ.செல்வேந்திரன் அவர்களின்
        உரைகளின் தொகுப்பு-( C.D.கள்)

3) " மார்க்ஸிஸ்ட்கள் சிந்தனைக்கு" -
      தோழர் மின்சாரம் அவர்கள் எழுதிய
       திராவிடர் கழக வெளியீடு-நூல்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக