பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு-தேர்தல் வித்தை: காங்கிரஸ்
புதுடில்லி, ஜன.8 பொருளாதாரத்தில் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு கூடுதலாக 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. கல்வி, வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது.
5 மாநில தேர்தல்களில் பாரதீய ஜனதா 3 மாநிலங்களில் ஆட்சியை இழந்தது. அக்கட்சியின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்திருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்நிலையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடுக்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. இந்நிலையில் இது தேர்தல் வித்தையாகும் என காங் கிரஸ் விமர்சனம் செய்துள்ளது. 2019 நாடாளுமன்றத் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலுக்கு வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது என காங்கிரஸ் விமர்சனம் செய்கிறது.
4 வருடங்கள், 8 மாதங்கள் ஆட்சி செய்த போது இதுபற்றி ஏன் நினைக்கவில்லை? தேர்தல் நடைபெறுவதற்கு மூன்று மாதங் களுக்கு முன்னர், இது வித்தை காட்டும் நடவடிக்கையாகும் என காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி விமர்சனம் செய்துள்ளார். இதுவரையில் பொதுப்பிரிவில் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு எந்த வகையிலும் இடஒதுக்கீடு அளிக்கப்படவில்லை.
இப்போது கொண்டு வரும் இடஒதுக்கீடை அமல்படுத்த அரசியலமைப்பு சட்டம் 15, 16 பிரிவில் சட்டத்திருத்தம் கொண்டு வருவது அவசியமாகும். வியாழன் அன்று மாற்றம் கொண்டு வருவது தொடர்பான மசோதாவை அரசு கொண்டு வரலாம் என தெரிகிறது.
இந்நிலையில் அரசியலமைப்பு திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை உள்ளதா? என்றும் காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
- விடுதலை நாளேடு, 8.1.19
பொருளாதார அடிப்படையில் 10% இட ஒதுக்கீடு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் கண்டனம்
சென்னை, ஜன.9 உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு கொண்டுவரும் மத்திய அரசுக்குக் கண்டனம் தெரி வித்து தி.மு.க. தலைவர் தளபதி மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களிடம் நேற்று (8.1.2019) கூறியதாவது:
செய்தியாளர்: 10 சதவிகித இட ஒதுக்கீடு குறித்து தாக்கல் செய்திருக்கின் றார்கள். அதுகுறித்து என்ன கருத்து தெரிவிக்கின்றீர்கள்?
மு.க.ஸ்டாலின்: இன்றைக்குக் காலையில் சட்டமன்றத்தில் இந்தப் பிரச்சினையை நான் எழுப்பியபோது, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக் குமார் அவர்கள், இதுபோன்று அதி காரப்பூர்வமாக எந்தச் செய்தியும் வர வில்லை. அதுபோல் ஒரு சூழ்நிலை வந்தால், அதை நிச்சயமாக நாங்கள் எதிர்ப்போம், நாங்கள் அதை ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று உறுதி தந் திருக்கின்றார்.
ஆனால், உண்மை நிலை என்ன வென்று கேட்டால், பொருளாதார அளவென்பது ஒரு முறையற்றது, சரியானதல்ல. ஒரு பணக்காரன் அவன் தொழில் சம்பந்தமாக ஒரு ஏழையாகப் போய்விட்டால், அதை எந்தக் கணக்கில் எடுத்துக் கொள்வது? ஆகவே, இந்தச் சூழ்நிலையில்தான் இந்தச் சட்டத்தை திட்டமிட்டு பிரதமராக இருக்கக்கூடிய மோடி அவர்கள் ஏதோ பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, தாழ்த்தப்பட்ட மக்களுக்கு, மலைவாழ் மக்களுக்கு உதவி செய்வது போல, ஒரு நாடகத்தை நடத்தி, அவர்களைப் பழிவாங்கக்கூடிய வகை யில் இந்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தி, நிறைவேற்ற முயற்சிக்கின்றார். இதைத் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார் பில் நாங்கள் வன்மையாகக் கண்டிக்கின் றோம்.
-இவ்வாறு தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கை
பொதுப் பிரிவில் உயர்ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை எதிர்த்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட வேண்டும் என்று சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்தார். ஆனால், அது ஏற்கப்படவில்லை.
இட ஒதுக்கீட்டை ஒழிக்க பா.ஜனதா அரசு சதி தொல்.திருமாவளவன் குற்றச்சாட்டு
சென்னை, ஜன. 9- விடுதலைச் சிறுத்கைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
முற்பட்ட வகுப்பினரில் பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டை அளிக்க வகை செய்யும் சட்டத் திருத்தத்தை மத்திய பா.ஜனதா அரசு கொண்டு வந்துள்ளது.
இது உண்மையில் அவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் நோக்கம் கொண்ட தல்ல, ஏற்கெனவே இருக்கும் இடஒதுக் கீட்டை ஒழித்துக்கட்டுவதற்கான சதித்திட் டம் ஆகும் என சுட்டிக்காட்டுகிறோம். தேர்தல் ஆதாயத்திற்காக முற்பட்ட வகுப் பினரை ஏமாற்றும் இந்த மோசடி முயற்சி யைக் கைவிட வேண்டுமென பா.ஜனதா அரசை வலியுறுத்துகிறோம்.
இடஒதுக்கீடு என்பது வெறும் பொரு ளாதார அடிப்படையில் வழங்கப்படுவ தல்ல. பலநூறு ஆண்டுகளாக நிலவி வரும் சமூக பாகுபாடுகளால் பாதிக்கப் பட்டவர்களுக்கு சமத்துவ நோக்கில் வழங் கப்படுவதாகும்.
இதை உச்சநீதிமன்றம் இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பு உட்பட பல்வேறு தீர்ப் புகளில் சுட்டிக் காட்டியிருக்கிறது. உச்சநீதி மன்றத்தின் அரசியலமைப்புச் சட்ட அமர்வுகளில் வழங்கப்பட்ட தீர்ப்புகளுக்கு எதிராக இந்த இட ஒதுக்கீட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
பா.ஜனதா அரசு நீதித்துறையை மதிக் காதது மட்டுமின்றி இடஒதுக்கீட்டுக்கு எதி ரானது என்பதற்கும் இது ஒரு சான்றாகும்.
பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி இட ஒதுக்கீட்டைக் கொஞ்சம்கொஞ்சமாக சிதைத்து வருகிறது. இடஒதுக்கீட்டை ரத்து செய்கிறோம் என வெளிப்படையாகக் கூறாமலேயே அதை முடக்கிக் கொண்டிருக்கிறது. இட ஒதுக் கீட்டுக்குப் பொருளாதார அளவு கோலை வைப்பதன் மூலம் இட ஒதுக்கீட்டின் அடிப்படையையே தகர்க்க நினைக்கிறது.
முற்பட்ட வகுப்பினருக்கு உதவுவது போல் பா.ஜனதா அரசு கொண்டு வந்திருக் கும் இந்த சட்டதிருத்தம் உண்மையில் அவர்களை ஏமாற்றும் நோக்கம் கொண்ட தேயாகும். பா.ஜனதா தோல்வி பயத்தில் மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கைக்கு எவரும் ஏமாறமாட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
10 சதவிகித இடஒதுக்கீடுக்கு துணை சபாநாயகர் தம்பிதுரை சாடல்!
டில்லி, ஜன. 9- பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா இன்று மாநிலங்கள வையில் தாக்கல் செய்யப்பட உள் ளது. இதற்கான மசோதா நேற்று மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மசோதாவிற்கு பெரும்பாலான கட்சிகள் ஆத ரவு தெரிவித்தாலும் தமிழகத்தை சேர்ந்த முக்கிய கட்சிகள் எது வும் ஆதரவு தெரிவிக்கவில்லை. முக்கியமாக மக்களவையில் இருக்கும் தமிழக அதிமுக எம். பிக்கள் யாரும் இந்த மசோதா விற்கு ஆதரவு அளிக்கவில்லை. மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து வாக்கெடுப்பு நடக்கும் முன் இவர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்த மசோதாவிற்கு எதி ராக அதிமுக எம்.பியும், மக் களவைத் துணைத் தலைவரு மான தம்பிதுரை பேசினார். அதில், பொருளாதார ரீதியான இடஒதுக்கீடு என்பது கொஞ்ச கூட சாத்தியம் இல்லாதது. பொருளாதாரத்தில் பின் தங்கி யவர்கள் முன்னேற்றம் அடைய நிறைய வழிகள் இருக்கிறது. அதைவிட்டுவிட்டு ஏன், இட ஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.
நாட்டில் ஜாதி ஒழிந்தால் எல்லாம் ஒழியும். ஜாதி ஒழிந் தால் பொருளாதார ஏற்றத் தாழ்வு ஒழியும். அரசு ஜாதி ஏற்றத்தாழ்வை அழிக்கத்தான் அரசு முயல வேண்டும். இந்த இடஒதுக்கீடு சமூக நீதிக்கு எதிரான பெரிய அடி இந்த சட்டம். முதலில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய 69% இட ஒதுக்கீட்டை உறுதி செய்யுங்கள்.
அரசிடம் மோசமான பொரு ளாதார கொள்கை இருக்கிறது. இதனால் பல கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் இருக் கிறார்கள். பொருளாதார கொள் கையில் தோல்வி அடைந்த அரசு, இப்போது இடஒதுக்கீடு என்று மக்களை ஏமாற்ற பார்க் கிறது. மக்களை முன்னேற்ற வேண்டும் என்றால் பொருளா தார கொள்கைகளை மாற்ற வேண்டும்.
பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்தால் எல்லோர் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் போடுவதாக கூறினார். 15 லட்சம் ரூபாய் போட்டாலே போதும் எல்லோரும் பணக்கா ரர்கள் ஆகிவிடுவார்கள். ஆனால் அரசு அதை செய்யாது. இது தேர்தலுக்காக பாஜக நடத்தும் நாடகம் என்று தம்பிதுரை குறிப்பிட்டார்.
இவ்வளவும் பேசிவிட்டு எதிர்த்து வாக்களிக்காமல் வெளி நடப்பு செய்தது ஏன்?
- விடுதலை நாளேடு, 9.1.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக