பக்கங்கள்

செவ்வாய், 15 பிப்ரவரி, 2022

'கல்வியில் இட ஒதுக்கீடு செல்லும்' உச்சநீதிமன்றம் தீர்ப்பு - கழக வெளியுறவுத் துறை செயலாளர் கோ.கருணாநிதி விளக்கவுரை

ஜெய்ப்பூரில் நடந்த ஜாதிக்கொடுமை குதிரையில் வந்த தாழ்த்தப்பட்ட மணமகனைத் தாக்கிய உயர்ஜாதியினர்

குதிரையில் ஊர்வலம் சென்ற தாழ்த்தப்பட்ட சமூக மணமக்கள் மீது தாக்குதல்! : 6 பேர் கைது


போபால்ஜன.30- தாழ்த்தப் பட்ட சமூக மணமக்கள் குதி ரையில் ஊர்வலம் சென்றதற்காகமத்தியப் பிரதேச மாநிலம் கனி யாரி கிராமத்தில் ஜாதியவாதி கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

மத்தியப் பிரதேச மாநிலம் சாகர் மாவட்டத்தில் உள்ள கனி யாரி கிராமத்தில் ‘லோதி தாக் குர்’ என்ற சமூகத்தினர் தங் களை உயர்ந்த வகுப்பினராக கருதி வருகின்றனர்திருமண நிகழ்வுகளில் மணமக்களை குதிரையில் அழைத்து செல்லும் மரபுகள் தங்களுக்கானது என் றும் சொல்லிக் கொள்கின்றனர்

இந்நிலையில்கனியாரி கிராமத்தைச் சேர்ந்த திலிப் அகர்வார் என்ற இளைஞர்தனது திருமண நிகழ்வுக்காக குதிரை ஒன்றை முன்பதிவு செய் துள்ளார்இவர்தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்ப தால்அவர் குதிரையில் ஊர்வ லம் செல்லக் கூடாது என்று லோதி தாக்குர் பிரிவினர் மிரட் டல் விடுத்துள்ளனர்

எனினும்திலீப் அகர்வார், 100-க்கும் மேற்பட்ட காவல் துறையினரின் பாதுகாப்புடன்தனது மணவிழாவில் குதிரை யில் ஊர்வலம் சென்றுள்ளார்கனியாரி கிராம வரலாற்றில் தாழ்த்தப்பட்ட சமூக மணமகன் ஒருவர் குதிரையில் ஊர் வலம் சென்றது இதுதான் முதல்முறை என்பதால்தங்கள் மீதான அடக்குமுறையில் விடிவு கிடைத்து விட்டதாக அச்சமூக மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந் தனர்.  ஆனால்தாழ்த்தப்பட்ட சமூக மணமக்களின் மணவிழா ஊர்வலம் முடிந்த அடுத்த சில மணி நேரங்களிலேயே மண மகன் திலீப் அகர்வாரின் வீட் டின்மீது ஜாதியவாதிகள் தாக் குதல் நடத்தியுள்ளனர்இந்த சம்பவம் தொடர்பாகதற்போது வன் கொடுமை சட்டத்தின் கீழ் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய் யப்பட்டு 6 பேர் கைது செய் யப்பட்டுள்ளனர்

சில நாட்களுக்கு முன்புராஜஸ்தான் மாநிலம் பண்டி மாவட்டம் சாடி கிராமத்திலும்இதேபோல ஜாதியவாதிகளின் அடக்குமுறையை எதிர் கொண்டுபட்டியல் வகுப்பைச் சேர்ந்த சிறீராம் மேக்வால் - திரோபதி தம்பதி குதிரை ஊர்வலம் சென்றுஉரிமையை நிலை நாட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

‘எஸ்.சி., எஸ்.டி., சமூகத்தவர் பதவி உயர்வுபற்றி முடிவு செய்ய மாநிலங்களுக்கு உரிமை உண்டு'' - அதன்படி செயல்படுக!


வரவேற்கத்தக்க உச்சநீதிமன்றத்தின் இன்றைய சமூகநீதித் தீர்ப்பு!

தமிழர் தலைவர்  அறிக்கை

‘‘எஸ்.சி., எஸ்.டி.,  சமூகத்தவர் பதவி உயர்வு பற்றி முடிவு செய்ய மாநிலங்களுக்கு உரிமை உண்டு'' என்ற உச்சநீதிமன்றத்தின்  இன்றைய தீர்ப்பு வரவேற்கத்தக்க சமூகநீதித் தீர்ப்பாகும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஒடுக்கப்பட்ட சமூக மக்களான எஸ்.சி., எஸ்.டி., போன்ற ஆதிதிராவிடர், பழங்குடி சமூக மக்கள் உத்தியோக மண்டலத்தில் பெரிய பதவிகளில் பெரிதும் இல்லாத நிலையில், பதவி உயர்வு அவர் களுக்குத் தருவதுபற்றி எழுந்த வழக்கில், உச்சநீதி மன்றம் இன்று (28.1.2022) அளித்துள்ள தீர்ப்பின்படி, மாநில அரசுகளே இதுபற்றி முடிவு எடுக்க முழு உரிமை பெற்றவை; அந்தந்த மாநில அரசுகள், அச்சமூக மக்கள், அப்பதவிக்குப் போதிய பிரதிநிதித்துவத்தை பெற்றிருக்கிறார்களா என்ற தகவல் களைத் திரட்டி, அதனடிப்படையில் முடிவு எடுக்க அம்மாநில அரசுகள் அதிகாரத்தைப் பயன்படுத்திச் செயல்படுத்தலாம் என்று வழங்கியுள்ள தீர்ப்பு, வரவேற்கத்தக்க தீர்ப்பாகும்.

காலங்காலமாக உத்தியோக வாய்ப்பு மறுக்கப்பட்ட அடித்தட்டு சமூக மக்களுக்குப் பதவி உயர்வு தந்து, பெரிய பதவிகளிலும்கூட போதிய பிரதிநிதித்துவம் (Adequate representation) இருக்கச் செய்வதே உண்மையான சமூகநீதியாகும்.

ஏற்கெனவே நீண்ட காலத்திற்குமுன் உச்சநீதி மன்றம், ரங்காச்சாரி Vs மாநில அரசு என்ற வழக்கில், ‘நியமனம்' (Appointment) என்பது ‘ பதவி உயர்வையும்' (Promotion) சேர்ந்ததே என்று தீர்ப்பளித்துள்ளது என்பதை இந்நேரத்தில் சுட்டிக்காட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இதன்மூலம் இட ஒதுக்கீடு - சமூகநீதி மாநில அதி காரத்திற்கே உள்பட்டது என்பது மேலும் விரிவாகவும், தெளிவாகவும் ஆக்கப்பட்டுள்ளது.


கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

28.1.2022



மண்டல் குழுவை உருவாக்க பா.ஜ.க.வின் பங்களிப்பு என்ன?

வியாழன், 27 ஜனவரி, 2022

இந்திய ஒன்றியம் முழுவதும் திராவிடத் தத்துவக் கொடி!