பக்கங்கள்

செவ்வாய், 3 ஜூலை, 2018

கோவிலுக்குள் நுழைய விடாமல் குடியரசுத் தலைவரும் அவரது மனைவியும் பார்ப்பன அர்ச்சகர்களால் தள்ளிவிடப்பட்டனர்!


கோவிலுக்குள் நுழைய விடாமல் குடியரசுத் தலைவரும் அவரது மனைவியும் பார்ப்பன அர்ச்சகர்களால் தள்ளிவிடப்பட்டனர்!




பூரி கோவிலில் உள்ளே நுழையும் படிக்கட்டுக்குமேல் நின்று வழிபடும் குடியரசுத் தலைவரும், அவரது மனைவியும்


கடந்த மார்ச் மாதம் 18 ஆம் தேதி ஒடிசா மாநிலம் பூரி மாவட்டத்தில் உள்ள ஜகன்னாதர் கோவிலுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தும், அவரது மனைவி சவீதாவும் சென்றனர். இந்திய குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்ற பிறகு, முதன்முறையாக பூரி கோவிலுக்குச் சென்றார். கோவில் கருவறை அருகே ராம்நாத் கோவிந்தும், சவீதாவும் சென்றபோது அங்கிருந்த பார்ப்பனர்கள்  அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

மேலும் குடியரசுத் தலைவர் மற்றும் அவரது மனைவி ஆகிய இருவரும் கோவிலுக்குள் நுழைய விடாமல் தள்ளி விடப்பட்டனர்.  கோவில் பாதுகாவலர்களின் முரட்டுத்தனமான நடவடிக்கை குறித்து பூரி மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அகர்வாலுக்கு குடியரசுத் தலைவர் மாளிகை புகார் கடிதம் எழுதியுள்ளது. (தி நியூ இண்டியன் எக்ஸ்பிரஸ்', 28.6.2018)

-  விடுதலை நாளேடு, 29.6.18

யார் யாரெல்லாம் கோவிலுக்குள் நுழையாமல் தடுக்கப்பட்டனர்?

தாழ்த்தப்பட்டவர் என்கிற காரணத்தால் குடியரசுத் தலைவர் உள்பட பலரையும் கோவிலுக்குள் அனுமதிக்காதது ஏன்?


நியாயம் கற்பிக்கும் பார்ப்பன வர்ண தருமக் கும்பல்




புதுடில்லி, ஜூன் 28 குடியரசுத் தலைவரை கோவிலில் நுழையவிடாமல் தடுத்தது தொடர்பாக கோவில் சார்பில் கூறப் பட்டதுபற்றி பத்ரிகா' என்ற இந்திய செய்தி யில் வெளிவந்திருப்பதாவது:

பூரிஜெகன்னாதர் கோவில் பாரம்பரியத்தை இன்றும் பாதுகாத்துவரும் கோவி லாகும். இங்கு பணம் மற்றும் உயர் பதவிலிருப்பவர்களுக்காக விதிமுறை களை என்றுமே மாற்ற முடியாது.

இந்திரா முதல் வைஸ்ராய் வரை


முன்பு பிரதமராக இருந்த இந்திரா காந்தி பார்சியை திருமணம் செய்திருப்பதால் அவர் கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்தோம். அதே போல் நாடெங்கும் தாழ்த்தப்பட்டமக்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழையும் வேத பாரம்பரியத்திற்கு எதிரான செயல்கள் நடந்துகொண்டிருந்தன. மதத்தலைவர்கள் சுயலாபம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், பூரிஜெகன்னாதர் கோவிலில் அந்த மதக்கட்டுப் பாட்டை உடைக்க துணிச்சல் வரவில்லை; காந்தி இக்கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு நுழைவேன் என்று சபதமிட்டு 1934 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் பூரி வந்துசேர்ந்தார். ஆனால், அவரும், அவருடன் சேர்ந்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களும் கோவில் தெருவில் கூட நுழைய முடியாமல் இந்துமத நெறிக்காப்பாளர்களின் எதிர்ப் பைக் கண்டு பயந்து ஓடிவிட்டனர்.

அதன் பிறகு வினோபாவேவும் பூரி ஜெகன்னாதர் கோவிலுக்கு வந்தார். ஆனால், அவர் இந்துக்களின் நிலங்களை பிடுங்கித் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கும் கொடிய பிரச்சாரத்தைச் செய்தார். பூமி தான இயக்கத்தினால் பல கோவில் சொத்துக்கள் கைவிட்டுப் போயின. ஆகையால், அவரை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்தோம். அதேபோல் ரவீந்தரநாத் தாக்கூர் பார்ப்பனர் என்றாலும் அவர் தீவிர கடவுள் மறுப்பாளராக இருந்த காரணத்தால் அவரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை.

மேலும் தாய்லாந்து மகாராணி, மகாசக்ரி சிறிதரணி, 2006 ஆம் ஆண்டு கோவிலுக்கு 8.12 கோடி தானமாகக் கொடுத்த சுவிட்சர்லாந்து மகாராணி குடும்பத்தைச் சேர்ந்த எலிசபத் ஜிக்லர்  மற்றும் இந்திய வர லாற்றை வரிசைக்கிரமமாக தொகுத்த வட மாகாண வைசிராய் லார்ட் கர்சன் போன் றோரையும் நாங்கள் கோவிலுக்கு அனு மதிக்கவில்லை. இவர்கள் அனைவரும் புத்தம், கத்தோலிக்க மற்றும் பிராட்டஸ்டாண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள்.

அம்பேத்கருக்கும் அவமான இழைப்பு


அதேபோல் அரசமைப்புச் சட்டத்தைத் தொகுத்த பிறகு பூரிக்கு வருகை புரிந்த பாபா சாகேப் அம்பேதக்ரையும் நாங்கள் கோவில் இருக்கும் பகுதிக்கு அனுமதிக்கவில்லை. காரணம் அவர் இந்து சாஸ்திர விதிகளின்படி தீண்டத்தகாத வகுப்பைச் சர்ந்தவர் ஆவார்.

1300 ஆம் ஆண்டு காலத்தில் பேச்சு மொழியில் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடி புகழ்பெற்ற கபிர்தாஸ் என்ற கவிஞர், பூரி ஜெகன்னாதர் கோவிலுக்குள் நுழைய முயன்ற போது, கடவுள் மறுப்பு குறித்த பாடல்களைப் பாடிய காரணத்திற்காக அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. அதே போல் 1508 ஆம் ஆண்டு பூரி மன்னரின் அழைப்பை ஏற்று பூரிக்கு வருகை புரிந்த சீக்கிய மத குரு தலைவர் குருநானக்கை அவர் இந்துமதத்திற்கு எதிரான ஒரு கொள்கைகையை அறி முகப்படுத்தினார் என்பதற்காக கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.

இதனை அடுத்து மன்னரும், அவரின் மனைவியும் தனியாக கோவிலுக்குள் சென்று வழிபட்டு வந்தனர். அதுவரை குருநானக் கோவிலுக்கு வெளியே காத்திருந்தார்.

இதர கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட


தலைவர்களும்-பிரபலங்களும்


ராஜீவ் காந்தியின் மனைவியும், முன் னாள் காங்கிரசு தலைவருமான சோனியா காந்தி ஒருமுறை திருப்பதி கோவிலுக்குள் சென்றபோது, அவர் கிறிஸ்தவர் ஆகையால் கோவிலுக்குள் நுழைவதை தடை செய்தனர். ஆகையால் அவர் கோவி லுக்குள் நுழையாமல் வெளியே வந்து விட்டார். வெளியே வந்த அவர் கூறிய போது, நான் பிறப்பால் கிறிஸ்தவர் ஆயினும், நான் ஒரு இந்துவான ராஜீவ் காந்தியைத் திருமணம் செய்துகொண்டேன், திருமணத்திற்குப் பிறகு நான் இந்து என்றே பதிவுசெய்துள்ளேன்'' என்று கூறியிருந்தார்.

சென்ற ஆண்டு பிரபல பாடகரும், குருவாயூர் கோவிலில் உள்ள சாமியைப் பற்றி உள்ளத்தை உருக்கும் பாடல்களை அதிகமாகப் பாடிய ஜேசுதாசை குருவாயூர் கோவிலுக்குள் நுழைய கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. கோவிலுக்குச் சென்ற அவரை வாசலுக்கு சிறிதுதூரத்தில் நிற்க வைத்து கர்ப்பகிரகத்தில் உள்ள சாமியின் படத்தை அவருக்குக் காட்டி வழிபடச் செய்து அனுப்பிவிட்டனர். இந்த அவ மானத்தை அவர் சகித்துக்கொண்டு, அடுத்த பிறவியில் நான் குரு வாயூர் கோவிலுக்குள் ஒரு பல்லியாக, பாச்சானாக, பூச்சியாக, புழுவாக பிறந்து அங்கேயே வாழ்ந்துகடவுளைகண்டுகொண்டே இருப்பேன்'' என்று உள்ளம் உருகிப் பேசினார்.

-  விடுதலை நாளேடு, 28.6.18

திங்கள், 2 ஜூலை, 2018

பதவிகளில் பார்ப்பன ஆதிக்கம்

கோயில்களில் 100% பிராமணன்கள்
நமது கிரிக்கெட் அணியில் 100% பிராமணன்கள்
IT துறையில் 99% பிராமணன்கள்
ஊடகங்களில் 90% பிராமணன்கள்.!
61% IPS பிராமணன்கள்.!
70% IAS ஆபிஸர்கள் பிராமணன்கள்.!
56% உச்சநீதி மன்ற நீதீபதிகள் பிராமணன்கள்.!
40% உயர்நீதிமன்ற நீதிபதிகள் பிராமணன்கள்.!
70% துணை வேந்தர்கள் பிராமணன்கள்.!
54% தலைமைச் செயலர்கள் பிராமணன்கள்
50% கவர்னர்கள் பிராமணன்கள்.!
48% லோக்சபா உறுப்பினர்கள் பிராமணன்கள்.!
36% ராஜ்யசபா உறுப்பினர்கள் பிராமணன்கள்.!
70% மந்திரிகளின் PA க்கள் பிராமணன்கள்.!

மக்கள் தொகையில் வெறும் 2% மட்டுமே இருக்கக்கூடிய பிராமணன்கள் இந்திய மக்களின் மொத்த வரிப்பணத்தையும் சம்பளம் ங்கற பேர்ல கொள்ளையடிக்கிறார்கள்

இவையனைத்தும் நியமன பதவிகள் என்பது தான் இதில் முக்கியமான விஷயம் . .

நியமன பதவிகள் என்றால் தேர்வு நடத்தி வெற்றி பெற்று வருவதல்ல . .

ஏற்கனவே அந்த பதவியில் இருக்கும் ஒரு  பிராமணன் இன்னொரு பிராமணனை பணியமர்த்துவது . . இப்போது NEET தேர்வும் இவர்களுக்கு சாதகமாகவே மோடி அரசு நடத்தி விட்டது அந்த பேப்பர்களை திருத்தப்போவதும் இதே குருப்புதான் . . .

இதற்கெல்லாம் ஒரே வழி இவர்களுக்கு 2%இட ஒதுக்கீடு வழங்குவது தான் நிரந்தர தீர்வு . .

அப்போது தான் மீதி இருக்கும் 98% பதவிகள் இவர்களிடமிருந்து தப்பிக்கும் அதை மற்ற மக்களுக்கு கொடுக்கலாம் . 

ஆனால் இவர்கள் இட ஒதுக்கீடு வேண்டவே வேண்டாம் என்கிறார்கள்

ஏனென்றால் 2% தானே கிடைக்கும் மாறாக மற்றவர்களுக்கு கொடுக்கும் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று ஓலமிடுகிறார்கள் இப்போதாவது மற்ற மக்கள் விழித்துக் கொள்ளவில்லையென்றால் இவர்களால் நாம் பிச்சையெடுக்கப்போவது உறுதி

#மீள்பதிவு

தோழர் Muthu pandi பதிவு..

(இது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் பெறப்பட்ட தகவல்)
நன்றி திருச்சி பெரியார் சரவணன். தோழர்

வெள்ளி, 29 ஜூன், 2018

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்



 


இன்றைய தினம் இந்தியா தேசத்தில் இந்திய மக்களுக் குள் இருந்துவரும் ஜாதி மத பேதங்களுக்குத் தகுந்தபடியான பிரதிநிதித்துவம் ஏற்படக்கூடாது என்பதே தான் இந்திய காங்கிரஸ் கொள்கையாகவும், தீவிர தேசியமாகவும் இருந்து வருகின்றது. அன்றியும் இந்தப்படி சொல்லுகின்றவர்கள்தான் தேசியவாதிகளாகக் கூடும்.

நம்மைப் பொறுத்தவரையிலும், ஜாதி, மத வகுப்புப்படி மக்களுக்குப் பிரதிநிதித்துவம் அளிக்கப்படவேண்டும் என்று சொல்லுவதாலேயே தீவிர தேசியவாதிகள் லிஸ்டில் நமது பெயர் பதியப்படாமல்  வகுப்புவாதிகள், தேசத் துரோகிகள் லிஸ்டில் நமது பெயர் பதியப்பட்டுவிட்டது. ஆனபோதிலும் 'ஜாதி, மதம், வகுப்பு ஆகியவைகளை அடியோடு அழிக்கவேண்டும்' என்று சொல்லுகின்ற 'ஜாதி மதத்துரோக' லிஸ்டிலும் நமது பெயர் மாத்திரமேதான் இருக்கின்றதேயொழிய மற்றபடியான 'தீவிர தேசியவாதிகள்' பெயரெல்லாம் ஜாதி, மத வகுப்பைக் காப்பாற்றும் லிஸ்டி லேயே தான் பதியப்பட்டிருக் கின்றன! இதில் இருந்து பகுத் தறிவுள்ள மக்கள் ஜாதி, மத வகுப்புவாதிகள் யார்? என்பதை ஒருவாறு உணர்ந்து கொள்ளலாம். ஆனாலும் சொந்த அறிவே சிறிதும் இல்லாத பாமரமக்கள் நம்மைக் குறை கூறாமல் இருக்கமாட்டார்கள். இந்த நாட்டில் நாமறிய சுமார் 20 வருஷ காலமாகவே பிராமணர்கள் மகாநாடு, வருணா சிரம மகாநாடு, கிறிஸ்துவர் மகாநாடு, முஸ்லிம்கள் மகாநாடு, சைவர் மகாநாடு, வைணவர் மகாநாடு, ஆரிய தர்ம பரீட் சித்து மகாநாடு, மற்றும் சத்திரியர், வைசியர், பார்ப்பனரல் லாதார், பறையர், சக்கிலியர், வண்ணார், நாவிதர், நாயக்கர், பள்ளர்கள், வணியவைசியர்கள், வேளாளர், படையாட்சி, வேடுவர், கோமுட்டி வைசியர், நாட்டுக்கோட்டை, வைசியர், அகமுடையர், உடையார், நாடார், மறவர், கள்ளர், வீரசைவர், தேவாங்கர், இராஜபுத்திரர், சாலியர்,  மராட்டியர், கைக் கோளர் சௌராஷ்டிரர்கள், குலிஜியர்கள், குயவர்கள், கோனார் முதலிய பல முக்கிய வகுப்புக்காரர்களின் தனித் தனி மகாநாடுகளும், மற்றும் இவற்றுள் நூற்றுக்கணக்கான உட்பிரிவு வகுப்புகள் மகாநாடுகளும் நடைபெற்ற வண்ண மாகவே இருந்து வருகின்றன.

மற்றும் தேசிய கொள்கைகள் என்பவைகள் எல்லாம் ஜாதி, மத வகுப்புகளை காப்பாற்று வதிலும், அவற்றின் பரம்பரை உரிமைகளைக் காப்பாற்றுவதிலும், பழக்கவழக்கங் களைக் காப்பாற்றுவதிலும் தவற மாட்டோமென்று அந்த வகுப்பாருக்கு உறுதி கொடுப்பதாகவே தான் தீர்மானித் திருக்கின்றன. சர்க்காரார் கணக்கிலும் ஜாதிக்கொரு கலமும், மதத்திற்கொரு கலமும், வகுப்புக்கொரு கலமும், போடப் பட்டு அதை அனுசரித்தே சிவில் கிரிமினல் சட்டங்களும், ஆட்சியும் நடத்தப்பட்டு வருகின்றன. வியாபாரத் துறை யிலும் ஜாதி வகுப்புகள் ஆதிக்கமும், விவசாயத் துறையிலும் ஜாதி, மத வகுப்புகள் ஆதிக்கமும் இருந்து வருவதோடு சமுகத் துறையிலும் ஜாதி, மத வகுப்பு ஆதிக்கம் தலைசிறந்தே விளங்குகின்றன.

உதாரணமாக, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் திரு இராஜகோபாலாச்சாரியார் அவர்களே தலைவர் ஹோதாவில் 'எவனாவது கள் குடித்தால் அவனை ஜாதியை விட்டும் வகுப்பை விட்டும் பகிஷ்காரம் செய்து அதாவது அவனுக்கு நீர், நெருப்பு, பூமி ஆகியவை யாரும் கொடுக் காமல் கொடுமைப்படுத்துவதான ஜாதி வகுப்பு கட்டுப் பாட்டைப் பலப்படுத்துங்கள்' என்று அறிக்கை விட்டிருக் கின்றார்.

இந்த மாதிரியான முறையில் தேசியம் முதல் காந்தியம் வரை ஜாதி மத வகுப்பு பிரிவினைகளுக்கு இரும்புப் பூண் கள் போடப் பட்டது போல் உறுதிப்படுத்தி, கட்டுப்படுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன. அன்றியும், இவை சுலபத்தில் ஒழிக்கப்பட யாராலும் சம்மதிக்க முடியாது என்பதிலும் எவரும் எவ்வித சந்தேகமும் கொள்ள முடியாது. ஒரு பறையர் ஒரு பொதுத்தெருவில் நடந்தால் இன்ன தண்டனை. ஒரு வாணிய வைசியர் ஒரு பொது கோவிலுக் குள் போனால் இன்ன தண்டனை. ஒரு நாடார் சத்திரியர், ஒரு பொதுக் குளத்தில் தண்ணீர் மொண்டால் இன்ன தண்டனை என் கின்ற பினல் கோட் சட்டமும், அதற்காக இன்ன நஷ்டம் கொடுக்க வேண்டும் என்கின்ற சிவில் கோட் சட்டமும், கிராம முன்சீப் கோட் முதல் பிரிவிகவுன்சில் வரை செல வாணி ஆகிக் கொண்டுதான் இருக்கின்றது.

அன்றியும் இதற்கு விரோதமாய் பேசுபவன் ஒவ்வொரு வனும் ஒவ்வொரு ஜாதிமத வகுப்புக்கும் விரோதியா கின்றானே யொழிய, அவன் சமரசக்காரனாவதில்லை. இவை மாத்திரமல்லாமல். பொதுரோட்டில் ஒரு இந்து மேளம் அடித்தால் மகமதியர்கள் கத்தியால் குத்துகிறார்கள். பொதுத்தெருவில் ஒரு மகமதியர் மாட்டைப் பிடித்துக் கொண்டு போனால் இந்துக்கள் அவரைக் கத்தியால் வெட்டுகிறார்கள் சீக்கியரும், முகமதியரும் தங்களை ஒருவருக்கொருவர் ஜன்ம விரோதிகள் என்ற சொல்லிக் கொள்வதில் பெருமையடைகிறார்கள். பிராமணருக்கும் சூத்திரருக்கும் இருக்கும் ஒற்றுமையை எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்த நிலைமையில் உள்ள மக்களுக்கு ஜாதிப்படியோ, மதப்படியோ, வகுப்புப்படியோ பிரதிநிதித்துவம் மாத்திரம் கூடாதாம்!

ஏனெனில், அது தேசியத்திற்கு விரோதமாகிவிடுமாம்! ஆனால், அப்படிப்பட்ட ஜாதிமத வகுப்புகளை என்றும் நிலையாய் இருக்கும்படி காப்பாற்றுவது மாத்திரம் தேசியமும். அதற்காகவே திரு. காந்திக்கும் காங்கிரசுக்கும் சுயராஜ்யம் வேண்டுமாம். இந்த நிலைமையுள்ள இதன் யோக்கியதை ஒருபுறம் இருக்க பொதுஜனங்களுக்கு அளிக்கப்படும் (பிரதிநிதிகளைத் தெரிந்தெடுக்கும் முறை) நிலைமையைப் பற்றி சிறிது யோசிப்போம்.

ஓட்டானது கல்வியைப் பொறுத்ததகாவும், பணத்தைப் பொறுத்ததாகவும், வரும்படியைப் பொறுத்ததாகவும் இருக்க வேண்டும் என்ற அளவில் தான் நிர்ணயிக்கப்படுகின்றது. இந்தியாவில் உள்ள மற்ற எந்த மதத்திற்கும், எந்த ஜாதிக்கும் எந்த வகுப்புக்கும் கல்வி, சொத்து, வரும்படி ஆகியவைகள் இருந்தாலும் பஞ்சமர், ஆதிதிராவிடர், தீண்டபடாதார் என்கின்ற 7 கோடி மக்களில் கல்வியோ, சொத்தோ, குறிப் பிட்ட வரும்படியோ 1000ல் ஒருவருக்காவது இருக்கின்றதா என்று பார்த்தாலே அதன் இல்லாமை உண்மை நன்றாய் விளங்கும்.

பார்ப்பனர்களுக்கு 100க்கு 100 பேர் கல்வி, சொத்து, வரும்படி ஆகியவைகள் எல்லாமும் அல்லது ஏதாவது ஒன் றும் உடையவர்கள். ஆகவேதான் இருப்பார்கள். ஆதலால் அவர்கள் எல்லோருமே எப்படியும் எந்தத் தொகுதியிலும் ஓட்டர்களாகி விடுவார்கள். மற்றபடி மேல் ஜாதிக்காரர் என்பவர்களிலும் அரைவாசிப் பேராவது ஓட்டர்களாக ஆகிவிடுவார்கள்.

நடு ஜாதிக்காரர் என்பவர்கள் அரைக்கால்வாசிப் பேர்களாவது ஓட்டர்களாகி விடுவார்கள்.  மற்றும் சில கீழ்ஜாதிக்காரர் என்பவர்களும் வீசம் வாசிப் பேர்களாவது ஓட்டர்களாகி விடுவார்கள், ஆனால், பறையர், சக்கிலியர், பள்ளர், முதலிய தீண்டாத வகுப்பார் என்பவர்களில் முந்திரிப் பெயராவது அதாவது 300ல் ஒரு பாகம் பெயர்களாவது ஓட்டராக இருக்கமுடியுமா? என்பதை யோசித்துப் பாருங்கள்.

நிற்க, மற்றொரு விதத்திலாவது அதாவது அவர்களுக் கென்று சில தானங்களை பொதுத் தேர்தலில் ஒதுக்கி வைத் தாலும் உண்மையான பறையரோ, சக்கிலியரோ வர முடியுமா? என்பதைச் சற்று யோசித்துப் பாருங்கள். பறை யனிலேயே பட்டை நாமம், துளசிமணி போட்டுக்கொண்டு 'மற்ற பறையனைத் தொட்டால் தீட்டு' என்று கருதுகிறவனும், விபூதி உத்ராட்சம் போட்டுக் கொண்டு பறத்தெருவுகளுக்குள் போய் வந்தால் குளிக்கின்றவனும் தனது சொந்தநலத்திற்குச் சமுகத்தை விற்பவனும் தான் வரமுடியுமே யொழிய இவற்றிற்குச் சௌகரியமில்லாதவன் வரமுடியுமா? என்று பாருங்கள். ஒருக்காலும் முடியாது. ஏனெனில், உண்மை யாகவே தங்கள் சமுகம் முன்னேற வேண்டும் என்று கருதுகின்றவனையும், தன்னை ஏன் மற்றவர்கள் பறையன் என்று சொல்லுகின்றார்கள் என்று கருதுகின்றவனையும் மற்ற ஜாதியார்கள் (மேல் ஜாதியார்கள்) தெரிந்தெடுக்க ஒரு நாளும் சம்மதிக்க மாட்டார்கள். மற்றபடி கிராமங்களிலோ அங்குள்ள மிராசுதாரர்கள்  தங்கள் குதிரைக்காரனையும், நாய்க்குப் பதிலாய் இருக்கும் அடிமையையும் மாத்திரம்தான் தெரிந்தெடுத்ததாய் சடங்கு செய்து, அவனைத் தங்கள் கைத்தடி முனையிலேயே வைத்திருப்பார்களே யொழிய தங்களுடன் சரிசமமாய் உட்கார நினைப்பவனைக் கிராமத்தி லேயே வைத்திருக்க மாட்டார்கள்.

இவை நிற்க, 21 வயது வந்த ஆண்களுக்கெல்லாம் ஓட்டு உரிமை கொடுப்பதாய் வைத்துக் கொண்டாலும், அந்த அந்த கிராமத்து மிராசுதாரன் சொன்னபடிதான் ஆசாமிகள் அபேட்சகர்களாக நிற்கவும், ஓட்டர்கள் ஓட்டுகள் போடவும் முடியுமே அல்லாமல், மற்றபடி பிரதிநிதித்துவத்திற்குத் தகுந்தவர்கள் ஒரு நாளும் வரமுடியவே முடியாது.

ஆகவே, மற்ற ஜாதி மத வகுப்பார் இடம் நம்பிக்கை இல்லை என்று கருதுகின்ற எந்த சிறுவகுப்புக்காரர்களாயிருந்தாலும், அவர்களுக்குப் பிரதிநிதித்துவம் இருக்கும் படியாகவும், அந்த பிரதிநிதித்துவத்தை அவர்களே சகல உரிமைகளுடன்  தெரிந் தெடுத்துக் கொள்ள தகுந்ததாக வுமேதான் சுயராஜ்ய ஆட்சி முறை ஏற்படுத்தப்படவேண்டும். அப்படிக்கில்லையானால் ஒரு பொது வான, அதாவது இந்திய ஜாதி மத வகுப்பு வித்தியாசத்தில் கட்டுப் படாத ஒரு கூட்டத்தின் ஆட்சியில்தான் விட வேண்டும் என்று சொல்ல வேண்டிய நிலைமையில் இருக்கின்றோம். அதை விட்டு விட்டு 'என் ஜாதி உயர்வையும் அனுபவத்தையும் விடமாட்டேன். ஆனால், நான் கீழ் ஜாதி என்று வதைத்து, கொடுமைப்படுத்திக்  கொண்டிருக்கின்றவனுக்கு நான்தான் தர்ம கர்த்தாவாய் இருப்பேன்' என்றால் அது வடிகட்டின அயோக்கியதனமேயாகும்.

நிற்க. திரு. காந்தியவர்கள், 'முகமதியருக்கும் சீக்கிய ருக்கும் மாத்திரம்தான் தனிப் பிரதிநிதித்துவம் தனித்தொகுதி மூலமாய் வேண்டுமானாலும் கொடுக்க சம்மதிப்பேன். ஆனால், தீண்டாதார் என்கின்ற வகுப்புக்குமாத்திரம் கொடுக்க மாட்டேன்' என்று சொல்லுவதும், திரு. மாளவியா அவர்கள், அதற்கும் ஆமாம்சாமி போடுவதும் என்றால், இதில் கடுகளவாவது நீதியோ அல்லது நல்ல எண்ணமோ இருக்கின்றதா என்று பார்க்கும்படி வாசகர்களைக் கேட்கி றோம்.

சாயபு வாய் வார்த்தை வாயில் இருக்க, முதலில் கையை நீட்டி விடுகிறார். உடனே  ஆயிரக்கணக்கான சாயபுகள் மேல்விழுந்து நசுக்கிவிடுகின்றார்கள். அவர்களிடத்தில் அவ்வளவு கட்டுத்திட்டமும், வீரமும் இருக்கின்றது. ஆதலால் அவர்களுக்குப் பதில் பேசாமல் 'கொடுப்பதற்குள் என்ன சாயபு அவசரம்' என்று மன்னிப்புக் கேட்க வேண்டியிருக்கின்றது. அதுபோலவே சீக்கியர்களும் வாய்வார்த்தை வாயிலிருக்க கிருபானை (கத்தியை) எடுத்துக் கொள்ளு கிறார்கள்.

அன்றியும், சீக்கியப்பூச்சாண்டி, காட்டி சாயபை ஏமாற்ற வேண்டியும் இருக்கின்றது. ஆதலால் சீக்கியர் எண்ணிக்கை லட்சக்கணக்குள் இருந்தாலும், அவர்களுக்குத் தனித் தேர்தல் பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. ஆனால், தீண்டாத ஜாதியார் என்பவர்களோ ஏழு கோடி பேர் இருந்தாலும் அவர்களுக்கு மானம் இல்லாமல், மனி தத்தன்மை நினைத்துப்பார்ப்பதற்கில்லாமல் வீரம் என் பதற்கு அர்த்தமே தெரியமுடியாமல், உதைத்த காலுக்கு முத்தம் இடும் மிருகத்தன்மையில் அடக்கி வைக்கப் பட்டிருக்கிறார்கள். ஆதலாலும், அவர்கள் இன்னும் மேல் ஜாதியார்களுக்கு உழைத்துப் போடவேண்டிய அடிமை களாயிருக்கவேண்டியிருப்பதால், அவர்களை முன் னேற்றமடைய விடமுடியாதென்று சொல்லி அவர் களுக்குத் தனித்தேர்தல், தனிப் பிரதிநிதித்துவம் காங்கிரசும், காந்தியும், மாளவியாவும் மறுக்க வேண்டியதாகிவிட்டது.

ஆகவே, காங்கிரசின் - திரு.காந்தியின், திரு.மாளவி யாவின் தேசபக்தியும், தேசியமும் வகுப்புப் பிரதிநிதித்து வத்தை எதிர்ப்பதல்லாமல் வேறு கொள்கை ஒன்றும் முக் கியமானதல்லவென்றே சொல்லுவோம்.

தவிர சர்க்காரார் தான் ஜாதிமத வகுப்பு பேதங்களால் ஜனங்களைப் பிரித்து விட்டு, சுயராஜ்யம் கொடுக்காமல், சூழ்ச்சி செய்கின்றார்கள் என்று திரு.காந்தியும், கிளிப்பிள்ளை தேச பக்தர்களும் அடிக்கடி சொல்வதுண்டு. ஜாதி மத வகுப்புகளைப் பிரிட்டிஷ் அரசாங்கம் பிரித்ததா? அல்லது இந்தியஇராம இராஜ்யம் பிரித்ததா என்று கேட்கின்றோம்.

அன்றியும், முலீம்கள் விஷயத்தில் அவர்களுக்கு நியாயம் வழங்குவதலிருந்து தப்பித்துக் கொள்ளுவதற்காக தேசிய முஸ்லிம் என்றும் தேசத்துரோக முஸ்லிம் என்றும் பிரித்து வைத்து, நீங்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்து வாருங்கள். உங்கள் பங்கைக் கொடுக்கத் தடையில்லை என்று  சொல்லுவது திரு. காந்தியா? அல்லது பிரிட்டிஷ் அரசாங்கமா? என்று கேட்கின்றோம்.

திரு. காந்தி அவர்களின் சட்டைப்பையின் டிக்கட் பாக்கட்டில் இருக்கும் திரு. அன்சாரியைத் தவிர தேசிய முஸ்லிம் தலைவரோ, தொண்டரோ, பின்பற்றுபவரோ வேறு முஸ்லிம் யார்? என்று கேட்கின்றோம்.

அப்படித்தான் இருந்தாலும் 8 கோடி முஸ்லிம்களில் எத்தனை கோடிப் பேர்கள் 'தேசிய முஸ்லிம்கள்?' எத்தனை கோடிப் பேர்கள் 'தேசத்துரோக முஸ்லிம்கள்' என்று சொல்லக் கூடும்? என்று கேட்கின்றோம். ஏழைகளுக்காக, திக்கற்றவர்களுக்காக, வாயில்லாப்பூச்சிகளான கிராமவாசி களுக்காக, சிறுபான்மையோருக்காக, தாழ்த்தப்பட்ட வருக் காகத்தான் நான் பாடுபடுகின்றேன். அவர்கள் பிரதிநிதியாகத்தான் நான் வட்ட மேஜை மகாநாட்டிற்கு வந்து இருக்கின்றேன் என்று பல்லவி பாடி மந்திரம் ஜபிக்கும் திரு. காந்தியர்வர்கள் உண்மையில் யாருடைய பிரதிநிதியாய் சீமை சென்றிருக்கிறார்? என்பதைச் சற்று கவனித்துப் பாருங்கள்.

ஆகவே, வரப்போகும் சுயராஜ்ஜியத்தில் எவ்வளவு சிறிய சுதந்திரம் கிடைத்தாலும், எவ்வளவு பெரிய சுதந்திரம் கிடைத்தாலும் அது இந்தியாவில் உள்ள இருக்க வேண்டிய எல்லா ஜாதி மத வகுப்புக்கும் சரியான பிரதிநிதித்துவமாய் இருக்கக் கூடியதாய் இருந்தால்தான், இந்திய மக்களால் ஒப்புக்கொள்ளக் கூடியதாகும். இல்லாதவரை எதிர்க்க வேண்டியதாகும்.

குடிஅரசு - தலையங்கம் - 11.10.1931

 

- விடுதலை நாளேடு,  24.6.18