தாழ்த்தப்பட்டவர் என்கிற காரணத்தால் குடியரசுத் தலைவர் உள்பட பலரையும் கோவிலுக்குள் அனுமதிக்காதது ஏன்?
நியாயம் கற்பிக்கும் பார்ப்பன வர்ண தருமக் கும்பல்
புதுடில்லி, ஜூன் 28 குடியரசுத் தலைவரை கோவிலில் நுழையவிடாமல் தடுத்தது தொடர்பாக கோவில் சார்பில் கூறப் பட்டதுபற்றி பத்ரிகா' என்ற இந்திய செய்தி யில் வெளிவந்திருப்பதாவது:
பூரிஜெகன்னாதர் கோவில் பாரம்பரியத்தை இன்றும் பாதுகாத்துவரும் கோவி லாகும். இங்கு பணம் மற்றும் உயர் பதவிலிருப்பவர்களுக்காக விதிமுறை களை என்றுமே மாற்ற முடியாது.
இந்திரா முதல் வைஸ்ராய் வரை
முன்பு பிரதமராக இருந்த இந்திரா காந்தி பார்சியை திருமணம் செய்திருப்பதால் அவர் கோவிலுக்குள் நுழைவதைத் தடுத்தோம். அதே போல் நாடெங்கும் தாழ்த்தப்பட்டமக்களை அழைத்துக் கொண்டு கோவிலுக்குள் நுழையும் வேத பாரம்பரியத்திற்கு எதிரான செயல்கள் நடந்துகொண்டிருந்தன. மதத்தலைவர்கள் சுயலாபம் மற்றும் அரசியல் காரணங்களுக்காக அதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால், பூரிஜெகன்னாதர் கோவிலில் அந்த மதக்கட்டுப் பாட்டை உடைக்க துணிச்சல் வரவில்லை; காந்தி இக்கோவிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்களை அழைத்துக்கொண்டு நுழைவேன் என்று சபதமிட்டு 1934 ஆம் ஆண்டு கோடைகாலத்தில் பூரி வந்துசேர்ந்தார். ஆனால், அவரும், அவருடன் சேர்ந்து வந்த தாழ்த்தப்பட்ட மக்களும் கோவில் தெருவில் கூட நுழைய முடியாமல் இந்துமத நெறிக்காப்பாளர்களின் எதிர்ப் பைக் கண்டு பயந்து ஓடிவிட்டனர்.
அதன் பிறகு வினோபாவேவும் பூரி ஜெகன்னாதர் கோவிலுக்கு வந்தார். ஆனால், அவர் இந்துக்களின் நிலங்களை பிடுங்கித் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கும் கொடிய பிரச்சாரத்தைச் செய்தார். பூமி தான இயக்கத்தினால் பல கோவில் சொத்துக்கள் கைவிட்டுப் போயின. ஆகையால், அவரை கோவிலுக்குள் நுழையவிடாமல் தடுத்தோம். அதேபோல் ரவீந்தரநாத் தாக்கூர் பார்ப்பனர் என்றாலும் அவர் தீவிர கடவுள் மறுப்பாளராக இருந்த காரணத்தால் அவரையும் நாங்கள் அனுமதிக்கவில்லை.
மேலும் தாய்லாந்து மகாராணி, மகாசக்ரி சிறிதரணி, 2006 ஆம் ஆண்டு கோவிலுக்கு 8.12 கோடி தானமாகக் கொடுத்த சுவிட்சர்லாந்து மகாராணி குடும்பத்தைச் சேர்ந்த எலிசபத் ஜிக்லர் மற்றும் இந்திய வர லாற்றை வரிசைக்கிரமமாக தொகுத்த வட மாகாண வைசிராய் லார்ட் கர்சன் போன் றோரையும் நாங்கள் கோவிலுக்கு அனு மதிக்கவில்லை. இவர்கள் அனைவரும் புத்தம், கத்தோலிக்க மற்றும் பிராட்டஸ்டாண்டு மதங்களைச் சேர்ந்தவர்கள்.
அம்பேத்கருக்கும் அவமான இழைப்பு
அதேபோல் அரசமைப்புச் சட்டத்தைத் தொகுத்த பிறகு பூரிக்கு வருகை புரிந்த பாபா சாகேப் அம்பேதக்ரையும் நாங்கள் கோவில் இருக்கும் பகுதிக்கு அனுமதிக்கவில்லை. காரணம் அவர் இந்து சாஸ்திர விதிகளின்படி தீண்டத்தகாத வகுப்பைச் சர்ந்தவர் ஆவார்.
1300 ஆம் ஆண்டு காலத்தில் பேச்சு மொழியில் பகுத்தறிவுப் பாடல்களைப் பாடி புகழ்பெற்ற கபிர்தாஸ் என்ற கவிஞர், பூரி ஜெகன்னாதர் கோவிலுக்குள் நுழைய முயன்ற போது, கடவுள் மறுப்பு குறித்த பாடல்களைப் பாடிய காரணத்திற்காக அவரைக் கோவிலுக்குள் அனுமதிக்கவில்லை. அதே போல் 1508 ஆம் ஆண்டு பூரி மன்னரின் அழைப்பை ஏற்று பூரிக்கு வருகை புரிந்த சீக்கிய மத குரு தலைவர் குருநானக்கை அவர் இந்துமதத்திற்கு எதிரான ஒரு கொள்கைகையை அறி முகப்படுத்தினார் என்பதற்காக கோவிலுக்குள் அனுமதிக்க கோவில் நிர்வாகிகள் மறுத்துவிட்டனர்.
இதனை அடுத்து மன்னரும், அவரின் மனைவியும் தனியாக கோவிலுக்குள் சென்று வழிபட்டு வந்தனர். அதுவரை குருநானக் கோவிலுக்கு வெளியே காத்திருந்தார்.
இதர கோவிலுக்குள் அனுமதி மறுக்கப்பட்ட
தலைவர்களும்-பிரபலங்களும்
ராஜீவ் காந்தியின் மனைவியும், முன் னாள் காங்கிரசு தலைவருமான சோனியா காந்தி ஒருமுறை திருப்பதி கோவிலுக்குள் சென்றபோது, அவர் கிறிஸ்தவர் ஆகையால் கோவிலுக்குள் நுழைவதை தடை செய்தனர். ஆகையால் அவர் கோவி லுக்குள் நுழையாமல் வெளியே வந்து விட்டார். வெளியே வந்த அவர் கூறிய போது, நான் பிறப்பால் கிறிஸ்தவர் ஆயினும், நான் ஒரு இந்துவான ராஜீவ் காந்தியைத் திருமணம் செய்துகொண்டேன், திருமணத்திற்குப் பிறகு நான் இந்து என்றே பதிவுசெய்துள்ளேன்'' என்று கூறியிருந்தார்.
சென்ற ஆண்டு பிரபல பாடகரும், குருவாயூர் கோவிலில் உள்ள சாமியைப் பற்றி உள்ளத்தை உருக்கும் பாடல்களை அதிகமாகப் பாடிய ஜேசுதாசை குருவாயூர் கோவிலுக்குள் நுழைய கோவில் நிர்வாகம் அனுமதிக்கவில்லை. கோவிலுக்குச் சென்ற அவரை வாசலுக்கு சிறிதுதூரத்தில் நிற்க வைத்து கர்ப்பகிரகத்தில் உள்ள சாமியின் படத்தை அவருக்குக் காட்டி வழிபடச் செய்து அனுப்பிவிட்டனர். இந்த அவ மானத்தை அவர் சகித்துக்கொண்டு, அடுத்த பிறவியில் நான் குரு வாயூர் கோவிலுக்குள் ஒரு பல்லியாக, பாச்சானாக, பூச்சியாக, புழுவாக பிறந்து அங்கேயே வாழ்ந்துகடவுளைகண்டுகொண்டே இருப்பேன்'' என்று உள்ளம் உருகிப் பேசினார்.
- விடுதலை நாளேடு, 28.6.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக