பக்கங்கள்

செவ்வாய், 28 ஜூன், 2016

தீண்டாமைக் கொடுமை மடமை



இந்தியத் துணைக்கண்டத்தில் தீண்டாமை என்பது எந்த அளவிற்கு இருந்தது என்பதற்கு ஒரு சம்பவத் தைக் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.
ஒரு சமயம் சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் ஒரு வக்கீலிடம் நன் கொடை வசூலிப்பதற்காய்ச் சென் றிருந்தார். அப்போது அந்த வழக் கறிஞர் என்னிடம் நன்கொடைக்கு வந்திருக்கிறீர்களே, என்னை தொட்டால் தீட்டு என்கிறார்கள் ஆனால் என் பணத்திற்கு மட்டும் அந்தத் தீட்டு இல்லையா? என்று கேட்டார்.
எல்லாவற்றையும் கடந்தவன் நான். நான் தீண்டா மையை அனுஷ்டிப்பவன் அல்ல என்றாராம் சுபாஸ் சந்திரபோஸ்.
அப்படியானால், ஒருநாளைக்கு என் வீட்டுக்கு வந்து விருந்து சாப்பிடுங்கள்; சாப்பிட்ட மறுநாள் நன்கொடை தருகிறேன் என்றார் அந்த வழக்கறிஞர்.
உடனே சுபாஸ் சந்திரபோஸ், சரி நாளைக்கே நாலைந்து உயர்ந்த ஜாதிக்காரர்களுடன் வந்து உங்கள் வீட்டில் சாப்பிடுகிறேன். நீங்களும் உங்கள் ஜாதிக்காரர்கள் சிலரை எங்க ளுடன் சேர்ந்து சாப்பிட ஏற்பாடு செய்யுங்கள் கலந்து அமர்ந்து சாப்பிட்ட பிறகு நன்கொடை தாருங்கள் என்றார். சரி என்றார் வக்கீல்.
அவர்கள் வந்த போது வழக்கறிஞர் மிகவும் சோகமாக உட்கார்ந்திருந்தார். ஏன்? என்று கேட்டார் போஸ். என்னால், நான் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற முடியவில்லை என்றார். என்ன, காரணம்? என்று கேட்ட போது, நீங்கள் உயர்ந்த சாதிக்காரர்களை என் வீட்டில் சாப்பிட அழைத்துக் கொண்டு வந்து வீட்டீர்கள்;
ஆனால், என் ஜாதியை சேர்ந்தவர்கள் யாரும் அய்யோ உயர்ந்த ஜாதியாருடன் சேர்ந்து சாப்பிடுவதா? என்ன பாபம் செய்ததாலோ இப்படிப்பட்ட பிறப்பெடுத்திருக்கிறோம் - அவர்களோடு சேர்ந்து சாப்பிடும் பாவத்தையும் செய்தால், இன்னும் எத்தனை பிறப்புக்கு இடர்ப்பட வேண்டுமோ! என்றாராம்.
இந்த அளவுக்கு இந்த நாட்டிலே தீண்டாமை வேர் விட்டிருந்தது.
இந்த அடிமை நிலைமை யைத்தான் அடியோடு தகர்த் தெறியப் பாடுபட்டார் தந்தை பெரியார்.


ஆதாரம்: கடலூர் மாநாட்டில் விடுதலை விரும்பி பேச்சு, முரசொலி (19.7.1981)
-விடுதலை,29.8.14

திராவிடர் தளபதி ஏ.டி.பி.


திராவிடர் இயக் கத்தைப் பற்றி குறை சொல் வதைச்சிலர் தொழிலாக்கிக் கொண்டு இருக்கின்றனர். இன்னும் சில அதிகப் பிர சங்கிகள், கேரளாவில் அதிகம் படித்து இருக் கிறார்களே. அதற்கெல்லாம் திராவிடர் இயக்கம் தானா காரணம்? என்று அதி மேதாவித்தனமாகப் பேசுவதாக நினைத்துக் கொண்டு உளறியும் வருகின்றனர்.
ஒவ்வொரு மாநிலத் திலும் ஒவ்வொரு வகை யான சூழல் உண்டு.  தமிழ் நாட்டைப் பொறுத்தவரை  கல்வி உரிமைக்காக குரல் கொடுத்தவர்கள் யார்? போராடியவர்கள் யார்?
கல்வியிலும், வேலை வாய்ப்பிலும் இடஒதுக் கீடுக்கான ஆணைகளைப் பிறப்பித்தவர்கள் யார்? குலக் கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்து அரை நேரம் படித்தால் போதும், அரை நேரம் அப்பன் தொழிலைச் செய்ய வேண்டும் என்ற முதல் அமைச்சர் ஆச்சாரியாரின் (ராஜாஜியின்) வருணாசிரம நோக்கத்தை ஒழித்துக் கட்டிய தலைவர் யார்? இயக்கம் எது? என்று அடுக்கடுக்கான கேள்வி கள் உண்டு.
அரசு அமைந்தால் பள்ளிகளைத் திறப்பார்கள் - ஆனால் ராஜாஜி இரு முறை ஆட்சிக்கு வந்த போதும் 1937களில் 6000 கிராமப் பள்ளிகளையும் 1952இல் 8000 பள்ளி களையும் மூடினாரே - இது கேரளாவில் நடந்ததா? தமிழ்நாட்டில் தானே நடந் தது? அதனை எதிர்த் ததோடு - அதனைக் கொண்டு வந்த ஆச்சாரி யாரையே பதவியை விட்டு விரட்டினோமே - வரலாறு புரியாமல் உளறலாமா?
இன்று திராவிடர் தள பதி ஏ.டி. பன்னீர்செல்வம் பிறந்த நாள் (1888) அவர் தஞ்சாவூர் மாவட்டக் கழகத் தலைவராக (டிஸ் டிரிக்ட் போர்டு பிரசிடன்ட் 1924-1930) இருந்தபோது எத்தகைய கல்விச் சாத னைகளை முத்திரையாகப் பொறித்தார்?
உரத்தநாடு, இராசா மடம் ஆகிய இடங்களில்  மன்னர்களால் கட்டப்பட்டு இருந்த சத்திரங்கள் முழுக்க முழக்கப் பார்ப்பன சிறு வர்களுக்குப் பயன்பட் டதை மாற்றி அமைத்தவர் அவர் தானே?.
திருவையாற்றில் ஒரு கல்லூரி - சமஸ்கிருத கல் லூரியாக மட்டும் இருந் ததை மாற்றி - தமிழ்ப் புலவர் பட்டப்படிப்புக்கும் வழி வகுத்து சமஸ்கிருதக் கல்லூரி என்றிருந்த பெயரை மாற்றி அரசர் கல்லூரி என்று புதுப் பெயர் சூட்டினாரே!
பார்ப்பனர்களுக்கு மட்டும் இருந்த விடுதியை அனைவருக்கும் பொது வானதாக மாற்றினாரே!
இதுதான் தமிழ் நாட் டுச் சூழல் - வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ  என்று உளற வேண்டாம்.
- மயிலாடன்
-விடுதலை,1.6.14

திங்கள், 27 ஜூன், 2016

மும்பையில் நடைபெற்ற சமூக நீதி விழா





மராட்டிய மாநிலத்தில் சமூகநீதிப் பயணத்திற்கு வலுசேர்த்த சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கிய விழா!
தமிழர் தலைவரின் மும்பைப் பெருநகர் பயணமும், பங்கேற்ற நிகழ்ச்சிகளும்!
பெரியார் இயக்கம் என் பது நாத்திக இயக்கம் என பொது மக்களால் அறியப் பட்டாலும் அறிவார்ந்த கொள்கை சார்ந்த அந்த இயக்கத்திற்கு ஆதரவு நிலை என்பது கடவுள் மறுப்பாள ரோடு சுருங்கி விடுவதில்லை. கடவுள் மறுப்பு என்ற நிலையினையும் தாண்டி, கடவுள் நம்பிக்கையாளர் களாலும் போற்றப்படும் இயக்கமாக தந்தை பெரியார் காலம் தொட்டு தொடர்ந்து வருகிறது. இதற்கு அடிப்ப டைக் காரணம், சுயமரி யாதை எனும் தத்துவத்தை இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையாகக் கொண்டு தந்தைபெரியார் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டு வந்த வழிமுறைகளே ஆகும். பெரியார் இயக்கத்தில் மானிட மேம்பாட்டினை மய்யப் படுத்தி பல்வேறு செயல் தளங் கள் இருப்பினும், எல்லா மும் எல்லார்க்கும் எனும் சுயமரியாதை அடிப்படை நிலையினை வலியுறுத்தும் சமூகநீதித் தளம் பரந்து பட்டுள்ள பல்வேறு நம்பிக் கையாளர்களை ஒருமுகப் படுத்தும் உன்னத தளமாகும். கடவுள் நம்பிக்கையாளர் களும் பெரியார் இயக்கத்தின் சமுதாயப் பணியில் பங் கேற்று செயல்பட வைத்தி டும் சிறப்பினை உடையது சமூக நீதித் தளம்.
இந்திய நாட்டுச் சூழலில் வாழும் மக்களுக்கு பல் வேறு வகையிலான - நீதி கிடைத்திட வல்ல - சமூக நீதி, அரசியல் நீதி, பொருளாதார நீதி - என்பவைகளில் சமூக நீதி என்பதே அடிப்படை முன் னுரிமை அளிக்கப்பட்டுள் ளது. காரணம், சமூகஅநீதி என்பதே இந்த மண்ணின் வரலாற்றுப் பிம்பமாக கோலோச்சி வந்துள்ளது. சமூக அநீதி நீக்கப்பட்டால், சமூக பேதம் களையப்பட் டால்  முழுமையான நீதி கிடைத்திடும் அரங்கேற்றம் விரைந்திட வழி ஏற்படும். இந்திய நாட்டு மக்களின் முன்னேற்றம் குறித்து உண் மையான அக்கறை கொள் வோர் சமூக நீதிக்கு முன்னு ரிமை அளிக்கப்படுவதையே வலியுறுத்துவர். இத்தகைய சமுதாய மேம்பாட்டுக்கு உகந்த சிந்தனைகளை சமூக நீதி பற்றி தொலைநோக்கு டன் சிந்தித்து செயல்பட்டவர் புரட்சியாளர் தந்தை பெரி யார், அவர்தம் சிந்தனைத் தடத்தில், பண்பட்ட பரப் புரை, திறன்மிக்க செயல் பாடு, பல மாநிலத்தவரையும் அரவணைத்துச் செல்லும் ஆளுமையால் சமூக நீதித் தளத்தின் பேருருவாகத் திகழ்பவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி ஆவார். சமூகநீதித் தளத்தின் விரிவாக் கத்திற்கு கிடைத்திடும் வாய்ப் புகளுக்கு பயன்பாட்டு முன் னுரிமை தருவதோடு, பரந்துபட்ட வாய்ப்பினை உருவாக்கிடும் வித்தக நாயக ராக தமிழர் தலைவர்  ஆசிரி யர் விளங்கி வருகிறார்.
தாம் கற்ற கல்வி உயர் வால் வாழ்வாதாரம் வேண்டி வெளிநாடு சென்று, வாழ்ந்து வரும் தமிழர்களால், ஒடுக் கப்பட்டுள்ள மக்களின் உயர்வு நிலைக்கு பாடுபட்டு வரும் பெரியார் இயக்கத்தின் பணிக்கு ஆதரவாக, அமெரிக் காவில் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வரும் அமைப்பு பெரியார் பன்னாட்டு மய்யம் (றிமீக்ஷீவீஹ்ணீக்ஷீ மிஸீமீக்ஷீஸீணீவீஷீஸீணீறீ, ஹிஷிகி) ஆகும். இந்தியாவின் பல மாநிலங்கள் மற்றும் பிற நாடுகளில் சமூக நீதிக்கு உழைத்து வரும் பெருமக் களைப் பாராட்டிப் பெரு மைப்படுத்தும் விதத்தில் சமூக நீதிக்கான போராட் டத்தின் எழுச்சிச் சின்னமாக விளங்கி வரும் தமிழர் தலைவரின் பெயரால் சமூக நீதிக்கான கி.வீரமணி விருது என்பதை நிறுவி, பெரியார் பன்னாட்டு மய்யம் ஒவ் வொரு ஆண்டும் உரிய பெரு மக்களைத் தெரிவு செய்து வழங்கி வருகிறது. விருதுப் பட்டயமும், இந்திய ரூபாய் ஒரு லட்சத்திற்கு பண முடிப் பும் விருது நாயகர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
முதன்முதலாக சமூக நீதிக்கான கி.வீரமணி விருது சமூக நீதிக் காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் வழங்கப்பட்டது. சமூகநீதி உணர்வினை கி.வீரமணியிட மிருந்து தாம் பெற்றதாக இந்திய நாட்டின் மேனாள் பிரதமர் வி.பி.சிங் கூறினாரே  அவர்தம்  பெயராலேயே நிறுவப்பட்ட சமூக நீதி விரு தினாலும் பெருமைப்படுத் தப்பட்டார். அதுமுதல் ஒவ் வொரு ஆண்டும் சமூகநீதிக்கு அரிய பணி ஆற்றிவரும் பெருமக்களுக்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. 2013ஆம் ஆண்டுக்குரிய சமூக நீதிக்கான கி.வீரமணி விரு தினை மராட்டிய மாநில அமைச்சர், சமூகநீதிப் போராளி ஜகன் புஜ்பல் அவர்களுக்கு வழங்கிடும் விழா, மும்பை பெருநகரில் 2014 ஜனவரி 11ஆம் நாள் நடைபெற்றது.
மராட்டிய மாநில ஆளு நர், சமூகநீதியாளர் மேதகு கே.சங்கரநாராயணன் விழா விற்கு தலைமை வகித்து, சமூக நீதி விருதினை வழங் கினார். தமது பெயரில் சமூக நீதி விருது அமையப் பெற்றா லும், ஒவ்வொரு விருது வழங்கும் நிகழ்வினையும் பெரியார் கொள்கை பிரச் சாரப் பணியாகவே கருதிடும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, மும்பை பெரு நகரில் நடைபெற்ற நிகழ்வி லும் கலந்து கொண்டு சிறப் பித்தார்.
தலைவர்களின் மறைவினால் தள்ளி வைக்கப்பட்ட மும்பை பெருநகர நிகழ்வுகள்
2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் புத்த மாநாடு, சமூகநீதிக் கருத்தரங்கம் மற் றும் மும்பை வாழ் தமிழ்ச் சான்றோர்களுக்குப் பாராட்டு ஆகிய விழாக்களில்  தமிழர் தலைவர் கலந்து கொள்ள இருந்தார். விழா நாள்கள் நெருங்கிய வேளை யில், நிகழ்ச்சிக்கு முதல் நாளன்று மராட்டிய மாநிலத் தில் உருவான சிவசேனா கட்சியின் நிறுவனத் தலைவர் பால் தாக்கரே  காலமான தையொட்டி நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்டன. 2013 பிப்ரவரி 23 மற்றும் 24 ஆகிய நாள்களில் தள்ளி வைக்கப் பட்ட நிகழ்ச்சிகளுக்கு ஏற் பாடு செய்யப்பட்டு இருந் தது. தமிழர் தலைவர் அந்த  முப்பெரும் நிகழ்வுகளில் கலந்து கொண்டு சிறப்பித் தார்.
மும்பை மேதகு ஆளுநர் கே.சங்கரநாராயணன், அமைச்சர் புஜ்பல் ஆகியோருடன் தமிழர் தலைவர் கி.வீரமணி உரையாடல்.
சமூக நீதிக்கான கி.வீர மணி விருது வழங்கும் விழா மற்றும் இதர நிகழ்ச்சிகள் 2013 டிசம்பர் 7 மற்றும் 8 நாள்களில் நடைபெறுவதாக இருந்த சூழலில் கறுப்பர் இன மக்களின் தலைவர் நெல்சன் மண்டேலா டிசம்பர் 6ஆம் நாள் தென் ஆப்பிரிக்கா வில் காலமானதை ஒட்டி, மும்பை மாநகர நிகழ்வுகள் தள்ளி வைக்கப்பட்டன. மீண்டும் 2014 ஜனவரி 11 மற்றும் 12 ஆகிய நாள்களில் நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
மும்பை தோழர்களுக்கு இரண்டு முறையும், தமிழர் தலைவர் கலந்து கொள்ள வேண்டிய நிகழ்ச்சிகள் தள்ளி வைக்கப்பட்ட காரணத்தால், ஏற்பாட்டுச் செலவுகளும், உழைப்பும் இரட்டிப்பாகின. இருப்பினும் உற்சாகம் குன்றாமல் மும்பைக் கழகப் பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் வெகு சிறப்பாக  ஏற்பாடு செய்து வெற்றிகர மாக விழாக்களை நடத்தி முடித்தனர். இயக்க வரலாற் றில் தமிழர் தலைவர் மும்பை மாநகரில் கலந்து கொண்ட நிகழ்ச்சிகள் முக்கிய கட்டங் களாக அமைந்துவிட்டன.
சென்னையிலிருந்து கிளம்பி மும்பை பெருநகர்  வந்தடைதல்
இரண்டு நாள் நிகழ்ச்சி களில் கலந்து கொள்ள, பிப்ர வரி 10ஆம் நாள் மாலை 5.10 மணிக்கு சென்னை - காம ராசர் உள்நாட்டு விமான நிலைய முனையத்திலிருந்து தமிழர் தலைவர் புறப்பட் டார். அவருடன் சமூகநீதி விருதினை நிறுவி வழங்கி வரும் அமெரிக்க பெரியார் பன்னாட்டு மய்யத்தின் இயக் குநர் டாக்டர் சோம.இளங் கோவன் மற்றும் பகுத்தறி வாளர் கழகத்தின் பொதுச் செயலாளர் வீ.குமரேசன் ஆகியோர் சென்றனர்.  விமானப் பயண நேரத் தில், தந்தை பெரியார் வெளி மாநிலங்களில் சுற்றுப் பய ணம் செய்ததை குறிப்பாக மராட்டிய மாநிலத்தில் பய ணம் செய்த நிகழ்ச்சிகளை தமிழர் தலைவர் நினைவு கூர்ந்தார். சாலைப் பயண மாக பல இடங்களில் தந்தை பெரியார், அன்னை மணியம் மையாருடன் உடன் சென்று தாம் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளை எடுத்துக் கூறிய வேளையில், விடுபட்ட ஒரு பயணத்தினை முடித்திட வேண்டும் எனும் விழை வினைத்   தெரிவித்தார். மராட் டிய மண்ணில்,  1902 ஆம் ஆண்டில் பார்ப்பனர் அல் லாத மக்களின் உரிமைக்கு,  உயர்விற்கு வித்திட்ட  சமூக நீதிப் புரட்சியாளர் சாகு மக ராஜ் அவர்கள் ஆட்சி செய்த கோல்காப்பூர் (ரிஷீறீலீணீஜீக்ஷீ) நகருக்கு தந்தை பெரியார் செல்ல இயலவில்லை. விடு பட்ட பயணத்தை இயக்கத் தின் சார்பாக ஒரு குடும்பப் பயணமாக கழகத்தினர், திர ளாகச் செல்ல வேண்டும்; சாகு மகராஜ் அவர்களின் சமூகநீதிப் பங்களிப்பினைப்  போற்றி விழா எடுத்திட வேண் டும்; நடப்பு ஆண்டிலேயே இந்தப் பயணத் திட்டம் நிறைவேற்றப்பட வேண் டும் எனத் தெரிவித்தார். சென்னையிலிருந்து கிளம் பிய விமானம்  1 மணி 40 நிமிட நேரத்தில் மும்பை வந்த டைந்தது.
மும்பை மேதகு ஆளுநர் கே.சங்கரநாராயணன் சமூகநிதிப் புரட்சியாளர்களுக்கு மரியாதை
மும்பை சத்ரபதி சிவாஜி விமான நிலையம் வருகை -  வாசலில் மும்பாய் நகர திரா விடர் கழகம், பகுத்தறிவா ளர் கழகம், திராவிட முன் னேற்றக் கழகம் மற்றும் அமைப்பு எல்லைகளைத் தாண்டிய மும்பை வாழ் தமிழ்க் குடும்பத்தினர் திர ளாக வருகை தந்து தமிழர் தலைவரை வரவேற்றனர். விமான நிலைய வளாகத்தில் திராவிடர் கழகக் கொடியி னைத் தாங்கிய கருஞ்சட் டைத் தோழர்கள் திரளாக வருகை தந்து, முழக்கம் எழுப்பி தமிழர் தலைவரை வரவேற்ற பாங்கு, இதர பயணிகளின் மற்றும் பார் வையாளர்களின் கவனத்தை ஈர்த்தது. தமிழ்க் குடும்பத் தின் அன்பான வரவேற் பினை ஏற்ற தமிழர் தலைவர் விமான நிலையத்திலிருந்து கிளம்பி மும்பை பெருநகர் - அந்தேரிப் பகுதிக்கு தோழர் களுடன் பயணமானார். துங்கா விடுதியில் தமிழர் தலைவர் தங்குவதற்கு ஏற்பாடு செய் திருந்தனர்.
-விடுதலை,16.2.14
சமூக நீதிப் புரட்சியாளர் மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் அவரது துணைவியார் சாவித்திரிபாய் பூலே உருவச் சிலைக்கு மரியாதை

நேற்றைய விடுதலையின் தொடர்ச்சி வருமாறு:-
நண்பகல் உணவு வேளையில்...
MET உயர் கல்வி வளாகத்தில் உள்ள மகாத்மா ஜோதிபா பூலே - சாவித்திரிபாய் பூலே சிலைகளுக்கு தமிழர் தலைவர் மரியாதை செலுத்துகிறார். உடன் கல்வி நிர்வாகி பங்கஜ் புஜ்பல், டாக்டர் சோம.இளங்கோவன், பொன்.அன்பழகன் அய்.ஏ.எஸ்., வீ.குமரேசன், அ.ரவிச்சந்திரன், பெ.கணேசன் ஆகியோர் உள்ளனர்.
விழா நிறைவடைந்த தும் அமைச்சர் ஜெகன் புஜ்பல் தமிழர் தலைவர் மற்றும் தோழர்களுக்கு நட்சத்திர விடுதி ஒன்றில் நண்பகல் உணவளித்தார். அனைவரும் அமர்ந்து உணவருந்தும் பொது இடத்தில் ஏற்பாடு செய்திருந்தனர். உணவருந் திக் கொண்டே தமிழர் தலை வரும், அமைச்சர் ஜெகன் புஜ்பல் அவர்களும் சமூக நீதித் தளத்தில் அடுத்த கட்ட செயல்பாடுகள் பற்றிப் பேசிக் கொண்டனர். அமைச் சர், விடுதிக்கு வருகை தந்து உணவருந்துவதைப் பிறர் பார்த்தவிதம், ஜெகன் புஜ்பல் அமைச்சர் என்ற நிலையி னையும் தாண்டி, பொது மக்களால்மதிக்கப்படும் தலைவராக போற்றப்படும் நிலை தெரிந்தது.
நண்பகல் உணவருந்திய பின்னர், திருச்சிக்கு அருகில் அமையவிருக்கும் பெரியார் உலகத்திற்கு தமது பங்களிப் பாக ரூபாய் ஒரு லட்சத்தை அமைச்சர் ஜெகன் புஜ்பல் தமிழர் தலைவரிடம் வழங் கினார்.
அரசியல் பணி மட்டு மின்றி, ஒடுக்கப்பட்ட மக்க ளுக்கு கல்வி வழங்க வேண் டும் என வலியுறுத்தி வருவ தோடு, தமது அறக்கட்டளை யின் பெயரால் பல கல்லூரி கள் மற்றும் கல்வி நிலை யங்கள் நடத்தப்படுவதை அமைச்சர் தமிழர் தலைவ ரிடம் எடுத்துரைத்தார். தமி ழர் தலைவர் பெரியார் மணி யம்மை பல்கலைக்கழகத் தின் வேந்தர் என்ற நிலையில் மும்பையில் உள்ள தமது கல்வி நிறுவனங்களை அவ சியம் பார்த்து, அவைகளின் மேம்பட்ட சேவைக்கு பரிந் துரை வழங்கிடவும் அமைச் சர் கேட்டுக் கொண்டார். தமது மகனும் மராட்டிய மாநில சட்டமன்ற உறுப்பின ருமான பங்கஜ் புஜ்பல்லிடம் தமிழர் தலைவரை அழைத் துச் சென்று கல்வி நிறுவனங் களைக் காட்டிடப் பணித்தார். தமது அலுவல்பணி காரண மாக தமிழர் தலைவருடன் வர இயலாமைக்கு வருத்தம் தெரிவித்து அமைச்சர் விடை பெற்றார்.
மராட்டிய கல்வி அறக்கட்டளையின் நிறுவனங்களைப் பார்வையிடல்.
மும்பை கல்வி அறக்கட்டளை உயர் கல்வி நிறுவனத்தில் நிர்வாகிகள், பேராசிரியர் மற்றும் மாணவர்களுடன் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள்.
மும்பை நகரின் மய்யப் பகுதியில் மராட்டிய கல்வி அறக்கட்டளை (Mumbai Edcuational Trust - MET)  சார்பாக நடத்தப்படும் உயர்கல்வி நிறுவன வளாகத்திற்கு அமைச்சரின் புதல்வர் பங்கஜ் புஜ்பல், தமிழர் தலைவர் மற்றும் தோழர்களை அழைத்து வந்தார். வெகு பிரம்மாண்டமான, கட்டிட அமைப்பு கொண்ட கல்வி நிறுவனத்தில் மேலாண்மை, மக்கள் ஊடகம், இதழியல், புத்தாக்கம், பற்றிய உயர் கல்விப் படிப்புகள் வழங் கப்படுகின்றன. அடிப்ப டைக் கட்டமைப்பு வசதி களான வகுப்பறை, பயிற்சி அறை, உபகரண கட்டமைப்பு ஆகியவற்றில் மேல்நாட்டு கல்வி நிறுவனங்களுக்கும் மேலாக MET கல்வி நிறுவ னங்கள அமைந்திருந்தன.
சமூக நீதிக் கொள்கை அடிப்படையில் எழுந்த கல்வி நிறுவனம் என்பதற்கு அடையாளமாக கல்வி நிறு வனத்தின் நுழைவு வாயிலில் மராட்டிய சமூக நீதிப் புரட்சி யாளர் மகாத்மா ஜோதிபா பூலே மற்றும் அவரது துணை வியார் சாவித்திரிபாய் பூலே ஆகியோரின் திருவுருவச் சிலைகள் அமைக்கப்பட்டு இருந்தன. சமூக நீதிப் புரட்சி யாளர்களுக்கு மரியாதை செலுத்தினார் தமிழர் தலை வர். பின்னர் நிறுவனத்தின் பல்புலன் பேராசிரியர் பெரு மக்கள் மற்றும் மாணவர் களுடன் கலந்து உரையாடி னார். தமிழ்நாட்டைச் சார்ந்த மாணவர்கள் சிலரும் அங்கு பயின்று வருகின்றனர். தமிழ் மாணவர்கள் மிகுந்த மகிழ்ச் சியுடன் தமிழர் தலைவரிடம் பேசிட முனைந்தனர் ஒளிப் படமும் எடுத்துக் கொண் டனர். தஞ்சை - வல்லம் பெரியார் மணியம்மை பல் கலைக்கழகமும், மும்பை கல்வி அறக்கட்டளையின் உயர்கல்வி நிறுவனங்களும் ஒருங்கிணைந்து பணியாற்று வதற்கு வாய்ப்புகள் உள்ளன என்பதை கல்வி நிறுவனத் தின் தலைவர் பங்கஜ் புஜ் பல்லிடம் தமிழர் தலைவர் தெரிவித்து, தஞ்சை வல்லத் திற்கு அவசியம் வருகை தர வேண்டும் என அழைப்பை யும் தெரிவித்து விடை பெற் றார்.
தமிழர் தலைவரின் பன் முக ஆற்றல் மற்றும் அணு குமுறையின் சிறப்பு அந்தந்த சூழலுக்கு ஏற்றவாறு வெளிப்பட்டது. அரசியல் தலைவர்களிடையிலான சூழல், சமூகநீதியாளர் சூழல், நாத்திகப்பெருமக்கள் கலந்து கொள்ளும் நிகழ்வுகள், கல்வியாளர் சந்திப்புச் சூழல், இயக்கத் தோழர்களுடன் இருத்தல் என அந்தந்தச் சூழ லுக்கு பொருந்தி, அடிப்படை யில் தந்தை பெரியாரின் பணி நோக்க நிறைவேற்றத்தில் கவனமாக இருக்கும் வித் தகத் தன்மை மிக்க தமிழர் தலைவரின் சுறுசுறுப்பு, செயல்பாடு மிகவும் அரிதா னது. ஒப்புமை காண இய லாத தன்மை வாய்ந்தது. காலையில் சமூகநீதிக் கொள்கை வெளிப்பாட்டு டன் கூடிய சூழல், பிற்பகல் கல்வி நிறுவன பார்வையி டல், கல்வியாளர்களுடன் கலந்துரையாடல் என தமிழர் தலைவரின் பன்முகத் தன் மையின் பறைசாற்றலாக ஒரு நாள் நிகழ்வுகள் அமைந் திருந்தன.
எம்.இ.டி. மேலாண்மை நிறுவன பேராசிரியையுடன், எம்.இ.டி. மக்கள் ஊடக பேராசிரியையுடன் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கலந்துரையாடுகிறார்.
புத்தாக்க விமான நிலைய பார்வையில்
பிப்ரவரி 10ஆம் நாளன்று இந்தியப் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் திறந்து வைக்கப்பட்ட புதிய பன்னாட்டு மற்றும் உள் நாட்டு விமான நிலையம், மும்பை நகர பெருமை வாய்ந்த ஒன்றாக விளங்கு கிறது. புதிய விமான நிலை யத்திற்கும் சத்ரபதி சிவாஜி பெயர் சூட் டப்பட்டுள்ளது. பணிகள் முழுமையாகாத நிலையில் திறப்பு விழா மட்டுமே நடத்தப்பட்டு, பொது மக் கள் பார்வைக்கு, பயன் பாட்டுக்கு வராத நிலையில் விமான நிலையம் உள்ளது. உரிய அனுமதியுடன் தமிழர் தலைர் மற்றும் உடன் இருந்த தோழர்களுக்கு புதிய விமான நிலையத்தினை பார் வையிடும் வாய்ப்பு கிட்டி யது. மேலை நாட்டு விமான நிலையங்களை பழமையாக் கிடும் வகையில் பிரம்மாண் டமான, புத்தாக்கத் தோற்றத் துடன், வசதிக் கட்டமைப் புடன் விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. வருங்காலத்தில் மும்பை விமான நிலையத்தின் தோற் றப் பொலிவைப் பார்த்து, இந்திய நாட்டு நிலைமையும் வளமாக இருக்கிறது என பார்வையாளர் யாரும் கருதி விடக் கூடாது என்ற நினைப் பும் விமான நிலை பார்வை யிடலின் போது நெஞ்சில் நிழலாடியது.
மாலை 6 மணியளவில் விடுதிக்கு தமிழர் தலைவர் திரும்பினார். தோழர்களுடன் அடுத்த நாள் நிகழ்ச்சிகள் பற் றிய விசாரிப்பிற்குப் பின்னர், இரவு உணவருந்தி உறங்கச் சென்றார்.
தொகுப்பு: வீ.குமரேசன்
- தொடரும்
-விடுதலை,17.2.14

மும்பையில் நடைபெற்ற சமூக நீதி விழா மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட ஆளுநர்


விருது வழங்கும் விழாவில் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.
நேற்றைய விடுதலையின் தொடர்ச்சி வருமாறு:-
விடுதி அறைக்கு வந்த டைந்த சில மணித் துளிகளில் மராட்டிய மாநில அரசின் கூடுதல் செயலாளராகப் பணி யாற்றி வரும் அய்.ஏ.எஸ். அதிகாரி மதிப்பிற்குரிய டாக்டர் பொன்.அன்பழகன், தமிழர் தலைவரைக் காண வந்தார். மும்பை மாநிலத் தின் அய்.ஏ.எஸ். ஆட்சிப் பணிக்கு தெரிவு செய்யப் பட்டு பல்வேறு ஆரம்பக் கட்ட பணிகள்,  பின்னர்  கோல்காபூர் மாவட்ட ஆட் சித் தலைவராகப் பணியாற் றினார், தற்பொழுது மும்பை மாநகர தொழில் வளர்ச்சி  நிறுவனத்தின் தலைவராக பொறுப்பு வகிக்கின்றார்.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழக நாடாளு மன்ற உறுப்பினராக இருந்த மானமிகு டி.பி.சண்முக சுந் தரம் அவர்களின் மருமகன் ஆவார் இவர். திராவிடர் இயக்க குடும்பத்தைச் சார்ந்த அவர் சமூக நீதிக்கான கி.வீர மணி விருது வழங்கப்படும் நிகழ்ச்சி ஏற்பாடுகளுக்கு உறுதுணையாக இருந்தார். அடுத்த நாள் நடைபெற இருந்த விழா ஏற்பாடுகள் பற்றிய விவரங்களை தமிழர் தலைவரிடம் எடுத்துரைத்து விட்டு விடை பெற்றார்.  மும்பை மாநகரிலிருந்து வெளிவரும் தமிழ், மராட்டிய மொழி நாளிதழ்களில் வந்த விழா நிகழ்ச்சி பற்றி செய்தி களை தமிழர் தலைவரிடம் தோழர்கள் காட்டினர்.  கழகத் தோழர்களுடன் இயக்க செயல்பாடுகள் மற்றும் அவர்களது வாழ்வுச் சூழல்,  அவர்தம் முன்னேற்றம் பற்றி மிகுந்த அக்கறையுடன் தமி ழர் தலைவர் கேட்டுத் தெரிந்து கொண்டார். அடுத்த நாள் விழா ஏற்பாடுகளுக்கு அணியமாகவிருந்த தோழர் களை தமிழர் தலைவர் விடை கொடுத்து அனுப் பினார். இரவு உணவிற்குப் பின்னர், சற்று தாமதமாகவே அன்றைய பணிகளை முடித்து தமிழர் தலைவர் உறங்கச் சென்றார்.
சமூகநீதிக்கான கி.வீரமணி விருது வழங்கிய விழா
1996ஆம் ஆண்டில் பெரி யார் பன்னாட்டு மய்யத்தால் (அமெரிக்கா) நிறுவப்பட்ட சமூக நீதிக்கான கி.வீரமணி விருது இது வரை 14 சமூக நீதித் தலைவர்களுக்கு வழங் கப்பட்டுள்ளது. 15ஆவது முறையாக மராட்டிய மாநி லத்தில் விருது வழங்கும் விழா; விருதுக்கு உரிய சமூக நீதித் தலைவர் மராட்டிய மாநில அரசின் மக்கள் செல் வாக்கு மிகுந்த அமைச்சர் ஜெகன் புஜ்பல்; விழாவிற்கு தலைமை தாங்கி விருதினை வழங்குபவர் மராட்டிய மாநில ஆளுநர் மேதகு கே. சங்கரநாராயணன் அவர்கள்; விருதின் பெயருக்கு உரிய சமூகநீதியின் இன்றைய முதன்மைத் தலைவரான தமிழர் தலைவர் பங்கேற் பால் முக்கியத்துவம், தனித் துவம் பெற்ற விழாவாக நடைபெற்றது. மராட்டிய மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் சமூகநீதி இயக்க ஆர்வலர் கள், மராட்டிய மாநிலத்தில் வாழும் தமிழ்ச் சமுதாயத் தினர் என  விழா நடை பெறும் - மும்பை பிரபா தேவி, சயானி மார்க் பகுதியில் அமைந்துள்ள மாநில அரசின்  அரங்கமான  ரவீந்திர நாட் டிய மந்திருக்கு - மக்கள் அலை அலையாக வரத் தொடங்கினர். விழா அரங் கிற்கு வந்த தமிழர் தலைவரை வரவேற்று, தனி அறையில் இருந்திட வைத்தனர்.  சிறிது நேரத்தில் விருது நாயகர் அமைச்சர் ஜெகன் புஜ்பல் வருகை தந்து தமிழர் தலை வரை வரவேற்று மரியா தையினைத் தெரிவித்தார். ஜெகன் புஜ்பல் ஜாதித் தலை வராக இருந்து, மராட்டிய சமூகப் புரட்சியாளர் மகாத்மா  ஜோதிபா  பூலே வின் கொள்கை வழியில் சமூக நீதித் தலைவராக உயர்ந் தவர்; சிவசேனா கட்சியில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் சட்டமன்ற உறுப்பினர்;  தற்சமயம் தேசிய காங்கிரசுக் கட்சியினை பிரதிநிதித்துவப்  படுத்துகின்ற வகையில் காங்கிரசுக் கட்சித் தலைமை யிலான கூட்டணி அரசில் பொதுப்பணித்துறை அமைச்சராக இருப்பவர்.  சில மாதங்களுக்கு முன்னர், துணை முதல்வராகவும் பொறுப்பில் இருந்தவர். 1980-களில் மண்டல் குழு பரிந்து ரைக்கு டில்லி தலைநகரில் நடைபெற்ற போராட்டங் களில் முன்னணி வகித்தவர். கடந்த கால சமூகநீதிக்கான போராட்டங்கள் பற்றித் தமிழர் தலைவரும, ஜெகன் புஜ்பல்  அவர்களும் உரையா டிக் கொண்டனர்.
சமூக நீதிக்கான கி.வீரமணி விருதினை மராட்டிய மாநில ஆளுநர், மாநில அமைச்சர் ஜெகன் புஜ்பல் அவர்களுக்கு வழங்குகிறார்.
ஆளுநர் வருகையும் அய்யா கால நினைவுகளும்
சரியாக விழா தொடங்கு வதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு விழாத் தலைவர் மராட்டிய மாநில ஆளுநர் மேதகு கே.சங்கர நாராய ணன் அவர்கள் அரங்கத்திற்கு வந்தடைந்தார். விழா மேடைக்குச் செல்வதற்கு முன்னர் நேராக தமிழர் தலைவர் இருந்த அறைக்கு வந்தார். நுழையும் பொழுதே வணக்கம் சார்! எப்படி இருக்கீங்க! என்று ஆளுநர் தமிழில் விசாரித்தார். தம்மை நினைவிருக்கிறதா என தமிழர் தலைவர் வினவிய பொழுது எப்படி சார் உங்களை மறக்க முடியும்! நல்ல மனிதர்களை மறந்து விட முடியுமா ! என ஆளுநர் பதிலளித்தார். தம்மை நினை விருக்கிறதா என தமிழர் தலைவர் கேட்டது தனிப் பட்ட முறையில் அல்ல; ஆளுநர் அவர்கள் 1965 ஆம் ஆண்டில்  கேரள மாநில காங் கிரஸ் கட்சியின் தலைவராக இருந்தார். 1924ஆம் ஆண்டில் நடைபெற்ற வைக்கம் போராட்டத்தின்  காரணக்கரு வாக விளங்கிய ஈழவ சமு தாயத்தைச் சார்ந்த வழக்கு ரைஞர் மாதவன் பெயரால் மாவேலிக்கராவிற்கு அருகில் அமையப்பெற்ற அவர்தம்  நினைவுக் கல்லூரியின் திறப்பு விழாவிற்கு அன்றைய கேரள முதல்வர் சங்கரன் அவர்களு டன் இன்றைய மராட்டிய மாநில ஆளுநர் மேதகு கே. சங்கரநாராயணன் வருகை தந்திருந்தார். அந்த விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தந்தை பெரி யார் அழைக்கப்பட்டு -  அய்யாவுடன் தாமும் வந்ததை நினைவூட்டிக் கேட்டார் தமிழர் தலைவர். நன்றாக நினைவிருக்கிறது என நிகழ்ச்சி நடைபெற்ற ஊரான நங்கியார் குளக்கராவை குறிப்பிட்டுச் சொன்னார்.  மேதகு ஆளுநர், மராட்டிய மாநில அரசின் இன்றைய தலைவராக இருந்தாலும், அவரது பொது வாழ்க்கை யில் அடிப்படைக் கொள்கை சமூகநீதி சார்ந்ததே. இப்படி விருது வழங்கும் விழா சம் பிரதாய விழாவாக இல்லா மல் பங்கேற்ற தலைவர்க ளின் பொது வாழ்க்கை அடிப் படையில் சமூகநீதிச்  சங்கம விழாவாகத் தொடங்கியது.
ஆளுநர் கே.சங்கரநாராயணன், விழா நாயகர் மாநில அமைச்சர் ஜெகன் புஜ்பல், டாக்டர் சோம.இளங்கோவன் உரையாற்றினர்.
சமூகநீதிப் புரட்சியாளர்களுக்கு மரியாதை
விழா மேடையில் சமூக நீதிப்  புரட்சியாளர்களான சத்ரபதி சிவாஜி, மகாத்மா ஜோதிபா பூலே, சிறீ நாரா யண குரு, சாகு மகராஜ், டாக் டர் அம்பேத்கர் ஆகியோர் படங்களுடன் நடுநாயகமாக தந்தை பெரியாரின் திருவுருவ படமும் அலங்கரித்து வைக் கப்பட்டு இருந்தது. விழா நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னர் தலைவர்கள், சமூக நீதி புரட்சியாளர்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
விருது வழங்கும் விழா விற்கு வருகைத் தந்தோரை பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர்  சோம. இளங்கோவன் வரவேற்றுப் பேசினார். விழாவின் தொடக் கவுரையாக சமூகநீதி பற்றிய வரலாற்றுச் செய்திகளை, சந்தித்து வரும் சவால்களை, ஒடுக்கப்பட்ட மக்கள் அனை வரும் ஒருங்கிணைந்து போரா டிப் பெற வேண்டிய உரிமை கள் பற்றிய தெளிவான உரையினை தமிழர் தலைவர்   ஆங்கிலத்தில் வழங்கினார். விழாவின் தலைமை உரை யினை மேதகு ஆளுநர் கே. சங்கரநாராயணன் ஆங்கிலத் திலும் - சில செய்திகளை தமி ழிலும் ஆற்றினார். சமூகநீதிக் கான கி.வீரமணி விருதினை ஆளுநர் அவர்கள் ஜெகன் புஜ்பல் அவர்களுக்கு, அரங் கத்தில் அமர்ந்திருந்த அனை வரது கரவொலிக்கிடையில் வழங்கினார். விருது பண முடிப்பாக ரூபாய் ஒரு லட்சத் திற்கான வங்கி வரைவோ லையினையும் விருதுப் பட் டயத்தோடு அமைச்சருக்கு வழங்கினார். ஏற்புரையாக முதலில் ஆங்கிலத்தில் ஆரம்பித்து பின்னர் எழுச்சியுடன் மாராட் டிய மொழியில் விருது நாய கர் ஜெகன்புஜ்பல் பேசினார். விழாவில் மராட்டிய மாநில அரசின் கூடுதல் செயலாளர் டாக்டர் பொன்.அன்பழகன் நன்றி கூறி நிறைவு செய்தார்.
(விழாவில் அமைச்சர் ஜெகன் புஜ்பல் ஆற்றிய மராட்டிய  உரையின் முழு மையான தமிழாக்கம் (மொழி யாக்கம் : சரவணன் ராஜேந் திரன்)   12.1.2014 நாளில் மற் றும் மேதகு ஆளுநரின் உரை, தமிழர் தலைவரின் உரை 13.1.2014  நாளில் விடுதலை ஏட்டில் வெளிவந்துள்ளன. ஆளுநரின் முழுப்பேச்சு ஆங்கிலத்தில் தி மாடர்ன் ரேசனலிஸ்ட்  பிப்ரவரி 2014 இதழில் வெளிவந்துள்ளது).
விருது வழங்கும் விழாவிற்கு வருகை தந்த மக்கள் திரளின் ஒரு பகுதி.
சமூகநீதி விருது வழங் கும் விழா ஏற்பாடுகளை மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.ரவிச் சந்திரன், தமிழ் இலெமு ரியா இதழின் முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் மற் றும் தோழர்கள் தொடக்கம் முதல் நிறைவு வரை திட்ட மிட்டுப் பணியாற்றி செயல் படுத்திய பாங்கு அனைவரது பாராட்டுதலைப் பெற்றது.
-விடுதலை,18.2.14

- தொகுப்பு: வீ.குமரேசன்
நேற்றைய விடுதலையின் தொடர்ச்சி வருமாறு:-
பெரியார் பெருந்தொண்டர் சீர்வரிசை சண்முகராசன் - தவமணி இணையருக்கு தமிழர் தலைவர் சால்வை அணிவித்து மரியாதை
அடுத்த நாள் 12.1.2014 ஞாயிற்றுக் கிழமையன்று மும்பைவாழ் தமிழர்கள் கலந்து கொண்ட - தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு - பொங் கல் விழா நடைபெற்றது. மும்பை பகுத்தறிவாளர் கழ கத்தினர் மும்பை பெருநகர் மாதுங்கா பகுதி மகேஷ்வரி பூங்கா அருகில் அமைந் துள்ள மைசூர் அசோசியே சன் குளிர் அரங்கத்தில் நிகழ்ச் சிக்கு ஏற்பாடு செய்திருந்த னர்.
தமிழர் குடும்ப விழா வாக நடைபெற்ற நிகழ்ச் சிக்கு வருகை தந்தோரை மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் அ.ரவிச் சந்திரன் வரவேற்றுப் பேசி னார். தந்தை பெரியாரின் திரு வுருவப்படத்தினை பெரியார் பெருந்தொண்டரும், எழுத் தாளருமான சீர்வரிசை சண் முகராசன் திறந்து வைத்து உரையாற்றினார். விழாவின் தொடக்க உரையினை மும்பை திராவிடர் கழகத் தலைவர் பெ.கணேசன் வழங்கினார்.
வருகை தந்தோரை மும்பை பகுத்தறிவாளர்  கழக அமைப்பாளர் அ.ரவிச்சந்திரன் வரவேற்றார்.
அமெரிக்க - பெரியார் பன்னாட்டு மய்ய இயக்குநர் டாக்டர் சோம.இளங்கோ வன் தலைமை உரை ஆற்றி னார். பகுத்தறிவாளர் கழகப் பொதுச் செயலாளர் வீ.கும ரேசன், தமிழ் இலெமுரியா இதழின் முதன்மை ஆசிரியர் சு.குமணராசன், மும்பை புறநகர் மாவட்ட திராவிடர் முன்னேற்றக் கழகச் செயலா ளர் அலிஷேக் மீரான், மனித நேய இயக்கத்தின் அமைப் பாளர் பி.கே.சங்கர் திராவிட், மராட்டிய மாநில தமிழ் எழுத் தாளர் மன்றத்தின் தலைவர் சமீரா மீரான் ஆகியோரின் கருத்துரை வழங்கலுக்குப் பின்னர் தமிழர் தலைவர் நிறைவுரை ஆற்றினார். மும்பை திராவிடர் கழக செயலாளர் இ.அந்தோணி நன்றி கூறினார். (நிகழ்ச்சியில் ஆற்றப்பட்ட உரைகள் 18.1.2014ஆம் நாளில் விடு தலை ஏட்டில் வெளிவந்து உள்ளது).
உரையாற்றிக் கொண்டிருக்கும் தமிழர் தலைவரை செல்பேசி மூலம் படம் எடுத்திடும் இயக்கப் பணிக்கு அணியமாகும் பெரியார் பிஞ்சு.
குடும்ப விழா நிகழ்ச்சி கள் தொடங்குவதற்கு முன் னரும் பின்னரும் தமிழர் தலைவர் தமிழ்க் குடும்பத்தி னருடன் கலந்துரையாடினார். முதிய பெருமக்களை நலம் விசாரித்தார். தாம் உரையாற் றுகையில் மும்பை வாழ் தமிழர் முன்னோடிகளை நினைவு கூர்ந்து தமிழர் தலை வர் பேசினார். வாழ்வாதாரம் தேடி மும்பை வந்த நிலை யிலும், தந்தை பெரியார் ஊட்டிய இன உணர்வுடன் வாழ்ந்து வரும் தமிழ்க் குடும்பத்தினர் அனைவரும் போற்றுதலுக்கு உரியவர்கள். தலைமுறை கடந்தும் தமிழர் கள் மும்பையில் தங்கி வாழும் சூழல்கள், நிலைமைகள் உருவாகி உள்ளன. எந்த நிலையிலும் தாழாமல் தமிழ்க் குடும்பங்கள், ஒற்று மையாக ஒருவருக்கு ஒருவர் உதவியாக  உறுதுணையாக வாழ்ந்திட வேண்டும் என தமிழர் தலைவர் தமது உரை யில் குறிப்பிட்டார்.
பெரியார் பெருந்தொண் டர் சீர்வரிசை சண்முகராசன் - தவமணி இணையருக்கு தமிழர் தலைவர் சிறப்புச் செய்தார். இயக்க செயல்பாட் டில் ஈடுபட்டு பணிபுரிந்து வரும் தோழர்கள் அ.ரவிச் சந்திரன், பெ.கணேசன், சு. குமணராசன் மற்றும் பிற தோழர்களை சால்வை அணிவித்து தமிழர் தலைவர் பாராட்டினார்.
சிறப்புப் பாராட்டு
மராட்டிய மாநில அரசின் கூடுதல் செயலாளர் டாக்டர் பொன்.அன்பழகன் அய்.ஏ.எஸ். அவர்களுக்கு, சமூகநீதி விருது விழாவினை ஒருங்கிணைத்து ஏற்பாடு செய் ததற்கு சிறப்புப் பாராட்டு தெரிவிக்கப்பட்டது. தமிழர் தலைவர், டாக்டர் பொன். அன்பழகனுக்கு சால்வை அணிவித்துச் சிறப்பித்தார். குடும்ப விழாவில் அனை வருக்கும் சிற்றுண்டிக்கு ஏற் பாடு செய்திருந்தார். தந்தை பெரியாரின் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா குடும்ப விழாவாக மும்பை வாழ் தமிழர்களின் ஒருமைப்பாட்டு நிகழ்வாக நிறை வடைந்தது.
வருத்தம் தெரிவித்தார்
நண்பகல் உணவிற்கு தமிழர் தலைவரையும் உடன் வந்தோரையும் மும்பை பகுத்தறிவாளர் கழக அமைப் பாளர் அ.ரவிச்சந்திரன் செம் பூர் - திலக் நகர் பகுதியில் உள்ள தமது இல்லத்திற்கு அழைத்து வந்தார். வீட்டில் அசைவ உணவு தயாரித்து வைத்திருந்தனர் ரவிச்சந்திர னின் இணையர் ஜுலியட் மற்றும் குழந்தைகள் அக் ஷித், மிருதினி அன்புடனும் மகிழ்ச்சியுடன் தமிழர் தலைவருக்கும், உடன் வந்த தோழர்களுக்கும் உணவு பரி மாறினர். உணவு உண்டபின் இல்லத்தில் சற்று நேரம் உரையாடிவிட்டு தமிழர் தலை வர் கிளம்பினார். விடுதிக்கு வரும் வழியில் மும்பை - பவாய் பகுதியில் உள்ள அரசு உயர் அதிகாரிகள் குடியிருப் பில் உள்ள மாநில அரசின் கூடுதல் செயலாளர் பொன். அன்பழகன் அவர்களது இல் லத்திற்கு தமிழர் தலைவர் அழைத்துச் செல்லப்பட்டார். பொன்.அன்பழகன் அவர் களது இல்லத்தில் இருந்து அவரது மாமனார் மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மானமிகு டி.பி.சண்முகசுந்த ரம் அவர்களை தமிழர் தலை வர் தொலைபேசியில் தொடர்பு கொண்டார். சென்ற ஆண்டு தமிழர் தலைவர் மும்பை வந்த பொழுது, பயணம் முழுவதும் உடன் இருந்த அவர், சில பணிகள் காரண மாக தற்சமய பயண நேரத் தில் வர இயலாதது குறித்து வருத்தம் தெரிவித்தார். அன் பழகன் அவர்களின் இணை யர் மற்றும் குழந்தைகளுடன் சற்று நேரம் உரையாடிவிட்டு நேராக விடுதிக்கு தமிழர் தலைவர் திரும்பினார்.
உடனே பயண  உடைமை களை சீர்செய்து, அரை மணி நேரத்தில் மும்பை விமான நிலையம் வந்தடைந்தார். சென்னை திரும்பும் தமிழர் தலைவரை வழி அனுப்பிட கழகப் பொறுப்பாளர்களு டன், திராவிடர் முன்னேற்ற கழ கத்தின் அலிஷேக் மீரான், சமீரா மீரான் மற்றும் தோழர் கள் பலர் விமான நிலையத் திற்கு வந்திருந்தனர். இரண்டு நாள்கள் இரு நிகழ்ச்சிகள் மற் றும் இயக்கத் தோழர்களின் சந்திப்பு என  மன நிறைவு டன் தமிழர் தலைவர் மும் பையில் தோழர்களிடமிருந்து விடைபெற்றார். உடமை சோதனை, பாதுகாப்பு சோதனை முடிந்து விமான ஏற்றத்திற்கு காத்திருக்கும் வேளையில் வழக்கம்போல, விமான நிலையத்தில் உள்ள புத்தக நிலையத்தில் சிறிது நேரம் செலவழித்தார். சரியாக 8.10 மணிக்கு கிளம்பிய விமா னம் 9.50 மணிக்கு சென்னை வந்தடைந்தது.
புதிய அத்தியாயம்
இதுவரை மும்பை பெருநகருக்குப் பயணம் பல முறை மேற்கொண்டிருந்தா லும் இந்த முறை நடை பெற்ற விழா, சமூகநீதித் தளத் தில் மராட்டிய மாநிலத்தில் புது வலிமை சேர்ப்பதோடு, பெரியார் உலக மயமாக்கப் பணியில் ஒரு புது அத்தியா யத்தினை துவக்கியதாக இருந்தது. ஒவ்வொரு முறை வெளி மாநிலப் பயணமும் பெரியார் பணி முடித்திடும் பயணமாகவே அமைகிறது. தமிழர் தலைவரின் இந்த முறை மும்பைப் பயணமும் அப்படியே; சற்றே அழுத்த மாக!

பெரியார் இயக்கத்தவரின் வாழ்வியல் சிக்கனம்

திராவிடர் கழகப் பொதுக்குழு உறுப்பினர் ம.தயாளன் மும்பையில் நீண்ட காலம் வாழ்ந்து, தற்சமயம் குடும்பச் சூழல் காரணமாக நாகர்கோவிலில் வசித்து வருகிறார். நாகர்கோவிலில் வசித்து வந்தாலும், தமிழர் தலைவர் மும்பை பெருநகருக்கு வரும்பொழுதெல்லாம் மும்பை வாழ் தமிழராக மும்பைக்கு வந்து விடுவார். தமிழர் தலைவர் நிகழ்ச்சிகளை முடித்து, பின்னர் தான் தாம் ஊர் திரும்புவார். ஆனால் இம்முறை தமிழர் தலைவரின் மும்பை வருகையின் போது அவரால் குடும்பச் சூழல் காரணமாக வர இயலவில்லை. தாம் வர இயலாதது குறித்து செல்பேசியில் அழைத்துத் தெரிவித்தார். மானமிகு ம.தயாளன் சென்றமுறை 2013 - பிப்ரவரி மாதம் தமிழர் தலைவர் மும்பைக்கு வந்த பொழுது தமிழர் தலைவருடன் முழுமையாக இருந்தார். அச்சமயம் அவர் கூறிய செய்தி ஒன்று நினைவுக்கு வந்தது.
பொதுவாக மும்பை நகரில், நிகழ்ச்சிகளில் பங்கேற்க தமிழர் தலைவர் வரும் பொழுதெல்லாம், கடந்த காலங்களில் தந்தை பெரியாருடன் வந்தது. அவரது மறைவிற்கு பின்னர் வருகை தந்தது, தங்கிய இடம், உடன் இருத்த தோழர்கள், அன்பாக அவர்கள் விருந்தோம்பிய விதம் பற்றிய நினைவுகளை கூறிக்கொண்டே வருவார். மறைவுற்ற தோழர்களின் குடும்ப வாரிசுகள் எந்த நிலைமையில் உள்ளனர் என்று கேட்டுத் தெரிந்து கொள்வது அவர் வழக்கம்.
தந்தை பெரியாரின் மறைவிற்குப் பின்னர் தமிழர் தலைவர் தமது துணைவியார் மோகனா அம்மாவுடன் மும்பை வந்த நிகழ்வினைப் பற்றிச் சொல்லிக் கொண்டு இருந்த பொழுது, அப்பொழுது மும்பையில் வாழ்ந்து வந்த தயாளன் அவர்கள் குறுக்கிட்டு ஒரு செய்தியினைச் சொன்னார்.
அய்யா! அம்மாவும் நீங்களும் தங்குவதற்கு ஒரு இடத்தில் ஏற்பாடு செய்திருந்தோம். அந்த இடத்தில் உணவு கிடையாது. வெளியிலிருந்துதான் உணவு வாங்கி வர வேண்டிய நிலைமை. இரவு உணவினை எடுத்து வந்து உங்களுக்கும் அம்மாவுக்கும் கொடுத்த பின்னர், காலை உணவினை கொண்டு வந்து விடுகிறோம் என நாங்கள் கூறினோம், உடனே மோகனா அம்மா அவர்கள், இரவு உணவு மிக அதிகமாக இருக்கிறது. நாங்கள் சாப்பிட்டு விட்டு மீதியை தண்ணீர் ஊற்றி வைத்து விடுகிறோம். அதையே காலையில் எடுத்து சாப்பிட்டு விடுகிறோம். காலை உணவு எதுவும் தனியாக வேண்டாம் எனக் கூறினார்.
மானமிகு தயாளன் மிகவும் நெகிழ்ச்சியுடன் இதைக் கூறினார். இருப்பதை முழுமையாகப் பயன்படுத்திட, வீணாக்காமல் பயன்படுத்திட வேண்டும் எனும் பெரியாரின் வாழ்வியல் சிக்கன நடைமுறை மோகனா அம்மாவிடம் இயல்பாக அமைந்திருந்தது, பெரியார் இயக்கத்தின் பிரச்சார வெளிப்பாட்டிற்கும், அன்றாட நடைமுறைக்கும் இடைவெளி என்பது இல்லவே இல்லை எனும் இயல்பு நிலைக்கு தோழர் கூறிய செய்தி எடுத்துக்காட்டாக இருந்தது.
கருப்புச் சட்டைக்குக்
கிடைத்த மரியாதை!
அந்நாளில் தமிழகத்தின் முதல்வராக இருந்த டாக்டர் சுப்பராயன் பின்னர் மும்பை நகருக்கு நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வருகை தந்தார். நிகழ்வில் பல தரப்பட்ட மக்களும் - மராட்டிய மக்கள் பெரும்பாலோனோரும் கலந்து கொண்டனர். தமிழ்ச் சமுதாயத்தினரும் கலந்து கொண்டனர். பெருந்திரளாக மக்கள் கலந்து கொண்ட அந்த நிகழ்ச்சியில் கருப்புச்சட்டை அணிந்து கலந்து கொண்ட ஒரே தோழர் சீர்வரிசை சண்முகராசன் ஆவார். பார்வையாளர்களில் ஒருவராக அமர்ந்து இருந்தார்.
தாம் உரையாற்றிடத் துவங்கும் பொழுது டாக்டர் சுப்பராயன், மேடையில் அமர்ந்திருக்கும் அத்துணை பெருமக்களையும் விளித்துவிட்டு, நிறைவாக கருப்புச்சட்டை அணிந்து வந்துள்ள பெரியார் இயக்கத் தோழரே! என குறிப்பிட்டதும், அரங்கத்தில் அமர்ந்திருந்த அனைவரின் பார்வையும் கறுப்புச்சட்டை அணிந்து இருந்த சீர்வரிசை சண்முகராசன் அவர்கள் பக்கம் திரும்பியது. மேடை நோக்கி பார்த்து இருந்த முகங்கள் அனைத்தும் பார்வையாளர் பக்கம் திரும்பி எங்கே அந்த கருப்புச் சட்டைத் தமிழர்! என தேட முனைந்தன. டாக்டர் சுப்பராயன் அவர்கள் தந்தை பெரியாரின் அவர் தம் இயக்கத்தின் பெருமையினை உணர்ந்த விதத்தின் வெளிப்பாடாக, அந்தக் கூட்டத்தில் அவர்  கருப்புச்சட்டை பற்றி விளித்தது இருந்தது! தந்தை பெரியாரின் இயக்கத்தில் ஈடுபாடு கொண்டு கருப்புச்சட்டை அணிந்து வந்ததின் மாபெருமையினை உணர்ந்ததாக பெரியார் பெருந்தொண்டர் சீர்வரிசை சண்முகராசன் குடும்ப விழாவில் பெருமையாகக் குறிப்பிட்டார். மிகுந்த ஈடுபாட்டுடனும் பெரு மகிழ்வுடனும் அந்நாளைய நிகழ்வினை பெரியார் பெருந்தொண்டர் பகிர்ந்து கொண்டார்.
தந்தை பெரியார் 135ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் தமிழ்ப் புத்தாண்டு - பொங்கல் விழாவில் பங்கேற்றோர்
-விடுதலை,19.2.14

வெள்ளி, 17 ஜூன், 2016

பல்துறை அறிஞர் அயோத்திதாச பண்டிதர் 171ஆம் ஆண்டு பிறந்த நாள் சிந்தனை





இன்றைக்கும் அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்கள் முன்னேறி வருவது ஆதிக்க சாதி வெறியர்களால் எந்த அளவிற்குத் தடுக்கப்பட முடியுமோ அந்த அளவிற்குத் தடுத்து வருகிறார்கள் என்பது கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நாம் கண்கூடாக பார்த்தோம். நாடு முழுக்க 60 இலட்சம் வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்துள்ளது. தமிழகத்தில் 5.5 இலட்சம் வாக்குகள் நோட்டாவிற்கு விழுந்துள்ளது. மிக அதிக அளவாக நீலகிரி (தனி) தொகுதியில் மூன்றாவது இடத்தை நோட்டா பெற்றுள்ளது.

இருபத்தோராம் நூற்றாண்டில்
யார் சாதி பார்க்கிறார்கள்

இந்திய அரசியல்வாதிகளை எங்களுக்கும் பிடிக்கவில்லை என்று மக்கள் வாக்களிக்கிறார்கள் என்று நாம் சட்டைக் காலரை தூக்கிவிட்டு பெருமை பேசிக் கொள்ளும் அதே வேளையில அதில் உண்மை ஒன்று ஒளிந்து இருப்பதை நாம் காணலாம். அந்த உண்மை பெரும்பாண்மையான நோட்டா வாக்குகள் தனி தொகுதிகளில் நாடு முழுக்க விழுந்துள்ளது என்பதுதான். இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் யார் சாதி பார்க்கிறார்கள் என்று கேட்கும் அறிவு ஜீவிகள் ஆய்வு செய்ய வேண்டும்.

இப்பொழுதே நிலைமை இவ்வாறு இருக்கும்போது இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் அரசியலில் ஒடுக்கப்பட்ட மக்கள் அதிலும் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்கள் எந்த அளவிற்கு உயர் சாதியினரால் எல்லா வகையிலும் அடக்கி வைக்கப்பட்டிருப்பார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம்.

சமூக சீர்திருத்தம் அல்லது சமூகப்புரட்சியின் விதைகள் வட இந்தியாவைவிட தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக நம் தமிழகத்தில் ஊன்றி வேர் பரவி அதன் செடிகள் தெரிய ஆரம்பித்தது கடந்த பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான். 1845ஆம் ஆண்டு மே திங்கள் 20ஆம் நாள் அயோத்திதாச பண்டிதர் பிறந்தார். அந்தக் காலகட்டத்தில் பிரிட்டிஷ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது என்பது சொல்லி தெரிய வேண் டியதில்லை. இன்றைக்கு சென்னை ஆயிரம்விளக்கு பகுதியில் மக்கிமா நகரில் கந்தசாமி என்கின்ற சித்த வைத்தியருக்கு மகனாகப் பிறந்தார்.

பெற்றோரிட்ட பெயர் காத்தவராயன்

இவருக்கு பெற்றோரிட்ட பெயர் காத்தவராயன் என்ப தாகும். (சிலர் கோவை அரசம்பாளையத்தில் பிறந்தார் என்று சொல்கிறார்கள்).

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் இன்றைக்கும் ஆல்தோட்டம் என்ற ஒரு பகுதி உள்ளது. இந்த பகுதியில் ஒரு காலத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் அதிகமாக வசித்து வந்தனர். முகலாயா காலத்தில் இந்த பகுதியில்தான் முகலாயர்கள் தங்களது குதிரைகளைப் பராமரிப்பதற்காக விட்டு வைத்தனர். அதன் மூலம் தாழ்த்தப்பட்ட மக்கள் குதிரைகளைப் பராமரித்து வந்ததன் மூலம் இஸ்லாமியர்கள் அவர்களுக்கு  பொருளாதார தியாக உதவியும் செய்து வந்தனா. அதன் காரணமாக சிலா இஸ்லாம் மதத்திற்கு மாறினார்கள். அவர்களின் சந்ததியினர் இப்பொழுதும் அந்த பகுதியில் வாழ்ந்து வருகிறார்கள். பின்பு அந்த பகுதியில் உள்ளவர்களுக்கு (தாழ்த்தப்பட்ட மக்களுக்கு) ஆங்கி லேயர்கள் அவர்கள் வசித்த நிலங்களை அவர்களுக்கே ஒப்படை செய்து உள்ளார்கள் (பஞ்சமி நிலங்கள்). தற்போது அந்த நிலங்கள் யாவும் மற்ற பிரிவினர்களுக்கு விற்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டுவிட்டன. மேற்படி பகுதியில்தான் அதாவது ஆயிரம்விளக்கில் அயோத்திதாசன் தாத்தா மற்றும் அவரது தந்தை சித்த மருத்துவத் தொழில் செய்ததன் மூலம் அந்த பகுதி மக்களிடம் நல்ல பெயரை எடுத்திருந்தனர். 1835ல் தொடங்கிய பெரும் பஞ்சம் கிட்டத்தட்ட 15 ஆண்டு காலம் நீடித்தது. பஞ்ச காலத்தின் இறுதி 5 ஆண்டுகளில் அயோத்தி தாசர் சென்னை தேனாம்பேட்டையில் வளர்ந்தார்.

பாப்பனர்களால் நிகழ்த்தப்பட்ட கொடூரம்

டாக்டர் அம்பேத்கர் எவ்வாறு தீண்டாமையின் கொடுமை யினை சிறுவயதிலேயே அனுபவித்து மன உளைச்சலுக்கு ஆளானாரோ அதேபோல அயோத்திதாசரும் தனது எட்டாம் வயதிலேயே தனது தந்தை கந்தசாமிக்கு இரண்டு பாப்பனர் களால் நிகழ்த்தப்பட்ட கொடூரத்தை உணர்ந்தார். சுருக்கமாகக் கூறுவதானால் ஜார்ஜ் ஹாரிங்டன் என்பவர் சாணரக்குப்பத்தில் உள்ள அதாலத் நீதிமன்றத்தில் பணியாற்றினார். கந்தசாமி அவருக்கு உதவியாளராக இருந்துள்ளார். ஜார்ஜ் ஹாரிங் டனுக்கு தமிழ் கற்றுக் கொடுத்த இரண்டு பாப்பனர்கள் கந்த சாமியைத் தங்களால் தீண்டமுடியாது, அவர் தொடப்படாதவர், அவர் உங்கள் காலத்தில்தான் ஊருக்குள் நுழைகிறார், அதனால் எங்கள் புனிதம் கெடுகிறது என்று முறையிட்டார் கள். தீண்டாமை பற்றியோ அதன் உண்மை சொரூபம்.  இவ்வாறு உள்ளது என்பதைப் பற்றியோ தெரியாத ஜார்ஜ் ஹாரிங்டன் இதுபற்றி அறிந்துகொள்ள ஆர்வம் மேலிட்டு கந்தசாமியைப் புகார் கொடுத்த இரண்டு பாப்பனர்கள் முன்னிலையில் விசாரித்தார். அப்பொழுது தனது தரப்பு நியாயத்தை மிக மென்மையாக, உருக்கமாக சொன்ன அயோத்திதாசரின் தந்தை சில கேள்விக் கணைகளையும் அந்த இரண்டு பார்ப்பனர்களையும் நோக்கி வீச அவர்கள் பதில் கூறாமல் மவுனமாக இருந்தனர். மேற்படி அவதூறு முறையீட்டை தள்ளுபடி செய்த ஹாரிங்டனுக்கு அயோத்தி தாசரின் தந்தையைப் பற்றி நல்ல அபிப்பிராயம் வளர்ந்ததைப் பற்றி சொல்ல வேண்டிய அவசியமில்லை.
இந்த வழக்கும், தன் தந்தையார் கந்தசாமி பெற்ற அவ மானமும், மன உளைச்சலும் மிக அதிகமாகி சிறு வயது அயோத்திதாசரை மிகவும் பாதித்தது. தன் தந்தையார் மூலம் ஆங்கிலம் மற்றும் சித்த மருத்துவத்தை முறையாகக் கற்ற அயோத்திதாசர் பின்பு முறையான படிப்பிற்காக வி.அயோத்தி தாசரிடம் முறையாக தமிழிலக்கியம் கற்றார். அத்துடன் கவிதை புனையும் ஆற்றுலும் சேர்ந்து கொண்டது.

தன் குரு வி.அயோத்திதாசர் மீது வைத்திருந்த அளவற்ற பற்றின் காரணமாக காத்தவராயன் என்ற தன்னுடைய பெயரை வி.அயோத்திதாசர் என்று மாற்றிக் கொண்டார். பண்டிதர் என்பது தமிழிலக்கியம், தமிழ் இலக்கணம், தமிழ் மருத்துவம் ஆகியவற்றைக் கற்றுத் துறைபோகிய அறிஞர் களுக்கு அளிக்கப்படும் பட்டமாகும்.

ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கை

பின்பு கல்வியை முடித்துக்கொண்டு நீலகிரி மாவட்டம் குன்னூர் வந்த அயோத்திதாசர் தோடர்குடியில் பெண் ணெடுத்து சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார். திரு மணம் முடிந்து அண்றைய பர்மாவின் தலைநகரான ரங்கூ னுக்கு பயணமாகி பத்தாண்டுகள் அங்கிருந்தார். பிறவியி லேயே கண் குருடாக பிறந்த ஒரு மகனையும் அவரது மனை வியையும் பறிகொடுத்து பின்பு மீண்டும் குன்னூருக்கு திரும்புகிறார். நீலகிரியில் தீவிரமான சமூகப்பணியில் ஈடுபட்ட அவர் ஆதிசங்கரரின் அத்வைதக் கொள்கைகளைப் பரப்புவ தற்காக ஒரு மடத்தை நிறுவி அத்வைதானந்த சபையை உருவாக்கினார்.

மதம் மற்றும் மருத்துவத்தொழிலையும் மேற்கொண்டு சித்த மருத்துவத்தைப் பரப்புவதோடு மட்டுமலலாமல் நோய் முறிவு மருந்துகளை மக்கள் தாங்களே எப்படித் தயாரித்துக் கொள்வது, மூலிகைகள் எங்கே கிடைக்கும், எப்படிப் பெறுவது, அதை எப்படி பக்குவப்படுத்துவது என்பதை விரிவாகக் குறிப்பிட்டு ஆயிரக்கணக்கான துண்டறிக்கைகளை குன்னூர் மலைப்பகுதிகளில் விநியோகம் செய்து பின்பு சென்னை மாகாணம், சென்னைப்பட்டினம் ஆகியவற்றிற்கு அனுப்பி பல்வேறு மூலிகையைப் பற்றியும் அதன் பயன்பாடு ஆகிய வற்றைப் பற்றி அனைவரும் அறிந்து கொள்ளும் வகையில் பரப்பினார்.

இரட்டைமலை சீனிவாசன்

எல்லோரும் இன்புற்றிருக்க தான் அறிந்த மருத்துவத்தை உலகிற்கு பரப்பிய ஒரு உன்னதமான மருத்துவர் அயோத்திதாச பண்டிதர் என்றால் அது மிகையில்லை. கிட்டத்தட்ட பத்தாண் டுகளுக்கும் மேலாக இந்த மருத்துவப்பணியினை திறம்படத் தொடர்ந்த அயோத்திதாசர் புகழ்பெற்ற இரட்டைமலை சீனிவாசனின் தங்கை தனலட்சுமியை திருமணம் செய்ததனால், அவருக்கு மைத்துனரானார். நான்கு மகன்கள், இரண்டு மகள்கள் பிறந்தனர்.

தான் அதுவரை கொண்டிருந்த அத்வைத கருத்துக்கள் சாதி ஏற்றத்தாழ்வுகளுக்கு வழிவகுத்து அதை நிரந்தரமாக வைத்திருக்கிறது என்பதை பவுத்தத்தைப் பெரிதும் அறிந்து ஆய்ந்ததன் மூலம் தெரிந்து கொண்டார். அதனால் தனது இரண்டு மகள்களுக்கும் பவுத்த சார்புடைய பெயர்களான அம்பிகாதேவி, மாயாதேவி (புத்தரது தாயார்) என்ற பெயர்களைச் சூட்டினார்.
தனது மைத்துனரான இரட்டைமலை சீனிவாசனுக்கும் அயோத்திதாசருக்குமான உறவு அய்ம்பெரும் காப்பியங்களுள் ஒன்றான சீவகசிந்தாமணியில் குறிப்பிடுவது போல காமனும் சாமனும் போல இந்த மாமனும் மைத்துனனும் ஒன்றி சமூக விழிப்புணர்வுக்கு அடித்தளம் அமைக்கும் பணியில் ஈடு பட்டார்கள். 1882ஆம் ஆண்டு மீண்டும் தான் பிறந்த சென்னைக்கு திரும்பி சமூகப்பணியினை மேற்கொண்டார். 1882லிருந்து திராவிடர் கழகம் என்று பெயர் கொண்ட சமூக அமைப்பு ஒன்று ஜான் இரத்தினம் அவர்களால் நடத்தப்பட்டு வந்தது. அதில் பண்டிதர் இணைந்து திராவிட பாண்டியன் என்ற இதழைத் தொடங்கினார். இரண்டாண்டுகள் தொடர்ச்சி யாக வந்துகொண்டிருந்த இந்த இதழ், ஜான் இரத்தினம் சென்னை மாகாண கவுரவ நீதிபதியாக பதவியேற்றவுடன் முற்றுப் பெற்றது. பின்பு 1887ஆம் ஆண்டிற்குப் பிறகு முழுக்க முழுக்க பவுத்தத்திற்குத் திரும்பினார்.

இந்த காலகட்டத்தில ‘திராவிட மகாஜன சபை என்ற அமைப்பை நிறுவி அதன் மூலமாக ஒடுக்கப்பட்ட மக்களை ஒன்றிணைத்தார். அயோத்திதாசர் அதன் மூலம் ஆய்வு செய்து சொன்ன வார்த்தை தமிழர் என்றால திராவிடர் என்பது தான். தமிழின் பூர்வ சொல்லான த்ரமிள, திராவிட என்பதன் விரிவுதான் திராவிடர் என்பதாகும் என்று சொன்னார். எனவே திராவிடர் என்ற சொல் அண்றைக்கே ஏற்றுக்கொள்ளப்பட் டிருந்தாலும் ஆதிதிராவிடர் என்ற சொல்லை அயோத்திதாசர் முன்னிறுத்தினார்.

திராவிடர் மகாசபையின் முதல் மாநாடு

அயோத்திதாசர் தொடங்கிய திராவிடர் மகாசபையின் முதல் மாநாடு 01.12.1891ஆம் ஆண்டு நீலகிரியில் அவரது தலைமையில் நடைபெற்றது. இதற்கிடையே 1885ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட காங்கிரஸ் ஆங்கிலேயர்களை அனுசரித்து நடந்து வந்தது. எனவே காங்கிரஸ் மூலம் சில கோரிக்கைகளை அயோத்திதாசர் ஆங்கிலேய அரசுக்கு முன்வைத்தார். அந்த கோரிக்கைகள் பின்வருமாறு:

1. ஆதி திராவிடர் சமூக மக்களை பறையர் எனக் கூறுவது அவதூறு எனக்கருதிக் குற்றம் எனக் கருதச் சட்டம்
2. ஆதி திராவிடர்களுக்குக் கலவி வசதியினை அளித்தல்
3. கல்வி உதவித் தொகை அளித்தல்
4. கல்வியில் தேறியவருக்கு அரசு வேலை
5. கல்வி கற்றவர்களுக்குத் தடையின்றிப் பணிநியமனம்
6. உள்ளாட்சி அமைப்புகளில் பிரதிநிதித்துவம்
7. சிறைச்சாலைச் சட்டம் 464 பிரிவை நீக்குதல்
8. பொது இடங்களில் நுழைய உரிமை
9. அரசு அலுவலகங்களில் இக்குலத்தோர் தங்கு தடையின்றி அனுமதித்து நீதி அளித்தல்
10. கிராம முன்சீப் அலுவலகங்களின் இக்குலத்தார் நியமிக்கப்பட்டு அரசு நிர்வாகத்துடன் நேரடித் தொடர்பு.
1894ஆம் ஆண்டு மீண்டும் தான் பிறந்த சென்னைக்கு அயோத்திதாசர் குடியேறினார். ஒரு பைசாத் தமிழன் என்ற பத்திரிகையை அச்சிட்டு நடத்திவந்தார். ஒரு பைசாத் தமிழன் என்ற பெயருக்கு கீழ்க்காணும் விளக்கத்தினை அளித்ததார்.

தாழ்த்தப்பட்ட சமூகத்தவரை பைசா பெறாதவர் என்பது போல இளப்பமாகக் கூறுவது வழக்கமாயினும், அத்தகைய ஒரு பைசா தமிழனின் அருமை அறியாதவர் அதன் உண் மையை உணர்ந்தால் ஒரு கோடிப் பொன் இதுதான் என்று உரைப்பர் என்று தன் இதழ் பெயருக்கு அவர் விளக்கமளித்தார்.
பின்பு ஒரு பைசாத் தமிழன், தமிழன் என்று பெயர் மாற்றப்பட்டு 1908 முதல் அன்னார் மறைந்த ஆண்டான
1914 வரை நிற்காமல் வாரம் தவறாமல் வெளி வந்தது. அயோத்திதாச பண்டிதரின் அடிப்படைக் கொள்கைகள் சாதி எதிர்ப்பு, வேஷ பிராமண எதிர்ப்பு மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு ஆங்கில வழி நவீன வழிக்கல்வியை வலியுறுத் துதல். ஆகியவைகளாகும் புராண இதிகாசங்கள் பள்ளிகளில போதிக்கப்படுவதைக் கடுமையாக எதிர்த்தார். மேற்கத்திய பாணியிலான தமிழ்வழிக் கல்விக்கு முன்னுரிமை தந்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வேண்டுமென்று தீர்மானம் இயற்றியவர் இவரே ஆவார். தாழ்த்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்லாமல் அனைத்து சாதியினருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டுமென்பதை தொடர்ந்து தமிழ னில் வற்புறுத்தி வந்தார். பெணிகளுக்குக் கல்வி, தொழிற்கல்வி, வணிகக் கல்வி, விதவைத் திருமணம் ஆகியவற்றை மிகத்தீவிரமாக தமிழன் இதழில் வலியுறுத்தினார். இந்து மதத்தினைக் கடுமையாக எதிர்த்தார். பௌத்த நெறியினைப் பரப்பிடக் கடுமையாக உழைத்தார்.
அயோத்திதாசரின் சிந்தனைகள் அவரது மறைவுக்கு பின்பு நடைமுறைக்கு வந்தது. இன்றைக்கு பெண்களுக்குக் கல்வி கிடைத்ததனால் எல்லா துறைகளிலும் முன்னணியில் உள்ளனர். 1928ஆம் ஆண்டு முதல் நீதிக்கட்சி காலத்தில் தொடங்கப்பட்ட வகுப்புவாரி பிரதிநிதித்துவம் இன்றும் இட ஒதுக்கீடு என்ற பெயரில் பின்பற்றப்பட்டு வருகின்றன, இந்து மத எதிர்ப்பு இயக்கங்கள் அதிகமாக உருவாகி உள்ளன.

பண்டைய தமிழ்வழிக் கல்வி ஒழிந்து தற்போதைய தமிழ்வழிக் கல்வி மாற்றம் கண்டுள்ளது. எழுத்துச் சீர்த்திருத் தம் நடைமுறைக்கு வந்துள்ளது. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான வன்முறையைத் தடுக்க வன் கொடுமை (தடுப்பு) சட்டம் இயற்றப்பட்டுள்ளது, திருக்குற ளுக்கு, அயோத்திதாசர் எழுதிய உரையினை ஆய்வு செய்து திறனாய்வு கட்டுரைகள் பல வந்துவிட்டன. மேற்கண்டவை மூலம் அயோத்திதாசப் பண்டிதர் எந்தளவிற்கு சமூகப் பங்களிப்பினைச் செய்து நமக்கு முன்னோடியாக உள்ளார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம், குறிப்பாக  தமிழர் என்ற சொல்லின் மூலச்சொல திராவிடர் என்பதாகும் என்ற அவரது ஆய்வு இன்றைக்கு மிக முக்கியமானதாகும்.
வாழ்க அயோத்திதாசப் பண்டிதர் என்று சொல்லாமல அவரைப் பின்பற்றுவோம்.

நான் மேலே சொன்ன சில செய்திகள் மிக மிக சுருக்க மானதாகும்.

அயோத்திதாசப் பண்டிதர் பற்றி விரிவாக தெரிந்து கொள்ள ஆதார நூல்கள்

1. சாகித்ய அகாடாமிபிரசுரித்துள்ள க. அயோத்திதாச பண்டிதர் (கவுதம சன்னா எழுதியது).
2. ஞான.அலாய்சியஸ் வெளியிட்டுள்ள அயோத்திதாசரின் சிந்தனை தொகுதிகள்.
3. அம்பேத்கர் பிரியன் எழுதிய பண்டிதர் அயோத்திதாசர் வாழ்க்கை வரலாறு’,
4. க. திருநாவுக்கரசு எழுதிய ‘திராவிட இயக்க வேர்கள் மற்றும் களத்தில் நின்ற காவலர்கள்.
அயோத்திதாசரின் பிறந்த நாள் 20.5.1845
-விடுதலை,19.5.16

புதன், 8 ஜூன், 2016

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - தந்தை பெரியார்




வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது இந்திய மக்களில் பார்ப்பனர் தவிர மற்றெல்லா வகுப்பார்களாலும் வெகு காலமாக அதாவது இந்திய பிரதி நிதித்துவம் என்கிற வார்த்தை என்றைக்கு ஏற்பட்டதோ அது முதல் அரசாங்கத்தாரைக் கேட்டு வரப்படும் ஒரு கோரிக்கை. இக்கோரிக்கை ஏற்பட்ட காலமுதல் இந்நாட்டுப் பார்ப்பனர்கள்  குறிப்பாய் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்கள் பல வழிகளிலும் தந்திரங்களிலும் சூழ்ச்சிகளிலும் அது ஈடேறாமல் இருப்பதற்காக வெகு பாடுபட்டு வந்திருக் கிறார்கள். என்ன பாடுபட்டும் அரசியல் இயக்கங்களான காங்கிரசும் அரசாங் கமும் அதை ஒப்புக்கொண்டு அது ஒரு அளவு அமுலில் வரவும் ஏற்பாடு செய்தாய் விட்டது.
உதாரணமாக, இந்தியாவிலுள்ள இந்திய மக்களில் மகம்மதியர்களுக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், சீக்கியர்களுக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், கிறிஸ்தவர்களுக்கு இத்தனை ஸ்தானங்க ளென்றும், மகம்மதியரல்லாதாருக்கு இத்தனை ஸ்தானங்களென்றும், மகம்மதியரல்லாதாரில் பார்ப்பனரல்லாதா ருக்கு இத்தனை ஸ்தானங்களென் றும், பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஆகிய வர்களுக்கு பொதுவில் இத்தனை ஸ்தானங்களென்றும் பிரிக்கப்பட்டு
6, 7 வருஷ காலமாய் அதாவது மூன்று தேர்தலாய் அமுலில் வந்தாய் விட்டது. அது போலவே காங்கிரசிலும் கிறிஸ்தவர்களுக்கு இத்தனை ஸ்தானமென்றும் மகம் மதியர்களுக்கு இத்தனை ஸ்தான மென்றும் பார்ப்பனர்களுக்கும் பார்ப் பனரல்லாதாருக்கும் சேர்த்து மொத்தத்தில் இத்தனை ஸ்தானமென்றும் தீண்டாத வகுப்பார் என்று சொல்லப்பட்ட ஒடுக்கப்பட்டவர்களுக்கு இத்தனை ஸ்தானமென்றும் ஒதுக்கப்பட்டு அதுவும் சுமார் 5, 6 வருஷ காலமாய் அமுலில் இருந்தும் வருகிறது என்பதும் எல்லோரும் அறிந்த விஷயமே.
இப்போது அதில் பார்ப்பனர் பார்ப் பனரல்லாதார் என்கிற விஷயத்தில் வகுத்திருக்கும் முறை காரியத்தில் பிர யோசனப்படாததாயும் ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் இடையூறாயும் இருப்பதால் அதையும் தெளிவுபடுத்திவிட வேண்டும் என்பதே இப்போது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்று சொல்வதின் பொருளே அல்லாமல் புதிதாக ஒன்றும் ஏற்பாடு செய்யவோ அல்லது கண்டு பிடிக்கவோ யாரும் கோரவில்லை. இக் கொள்கைகளை அரசாங்கத்தாரும் சுமார் 85 வருஷங்களுக்கு முன்னாலேயே ஒப்புக் கொண்டு 1840-ம் வருஷத்தின் 125 வது ஸ்டேன்டிங் ஆர்டரில் விவரமாக சொல்லியிருக்கிறார்கள். அக்காலத்தில் இந்தியாவில் நிர்வாகம் செய்த வெள்ளைக்காரர்களும் இதை வற்புறுத்தி இருக்கிறார்கள். ஆனாலும் சகல உத்தியோகங்களும் பதவிகளும் அரசாங்கத்தார் கைவசமே இருந்து அவர்களே ஏறக்குறைய சரிவர வினி யோகித்து வந்த தால் அதற்காக யாரும் கொள்கை ஒன்று ஏற்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியமே இருந்து வர வில்லை. ஆனால் காங்கிரஸ் என்பதாக ஒரு ஸ்தாபனத்தை சிருஷ்டித்துக் கொண்டு அதை தேசப் பிரதிநிதித்துவம் பொருந்தியது என்று சொல்லி அரசாங்கத்தை மிரட்டி அவர்கள் மூலம் சில பதவிகளும், பிரதிநிதித் துவங்களும் அதிகமாய் வினியோகிக்க செய்ததில் அவைகள் காங்கிரசில் உழன்று கொண்டிருக்கிற பார்ப்பனர்களான ஒரு கூட்டத்தாருக்கே போய்ச் சேருவதைப் பார்த்த உடனும் மற்றவர்கள் காங்கிர சில் ஆதிக்கம் பெறமுடியாமலும் மற்றவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்க முடியாமலும் கட்டுப்பாடாய் பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்ததின் பலனாகவும் காங்கிரசில் விசேஷ தீவிரவாதிகளாய் இருந்த பார்ப்பனரல்லா தார்களில் வடநாட்டில் மகம்மதியர்களும் தென்னாட்டில் மகம்மதியரல்லா தார்களுமான பார்ப்பனரல்லாதாரும் காங்கிரசினால் ஏற்படும் உத்தியோகங்களையும் பதவிகளையும் பிரதிநிதித்துவங்களையும் எங்களுக்கும் சமமாய் விகிதாச்சாரம் பங்கு கொடுக்க வேண்டும் என்றும், இல்லாவிட்டால் காங்கிரசிற்கு விரோதமாயிருந்து அரசாங் கத்தாரிடமிருந்து நேரில் பெற பிரயத் தனம் செய்வோம் என்றும் வாதாடியதில் காங்கிரசிலுள்ள பார்ப்பனர்கள் மகம்மதி யர்களுக்கு மாத்திரம் ஒப்புக்கொண்டு மற்றபடி மகம்மதியரல்லாத பார்ப்பனரல்லா தாருக்கு ஒப்புக் கொள்ளாமல் ஆக்ஷபணை செய்தார்கள். இதன் பலனாய் அப்போது அரசியல் வாழ்விலும், காங்கிரசிலும், பிரதான ஸ்தானத்திலும், அநுபோகத்திலும் இருந்த ஸ்ரீமான்கள் டாக்டர் நாயர், தியாகராய செட்டியார் போன்றவர்கள் தென்னிந்தியர்களின் நல உரிமைச் சங்கம் என்பதாக ஒன்றை ஏற்பாடு செய்து அதில் தென்னிந்தியாவிலுள்ள பார்ப்பனரல்லாத மக்கள் எல்லோரையும் சேர்த்து காங்கிரஸ் என்பது பார்ப்பன முன்னேற் றத்திற்கு ஏற்படுத்திய ஆயுதமே ஒழிய ஜனப் பிரதிநிதித்துவம் பொருந்தி யதோ அல்லது எல்லா மக்களும் சம உரிமை அடையத்தக்கி னதோ அல்ல வென்றும், சுயராஜ்யம் என்பது பார்ப்பன ராஜ்யமே அல்லாமல் பொது மக்கள் ராஜ்யம் அல்லவென்றும் பிரசாரம் செய்ததின் பலனாய் காங்கிரஸ் ஆதிக்கமும் குலையத் தலைப்பட்டது.
இதை அறிந்த பார்ப்பனர் கள் ஒன்று கூடி யோசித்து ஒரு தந்திரம் செய்தார்கள். அதென்ன வென்றால் இப்போது ஸ்ரீமான்கள் சக்கரை, ஆரியா, ஈ.வெ. ராமசாமி நாயக்கர் முதலிய காங்கிரசில் ஈடுபட்டிருந்தவர்களின் அபிப்பிராயத்தையும், அவர்களது பத்திரிகை களையும் எதிர்க்க எப்படி ஸ்ரீமான்கள் மயிலை ரெத்தின சபா பதி முதலியார், பாவலர், குப்புசாமி முதலியார் என்கிற பெயர் உள்ளவர் களை தலைவர் களாக்கியும் தேசபந்து என்கிற பெயர் கொண்ட பத்திரி கையை உண்டு பண்ணவும் முயற்சிகளைச் செய்தார்களோ அதுபோலவே அப்போதும் ஸ்ரீமான் கலியாணசுந்தர முதலியார், டாக்டர் வரதராஜுலு நாயுடு என்கிற கனவான்களை தலைவர்களாக்கி தேசபக்தன் என்ற பத்திரிகையையும் உண்டாக்கி டாக்டர் நாயர் முயற்சிகளை ஒழிக்க பிரயத் தனப்பட்டார்கள். அதனால் அச்சமயம் பார்ப்பனர்களின் யோக்கியதை யையும் டாக்டர் நாயர் போன்ற தேசபக்தர்கள் எடுத்துச் சொன்னவைகளை தேசம் நம்பியதே அல்லாமல் ஸ்ரீமான்கள் நாயுடு, முதலியார், தேசபக்தன் போன்ற வர்கள் சொல்லுவதை ஜனங்கள் காது கொடுக்காததால் அதற்காக வேறு தந்திரம் எடுத்து, எதுபோலவென்றால் மகாத்மாவின் ஒத்துழையாமை ஆரம்பமானவுடன் தென்னாட்டுப் பார்ப்பனர்களும் அவர்களது பத்திரிகை களும் விரோதமாயிருந்தும் ஸ்ரீமான் எஸ்.சீநிவாசய்யங்கார் ஒத்துழை யாமை சட்டவிரோதமென்று சொல்லியும் ஸ்ரீமான் கஸ்தூரி ரங்க அய்யங்கார், எ.ரங்கசாமி அய்யங்கார், எஸ். சத்தியமூர்த்தி முதலியவர்கள் சென்னை ராஜதானி காங்கிரஸ் கமிட்டியில் இருந்து ராஜினாமா கொடுத்து விட்டு வெளி யில் போய் எவ்வளவோ தூரம் மகாத்மாவையும் ஒத்துழையாமையையும் தாக்கிப் பேசியும் எழுதியும் இவர்கள் ஜபம் செல்லாததால் நுழைந்து கொடுத்து உள்ளே போய் கூட இருந்தே ஒத்துழையாமையைக் குலைத்தார் களோ அதுபோல் தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தார் கேட்கும் வகுப்பு வாரி உரிமையை நாங்களும் ஒப்புக் கொள்கிறோம். ஆனால் காங்கிரசை எதிர்க்கக் கூடாது என்பதாக இப்போது போலவே தேச பக்தி வேஷத்தைப் போட்டு, அதற்கெதிராக ஒரு சங்கத்தையும் ஸ்தாபிக்கச் செய்து அதற்கு வேண்டிய பணங்களையும் பிரசாரங்களுக்கும் பத்திரிகை நடத்துவதற்கும் பணத்தையும் கொடுத்து பார்ப்பனரல்லாதாரை இரண்டாகப் பிரித்து அச்சங்கத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மதிப்பு குறையச் செய்தார்கள். அச் சங்கத்தின் மதிப்பு குறைந்து விட்டது என்று தெரிந்தவுடனும் இவர்கள் பணம் கொடுத்து ஏற்படுத்தின சென்னை மாகாணச் சங்கமும் இப்பார்ப்பனர்களின் யோக்கியதையை அறிந்து கொண்டது என்று தெரிந்த உடனும் இச்சங்கத்தையும் ஒழிப்பதற்குச் சூழ்ச்சி செய்து இச்சங்கத்தில் முக்கியமாய் இருந்தவர் களையும் வசப்படுத்தி இதையும் அடியோடு ஒழித்து விட்டார்கள். இதன் பலனாய் என்ன ஏற்பட்டது? டாக்டர் நாயர் கட்சியாகிய தென் னிந்திய நல உரிமைச் சங்கத்தார் கேட்ட வகுப்புவாரிப் பிரதிநிதித்துவமும் போய் அதற் கெதிரிடையாய்த் தாங்களும் அதையே கோருவதாகச் சொல்லிய சென்னை மாகாணச் சங்கத்தார் கோரிய வகுப்புவாரிப் பிரதிநிதித் துவம் கொண்ட தேசபக்தியும் போய், பழைய பார்ப்பன ஆதிக்கமே ஏற்பட்டு இதற்கு உதவி செய்த ஸ்ரீமான்கள் கலியாணசுந்தர முதலியாரும் டாக்டர் வரதராஜுலு நாயுடு காரும் பார்ப்பனர்கள் மேல் பிணக்கு கொண்டு காங்கிரஸ் நிர்வாகத்திலிருந்து விலகுவதாய் மிரட்டியும் நீங்கள் போனால் வேறொரு முதலியாரையும் நாயுடுகாரும் சேர்த்துக் கொள்ளத் தெரியும் என்று சொல்லி வெளியி லேயே அனுப்பி விட்டு தங்கள் ஆதிக்கத்தையும் நிலைநிறுத்திக் கொள்ள ஏற்பாடு செய்து வருவதும் உலகம் அறிந்தது.
இதுபோலவே பார்ப்பனரல்லாத சங்கத்திற்கு அநுகூலமாய் சாக்ஷி சொல்ல சீமைக்குப்போன டாக்டர் நாயர், ஸ்ரீமான் எல்.கே. துளசிராம் இவர் களுக்கு மாறாக ஸ்ரீமான்களான ஒரு சக்கரைச் செட்டியாரையும் ஒரு செஞ்சையாவையும் சீமைக்குப் பணம் கொடுத்து அனுப்பினார்கள். இப்போது இந்தப் பார்ப்பனர்கள் யோக்கியதையை அறிந்து ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார் அவர்களை விட்டு விலகியதும் அதற்குப் பதிலாக ஸ்ரீமான்கள் ஒரு ஓ.கந்தசாமி செட்டியார் என்பவரையும் முன் பார்ப்பனரல்லாதாருக்காக சாக்ஷி சொல்ல சீமைக்குப் போயிருந்த எல்.கே. துளசிராம் என்பவரையும் ஆசை வார்த்தைகள் சொல்லி தங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டு அப்போது ஸ்ரீமான் சக்கரைச் செட்டியார் செய்த வேலையை இவர்களைக் கொண்டு செய்து வருகிறதோடு அவருக்குப் பதிலாய் இவர்களை உபயோகித்துக் கொள்ளப் போகிறார்கள். இவ்வளவு தீவிரமாகவும், இவ்வளவு பிரயத் தனமாகவும், இவ்வளவு செலவு செய்து கொண்டு இது சமயம் இந்தப் பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாதார் இயக்கத்திற்கு விரோதமாய் கட்சி சேர்த்து கிறதின் முக்கிய நோக்கமென்னவென்றால் 1920 த்தில் சில சீர்திருத் தங்கள் அரசாங்கத் தார் நமக்கு வழங்கியிருப்பதாகச் சொன்ன யாதாஸ்தில் இன்னும் பத்து வருஷம் சென்ற உடன் இப்போது கொடுத்த சீர்திருத்தத்தை எப்படி உபயோகித்திருக்கிறீர்கள், மேல் கொண்டு உங்களுக்கு சீர்திருத்தம் கொடுத்தால் அதை சரியாய் உபயோகித்துக் கொள்ளக்கூடிய யோக்கியதை உங் களுக்கு இருக்கிறதா? இல்லையா? என்கிறதை பரீக்ஷித்துப் பார்த்து இன்னும் சில சீர்திருத்தம் கொடுப்போம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
அதன்படி சர்க்கார் வழக்கம் போல் 1928 லோ 1929 லோ ஒரு கமிஷனை நியமிக்கப் போகிறார்கள். அந்த கமிஷனில் நமது பார்ப்பனர்களுக்கு மேல் கொண்டு சீர்த்திருத்தம் கொடுத் தாலும் சரி, கொடுத்திருப்பதையும் பிடுங்கிக் கொண்டாலும் சரி அதைப் பற்றியெல்லாம் கொஞ்சமும் கவலை யில்லை. எப்படியாவது வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் என்பதை ஒழித்து விட்டால் அதுவே பார்ப்பனர்களுக்கு சுயராஜ்யமளித்த மாதிரியாகையால் அதை ஒழிக்கக் கட்சியும், பலத்தையும் சேர்க்கத்தான் இவ்வளவு தந்திரங்களும் சூழ்ச்சிகளும் பணச்செலவும் செய்வதே தவிர வேறில்லை. அதனால் தான் பார்ப்பனர் என்ற கூட்டமே அடியோடு ஆண் பெண் அடங்கலும் கட்சி பேதம், அபிப்பிராய பேதம் இன்றி ஒன்று சேர்ந்திருக்கிறார்கள்.
இதற்காகவே ஸ்ரீமான் சி. ராஜகோபாலாச்சாரியாரும் அடிக்கடி பட்டணம் போவதும் ஸ்ரீமான் சீநிவாசய்யங்கார் வெற்றிக்காக காத்திருப்பதும் அவர்கள் கூட்டங் களில் பேசுவதும் வகுப்புவாதம் மாத்திரம் கூடாது என்பதும் ஆகிய தந்திரங்களை செய்து வருவதும் ஸ்ரீமான் சீநிவாச சாஸ்திரிகள் வகுப்புவாதம் கூடாது என்பதும் பார்ப்பனரல்லாதாரிலும் மகம்மதியர் களிலும் கிறிஸ்தவர்களிலும் தீண்டாதார் என்னும் வகுப்புகளிலும் கூலி கொடுத்து ஆள்களைப் பிடித்து வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் கூடாது என்று சொல்லச் செய்வதும் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தை அரசியலில் பேசக் கூடாது என்று சொல்லச் செய்வதுமான காரியங்களைச் செய்து வருகிறார்கள். ஆதலால், தமிழ் மக்கள் இது சமயம் ஏமாந்து போகாமல் வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தின் அவசியத் தையும், அதற்கெதிரிடையாய்ப் பார்ப்பனர்கள் செய்யும் பிரசாரத்தின் நோக்கத்தையும், பார்ப்பனர்களுக்காக வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்திற்கு விரோதமாய் பார்ப்பனர் அல்லாதார் கூலிப்பிரசாரம் செய்யும் நோக்கத்தை யும், அவர்களுடைய யோக்கியதைகளையும் முன் பின் அபிப்பிராயங்க ளையும் பாமர மக்கள் சரியாக உணரும்படியான பிரசாரங்களைச் செய்து எப்படியாவது அதை அடைவதற்கு வேண்டிய ஏற்பாடுகளையே செய்ய வேண்டி வற்புறுத்துகிறோம்.
- குடிஅரசு  தலையங்கம்  21.11.1926
-விடுதலை,27.3.16