பக்கங்கள்

புதன், 8 ஜூன், 2016

எது விபசாரம்?: ஜாதி வழக்கம் பேரால் நடைபெற்ற அசிங்கங்கள்



1-2-1931ஆம் ஆண்டு குடிஅரசிலிருந்து....
கவனிக்கத் தகுந்த ஜீவனாம்ச வழக்கு
ஈரோடு டி.மு.கோர்ட்டில் ஒரு பணக்காரக் குடும்பத்தில் புருஷன் மீது மனைவியால் ஒரு ஜீவனாம்ச வழக்குத் தொடரப்பட்டது.
மனைவி வயது 32, புருஷன் வயது 23, பி.ஏ படித்தவர். கல்யாணம் ஆகி சுமார் 16 வருஷகாலமாகின்றது. புருஷனுக்கு சுமார் 7 வயதிலும், பெண்ணுக்கு சுமார் 16 வயதிலும் கல்யாணம் செய்யப்பட்டது.
இந்தத் தம்பதிகளுக்கு இப்போது இரண்டு குழந்தைகளிருக் கின்றன. அவைகளில், ஒன்றுக்கு வயது 12. மற்றொன்றுக்கு வயது 10. எனவே இவைகள் இந்த மனைவி கரு, புருஷனுடைய 11வது வயதிலும், 13வது வயதிலும் பிறந்த குழந்தைகளாகும்.
கொஞ்ச நாளைக்கு முன்பு மனைவி ஏதோ மனஸ்தாப காரணத்தால் புருஷன் வீட்டை விட்டு குழந்தைகளுடன் தனது தாயார் வீட்டுக்குத் துரத்தப்பட்டுவிட்டாள்.
ஆதலால் மனைவி தாயார் வீட்டில் இருந்து கொண்டு, புருஷன்  மீது ஜீவனாம்சத்திற்கு வழக்குத்தொடர வேண்டிய தாயிற்று.எனவே 1929ஆம் வருஷத்தில் பாப்பர் வியாஜியமாக ஒரு ஜீவனாம்ச வழக்கு தொடுத்தாள்.
வியாஜ்ஜியத்தில் வாதி வக்கீல் மேற்படி வயதுக் கிரமங்களையெல்லாம் உள்ளபடி குறிக்காமல், ஏனெனில் 23 வயதுடைய ஆணுக்கு, 12 வயது டைய குழந்தை இருப்பதற்கு காரணம் சொல்ல வேண்டி வரும்போது, கோர்ட்டில் பல விஷயங்கள் ருஜூக்கொடுக்க வேண்டிவருமென்றும்,
அது அந்த வீட்டாருக்கு கசப்பாயிருக்குமோ என்றும் கருதிய காரணத்தால், வயதுக்கிரம உண்மைகளை சாத்தியத்திற்குத் தக்கபடி சற்று மாற்றி அதாவது புருஷன் வயதை உயர்த்தியும் பெண் வயதை தாழ்த்தியும் குழந்தைகள் வயதைக் குறைத்தும் காட்டி இருந்தார்.
ஆனால் புருஷன் இதைத்தங்களுக்கு அனுகூலமாய் எடுத்துக் கொண்டு, புருஷன், மனைவி, குழந்தைகள் ஆகியவர் களுடைய பிறந்த கால சர்க்கார் அத்தாட்சியை (பர்த் சர்ட்டிபி கேசட்டை) காட்டி இந்த குழந்தைகள் தனக்கு பிறக்கவில்லை என்றும் வயது வித்தியாசத்தைப் பார்த்தால் விளங்குமென்றும் தனக்கு வயது 23 என்றும்,
குழந்தைக்கு வயது 12 ஆகின்ற தென்றும் ஆதலால் தன் மனைவி விபசாரி ஆகிவிட்டாள் என்றும், ஜீவனாம்சம் கொடுக்க முடியாதென்றும் கண்டு எதிர் வழக்காடினார். இதன் மேல் வாதியாகி மனைவி, இந்த வயதுக் கிரமங்களை, அதாவது புருஷனால் காட்டப்பட்டதை உண்மை என்று ஒப்புக்கொண்டு, பிராதை திருத்திப்போட அனுமதி கேட்டு, திருத்திப்போட்ட பிராதின் சாரமாவது:-
தனது கல்யாண காலத்தில் தான் பெரிய பெண்ணாயிருக்கும் போது, தனது புருஷன் சிறு பையனாய் இருந்தது வாஸ்தவ மென்றும். மேற்கண்ட குழந்தைகள் பெறும்போதும் தனது புருஷன் சிறு பையனாகவே இருந்தது வாஸ்தவமென்றும், மேல் கண்ட குழந்தைகள் தனது புருஷனுக்கு பிறக்க வில் லை என்பதும் வாஸ்தவம் தான் என்றும்,
ஆனால் அவைகள் விபச்சாரத்தினால் பிறக்க வில்லை என்றும் தனது புருஷனின் தகப்பனாரான தன் மாமனாருக்குத்தான் பிறந்த தென்றும், தங்கள் சமூகத்தில் இம்மாதிரி சிறு பையன்களுக்கு பெரிய பெண்களை விவாகம் செய்து, கல்யாண மாப்பிள்ளைக்கு புருஷத்தன்மை வரும்வரை, மாமனாரே புருஷனாக இருந்து, சம்பந்தம் செய்து குழந்தைகள் பெற்று வருவது வழக்கமென்றும்.
இந்தப்படி பிறந்த குழந்தைகள் எல்லாம் புருஷனுடைய குழந்தைகளாக பாவிக்கப்படுவது வழக்கம் என்றும், ஆதலால் இந்தக் குழந்தைகளை தான் தன்னுடைய மாமனாருக்கு பெற்றிருந்தாலும், இவை புருஷனின் குழந்தைகளேயாகும் என்றும், இதனால் தன்னை யாரும் விபசாரி என்று சொல்லி,
பழிசுமத்தி, ஜீவனாம்சத்திற்கு அருகதை அற்றவளாக்க முடியா தென்பதாக காண்பித்ததோடு, இந்த விஷயத்தை முதலில் பிராதில் நாட்டாததற்கு காரணம், புருஷன் படித்தவனாகவும், குடும்பம் பணக்காரக் குடும்பமாகவும் இருப்பதால், இந்த மாதிரி விஷயங்களை எல்லாம் கோர்ட்டுகளில் எடுத்துச் சொல்ல வேண்டாம் என்று தனது வக்கீல் யோசனை கூறியதால் காட்டப்படவில்லை என்று எடுத்துச் சொல்லப்பட்டது.
விசாரணையில் இரு கட்சியிலும் 25 சாட்சிகள் போல் விசாரிக்கப்பட்டனர். வாதியின் சாட்சிகள் இந்த மாதிரி வழக்கம் தங்கள் சமூகத்தில் உண்டு என்றும், இந்தக் குழந்தைகள் எல்லாம் இந்தப் பெண்ணின் மாமனாருக்குத்தான் பிறந்த வைகள் என்றும் தங்களில் சிலர் இப்போது தங்கள் மருமகளை அனுபவித்து குழந்தைகள் பெற்று வருவதாகவும், அதற்குக் காரணம் மகன் சிறு பையன் என்று சொன்னதோடு தங்கள் பிராந்தியங்களில் மற்றக் குடும்பங்களில் இது போல் இன்றும் நடப்பதாக எடுத்துச்சொல்லி,
சுமார் 20, 30 குடும்பங்கள் வரை பெயரைச் சொல்லி, அந்தந்தக் குடும்பங்களில் உள்ள புருஷன், மனைவி, குழந்தை ஆகியவர்களின் பெயர்கள் வயதுக் கிரமங்கள் ஆகியவைகளை விபரமாய் ஆதாரத்துடன் குறிப்பிட்ட பட்டியல் (ஸ்டேட்மெண்ட்) ஒன்றையும் தாக்கல் செய்து அதை இரண்டு தரப்பு சாட்சிகளாலும் ருஜூம் செய்து வைக்கப்பட்டடது.
இது ஒரு புறமிருக்க பிரதிவாதி தரப்பில் மேற்கண்ட வாதியான மனைவியை விபசாரி என்று ருஜூவு செய்ய, புருஷனின் சாட்சிகள் அந்த பெண்ணை விபசாரி என்று சொன்னார்கள்.
ஆனால் வாதி தரப்பு வக்கீல், அந்தப் பெண் விபச்சாரி யானால் அந்தப் பெண்ணை என் ஜாதியைவிட்டு விலக்க வில்லை? யென்று கேட்டதில்,  அதற்கு அந்த சாட்சிகள் தங்கள் சமூகத்தில் இந்த மாதிரி விஷயங்களுக்கு ஜாதியை விட்டு நீக்குவதில்லை என்றும், தங்கள் குடும்பங்களுக்குள் அதாவது புருஷன், மைத்துனன், கொழுந்தனார்,
மாமனார் ஆகிய இந்த மாதிரி முறைகாரர்களுக்குள்ளும், கடைசியாக தங்கள் ஜாதியார் களுக்குள்ளும் தவிர வேறு ஜாதி அதுவும் கீழ்ப்பட்ட ஜாதியார்களிடம் சம்பந்தம் வைத்துக் கொண்டால் ஜாதியை விட்டுத்  தள்ளப்படுவார் என்றும் சொன்னார்கள். மேலும் மற்றொரு கேள்விக்கு இந்த மாதிரி புருஷனுக்கு பிறக்கவில்லை என்று நன்றாய்த் தெரிந்த இந்தக் குழந்தைகளை,
கல்யாணம் செய்து கொள்வதில் தங்கள் சமூகத்தார் யாரும் ஆட்சேபணை சொல்ல மாட்டார்கள் என்றும் ஒப்புக்கொண்டார்கள், பிறகு வாதி தரப்பில் இந்த மாதிரி நடைமுறை இந்த சமூகத்திலும், மற்றும் வேறு பல சமூகத்திலும், இந்தியாவிலும், சிறப்பாக தென் இந்தியாவிலும், சாதாரணமாயிருப்பதாகப் பல ஆதாரங்களை எடுத்துக்காட்டியதோடு மனைவி விபச்சாரியாக இருந்தாலும் புருஷன் ஜீவனாம்சம் கொடுப்பதற்கு சாஸ்திரமும், சட்டமும், இருப்பதாகவும் ஆதாரங்களை எடுத்துக் காட்டினார். அப்படிக் காட்டபட்ட ஆதாரங்களில்
1) குருதாஸ் பானர்ஜியால் எழுதப்பட்ட இந்து “கல்யாணம்“
2) தர்ஸ்ட்டறால் எழுதப்பட்ட “தென் இந்திய ஜாதிபரம்பரை”.
3) 1891  வருஷத்திய சென்சஸ் போர்ட்,
4) “மெயின் இந்துலா” அதில் காணப்படும் இந்து சாஸ்திரங்கள், சில தீர்ப்புகள் முதலியவைகளாகும். அவைகளில் இம்மாதிரி அநேக சம்பவத்தை ஆதரிக்கக் குறிப்பிட்டிருக்கும் விஷயம் அநேகம், இன்னும், அதிக தலைகீழான பழக்கவழக்கங்கள் இருப்பதாக இருந்தபோதிலும், இந்தக் குறிப்பிட்ட சம்பவத்தைக் குறித்தமட்டில் சொல்லப்பட்டிருப்பதாவது,
வெளி மாகாணங்களில் சில சமூகங்களை எடுத்துக் காட்டி இருப்பதுடன் “சென்னை மாகாணத்தில் கம்ம நாயுடு ஜாதியும், கன்னடியகுடியான கவுண்டர் ஜாதியும்,
வேளாள ஜாதியும், சிறு குழந்தைகளுக்கு பெரிய பெண்களை விவாகம் செய்வித்து குழந்தை பெரிய பையன் ஆகும் வரை மாமனார் அல்லது அந்த குடும்பத்தில் அல்லது அந்த ஜாதியில் எவராவது ஒரு வருடன் சம்பந்தம் வைத்துக் கொள்வது முறையென்றும் மற்றும் குழந்தை இல்லாவிட்டால் குழந்தை பெறுவதற்காக என்று,
தங்கள் ஜாதியில் யாருடனாவது சம்பந்தம் வைத்து எப் பொழுது வேண்டுமானாலும் குழந்தைகள் பெற்றுக் கொள் ளலாம் என்றும், இந்தப்படி எல்லாம் செய்வது எந்த விதத்திலும் குற்றமாகப் பாவிக்கப்படுவதில்லை என்றும் காணப் பட்டிருக் கின்றது.
மற்றபடி, சட்டத்திலும் மனைவி விவாகமான பின்பு விபசாரி யாய் இருந்தவளானாலும் கூட, அந்த மனைவி யானவள் விபசாரத்தையே ஜீவனமாகவும் கொண்டிராதவளாயிருந்தால், புருஷன் அவளுக்கு ஜீவனாம்சம் கொடுக்க வேண் டும் என்றும், ஆனால் அந்தப்படி கொடுப்பதில் ஜீவனத்திற்கு போதுமான அளவு மாத்திரம் கொடுக்க வேண்டுமென்று சட்டமிருப்பதாக இந்துலாவிலிருந்து எடுத்துக் காட்டப்பட்டது.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட பின்பு நீதிபதி அவர்கள் மனைவி விபச்சாரி அல்லவென்றும், இது அந்த சமூக வழக்க மென்றும், புருஷன் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டியதுதான் என்றும் முடிவு செய்து மனைவிக்கு வருஷம் ஒன்றுக்கு 120 ரூபாய் கொடுக்க வேண்டும்ªன்பதாக தீர்ப்புச் செய்தார்.
120 ரூபாய் போறாதென்று மனைவி அப்பீல் செய்யப் போவதாகத் தெரிகின்றது. 
-விடுதலை,25.3.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக