பக்கங்கள்

ஞாயிறு, 5 ஜூன், 2016

செங்கல்பட்டு மகாநாட்டு நடவடிக்கைகள்24.2.1929 குடிஅரசிலிருந்து...
18ஆம் தேதி காலை செங்கல்பட்டு நாயர் கொட்டகையில் மாநாடு கூடியவுடன் திருவாளர் பி.டி.ராஜன் அவர்கள் சுயமரியாதைக் கொடியை உயர்த்தினார்.  பிறகு சென்னை கார்ப்பரேஷன் தலைவர் ஏ.ராமசாமி அவர்கள் அக்கி ராசனத்தில் சென்னை அரசாங்க சட்டமெம்பர் கனம் எம்.கிருஷ்ணன் நாயர் பனகல் அரசர் உருவப்படத்தை திறந்து வைத்தார். ஈ.வெ.ராமசாமி அவர்கள் எல்லோருக்கும் வந்தனம் கூறி பகல் சாப்பாட்டுக்காக மகாநாட்டை ஒத்தி வைத்தார்.
பிற்பகல்
சாப்பாடு முடிந்தவுடன் மந்திரிமார்களுக்கு உபசாரப் பத்திரங்கள் வாசித்துக் கொடுத்த பிறகு மகாநாட்டு விவசாயக் காட்சியையும் கைத்தொழில் பொருட்காட்சியையும் திறந்து வைக்கும்படி ஈ.வெ.ராமசாமி அவர்கள் அரசாங்க மந்திரி கனம் எஸ்.முத்தையா அவர்களைக் கேட்டுக்கொள்ள கனம் முதலியார் அவர்கள் பொருட்காட்சியை திறந்து வைத்தார்.
பிறகு முதல்மந்திரி டாக்டர் சுப்பராயன் அவர்களின் உருவப் படத்தை அசாங்க மந்திரி கனம் சேதுரத்தினம் அவர்கள் தலைமையில் அரசாங்க போலீஸ்மெம்பர் கனம் சர்.முகம்மது உஸ்மான் அவர்கள்திறந்து வைத்தார். இவர்களுக்கு கே.வி.மேனன் வந்தனம் சொல்லிய பிறகு வரவேற்பு தலைவர் வேண்டுகோளின் பேரில் டாக்டர் சுப்பராயன் அவர்கள் மகாநாட்டைத் திறந்து வைத்தார்.
பிறகு திருவாளர்கள் பி.டி.ராஜனும் ஈ.வெ.ராமசாமியும் உண்டியல் வசூலுக்கு வருகிறவர்களுக்கு பெட்டியில் பணம் போடும்படி கேட்டுக்கொண்டார்கள்.
வரவேற்பு தலைவர் தேர்தல்
செங்கல்பட்டு ஜில்லாபோட் பிரசிடெண்ட் ராவ்பகதூர் எம்.கிருஷ்ணசாமி அவர்கள் தமது வரவேற்பு உபன்யாசத்தை படித்த பிறகு.
தலைவர் தேர்தல்
திருவாளர்கள் ஈ.வெ.ராமசாமி மகாநாட்டுத் தலைவரை பிரேரேபித்தார். இப்பிரேரணையை திருவாளர்கள் பி.டி.குமார சாமியன் சிவராஜ் எம்.எல்.சி. ஆரியா ராவ்பகதூர், ஏ.டி.பன்னீர் செல்வம், நாயகம் அம்மாள், பி.எ.தாஜூதீன் முதலியவர்கள் ஆதரித்த பிறகு பெருத்த கை தட்டல் ஆரவாரத்திடையே நிறைவேறியதும் தலைவர் தனது தலைமைப் பிரசங்கத்தை படித்தார்.
விஷயாலோசனைக் கூட்டம்
இரவு சாப்பாட்டிற்குமேல் விஷயாலோசனை சபை கூட்டப்படுவதாய்ச் சொல்லி மகாநாடு அடுத்த நாளைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
மறுநாள் காலை
மறுநாள் காலையில் மகாநாடு கூடி சுமார் பத்து தீர்மா னங்கள் வரை நிறைவேற்றப்பட்டு பகல் சாப்பாட்டிற்கு மகாநாடு ஒத்தி வைக்கப்பட்டது.
பகல் சா£ப்பாட்டிற்கு பிறகு வாலிபர் மகாநாடு
ஆரியா அவர்கள் பன்னீர்செல்வம் அவர்களை பிரரே பிக்க ராமசாமி ஆமோதிக்க செல்வம் அவர்கள் தலைமையில் வாலிப மகாநாடு துவக்கப்பட்டது. செல்வம் அவர்கள் அக்கிராசன முகவுரைக்குப்பின் திருவாளர்கள் ஆரியா ஆர்.சொக்கலிங்கம் எஸ்.ராமநாதன், தண்டபாணி, கண்ணப்பர் தாவூத்ஷா, சாயபு, சாமி சகஜாநந்தர்,
பண்டிட் ஆனந்தம் முதலியவர்கள் பேசியபிறகு ராமசாமியால் சென்னை மாகாண பள்ளி மாணவர்களும் மற்ற வாலிபர்களும் பள்ளிக் கூடங்களில் விடப்படும் வேனிற்கால ஓய்வு நாள்களில் தமிழ்நாடு முழுவதும் கிராமம் கிராமமாய்ச் சுற்றி சுயமரி யாதைப் பிரச்சாரம் என்கின்ற பெயர் கொடுத்திருக்கின்ற தென்றும் பிரரேபித்தார் அது திரு ஆரியா அவர்களால் ஆமோதிக்கப்பட்டு வாலிபர்களால் ஏகமனதாய் நிறைவேற்றப் பட்டது.
நாங்குநேரி எஸ்.முத்தைய்யா அவர்களும் தஞ்சை திருவாளர் கோவிந்தசாமியும் இன்னும் சில வாலிபர்களும் பிரசாரத்திற்கு வருவதாக அந்த கூட்டத்திலேயே தங்கள் பெயர்களைக் கொடுத்தார்கள். பிறகு ஈ.வெ.ராமசாமி மதுரை பார்ப்பனரல்லாத மகாநாட்டில் சமையல் பொறுப்பை ஒப்புக்கொண்டு வெகுதிருப்திகரமாக சாப்பாடு செய்து போட்ட கருப்பையா அவர்களுக்கு ஒரு தங்கச் சங்கிலியும் தங்க பதக்கமும் அளித்தார் செல்வம் அவர்களின் முடிவுரை ஆனவுடன்.
மாநாடு
தலைவர் சவுந்திரபாண்டியர் தலைமையில் சுயமரியாதை மகாநாடு நடவடிக்கைகள் துவக்கப்பட்டு சுமார் 10 தீர்மா னங்கள் வரை நிறைவேற்றப்பட்டன. மாநாட்டு தீர்மானங்கள் நி¬வேறும் போது மூடப்பழக்க வழக்கங்களைப் பற்றி சுமார் ஏழு வயதுள்ள திருவண்ணாமலை லலிதா என்கின்ற பெண் வெகு அருமையாகப் பேசி தீர்மானத்தை ஆதரித்தது குறிப்பிடத் தகுந்தது.
அடுத்த மகாநாடு
தீர்மானங்களையெல்லாம் நிறைவேற்றியவுடன் ஈரோடு ஈ.வெ.கிருஷ்ணசாமி (ஈ.வெ.ராமசாமியின் அண்ணன்) அவர்கள் அடுத்த மகாநாட்டை ஈரோட்டிற்கு அழைத்தார். எல்லா ஜனங்களாலும் பெருத்த ஆரவாரத்தோடு ஒப்புக் கொள்ளப்பட்டது.
பிறகு தலைவர் தமது அழகான முடிவுரை நிகழ்த்துகையில் மகாநாட்டு தீர்மானங்களை காரியத்தில் நடத்தி வைக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்வது தான் தமது முடிவுரை என்றும் அதற்கு பெருத்த உறுதியும் முயற்சியும் வேண்டுமென்றும் இவை நிறைவேற்றப்படாவிடில் இந்நாட்டு மக்கள் தங்களை மற்ற மக்களுக்கு சமமாய்ச் சொல்லிக் கொள்ள முடியாதென்றும் தமக்கு அதிகமான பொறுப்பு ஏற்பட்டிருப்பதை தாம் உணருவதாகவும் தன்னால் கூடியதை எல்லாம் இவ்வியக்கத்திற்கே செலவழிக்க சற்றும் பின் வாங்கப் போவதில்லை என்றும் கூறி முடித்தார்.
உண்டியல் வசூல் ரூ. 3000
பிறகு ஏ.ராமசாமி மகாநாடு கூட்டியவர்களுக்கு வந்தனம் செலுத்தினார். பி.டி.ராஜன் எழுந்து தாமும் ஈ.வெ.ராமசாமியும் கேட்டுக் கொண்டதற்கிணங்க உண்டியல் வசூலில் சுமார் 3000 ரூபாய் வரை வசூல் ஆனதற்கு உண்டிப்பெட்டி எடுத்துச் சென்றவர்களுக்கும் பணம் போட்டவர்களுக்கும் வந்தனம் செலுத்தினார்.
பிறகு ஈ.வெ.ராமசாமி வந்திருந்தவர்களுக்கும் குறிப்பாக பெண்களுக்கும் மகாநாடு நடத்த முயற்சி எடுத்து இவ்வளவு பெருமயை£க நடத்தினவர்களுக்கும் குறிப்பாக திருவாளர்கள் ஜமீன்தார் அப்பாசாமி வள்ளலாருக்கும் வேதாசலத்திற்கும் ராவ் பகதூர் கிருஷ்ணசாமிக்கும் கண்ணப்பருக்கும் நன்றி செலுத்தினார்.
நாகம்மைக்கு நன்றி
தன் கூடவே இருந்து தன் இஷ்டப்படியெல்லாம் நடந்து தனது தொண்டிற்கும் மிகுதியும் உதவி அளிக்கும் தமது வாழ்க்கைத்துணை நாகம்மைக்கும் நன்றியறிதலைச் செலுத்தி தீர்மானங்களின் தத்துவங்களைப் பற்றியும் சிறிது விளக்கி விட்டு மற்ற விஷயங்களைப்பற்றி இரவு சாப்பாட்டிற்கு மேல் இதே பந்தலில் விளக்குவதாக சொல்லி அநேன கனவான் களுக்கு மாலையிட்ட பின் மகாநாடு கலைந்தது. அன்று இரவு மகாநாட்டிற்கு வந்த பிரமுகர்களுக்கு திரு.அப்பாசாமி வள்ளலார் வீட்டில் ஒரு பெரிய விருந்து நடந்தது.
இரவு 10 மணிக்கு மேல் பொதுக்கூட்டம்
இரவு சாப்பாடு நடந்த பின் மகாநாட்டு பந்தலில் நிறைய சுமார் 4000 பேர்கள் வரை 10 மணிக்கே வந்து கூடிவிட்டார்கள். மகாநாட்டில் இருந்த பெண்களை விட அதிகமான பெண்கள் வந்திருந்தார்கள். கூட்டத்திற்கு தஞ்சை அய்.குமாரசாமியாரை தலைமைவகிக்கும்படி ஈ.வெ.ராமசாமி வேண்ட சவுந்திர பாண்டியர் ஆமோதிக்க குமாரசாமியைப் பற்றி இரண்டொரு வார்த்தைகள் சொல்லி ஈ.வெ. ராமசாமியைப் பேசும்படி கட்டளையிட்டு மகாநாட்டில் நடந்த தீர்மானங்களைப் பற்றி ஈ.வெ.ராமசாமி செ.முருகப்பா, அப்பாசாமி, தண்டபாணி, பொன்னபலனார், லிங்கம் அழகிரிசாமி முதலிய கனவான்கள் இரவு 10 மணி முதல் விடியற் காலம் 5 மணிவரை பேசினார்கள்.

சமதர்மம் என்ற சொல் பல்வேறு தேசங்களிலும் சமுகங் களிலும் பல்வேறு அர்த்தத்தில் வழங்கி வருகிறது. சமதர்மம் என்பது சிற்சில இடங்களில் மதத்துக்கும் (சில இடங்களில் கடவுளுக்கும்) சில இடங்களில் பணக்காரனுக்கும் புரோகிதனுக் கும் விரோதமானது என்றும் கூறப்படுகிறது.
ஆனால், பொதுவாக இன்று சமதர்மம் என்னும் சொல் நாட்டிலுள்ள ஏழை மக்களின் உள்ளத்திலே கிளர்ச்சியை ஊட்டி ஆவலோடு சமதர்மம் ஒன்றே தங்களின் வாழ்வை இன்பமயமாக்கும் என்கின்ற மனப்பான் மையை உண்டாக்கி யிருக்கிறது.
- தந்தை பெரியார்
-விடுதலை,24.2.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக