1929 (குடிஅரசிலிருந்து)மஞ்சன் குளம்
நாங்குநேரித் தாலுகாவில் மறவர் வகுப்பினர் மிகுதியாக வாழ்கின்றனர். இவர்களில் பெரும்போலோர் திருட்டு முதலிய தீயதொழில்களை யுடையவர்களாய் கல்வியறிவற்றிவர்களாய் வாழ்வதை கண்டு அவர்களை நல்வழிப்படுத்த வேண்டு மென்று இத்தாலுக்கா போலீஸ் சர்க்கிள் இன்ஸ்பெக்டராகிய திருவாளர் முத்தையா பிள்ளையவர்கள் போலீஸ் ஜில்லா சூப்பரின்டென்டென்ட் வின்டில் துரையுடன் கலந்து பேசி 1927ம் ஆண்டில் மறவர் சங்கம் என ஒரு சங்கத்தை ஏற்படுத்தினார்கன். வின்டில் துரையே இச்சங்கத்தின் தலைவர் திரு முத்தைய பிள்ளையவர்களுடைய நன்முயற்சி யின் பயனாக மறவர்களனைவரும் ஒற்றுமையாகக்கூடித் தங்கள் வகுப்பாரின் முன்னேற்றத்திற்குப் பொருள் சேர்த்து வேண்டுவன செய்துவருகிறார்கள்.

இதனால் 1929 ஜனவரியில் ஒர் கூட்டம் கூடி அறிவை வளர்த்து நல்லொழுக்கத்தைத் தருவது கல்வியேயாதலால் கல்வியைத் தம் மக்களுக்குக் கற்பிப்பது இன்றியமையாத முதற்கடமையென தீர்மானித்து அதுபற்றி மஞ்சின்குளம், முதலைக்குளம், புதூர், செண்ப கராமநல்லூர் என்ற நான்கு ஊர்களிலும் மறவர் சங்கத்திலிருந்து ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்துவது, என்றும் தீர்மானமாயிற்று. மறவர் சங்க முன்னேற்தத்திற்கு திரு.முத்தைய பிள்ளையவர்களுக்கு உடன் உழைப்பார் மஞ்சன்குளம் திரு திரவியத்தேவர் என்பவர். இவருடைய தீவிர முயற்சியால் மஞ்சள் குளத்தில் ஒரு பெரிய பள்ளிக்கூடம் கட்டிட முடிவாயிற்று. இன்ஸ்பெக்டரவர்கள் அதைப் பார்வை யிடுவதற்கு 7.2.1929 வியாழக்கிழமையன்று காலையில் நாங்கு நேரி போர்டு உயர்தரக்கலா சாலைத் தலைமைப் பண்டிதர் திரு. இ.மு.சுப்பிரமணியபிள்ளைய வர்களுடன் சென்றனர். பள்ளிக்கூடத்தைப் பார்வையிட்ட பின் திரு. முத்தையா பிள்ளையவர்கள் அவ்வூர் மறவர் களையெல்லாம் அழைத்து திரவியத்வேவர் வீட்டுக்கு போய் அவர் வீட்டில் தயாரித்த பலகாரங்களையுண்டனர். அப்போது அவர்கள் பேசியதன் சுருக்கம் பின் வருமாறு:
மறவர்களின் தலைவர்களே! நீங்கள் இங்கே இவ்வளவு விரைவில் பள்ளிக்கூடம் கட்டி முடித்ததைப்பார்த்து மகிழ்ச்சி யடைகிறேன். நீங்கள் ஒழுக்கமுடையவர்களாகவும் சுத்த முடையவர்களாகவும் இருக்க வேண்டும் சாதி வித்தியாச மென்பது கிடையாது நீங்கள் சுத்தமில்லாதவர்களாக மாமிச முண்டு வருவதானாலேயே மேல் சாதியென்று சொல்லிக் கொள்ளுகிறவர்கள் உங்களோடு சேராமல் தாழ்த்துகிறார்கள். இப்போது மேல்வகுப்பு சொல்லுகிறவர்களில் ஒருவனாகிய நான் உங்களில் ஒருவராகிய திரவியத்வேர் வீட்டில் உண்ணுவதை நீங்கள் இதோ நேரே பார்க்கிறீர்கள்.
நீங்கள் ஒவ்வொருவரும் சுத்தமுடைவர்களாக ஆவீர்களாகில் உங்கள் ஒவ்வொருவர் வீட்டிலும் வந்து உண்பதற்கு யாதொரு தடையுமில்லை. ஆகையால் நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பிள்ளைகளைப் படிக்க வைத்து ஒழுக்கமுடைய வர்களாக விரைவில் ஆக்க வேண்டும். மேலும் நான் எப்படி இப்போது உங்களிடையே வேறுபாடில்லாமல் உடன் உண்ணுகிறேனோ அதைப்போலவே நீங்கள் ஒவ்வொருவரும் உங்களிலும் தாழ்த்தப்பட்டவர்களாகயிருக்கும் ஆதிதிராவி டர்களிடம் சுத்தம் கண்ட இடத்து உடன் உண்ணவோ நெருங்கிப் பழகவோ தயாராயிருக்க வேண்டும். மனிதர் களுக்குள் என்ன உயர்வு தாழ்வு? நாம் எல்லோரும் ஒன்று தானே என்று பேசி முடித்தார்கள். அவ்வூராரனைவரும் பிள்ளையவர்களுக்கு நன்றி செலுத்தி அவ்வாறே செய்ய இசைந்தார்கள். போலீஸ்இன்ஸ்பெக்டர் திரு முத்தைய பிள்ளையவர்களுடைய நன் முயற்சி மிகவும் பாராட்டத் தகுந்தது. ஏனைய போலீஸ் அதிகாரிகளும் இவர்களைப் போல நடந்து நாட்டுக்கு ஒரு உண்மைத் தொண்டாற்று வார்களாக.
-விடுதலை,26.2.16
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக