பக்கங்கள்

செவ்வாய், 12 பிப்ரவரி, 2019

10 சதவீத இடஒதுக்கீடுக்கு எதிர்ப்பு: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் தாக்கீது



புதுடில்லி, பிப்.12 பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு அளிப்பதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசுக்கு, உச்சநீதிமன்றம், தாக்கீது அனுப்பியுள்ளது.

உச்சநீதிமன்றத்தில் மனு


'கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளில், 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு கூடாது' என, உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நிலையில், பொதுப்பிரிவில், பொருளாதார ரீதியில் பிற் படுத்தப்பட்டோருக்கு, 10 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் சட்ட திருத்த மசோதா, சமீபத்தில், நாடாளுமன்றத்தில் நிறை வேறியது. இதை எதிர்த்து, வங்கலா ஈஸ்வரய்யா என்பவர் உள்ளிட்டோர் சார்பில், உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

'இடஒதுக்கீடு அளிப்பதற்கு, பொருளாதார சூழ்நிலையை வரையறையாகக் கருத முடியாது. எனவே, இந்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்' என, அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை பரிசீலித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய், நீதிபதி சஞ்சீவ் கன்னா அடங்கிய அமர்வு, இது குறித்து விளக்கம் அளிக்கும்படி, மத்திய அரசுக்கு, தாக்கீது அனுப்ப உத்தரவிட்டது.

- விடுதலை நாளேடு, 12.2.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக