23.1.2019 நாளிட்ட 'துக்ளக்' இதழில் வெளி வந்த 'பத்து சத விகித இடஒதுக்கீடு' எனும் தலைப் பிலான தலையங்கம் படித்தேன். அ ண் மையில் மத்திய பா.ஜ.க. அரசு கொண்டு வந்த பொதுப் பிரிவில், 10 சதவிகித விழுக்காடு இட ஒதுக்கீடு பற்றிய உங்களது கருத்தைத் தெரிவிக்க உங் களுக்கு உரிமை உண்டு. ஆனால், பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கொண்டு வருவதற்கு, மத்தியில் ஆண்ட காங்கிரஸ் அரசும், தமிழ் நாட்டில் ஆண்ட எம்.ஜி.ஆர். அரசும் கொண்டு வந்த இடஒதுக்கீடு அரசாணைகள் பற்றிய தகவல் உண்மைக்கு மாறானவை.
'துக்ளக்' கூற்று - 1
''இந்திய அரசியலில் (அதுவும் முற்பட்ட வகுப்பினருக்கு எதிராக சூறாவளி அரசியல் நடந்த தமிழகத்தில்), பொருளாதாரத்தில் பின் தங்கியவருக்கும், முற்பட்ட வகுப் பினருக்கும் இடஒதுக்கீடு செய்ய முடிவு செய்தது எம். ஜி. ஆர். அரசு. அதை நடைமுறைப்படுத்த - அரசு அறிவிப்பை (நிளி.வி.1156 தேதி 2.7.1979) வெளியிட்டார்'' என கட்டுரையில் உள்ளது.
உண்மை வரலாறு
எம்.ஜி.ஆர். அரசு வெளியிட்ட அரசாணை (GO.Ms1156 தேதி - 2.7.1979) பொருளாதாரத்தில் பின் தங்கியிருக்கும் முற்பட்ட வகுப் பினருக்கான இட ஒதுக்கீடு பற்றியது அல்ல. சமூக ரீதியாக, கல்வி ரீதியாக பிற்படுத்தப்பட்டவர்களில் ஆண்டு வருமானம் ரூ.9,000/-க்கு மிகாமல் இருப் பவர்களுக்கு மட்டுமான இடஒதுக்கீடு என்பதாகத்தான் எம். ஜி. ஆர். அரசு ஆணை வெளியிட்டது. திராவிடர் கழகம், திராவிட முன்னேற்றக் கழ கம் மற்றும் சமூக நீதியில் ஒத்த கருத்துடைய இதர கட்சிகள், அந்த அரசாணையைக் கடுமையாக எதிர்த்ததால், 1980இல் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் அ.தி. மு.க. படுதோல்வி அடைந்த பின்பு, அந்த அரசாணையை எம்.ஜி.ஆர். திரும்பப் பெற்றுக் கொண்டார்.
மேலும் பொருளாதாரத்தில் பின்தங்கியி ருக்கும் முற்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு வழங் கிட, எம். ஜி. ஆர். அரசு எந்தக் காலத்திலும் ஆணை பிறப்பித்த தில்லை என்பதுதான் உண்மை வர லாறு.
துக்ளக் கூற்று - 2
''பொருளாதார ரீதியாகப் பின் தங்கிய முற்பட்ட பிரிவினருக்கும் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும் என்பதை, 1991இல் உணர்ந்த அன் றைய பிரதமர் நரசிம்ம ராவ், 1979இல் எம். ஜி. ஆர். செய்தது போல், முற்பட்ட வகுப்பினருக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு செய்ய முடிவெடுத்தார். ஆனால் 1992இல் உச்ச நீதி மன்றம், ''இட ஒதுக்கீடு என்பது மொத்த இடங்களில் 50 சதவிகிதத்தை மீறக் கூடாது" என்று. தீர்ப்பளித்ததால் காங்கிரஸ் அந்த முடிவைக் கைவிட்டது'' என்ப தாகவும் கட்டுரையில் குறிப்பிடப் பட்டுள்ளது.
உண்மை வரலாறு
1991-இல் அன்றைய பிரதமர் நரசிம்ம ராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசு, முற்பட்ட வகுப்பினருக்கு பொருளாதார அடிப்படையில் 10 சதவிகித இடஒதுக்கீடு அளித்திடக் கொள்கை முடிவோடு நின்று விட வில்லை. அதை நடை முறைப்படுத்திட அரசாணையை, 25.9.1991இல் காங்கிரஸ் அரசு பிறப் பித்தது. அந்த அரசாணையில் 10 சத விகித இட ஒதுக்கீடு என்பது நடை முறையில் உள்ள இட ஒதுக் கீட்டில் வராத, பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கு ஆனதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதோடு சமூக ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீடு எனும் மண்டல் குழு பரிந்துரையும் (வி.பி.சிங் பிரதம ராக இருந்த பொழுது பிறப்பித்த அரசாணையின் திருத் தமாக) அதே அரசாணையில் இருந்தது.
இந்த அரசாணையை எதிர்த்துத் தான் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப் பட்டு, பிரபலமான 'மண்டல் வழக்கு ' எனும் இந்திரா சகானி வழக்கின் தீர்ப்பின்படி, பொருளாதார அடிப்படையில் பின்தங்கிய வர்களுக்கான 10 சத விகித இட ஒதுக்கீடு செல்லாது என்று ஆகிவிட்டது. பொருளாதார அடிப் படையில் இட ஒதுக்கீடு இருக்க முடியாது என்பதாக, உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதியின் அமர்வு அந்தத் தீர்ப்பில் குறிப்பிட்டிருந்தது.
நரசிம்ம ராவ் அரசு 1991இல் பிறப்பித்த ஆணைப்படி, மொத்த இட ஒதுக்கீடு 59.5 சதவிகிதமாக இருந்தது. ஆனால் மொத்த இட ஒதுக்கீடு, 50 சதவிகிதத்திற்கும் மேல் செல்லக் கூடாது எனும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் குறிப்பிட்டிருந் ததால், அதற்கேற்ப ஆணையை திருத்தி (OM.dt.111(Part 111) 8.9.1993) நரசிம்மராவ் அரசு வெளியிட்டது. அந்தத் திருத்திய அரசாணையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முற்பட்ட வகுப்பினருக்கான 10 சதவிகித இடஒதுக்கீடு இடம் பெற வில்லை. 1992இல் உச்ச நீதி மன்றம் இட ஒதுக்கீடு என்பது மொத்த இடங்களில் 50 சத விகிதத்தை மீறக் கூடாது என்று தீர்ப்பளித்த தால், நரசிம்ம ராவ் அரசு முற்பட்ட வகுப் பினருக்கான 100 சதவிகித இடஒதுக்கீட்டை கொண்டு வரும் முடிவைக் கைவிட்டது எனக் குறிப்பிடுவது சரியல்ல. அரசு கொண்டு வந்த 10 சதவிகித இட ஒதுக்கீடு ஆணை செல்லாது என உச்ச நீதிமன்றத் தால் தீர்ப்பு அளிக்கப்பட்ட நிலையில், அந்த அரசாணை நடை முறைக்கு வராமல் போனது என்பது தான் உண்மை நிலை.
பின்குறிப்பு:
அரசியலமைப்புச் சட்ட விளக்கம்: தலையங்கத்தில் '10 சதவிகித இடஒதுக் கீட்டை நடைமுறைப்படுத்த, 50 சதவிகித மாநில சட்ட சபைகள் இதற்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்' எனவும் குறிப்பிடப் பட்டுள்ளது.
அரசியல் அமைப்புச் சட்டப் பிரிவு 368இன்படி கொண்டு வரப் பட்டுள்ள 103-ஆம் சட்டத் திருத்தம், பிரிவு 15-ஆம், பிரிவு 16-லும்புதிய துணைப் பிரிவு களைச் சேர்த்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டத் தின் பிரிவு 15 மற் றும் பிரிவு 16 ஆகியவற்றை உள்ள டக்கிய பகுதி - 111 (Part 111) இல் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதால், மாநில சட்டமன்றங்களின் ஒப்புதல் தேவைப் படாது என்பதுதான் சட்ட நிலையாகும்.
'துக்ளக்' - 6.2.2019
- விடுதலை நாளேடு, 1.2.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக