கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட பெண்ணுக்கு காவல்துறையில் காவலர் பணி
ஜெய்பூர், மே 30 ராஜஸ்தானின் ஆல்வார் நகரில் தனகாஜி பகுதியில் கடந்த ஏப்ரல் 26 ஆம் தேதி தனது கணவருடன் பெண் ஒருவர் இரு சக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர்களை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வழிமறித்தது. பின் இருவரையும் சாலை யோரம் இருந்த மணல் குன் றுக்கு பின்புறம் கொண்டு சென்றது.
அந்த கும்பல் கணவரை அடித்து, உதைத்து மரத்தில் கட்டிப் போட்டு விட்டு அவர் முன்னாலேயே அவ ரது மனைவியை பாலியல் வன்முறை செய்தது. இந்த சம்பவம் குற்றவாளியான 6ஆவது நபரால் ஒளிப்பதிவு செய்யப்பட்டு உள்ளது. மேலும் அக்கும்பல் 3 மணி நேரம் பிடித்து வைத்துக் கொண்டு, பின்னர் மாலையில் கணவன், மனைவி இரு வரையும் விடுவித்துள்ளது.
இதன்பின் இதுபற்றி யாரி டமும் அவர்கள் கூறாமல் அமைதியாக இருந்து விட் டனர். ஆனால், 6ஆவது நபர் பெண்ணின் கணவரை தொடர்பு கொண்டு பணம் கேட்டு மிரட்டியதுடன், காணொலி சமூக வலைதளத் தில் வெளியிடப்படும் என் றும் அச்சுறுத்தி உள்ளார். இதனால் அந்த பெண்ணின் கணவர் தனது குடும்பத்தினரி டம் கூறிவிட்டு கடந்த ஏப்ரல் 30ஆம் தேதி காவல்துறையில் புகார் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது. இந்நிலை யில், கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் பட்ட பெண்ணுக்கு ராஜஸ் தான் அரசு காவல்துறையில் காவலர் பணியை வழங்கி யுள்ளது. அந்த மாநில கூடுதல் தலைமை செயலாளர் (உள் துறை) ராஜீவா சுவரூப் செய் தியாளர்களிடம் கூறும் பொழுது, பாதிக்கப்பட்ட பெண்ணை காவல்துறையில் காவலராக நியமிக்க ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. அவருக்கு நியமன கடிதம் வழங்கப்படும் என கூறியுள்ளார்.
- விடுதலை நாளேடு, 30.5.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக