அ.இ. ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும்
மக்களவையில் தமிழச்சி தங்கபாண்டியன் சமூகநீதி உரை
புதுடில்லி, மார்ச் 15 தந்தை பெரியார் பெயரில் மத்திய அரசு அறக்கட்டளை உருவாக்கவேண்டும்; அகில இந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக் கும் இட ஒதுக்கீடு அளிக்கவேண்டும் என்றார் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன்.
13.3.2020 அன்று மக்களவையில் நடைபெற்ற சமூக நலத்துறை மான்யம் தொடர்பான விவாதத்தில், நாடாளு மன்ற உறுப்பினர் திருமதி தமிழச்சி தங்கபாண்டியன் அவர்கள் (திமுக) தெரிவித்த சிறப்பான கருத்துகள்
1. தந்தை பெரியாரின் சிந்தனை களையும், கருத்துகளையும் பறைசாற்ற மத்திய அரசு தந்தை பெரியார் பெயரில் அறக்கட்டளை நிறுவிட வேண்டும்.
2. ஏனைய சீர்திருத்தக்காரர்கள் சமூக நீதியை வென்றிட பல ஆண்டுகள் போராடிய நிலையில், இருபது ஆண்டு களில் சமூக நீதியை நிலை நாட்டி வெற்றி கண்டவர் தந்தை பெரியார் அவர்கள்.
3. இந்தியாவில் 1969-ஆம் ஆண்டே பிற்படுத்தப்பட்டோருக்கென தனி அமைச்சகம் உருவாக்கியவர் டாக்டர் கலைஞர் அவர்கள்.
4. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு அளித்ததோடு, அருந்ததியினர்க்கும் உள் ஒதுக்கீடும் அளித்தவர் டாக்டர் கலைஞர்.
5. கிரிமிலேயர் என்பதை ‘கிருமி'லே யர் என அறிவித்தவர் டாக்டர்கலைஞர்.
6. நாடாளுமன்ற பிற்படுத்தப்பட் டோர் குழு 9.3.2019 அன்று அளித்த அறிக்கையை மத்திய அரசு புறக்கணித் துள்ளது.
7. பிற்படுத்தப்பட்டோர் தொடர் பான கிரிமிலேயர் குறித்து மத்திய அரசு நியமித்த மூன்று நபர் நிபுணர் குழு தேவையற்றது. அக்குழுவில் ஒருவர்கூட பிற்படுத்தப்பட்டவர் நியமிக்கப்பட வில்லை. தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், அரசமைப்பு சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ஆணையம் இருக்கை யில், இக்குழு தேவையற்றது.
8. சம்பள வருமானத்தையும், குரூப் ஏ மற்றும் பி பிரிவு பதவிகளில் உள்ள பிற்படுத்தப்பட்டோரை கிரிமிலேயர் என அறிவிப்பது நியாயமற்றது; தகுதி யுள்ள பிற்படுத்தப்பட்டோரை இட ஒதுக்கீடு பெறாமல் நீக்கும் முயற்சி யாகும்.
9. மூன்று நபர் நிபுணர் குழுவை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்; தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணை யத்தை கிரிமிலேயர் குறித்த பிரச்சி னையை ஆராய்ந்திட அறிவுறுத்த வேண்டும்.
10. மருத்துவ படிப்பில் - மருத்துவர் மற்றும் முதுகலைப்படிப்பு - அகில இந்திய கோட்டாவில் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்காமல் அநீதி இழைக்கப்பட் டுள்ளது. இது குறித்து, மத்திய நல் வாழ்வுத்துறை கவனத்தில் கொண்டு, பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு அளிக்க வேண்டும்; உச்ச நீதி மன்றத்தில் இது தொடர்பான வழக்கில் உரிய பதில் அளித்திட வேண்டும்.
இவ்வாறு திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தமி ழச்சி தங்கபாண்டியன் உரையாற்றினார்.
- விடுதலை நாளேடு 15 3 20