பக்கங்கள்

ஞாயிறு, 1 மார்ச், 2020

தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள கண்டன அறிக்கை

உயர்ஜாதியினர்''மீது மேலும் மேலும் சலுகை காட்டும் மத்திய ஆர்.எஸ்.எஸ். - பி.ஜே.பி. அரசு!

‘‘உயர்ஜாதியினர்''மீது மேலும் மேலும் சலுகை காட்டும் மத்திய பி.ஜே.பி. அரசைக் கண்டித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள  அறிக்கை வருமாறு:

யு.பி.எஸ்.இ., அய்.ஏ.எஸ்., போன்ற மத்திய அரசு தேர்வுகளில் கலந்து கொள்ளும் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோருக்கு மட்டும் வயது வரம்பில் சில சலுகைகள் இருந்து வருகின்றன.

தாழ்த்தப்பட்டோர், பழங்குடி மக்கள் 35 வயதுவரை விண்ணப்பிக்கலாம். இதர பிற்படுத்தப்பட்டோர் 33 வயதுவரை விண்ணப்பிக்கலாம்.

உயர்ஜாதியில் ஏழைகள் என்று கூறி (EWS) அவர்களுக்குப் பிற்படுத்தப் பட்டோருக்கு உள்ளதுபோல 33 வயதுவரை விண்ணப்பிக்கலாம் என்ற சலுகையை மத்திய பி.ஜே.பி. அரசு வழங்குவதாக அறிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்டவர்களோடு, உயர்ஜாதி ஏழைகளை சம அளவில் வைத்துப் பார்ப்பது - சமூகநீதிக்கு எதிரானதாகும்.

இட ஒதுக்கீடுக்காக எந்த நோக்கத்தில் சட்டம் இயற்றப்பட்டதோ அந்த நோக்கத்தின் ஆணிவேரையே வெட்டும் வேலையில் மத்திய பி.ஜே.பி. அரசு வேக வேகமாக செயல்பட்டு வருகிறது.

உயர்ஜாதியில் ஏழைகளுக்கு இட ஒதுக்கீடு என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்துக்கு விரோதம் என்று கூறி, உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலு வையில் இருந்தும், அவற்றையெல்லாம் கண்டுகொள்ளாமல் மத்திய அரசு நடந்துகொள்வது அதன் உயர்ஜாதித் தன்மையின் வெறியையும், வேகத் தையும்தான் வெளிப்படுத்துகிறது.

அனைத்து சமூகநீதியாளர்கள், ஒடுக்கப்பட்ட சமூகநீதிப் போராளித் தலைவர்கள் அனைவரும் மத்திய அரசின் இந்தப் போக்கைக் கண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

கி.வீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

20.2.2020


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக