பக்கங்கள்

ஞாயிறு, 1 மார்ச், 2020

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்குதிரைமீது திருமண ஊர்வலம் செல்வதா?

இராணுவவீரர் மீது குஜராத்தில் தாக்குதல்

தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்

குதிரைமீது திருமண ஊர்வலம் செல்வதா?

அகமதாபாத், பிப்.20, குதிரையில் திருமண ஊர்வலம் சென்றதற்காக, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த இளைஞரை, ராணுவ வீரர் என்றுகூட பார்க்காமல், கல்லால் அடித்துத் தாக் கிய சம்பவம் பாஜக ஆளும் குஜராத்தில் அரங்கேறியுள்ளது.குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டம், பழன்பூர் கிரா மத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் கோட்டியா. 22 வயதான இவர், தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர். அண்மையில் பெங்களூருவில் ராணுவ வீரருக்கான பயிற்சியை முடித்த இவர், மீரட்டில் பணியில் சேரவுள்ளார்.

முன்னதாக அவரது குடும்பத்தினர் திருமணம் ஏற்பாடு செய்த அடிப் படையில், கடந்த ஞாயிறன்று குதிரையில்மாப்பிள்ளை ஊர்வலம் நடைபெற் றுள்ளது. அப்போது, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஆகாஷ் கோட்டியா, குதிரையில் செல்வதா? என்று ஆத்திர மடைந்த கோலி பிரிவைச் சேர்ந்த ஜாதி ஆதிக்கவெறியர்கள், ஆகாஷ் கோட் டியா மீதும், ஊர்வலத்தின் மீதும் சர மாரியாக கற்களை வீசியுள்ளனர். மேலும், கோட்டியாவை கீழே தள்ளி அடித்து உதைத்த அவர்கள், “கீழ்ஜாதி யான நீ குதிரையில் ஏறுவதற்கு ஆசைப் படலாமா?” என் றும், “அதற்கு நீ உயர்ந்த ஜாதியில் பிறந்திருக்க வேண்டும்'' என்றும் இழிவாகப் பேசியுள்ளனர்.

காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற ஊர்வலத்திலேயே ஜாதி ஆணவத் தாக்குதல் நடைபெற்றுள்ளது. மேலும், ஆகாஷ் கோட்டியா ஒரு இராணுவ வீரராக இருந்தும், எனினும் உயர்ஜாதி வெறியர்கள், கொடூர வெறியுடன் இந்த தாக்குதலை அரங் கேற்றியுள்ளனர்.

படுகாயம் அடைந்த ஆகாஷ் கோட் டியா மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டுள்ளார். தாக்குதலில் ஈடுபட்ட செஞ்சிகோலி, சிவாஜி கோலி, தீபக் கோலி, துஷார் கோலி, பவன் கோலி, வினோத் கோலி, ராமாஜி கோலி, தீபக் ஈஸ்வர் கோலி, பாய் கோலி, மஞ்சுகோலி மற்றும் ஜீது கோலி உட்பட 11பேர் மீது பல்வேறு பிரிவுகளில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய் துள்ளனர்.

 - விடுதலை நாளேடு 20 2 20

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக