பக்கங்கள்

வியாழன், 26 ஜனவரி, 2017

எங்கள் அய்யா பெரியாரின் இரண்டாம் பாகமாம் தமிழர் தலைவரும் இரண்டாயிரத்து பதினாறும்!

- தகடூர் தமிழ்ச்செல்வி -
தந்தை பெரியாரின் கணிப்பு
"எவனுக்குப் பொய் சொல்லத் தைரியம் இருக்கிறதோ, எவனுக்குப் பொருள் செலவு செய்யச் சக்தி இருக்கிறதோ, எவனுக்குப் பொய்ப் பிரச்சாரம் செய்ய வாய்ப்பும், சவுகரியமும் இருக்கிறதோ, அவனுக்கு வெற்றி கொடுக்க நம்நாடு தயாராய் இருக்கிறது.”
- தந்தை பெரியார்
மே-2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலையும், இரண்டு ஆண்டுகளுக்குமுன் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலையும், இவற்றின் முடிவு களையும், ஒரு நிமிடம் நாம் எண்ணிப் பார்த்தால், தந்தை பெரியார் அவர்களின் கணிப்பு எவ்வளவு தொலைநோக்கோடு, இன்றைய காலகட்டத்திற்கும் எப்படி கச்சிதமாகப் பொருந்தி வருகிறது என்பதை நாம் கணிக்க முடியும்.
நல்ல விதைகளை விதைப்பதற்குப் பதிலாக, நச்சு விதைகளை, தேர்தல் கழனி யில் விதைத்ததன் பலனை இன்றைக்கு, மாநிலத்திலும், மத்தியிலும் மக்கள் அனு பவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
கொடுமையான ஆட்சி :
இந்திய அரசியல் வரலாறில் முன் எப்பொழுதும் இல்லாத அளவிற்கு ஓர் அலங்கோல ஆட்சி நடைபெற்றுக் கொண் டிருக்கிறது.
பசுவின் பெயரைச் சொல்லி மனிதர் களைக் கொடுமைப்படுத்துவது, கொலை புரிவது, தாழ்த்தப்பட்ட மக்களை இழிவாக நடத்துவது, பெண்களைக் கீழ்த்தரமாக இழிவுபடுத்தியும், கொச்சைப்படுத்தியும் நடத்துவது, இந்தி, சமஸ்கிருத மொழி வல்லாண்மையை மற்ற மாநிலங்களில் புகுத்துவது, நதிநீர் பிரச்சினைகளில், தமிழ்நாட்டைத் தொடர்ந்து புறக்கணித்து வருவது, மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய பகுத்தறிவாளர்கள் கொடூரமாக கொல்லப்படுவது, பொதுத்துறை நிறுவனங் களை சூறை ஆடுவது, புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் வர்ணாசிர மத்தை மீட்டுருவாக்கம் செய்யத் துடிப்பது என ஒரு கொடுமையான ஆட்சி நடை பெற்றுக் கொண்டிருக்கிறது.
மின்னி வெடிக்கும் மின்னல் கீற்று
இத்தகைய ஒரு அபாயகரமான காலகட்டத்தில், இருண்ட வானிற்குள் மின்னி வெடிக்கும் மின்னல் கீற்றாய், கீழே விழுந்து காயப்பட்ட குழந்தையை வாரி எடுத்து, மருந்து தடவி ஆதரிக்கும், அன் னையைப் போல, தனது அறிக்கைகளாலும், போராட்ட அறிவிப்புகளாலும் மக்களுக் காக அனைத்து நிலைகளிலும் ஆதரவாக நிற்கின்ற ஒரே இயக்கம், திராவிடர் கழகம்! அரசியல் ஆசாபாசங்களுக்கு அப்பாற் பட்டு, ஒட்டுமொத்த அநியாயங்களையும், அவலங்களையும் துணிச்சலுடன் எதிர்த்து நின்று குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவர், திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் அய்யா மானமிகு கி.வீரமணி அவர்கள் மட்டுமே!
சமூகநீதியே வாழ்நாள் லட்சியம்
ஒடுக்கப்பட்ட சமூகங்களான பிற்படுத் தப்பட்ட மக்களுக்காகவும், தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்காகவும், பெண்ணினத்திற் காகவும், சிறுபான்மைச் சமூகத்துக்காகவும், இவர்கள் அனைவருக்கும் மூச்சுக்காற்றாய் விளங்கும் சமூக நீதிக்காகவும் குரல் கொடுப்பது ஒன்றையே தன் வாழ்நாள் இலட்சியமாய் கொண்டு, தொடர்ந்து பயணித்து வருகிறார் நம் தமிழர் தலைவர்.
போராட்ட வரலாறு துவக்கம்; அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் 
குறிப்பாக, 2016ஆம் ஆண்டு என்பது திராவிடர் கழகத்தை பொறுத்தவரை ஒரு போராட்ட ஆண்டு. இந்த ஆண்டு துவக் கமே ‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆக வேண்டும்’ என்ற போராட்டத்துடன் துவங்கியது. அனைத்து ஜாதியினரும், அர்ச்சகர் ஆக வேண்டும் என்பது, தந்தை பெரியாரின் ஜாதி ஒழிப்புப் போராட்டத்தில், இறுதியாக முடிக்க இயலாமல் மிகுந்த மனவேதனையுடன் அவர்கள் விட்டுச் சென்ற பணி. முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் அனைத்து ஜாதியினரிலிருந்தும், இடஒதுக்கீட்டு முறைப்படி, ஆட்கள் தேர்ந் தெடுக்கப்பட்டு, ஆகமப்பயிற்சி அளிக்கப் பட்டு, இடைக்காலத் தடை ஆணை உச்ச நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டு, நிறுத்தி வைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, இந்த வழக்கு குறித்த தீர்ப்பு 16.12.2015 அன்று வெளியாகி யது. அந்தத் தீர்ப்பு அம்சங்கள் குறித்து அரசியல் பிரமுகர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாகப் புரிந்துகொண்டு வியாக்கியானம் அளித்த நேரத்தில், தமிழர் தலைவர் அவர்கள் தனித்துவமாக விளக்கம் அளித்தார். ஆசிரியர் அய்யா தன்னுடைய அறிக்கையில் முத்தாய்ப்பான மூன்று கருத்துக்களை எடுத்து வைத்தார்.
தனித்துவமான தமிழர் தலைவரின் கருத்துக்கள்
(1) “1971 ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் ஆட்சியில் இயற்றப்பட்ட அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்" என்ற சட்டம் செல்லாது என தீர்ப்பளிக்கப்படவில்லை.
(2) ஆகமப் பயிற்சி பெற்றவர்களை மட்டுமே அர்ச்சகர்களாக நியமனம் செய்ய வேண்டும் என்று தீர்ப்பில் சொல்லப்பட்டி ருக்கிறது. அர்ச்சகர் பணி நியமனத்திற்காக காத்திருக்கும் 206 பேரும் ஏற்கெனவே ஆகமப் பயிற்சி பெற்றவர்களே! அதில் ஏதும் குழப்பம் இல்லை.
(3) அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகும் உரிமை இல்லை என்று தொடரப் பட்ட வழக்கில், மனுதாரரின் 3 வாதங் களுமே உச்சநீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.
எனவே தமிழக அரசு, அர்ச்சகர் பயிற்சி முடித்துக் காத்திருக்கும் 206 பேருக்கும், பணி நியமனம் வழங் குவதில் ‘சட்ட ரீதியான தடை ஏதும் இல்லை’ என்று அரசுக்கே எடுத்துரைத் தார்.
சூத்திர மக்கள் கரம் தீண்டிக்கொடுக்கும் கரன்சிநோட்டுகள் தட்சணை என்ற பெயரில் கருவறைக்குள் தடையின்றி நுழைகின்றன. ஆனால் அங்கே நுழைந்து பூஜை செய்யும் உரிமை சூத்திரர் கரங் களுக்குக் கிடையாது. இந்தக் கொடுமை களை எதிர்த்துதான் ‘அனைத்து ஜாதியின ரும் அர்ச்சகர்’ எனும் போராட்டம்.
அனைத்து ஜாதியினரையும் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஒரு மாபெரும் மறியல் போராட்டம் திராவிடர் கழகம் சார்பாக நடைபெற்றது.
சொல்லக் கொதிக்குதடா நெஞ்சம் 27 சதவீதம் எங்கே? வெறும் 12 சதவீதம் எங்கே?
மண்டல் குழு அறிக்கை மத்திய அர சால், நடைமுறைப்படுத்தப்பட்டு கிட்டத் தட்ட 20 ஆண்டுகள் ஆகியும், வெறும் 12 விழுக்காடு மக்களே பயன் அடைந்துள் ளனர்.
இவ்வளவு நீண்டகாலக் கட்டத்திற்குப் பின்பும், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 12%க்கு மேல் வாய்ப்புகள் அளிக்கப்பட வில்லை. பெரும்பாலான துறைகளில் வெறும் 6.9 சதவீதத்துடன் நின்றுவிட்டது. இந்த அநியாயத்திற்கு ஆண்ட, ஆளுகிற மத்திய அரசுகள்தான் பொறுப்பு என்றாலும், இந்தியாவின் உயர்மட்ட நிர்வாக வளையம் என்பது பார்ப்பனிய வளையமாகத்தான் இருந்து கொண்டே இருக்கிறது என்பதற்கும் இது ஒரு அழுத்தமான எடுத்துக்காட்டு.
27 சதவீதம்
எட்டப்படாதது ஏன்?
பிற்படுத்தபட்ட மக்கள் 27% இடஒதுக் கீட்டு அளவை நிரப்புகிற வகையில் போதிய அளவு படித்திருந்தாலும், இந்த அவலத்திற்குக் காரணம் என்ன என்பதை பட்டியல் இடுகிறார் தமிழர் தலைவர்.
(1) கிரீமி லேயரைப் (சிக்ஷீமீணீனீஹ் றீணீஹ்மீக்ஷீ) பயன்படுத்தி நிறைய பிற்படுத்தப்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டிருக்கிறார்கள்.
(2) பிற்படுத்தப்பட்டோர் ஆணையத் துக்கு சட்ட அதிகாரம் இல்லை.
(3) “27 சத இடஒதுக்கீட்டை முறையாகச் செயல்படுத்தாத அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டும்” என்னும் திரு.சுதர்சன நாச்சி யப்பன் அவர்களின் பரிந்துரை கிடப்பில் போடப்பட்டது. கண்காணிப்புக்கு உரிய அதிகாரம் இன்னும் சட்ட ரீதியாக வழங் கப்படவில்லை.
(4) அதிக மதிப்பெண்கள் பெறும் பிற்படுத்தப்பட்டவர்கள், திறந்த போட்டி யில்தான் வைக்கப்பட வேண்டும். ஆனால் தில்லுமுல்லுத் தனமாக மோசடித்தனமாக பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட் டில் புகுத்தப்படுகிறார்கள்.
இது போன்றெல்லாம் பட்டியல் இட்டு, எடுத்துவைத்து இடித்துரைக்க தமிழர் தலைவரை விட்டால் வேறு நாதி கிடையாது இந்த நாட்டில்!
நீதிபதிக்கு அரசியல் சட்டம் தெரிந்திருக்க வேண்டாமா?
ஆண்டாண்டு காலமாக கொடுக்கப் படாமல் நிறுத்தி வைக்கப்பட்ட கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளை மீட்டு எடுக்கும் ஒரு மீட்டுரிமையின் வடிவம்தான் இடஒதுக்கீடு. இந்த அடிப்படை உண்மை யும் புரியாமல், அரசியல் சட்டமும் தெரி யாமல், குஜராத்தில் உயர்நீதிமன்ற நீதிபதி ஜஸ்டிஸ் ஜே.பி.பர்திவாலா, இட ஒதுக் கீட்டை, லஞ்ச ஊழலுடன் ஒப்பிட்டு பேசியதை தமிழர் தலைவர் வன்மையாக கண்டிக்கிறார். நீதிபதி மீது நாடாளு மன்றத்தில், 58 நாடாளுமன்ற உறுப் பினர்கள் கையொப்பமிட்டு, சபாநாய கரிடம், ஒழுங்கு நடவடிக்கையை
(வீனீஜீமீணீநீலீனீமீஸீt) வலியுறுத்தி மனு கொடுத் துள்ளனர் என்பதும் இதன் தொடர் செய்தி. இந்தியாவின் எந்த மூலையில் இருந்தும் சமூகநீதிக்கு எதிராக குரல் ஒலித்தால், அதற்குக் கண்டனக் குரல் எழுப்பும் முதல் தலைவர் நம் தமிழர் தலைவர்தான்!
அதே நேரத்தில் சமூகநீதிக்கு ஆதர வாக யாராவது குரல் ஒலித்தால் அவர் களை எடுத்து உச்சி முகர்ந்து முத்தம் இட்டுப் பாராட்டுவதும், தமிழர் தலைவர் தான்!
இந்த இடத்தில் ஒன்றை நினைவுபடுத் துவது பொருத்தமாக இருக்கும்.
உச்சநீதிமன்றத்தில் “முதல் பிற்படுத் தப்பட்ட சமூக தலைமை நீதிபதி”
தமிழர் தலைவரின் சிந்தனையில் உருவான முக்கியமான சமூகநீதிக் கொள் கையான "நீதித் துறையில் இடஒதுக்கீட்டு முறை வேண்டும்” என்னும் கொள்கையை வழிமொழிந்ததைப் போல் உச்சநீதிமன்ற நீதிபதியாக, 19.7.2013 அன்று நியமிக்கப் பட்ட நீதியரசர் திரு.பி.சதாசிவம் அவர்கள் "நாட்டின் உயர்நீதிமன்ற நீதிபதிகள், உச்சநீதி மன்ற நீதிபதிகள் நியமனத்தில் இடஒதுக்கீடு-சமூக நீதிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும்” என்று குரல் கொடுத்திருந்தார்.
“66 ஆண்டு கால சுதந்திர இந்தியா வில் முதல் பிற்படுத்தப்பட்ட சமுதாயத் தினைச் சேர்ந்த ஒரு மூத்த நீதிபதி, உச்சநீதி மன்றத்தின் தலைமை நீதிபதியாக தலைமை ஏற்கப் போகிறார் என்னும் போது ஒடுக்கப்பட்டோரின் உரிமைகளுக் காக வாழ்நாள் முழுதும் போராடும் அனைவரது உள்ளங்களிலும் மகிழ்ச்சி வெள்ளம் பாய்ந்தோடுகிறது” என்று உள்ளம் மகிழ எழுதியவர் நம் தமிழர் தலைவர் தவிர வேறு யாராக இருக்க முடியும்?
கல்வி, வேலைவாய்ப்பு இடஒதுக்கீட்டுக்கு
காலவரையரை உண்டா?
இடஒதுக்கீடு - காலஅளவு என்பது குறித்தும் தெளிவான நிலையை அறிவிக் கிறார். இடஒதுக்கீடு 10 ஆண்டு வரைதான் என்பது அரசியல் ரீதியான இடஒதுக் கீட்டுக்கு மட்டும்தான். ஆனால் கல்வி, வேலைவாய்ப்புகளில் இட ஒதுக்கீடு என் பது அடிப்படை உரிமை (றிணீக்ஷீt - மிமி)யில் வருகிறது. அரசமைப்புச் சட்டம் துவக்க கால முதல் இன்று வரையிலும் அதற்குக் கால நிர்ணயம் கிடையாது என்பதை ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார் நீதிபதி சதாசிவம்.
ரோஹித் வெமூலா
தற்கொலை ஏன்?
அய்தராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமூலாவின் தற்கொலைக்குக் காரணமான பல்கலைக்கழக நிர்வாகத் தையும், மத்திய அமைச்சர் பண்டாரு தத்தாத்ரேயையும், மனிதவள மேம்பாட்டுத் துறையையும் கண்டித்து திராவிடர் மாணவர் கழகம் சார்பாக ஜனவரி 27ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறைகூவல் விடுகிறார். “நூற்றுக்கு நூறு உயர்ஜாதி ஆதிக்கக் கூடாரமாக இருந்த இந்த நிறுவனங்களில், தாழ்த்தப்பட் டோரும், பிற்படுத்தப்பட்டோரும் கொஞ்சம் உள்ளே நுழைய தலைப்பட்டு விட்டார்கள் என்றதும், வேறு வகையில் அவர்களுக்கு நெருக்கடியையும், அழுத் தத்தையும் கொடுத்து தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு விரட்டப் படுகிறார்களே” என்று உள்ளம் குமுறு கிறார் தமிழர் தலைவர்.
கோயிலில் நுழைய பெண்களுக்கு உரிமை இல்லையா?
“ஆண்களுக்குள்ள அத்தனை உரிமை களும் பெண்களுக்கும் உண்டு” என்பது தந்தை பெரியாரின் பெண்ணுரிமைக் குரல்! சபரிமலை அய்யப்பன் கோவிலில் ஆண் டாண்டு காலமாக பெண்கள் உள்ளே செல்ல, தேவஸ்தானம் போர்டு அனுமதிப்பதில்லை. (குறிப்பாக 10 வயது முதல் 50 வயதுக்குள் உள்ளவர்கள்) இதனை எதிர்த்து கேரளாவில் இளம் வழக்குரைஞர்கள் அணியும், 5 பெண்களும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த வழக்கில் தீர்ப்பு சொன்ன நீதிபதி ஜஸ்டிஸ் டி.பி. மிஸ்ரா அவர்கள், "இந்திய அரசியல்  அமைப்புச் சட்டத்தின் எந்தப்பிரிவில், பெண்கள் கோயி லுக்குச் செல்லக்கூடாது என்று சொல்லப் பட்டிருக்கிறது?” என்று கேள்வி எழுப்பி யுள்ளார்.
நெத்தியடி கேள்வி
அந்தக் கேள்வி குறித்து பாராட்டிய தமிழர் தலைவர் அவர்கள், ‘இது சமூகநீதி முக்கியத்துவத்துடன் கூடிய, எதிர் காலத்தில் பல புரட்சிகர மாறுதல் களைக் கொண்டு வரக்கூடிய நெத்தியடி கேள்வி’ என்று வெகுவாக பாராட்டி எழுதி உள்ளார்.
இந்த நாட்டில் பொது உடைமை இயக் கங்களைச் சார்ந்த ‘பெண்கள் அமைப்புகள்’ இருக்கின்றன. அவர்கள் எல்லாம்கூட இது குறித்து தீரமாக எதுவும் பேசவில்லை என்பதையும் இந்த நேரத்தில் வருத்தத்தோடு பதிவிடுகிறோம்.
-விடுதலை ஞா.ம.3.12.16

புதன், 18 ஜனவரி, 2017

ஆந்திரப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் பிற்படுத்தப்பட்டோருக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு

அய்தராபாத், செப்.7_ நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு அளவு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்ய அரசியல் சாசனத் தில் வகை செய்யுமாறு மத்திய அரசை வலி யுறுத்தி, ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவையில் சனிக் கிழமை, ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

ஆந்திரப்பிரதேச சட் டப்பேரவையில் பட் ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான சனிக் கிழமையன்று அந்த மாநில முதல்வர் என்.சந் திரபாபு நாயுடு, இது தொடர்பான தீர்மா னத்தை முன்மொழிந்தார்.

தீர்மானம்

தீர்மானத்தில் கூறப் பட்டிருந்ததாவது:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதிகளில் இட ஒதுக்கீடு செய்வதற்கு அரசமைப்புச் சட்ட ரீதியிலான அங்கீகாரம் அளிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற்படுத்தப் பட்ட வகுப்பினரின் எண் ணிக்கையை கணக்கெடுக்க வேண்டும். பிற்படுத்தப் பட்டோர் நலனுக்கென தனி அமைச்சக்கத்தை உருவாக்கவேண்டும். பிற் படுத்தப்பட்டோர் மேம் பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கென பட்ஜெட் ஒதுக்கீட்டில் 25 சதவிகித நிதியாதாரத்தை ஒதுக்கவேண்டும்.

மேலும், அரசுத்துறை ஊழியர்களில் பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு பணி உயர்வில் இட ஒதுக் கீட்டை மத்திய அரசு வழங்கவேண்டும்.
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கைவினைஞர்களின் நலனுக்கான ஆதாரனா திட் டம் ஆந்திரத்தில் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அந்தத் தீர்மானத் தில் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இந் தத் தீர்மானம் ஒருமன தாக நிறைவேற்றப்பட டது.

இந்நிலையில், எதிர்க் கட்சித் தலைவரான ஒய்.எஸ்.ஆர். கட்சித் தலைவர் ஜெகன்மோகன் எழுந்து, ஆளும் தெலுங்கு தேசக் கட்சிக்கு எதிரான கருத்துகளை கூறியதால் அவையில் அமளி ஏற்பட்டது.

தீர்மானம் நிறைவேறிய பிறகு...

அப்போது, பேரவை யில் தீர்மானம் நிறை வேறிய பிறகு அதுகுறித்து பேசுவது மரபல்ல. பேரவை மரபுகளை பின் பற்றுவது குறித்து மாநில அரசு சார்பில் நடத்தப் பட்ட பயிலரங்கில்கூட ஜெகன்மோகன் கலந்து கொள்ளவில்லை என்று பேரவை விவகாரத் துறை அமைச்சர் யனமல ராம கிருஷ்ணுடு கூறினார்.

ஒத்தி வைப்பு

இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் கோடேலா சிவப்பிரசாத், இந்தத் தீர்மானம் குறித்து பேசுவதற்கு ஜெகன் மோகன் ரெட்டிக்குப் போதிய வாய்ப்பு வழங் கப்பட்டுவிட்டது என்று கூறினார். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் பேர வைக் கூட்டத் தொடரை அவர் ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

,விடுதலை,7.9.14

.


உச்சநீதிமன்றத்தில் மீண்டும் சமூக நீதி அமர்வு

புதுடில்லி, ஜன. 17- உச்சநீதிமன் றத்தில் சமூகநீதி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தனி அமர்வை, மீண்டும் ஏற்படுத்தி, தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர் உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பொது நல வழக்குகளை, வெள்ளிதோறும், இரு நீதிபதி கள் கொண்ட தனி அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதிகள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், முந்தைய தலைமை நீதிபதி, டி.எஸ். தாக்கூர், இந்த தனி அமர்வை நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பொறுப் பேற்றுள்ள, ஜே.எஸ்.கேஹர், மீண்டும், சமூகநீதி அமர்வு செயல்பட உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஏற்கெனவே இருந்து வரும் நடைமுறைப்படி, இரண்டு நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு, சமூக நீதி தொடர்பான பொதுநல வழக்கு களை வெள்ளி தோறும் விசா ரிக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

-விடுதலை,17.1.17

திங்கள், 9 ஜனவரி, 2017

பிஜேபி ஆளும் ராஜஸ்தானில்  மனுவின் சிலையை அகற்றிட கிளர்ச்சி!


ஜெய்ப்பூர், ஜன.9- ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் அமர்வில், மனுவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனைஅப்புறப்படுத்திட வேண்டும் என்று மனுநீதி மற்றும் மனுஸ்மிருதி ஆகியவற்றுக்கு எதிராக இயங்கி வரும் மனு விரோதி அபி யான் என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்ட மிட்டிருக்கிறார்கள்.

சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் பூலே பிறந்தநாள் நூற்றாண்டு சிறப்பு மாநாடு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடை பெற்றது. இதில் இதற்கான கிளர்ச்சித் திட் டங்கள் அறிவிக்கப்பட்டன. இக்கிளர்ச்சிகள் ஏப்ரல் 11 அன்று ஜோதிராவ் பூலே பிறந்தநாள் நூற்றாண்டுதினம் வரையிலும் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.

இது தொடர்பாக மநுவிரோத அபியான் அமைப்பின் சார்பில் தூதுக்குழுவினர் ராஜஸ் தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ரிட் மனு அளிக்க உள்ளனர். அந்த மனுவை விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்கி டவேண்டும் என்று கோர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“அதர்மத்தின் அடையாளம்” மனுதர்மம் என்பது உண்மையில் மனுஅதர்மமே என்றும், இவ்வாறு அதர்மத்தைப் போதித்தவரின் சிலை நீதிமன்ற வளாகத்திற்குள் இருக்கக் கூடாது என்றும் Ôமனு விரோத அபியான்Õ அமைப்பினர் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி, தன்னுடைய அரசாங்கம் பி.ஆர்.அம்பேத்கரின் சமூக நீதியை உயர்த்திப் பிடிப்பதில் உறுதிபூண்டிருப்பதாகக் கூறியிருக் கிறார். அது உண்மையெனில் அவர் உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்து மனுவின் சிலையை அகற்றிவிட்டு, அம்பேத்கரின் சிலையை வைத்திட முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளார்கள்.
-விடுதலை,9.1.17

சனி, 7 ஜனவரி, 2017

மகாராஷ்டிராவில் மராத்தியர் மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு


மும்பை, ஜூன் 27_ மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16 விழுக்காடு முஸ்லிம் களுக்கு 5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத் தில் பெரும்பான்மையாக வசிக்கும் மராத்தா சமூகத் தினரும், சிறுபான்மையின ரான முஸ்லிம்களும் தங்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பு களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில்   முதல் வர் சவான் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத் தில் மராத்தா சமூகத்தின ருக்கு 16 விழுக்காடு முஸ்லிம்களுக்கு 5 விழுக் காடு இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட் டது. ஆனால் இந்த இடஒதுக்கீட்டு முடிவுக்கு அம்மாநில பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

-விடுதலை,27.6.14