புதுடில்லி, ஜன. 17- உச்சநீதிமன் றத்தில் சமூகநீதி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தனி அமர்வை, மீண்டும் ஏற்படுத்தி, தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர் உத்தரவிட்டுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பொது நல வழக்குகளை, வெள்ளிதோறும், இரு நீதிபதி கள் கொண்ட தனி அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதிகள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், முந்தைய தலைமை நீதிபதி, டி.எஸ். தாக்கூர், இந்த தனி அமர்வை நிறுத்தி வைத்தார்.
இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பொறுப் பேற்றுள்ள, ஜே.எஸ்.கேஹர், மீண்டும், சமூகநீதி அமர்வு செயல்பட உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஏற்கெனவே இருந்து வரும் நடைமுறைப்படி, இரண்டு நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு, சமூக நீதி தொடர்பான பொதுநல வழக்கு களை வெள்ளி தோறும் விசா ரிக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.
-விடுதலை,17.1.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக