மும்பை, ஜூன் 27_ மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16 விழுக்காடு முஸ்லிம் களுக்கு 5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத் தில் பெரும்பான்மையாக வசிக்கும் மராத்தா சமூகத் தினரும், சிறுபான்மையின ரான முஸ்லிம்களும் தங்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பு களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்தனர்.
இந்நிலையில் முதல் வர் சவான் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத் தில் மராத்தா சமூகத்தின ருக்கு 16 விழுக்காடு முஸ்லிம்களுக்கு 5 விழுக் காடு இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட் டது. ஆனால் இந்த இடஒதுக்கீட்டு முடிவுக்கு அம்மாநில பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
-விடுதலை,27.6.14
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக