பக்கங்கள்

திங்கள், 9 ஜனவரி, 2017

பிஜேபி ஆளும் ராஜஸ்தானில்  மனுவின் சிலையை அகற்றிட கிளர்ச்சி!


ஜெய்ப்பூர், ஜன.9- ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் அமர்வில், மனுவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனைஅப்புறப்படுத்திட வேண்டும் என்று மனுநீதி மற்றும் மனுஸ்மிருதி ஆகியவற்றுக்கு எதிராக இயங்கி வரும் மனு விரோதி அபி யான் என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்ட மிட்டிருக்கிறார்கள்.

சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் பூலே பிறந்தநாள் நூற்றாண்டு சிறப்பு மாநாடு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடை பெற்றது. இதில் இதற்கான கிளர்ச்சித் திட் டங்கள் அறிவிக்கப்பட்டன. இக்கிளர்ச்சிகள் ஏப்ரல் 11 அன்று ஜோதிராவ் பூலே பிறந்தநாள் நூற்றாண்டுதினம் வரையிலும் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.

இது தொடர்பாக மநுவிரோத அபியான் அமைப்பின் சார்பில் தூதுக்குழுவினர் ராஜஸ் தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ரிட் மனு அளிக்க உள்ளனர். அந்த மனுவை விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்கி டவேண்டும் என்று கோர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“அதர்மத்தின் அடையாளம்” மனுதர்மம் என்பது உண்மையில் மனுஅதர்மமே என்றும், இவ்வாறு அதர்மத்தைப் போதித்தவரின் சிலை நீதிமன்ற வளாகத்திற்குள் இருக்கக் கூடாது என்றும் Ôமனு விரோத அபியான்Õ அமைப்பினர் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி, தன்னுடைய அரசாங்கம் பி.ஆர்.அம்பேத்கரின் சமூக நீதியை உயர்த்திப் பிடிப்பதில் உறுதிபூண்டிருப்பதாகக் கூறியிருக் கிறார். அது உண்மையெனில் அவர் உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்து மனுவின் சிலையை அகற்றிவிட்டு, அம்பேத்கரின் சிலையை வைத்திட முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளார்கள்.
-விடுதலை,9.1.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக