பக்கங்கள்

வெள்ளி, 10 நவம்பர், 2023

ஜாதிவாரி கணக்கெடுப்பின் பலன்


பீகாரில் நடத்தப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகள் கடந்த மாதம் வெளியிடப்பட்டது. அதில் மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்  63 விழுக்காடு இருப்பது தெரியவந்தது. அதேபோல் உயர்ஜாதி மக்கள் 10 விழுக்காடும் பட்டியலின வகுப்பினர் (எஸ்.சி.) 19.65 விழுக்காடும் பழங்குடியினர் (எஸ்டி) 16.8 விழுக்காடும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஜாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகள் குறித்து மாநிலத்தின் ஆளும் கட்சியான அய்க்கிய ஜனதா தளம் மீது பா.ஜ.க. பல்வேறு குற்றச்சாட்டுகளை சுமத்தி வருகிறது. இந்நிலையில் மாநிலத்தில் நடைபெற்று வரும் குளிர்கால சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த விரிவான அறிக்கையை மாநிலத்தின் பேரவை விவகாரங்கள் துறை அமைச்சர் விஜய்குமார் சவுதரி சமர்ப்பித்தார்.

அறிக்கையின்மீது நடைபெற்ற விவாதத்தின்போது முதலமைச்சர் நிதீஷ்குமார் பேசியது: "இதர பிற்படுத்தப் பட்ட வகுப்பினார், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பட்டிய லினத்தவர்கள், பழங்குடியினர்கள்  உள்ளிட்டோருக்கு வழங்கப்படும் 50 விழுக்காடு இடஒதுக்கீட்டை 65 விழுக்காடாக  உயர்த்துவதே என் விருப்பம். இதுகுறித்து அனைத்து தரப்பினரிடமும் கலந்தாலோசித்து விரைவாக முடிவெடுக்கப்பட்டு நடப்புப் பேரவைக் கூட்டத் தொடரிலேயே சட்டம் இயற்ற வழிவகை செய்யப்படும்.

 மேலும் வறுமையிலுள்ள 94 லட்சம் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் வழங்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவும் அரசு திட்டமிட்டு வருகிறது. இத்தருணத்தில் பீகாருக்கு சிறப்பு தகுதியை வழங்குமாறு ஒன்றிய அரசிடம் மீண்டும் முன்மொழிகிறேன்.

வருகின்ற மக்களவைத் தேர்தலில் ‘இந்தியா’ கூட்டணி வெற்றிபெற்று ஆட்சி அமைத்தால் பின்தங்கிய மாநிலங்களுக்கு சிறப்பு தகுதி வழங்கப்படும் என உறுதியளிக்கிறேன்" என்றார் பீகார் முதலமைச்சர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கப்பட வேண்டும் என்று ஒன்றிய அரசை பல மாநில அரசுகளும் வற்புறுத்தி வந்தும், ஒன்றிய பி.ஜே.பி. அரசு அதைக் காதில் போட்டுக் கொள்ளவில்லை.

அதற்கு முக்கிய காரணம் அதன் பின்னணியில் உள்ளது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டால் பட்டியலின மக்கள், பழங்குடியின மக்கள், பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் எத்தனை விழுக்காடு உள்ளனர். அவர்களின் கல்வி நிலை என்ன, உத்தியோக வாய்ப்பு என்ன என்ற உண்மை விவரங்கள் வெளிச்சத்திற்கு வரும்.

அந்த நிலையில் கல்வியிலும், வேலை வாய்ப் பிலும் இவர்கள் எத்தனை விழுக்காடு உள்ளனர் என்பதை அறிந்து, தங்களின் இடஒதுக்கீட்டின் விழுக்காட்டை உயர்த்த வேண்டும் என்று போர்க் கொடி தூக்குவார்களே என்ற அச்சம்தான்.

உயர் ஜாதியினர் - பார்ப்பனர்கள் தங்கள் எண் ணிக்கைக்கு மேல் எத்தனை விழுக்காடு அனுபவிக்கின் றனர் என்ற உண்மையும் தெரிந்து விடும். இது அவர்களின் ஆதிக்கத்திற்கு எதிரான மனப்பான்மையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தி விடுமே என்ற சூழலில்தான் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு என்பதை உதாசீனப்படுத்தி வருகின்றனர்.

அகில இந்திய காங்கிரசும் சமூகநீதியில் தன் குரலை அதி வேகமாக எழுப்பி வருகிறது. இந்த நிலையில் ஆப்பதனை அசைத்து விட்ட குரங்கின் நிலைக்கு ஒன்றிய பி.ஜே.பி. அரசு விழி பிதுங்கி நிற்கிறது.

2024இல் நடக்க இருக்கும் மக்களவைத் தேர்தலில் சமூகநீதி முக்கிய பிரச்சினையாக உருவெடுக்கப் போகிறது. அது பிஜேபிக்குச் சாவுமணி அடிக்கும் என்பதில் அய்யமில்லை.

ஆம் தந்தை பெரியார் இன்றைக்கு அகில இந்தி யாவுக்கும் தேவைப்படும் தலைவராகி விட்டார்.

வெல்லப் போவது பெரியார் கொள்கை -

வீழப் போவது பி.ஜே.பி.யின் சமூக அநீதிக் கொள்கை!

 

வியாழன், 9 நவம்பர், 2023

ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் - ஏன்?


 கோ.கருணாநிதி

பொதுச் செயலாளர்,

அகில இந்திய பிற்படுத்தப்பட்ட பணியாளர்

நலச் சங்கங்களின் கூட்டமைப்பு

 ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1871, 1881, 1891, 1901, 1911, 1921 மற்றும் 1931 ஆகிய அனைத்து மக்கள் தொகை கணக்கெடுப்புகளிலும் ஜாதி தரவு வெற்றி கரமாக சேகரிக்கப்பட்டு, செயலாக்கப்பட்டு பரப்பப் பட்டது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

1941 இல் கூட, அது நடந்து முடிந்துவிட்டது ஆனால் அப்போது நடந்து கொண்டிருந்த உலகப் போர் காரண மாக நிதி தேவைக்காக அட்டவணைப்படுத்தப்பட வில்லை. ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவையில்லை என அப்போது எந்த ஆணையரும் கூறவில்லை. ஏனெனில், இந்திய சமுதாயத்தின் முக்கியமான கூறுகளில்ஜாதி ஒன்றாகும், மேலும்   ஜாதி விவரம் இல்லாமல் இந்தியா வின் மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையடையாது என அவர்கள் கருதினர்.

ஆனால் சுதந்திர இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பழங்குடியின பிரிவினர் தவிர்த்து ஏனைய ஜாதிகள் குறித்த தரவுகள் திட்டமிட்டு நிறுத்தப்பட்டது.

தற்போது எண்பது ஆண்டுகளுக்குப் பிறகும், ஜாதித் தரவு இல்லாத நிலையில், அரசுகள், மீண்டும் மீண்டும், ஜாதித் தரவுகளுக்காக 1931 மக்கள் தொகை கணக் கெடுப்பு அறிக்கைக்குச் செல்ல வேண்டிய நிலையே உள்ளது.

ஒன்றியஅரசு முழுமையாக ‘டிஜிட்டல் இந்தியாவை' நோக்கி முன்னேறும் போது, ஜாதி மற்றும் துணை-ஜாதிப் பெயர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால், அறிவியல் தரவு சேகரிப்பு சாத்தியமற்றது என அதிகார வர்க்கம் கூறுவது ஒரு நொண்டிச் சாக்காகும்.

சுதந்திரத்திற்குப் பிறகு, மக்கள் தொகை கணக் கெடுப்பில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின தரவைச் சேகரித்து வருகிறது, ஏனையஜாதித் தரவுகள் கணக் கெடுக்கப்படவில்லை. இதன் காரணமாக தாழ்த்தப் பட்ட, பழங்குடியின பிரிவினரின் எண்ணிக்கை உயர்த் தப்பட்டதாக அல்லது அவர்களின் மக்கள் தொகை சிதைக்கப்பட்டதாக எந்த சான்றும் இல்லை. அதிகாரி களின் அச்சம் ஆதாரமற்றது என்பதை மேலும் நிரூ பிக்கிறது.

ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, புதுடில்லியில் இந்திய பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரின் புதிய கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டிய பிறகு, 'மொபைல் ஆப்' மூலம் மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு சேகரிக்கப்படும். இது முதல் முறை. 'மொபைல்' பயன்பாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சிக்கு பயன்படுத்தப்படும். இந்தியா பேனா மற்றும் காகித கணக்கெடுப்பில் இருந்து டிஜிட்டல் தரவுக்கு நகரும், இது நாட்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு பயிற்சியில் பெரிய புரட்சியாக இருக்கும் என பெருமையோடு குறிப்பிட்டார்.

தற்போது அரசாங்கங்களிடம் நம்பகமான தரவு இல்லாத நிலையில், ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் இதர பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், பழங் குடியினர்களுக்கான இடஒதுக்கீடு கொள்கைகள் குறித்து நிறைவேற்றப்பட்ட சட்டத்தின் சட்டபூர்வத் தன்மை மாண்புமிகு நீதிமன்றங்களால் மீண்டும் மீண்டும் கேள்விக்குள்ளாக்கப்படுகிறது. தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர் உட்பட அனைத்து ஒதுக்கப்பட்ட பிரிவுகளிலும் கிரீமிலேயரை அடையாளம் கண்டு அவர்களை அகற்றவும், இடஒதுக்கீடு குழுக்களுக்குள் துணை வகைப்படுத்தல் மற்றும் உயர் ஜாதியினரிடையே பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினருக்கான இட ஒதுக்கீடு குறித்து மனுக்கள் தாக்கல் செய்யப்படும் போது ஜாதிவாரியான கணக்கெடுப்பு  மிகவும் அவசிய மாகிறது.

மகாராட்டிரா, பீகார் மற்றும் ஒடிசா அரசுகள் ஜாதிவாரியாக கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பியுள்ளன.

மூன்று மாநில அரசின் சார்பில் நாடாளுமன்ற உறுப் பினர்கள் பிரதமரையும் உள்துறை அமைச்சரையும் சந்தித்து, இதனை வலியுறுத்தியுள்ளனர்.

அமெரிக்காவில் மக்கள் தொகை கணக்கெடுப்பில் இனம் பற்றிய விவரங்கள் சேகரிப்பு:

உலக வல்லரசு நாடாக திகழும் அமெரிக்காவில் ஒவ்வொரு பத்தாண்டிற்கும் ஒருமுறை நடத்தப்படும் மக்கள் தொகை கணக்கெடுப்பில், இனம் (ஸிகிசிணி) பற்றிய குறிப்பு கோரப்படுகிறது.  கறுப்பின மக்கள், ஆப்பிரிக்க அமெரிக்கர்கள், இந்திய அமெரிக்கர்கள், அலாஸ்கா என அனைத்து  இன மக்களின் விவரங்களும் சேகரிக்கப்படுகின்றன. அந்த நாட்டு இட ஒதுக்கீடு முறைக்கு இத்தகைய தரவுகள் அரசுக்கு உதவுகின்றன. இன அடிப்படையில் கணக்கெடுப்பு நடப்பதால், அமெரிக்க நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என அங்கே யாரும் ஒப்பாரி வைக்கவில்லை.

ஒன்றிய அரசால் உருவாக்கப்பட்ட பிற்படுத்தப்பட் டோர் ஆணையம், காக்கா காலேல்கர் தலைமையிலான முதல் பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், மண்டல் தலைமையிலான இரண்டாவது ஆணையம், ஜாதிவாரி யான மக்கள் தொகை கணக்கெடுப்புக்கு பரிந்துரைத் தது. ஜாதி வாரியாக மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பி னர்கள் கூட்டத்தொடரில் மீண்டும் மீண்டும் எழுப்பினர்.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை துணை வகைப்படுத்தும் ஆணையத்திற்கு தரவு தேவை:

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரை துணை வகைப் படுத்தலுக்கான நீதிபதி ரோஹிணி (ஓய்வு) தலைமை யிலான ஆணையம், இதர பிற்படுத்தப்பட்ட பற்றிய தரவுகள் எதுவும் தங்களிடம் இல்லாததை சுட்டிக் காட்டியுள்ளது.

ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பை, ஒன்றிய அரசின் மக்கள் தொகை கணக்கெடுப்பு துறை மட்டுமே மேற்கொள்ள வேண்டும், ஏனெனில் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஒன்றிய அரசின் பட்டியலில் வருகிறது (இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்ட வணையின் கீழ் பிரிவு 69).ஒன்றிய அரசின் பட்டியலில் உள்ள எந்தவொரு விடயத்தின் நோக்கத்துக்கான விசாரணைகள், சர்வேக்கள் மற்றும் புள்ளிவிவரங்கள் பட்டியல்94 இன் படி ஒன்றிய அரசின் பொறுப்பாகும்.

நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டப்பேரவை களுக்கான தேர்தல்கள் போன்று மக்கள்தொகை கணக் கெடுப்பும் ஒன்றிய அரசின் தனித்த பொறுப்பாகும். இது குறித்த உரிய பயிற்சிக்கான பணிக்குழு இல்லாத மாநில அரசுகளுக்கு இந்த விஷயத்தை ஒப்படைக்க தேவை யில்லை.

1948 மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் 5 (1) பிரிவு "மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளி விவ ரங்களை தொகுத்து வெளியிடும் செயல்பாடு", அத் துறையின் ஆணையரின் கட்டுப்பாட்டில் உள்ளதாகும்.

ஒன்றிய அரசால் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு அரசமைப்பு அதிகாரம் அளித்துள்ள நிலையில், இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பற்றிய தரவுகளும் அவசியமாகிறது.

வீட்டுக்கு வீடு கணக்கெடுப்பு செய்யும் போது மக்கள் தொகை கணக்கெடுப்பு அட்டவணையில் ஜாதிபற்றி நெடுவரிசை சேர்க்கப்பட்டால், எந்த கூடுதல் முயற்சியும் அல்லது செலவும் இல்லாமல் இந்த இலக்கை எளிதில் அடைய முடியும். வீட்டு அட்ட வணையில் உள்ள ஒவ்வொரு நபருக்கும், 'மதம்' என்ற ஒரு பத்தியும், 'ஜாதி / துணை ஜாதி இருந்தால்' என்ற பத்தியும், பின்னர் சமூக-பொருளாதார, கல்வி மற்றும் மக்கள்தொகை பற்றிய பல்வேறு பத்திகளும் இருக்க வேண்டும்.

அவ்வாறு சேகரிக்கப்பட்ட ஜாதித் தரவுகளை, எழுத்தறிவு, கல்வி, தொழில், வேலை பண்புகள் மற்றும் பிற குறியீடுகள் போன்ற அனைத்து சமூகப் பொரு ளாதாரத் தரவுகளையும் சேர்த்து, இரண்டு வருடங் களுக்குள் காலவரையறை திட்டத்தில் எளிதாகக் கண்டறிந்து, தொகுக்கலாம், அட்டவணைப்படுத்தலாம் மற்றும் வெளியிடலாம். அரசாங்கத்திற்கு கூடுதல் செலவுகள் இல்லாமல் இதனை செய்திட முடியும்.

காகா கலேல்கர் தலைமையிலான முதல் பிற்படுத் தப்பட்டோர் ஆணையத்தின் அறிக்கையில் "ஜாதிகள், வகுப்புகள் அல்லது குழுக்கள் மூலம் சமூக நலத் திட்டங்கள் நிர்வகிக்கப்படும் வரை, இந்த குழுக்கள் பற்றிய முழு தகவல்களும் பெறப்பட்டு அட்டவணைப் படுத்தப்பட வேண்டும்; "மக்கள்தொகை கணக்கெடுப் பில் ‘ஜாதி’ பற்றிய பத்தியும் இருக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.

இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சமூக-கல்வி ரீதியாக முன்னேறிய பிரிவினரை விலக்கவும், பாதிக்கப் பட்ட சமூகத்தினரை சேர்த்திடவும் அர சுக்கும் தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்திற்கு தரவுகள் தேவைப்படுகிறது.

மண்டல் அறிக்கைக்கு பிந்தைய நிலை:

ஒன்றிய அரசின் வேலைவாய்ப்பில் இதர பிற்படுத் தப்பட்டோர் பிரிவினர்க்கான இடஒதுக்கீடு 1993-லும், பின்னர் உயர் கல்வி நிறுவனங்களில் 2008-லும் அறிமுகப்படுத்தப்பட்டது. மண்டல் குழு பரிந்துரைகள் செயல்படுத்தப்பட்ட 20 ஆண்டுகளுக்குப் பிறகு மறுபரி சீலனை செய்யப்பட வேண்டும் என்று மண்டல் அறிக் கையில்கூறப்பட்டுள்ளது. இந்த பின்னணியில், இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவினரை துணை வகைப்படுத்த லுக்கான ஆணையம் அக்டோபர் 2017 இல் நியமிக்கப் பட்டுள்ளது. இவை அனைத்தும் செயல்பட மக்கள் தொகையில் இதர பிற்படுத்தப்பட் டோர் பிரிவினர் எத்தனை சதவிகிதம் உள்ளனர் என்பது பற்றி மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம் நம்பகத்தன்மையுடன் கண்டறிய முடியும்.

மக்கள் தொகை கணக்கெடுப்பு குறித்து அதிகாரி களுடன் 31.8.2018 அன்று நடைபெற்ற கூட்டத்தில், அன்றைய உள்துறை அமைச்சரும் தற்போது பாது காப்புத்துறை அமைச்சராகவும் உள்ள ராஜ் நாத் சிங், 2021 மக்கள்தொகை கணக்கெடுப்பில் இதர பிற்படுத் தப்பட்டோர் பற்றிய விவரங்களும் சேகரிக்கப்படும் என தெரிவித்தார்.

கருநாடக அரசு ஜாதி கணக்கெடுப்பு அறிக்கையை வெளியிடவில்லை என்ற கேள்விக்கு பதிலளித்த ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ராம்தாஸ் அதாவலே, ஒன்றிய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்பின் போது ஜாதிவாரியான கணக்கெடுப்பை நாடு முழுவதும் நடத்திட வேண்டும் என தெரிவிக்கிறார்."(எகனாமிக் டைம்ஸ் 12.7.2021).

தி.மு.க நாடாளுமன்றக் கட்சித் தலைவர் டி.ஆர்.பாலு எழுப்பிய கேள்விக்கு, "மகாராட்டிரா மற்றும் ஒடிசா மாநில அரசுகள் வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி விவரங்களைச் சேகரிக்க கோரி யுள்ளன. இந்திய அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிகளைத் தவிர மற்ற ஜாதி வாரியான மக்கள்தொகையை பட்டியலிடக் கூடாது என்று முடிவு செய்துள்ளது என உள்துறை இணை அமைச்சர் நித்தியானந்த் ராய் 20.7.2021 அன்று பதிலளித்துள்ளார்.

ஒன்றிய அரசின் மாறுபட்ட

முடிவுக்கு என்ன காரணம்?

1. 1951 முதல் ஜாதி குறித்த விவரங்களை சேகரிக்காதது இந்தியாவை ஜாதியற்ற சமூகமாக மாற்றவில்லை.

2. தரவுகளுக்கு யார் பயப்படுகிறார்கள்? அதன் சேகரிப்பை முதலில் நிறுத்தியது யார்? கண்டிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர் இல்லை.

2. சமூக குறைபாடுகள், வேறுபாடுகள் மற்றும் அநீதி களின் நிலைப்பாட்டைக் காப்பாற்ற விரும்புவோர், அந்த விவரங்களை வெளிப்படுத்துவது, பிற்படுத்தப் பட்ட வகுப்பினரை 'அவர்களின் பின்தங்கிய தன்மை யையும்' அவர்கள் அனுபவிக்கும் சமத்துவமின்மை யையும் உணரவைக்கும் என்று பயப்படுகிறார்கள்.

முடிவுரை:

1. சமகால இந்திய சமுதாயத்தில் ஜாதி ஒரு மிக முக்கியமான கூறாக உள்ளது, எனவே அது குறித்த தரவுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன.

2. ஜாதிகள் குறித்த தரவுகள், அமைப்பு மற்றும் தனிப்பட்ட ஜாதிகளின் புற அமைப்பில் நீண்ட கால மாற்றங்களைக் கண்காணிக்க உதவும்.

3. இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினர்க்கு இட ஒதுக்கீடுகள் குறித்து சட்டங்கள் இயற்றுவதற்கு (ஓபிசி பிரிவினரை புதிய பட்டியல்களை சேர்ப்பதற்கும், நீக்கு வதற்கும், கிரீமிலேயர் அளவுகோல்களை அடையா ளம்   காண்பது/திருத்துதல், ஒதுக்கீடுகளுக்குள் ஒதுக் கீடுகள் போன்றவை) ஜாதிவாரி கணக்கெடுப்பு தேவை.

4. மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதித் தரவைச் சேர்ப்பது ஜாதி அமைப்பை நிலைநிறுத்தும் மற்றும் சமூகப் பிளவுகளை ஆழப்படுத்தும் என்று ஒரு போலி யான குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. உண்மையில், ஜாதித் தரவைச் சேர்க்காதது ஜாதிய அமைப்பின் அநீதியை நிலைநிறுத்துகிறது, ஏனெனில் தரவின் பற் றாக்குறை சமூகத்தில் மிகவும் பலவீனமான பிரிவி னர்க்கு உதவி செய்வதற்கான உரிய வாய்ப்பை தடுக்கிறது.

5. சமூகத்தில் ஜாதி பாகுபாடு மற்றும் சமத்துவ மின்மை - ஆரோக்கியம், கல்வி மற்றும் நீதிக்கான அணுகலில் கூட - அதன் தாக்கத்தை நிவர்த்தி செய்வ தற்கான வழிகளை வகுப்பதற்காக அது மக்களை எவ் வாறு பாதிக்கிறது என்பதை கண்காணிப்பது முக்கியம். ஜாதிவாரியான தரவுகளை தவிர்ப்பது ஜாதிவெறியை அழிக்காது, மாறாக ஜாதிவாரியான கணக்கெடுப்பு "ஜாதியின் முடிவின் தொடக்கமாக இருக்கும்".

6. சான்றுகள் அடிப்படையிலான சமூகக் கொள் கைகளை வளர்ப்பதற்கும், நேர்த்தியமைப்பதற்கும் இந்தத் தகவல் நீண்ட தூரம் செல்லலாம். இது எந்த ஜாதி இடஒதுக்கீட்டைப் பெற வேண்டும் அல்லது பெறக் கூடாது என்பதற்கான தவிர்க்கக்கூடிய சச்சரவு களையும் குறைக்கும், நீதித்துறை கோரும் நம்பகமான ஆதாரங்களையும் வழங்கும்.

அதிகாரம் பெற்ற தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், இதர பிற்படுத்தப்பட்டோர்களின் துணை வகைப்பாட்டை ஆராயும் குழு மற்றும் சமூகத்தில் பொருளாதார ரீதியாக நலிவுற்ற பிரிவினருக்கான இட ஒதுக்கீடு  (EWS) சமீபத்தில் நடைமுறைக்கு வந்தது. இன் றைய சூழலில் இந்த வாதங்கள் மிகவும் பொருத்தமானவை.

மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஜாதி குறித்த கேள்வியை சேர்க்க மறுப்பது அர்த்தமற்றது. மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் ஜாதியை ஒதுக்கிவைப்பது என்பது நாம் அதை விரும்பலாம் என்று அர்த்தமல்ல. மிக முக்கியமாக, வரலாற்று காரணங்களுக்காக பிற் படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட பிரிவினர்க்கு அரசாங்கம் உறுதியான நடவடிக்கைகளை வழங்கும் வரை, அவர் களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க வேண்டும். அதாவது பிற்படுத்தப்பட்ட பிரிவினரின் எண்ணிக் கையை மட்டும் எண்ணுவது அல்ல. எந்தக் குழுக்கள் பின்தங்கியுள்ளன, எந்த அளவிற்கு உள்ளன என்பதை துல்லியமாக அடையாளம் காண கொள்கை வகுப்பாளர் களுக்கு இது உதவும். இது இன்றியமை யாதது, ஏனென் றால் கருத்துப் பதிவுகளைக் காட்டிலும் உண்மையான தரவுகளைக் கொண்டு அரசு சரியான திட்டங்களைக் கையாளமுடியும், ஆனால் தற்போது எந்த அதிகாரப் பூர்வ தரவும் இல்லாத நிலையில் உள்ளது.

ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் கூறியபடி, இந்த ஆண்டு கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக மக்கள் தொகை கணக்கெடுப்பு இன்னமும் துவங்கப் படவில்லை என்பதால், ஜாதிவாரியாக மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த பரிசீலிக்குமாறு ஒன்றிய உள் துறை அமைச்சரிடம் பல்வேறு அரசியல் கட்சிகளும் வேண்டுகோள் விடுத்துள்ளன. இதனை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டு, ஜாதிவாரி கணக்கெடுப்பை மக்கள் தொகை கணக்கெடுப்புடன் இணைத்தே நடத்திட வேண்டும்.

ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்!’’ கருத்தரங்கில் தமிழர் தலைவர் ஆசிரியரின் கருத்துரை

‘‘

 ஜாதி ஒழிக்கப்படாத நிலையில், குறிப்பிட்ட மேல்ஜாதியினர் மட்டுமே கல்வி, வேலை வாய்ப்பில் ஆதிக்கம்!

இதனை மாற்றி ‘அனைவருக்கும் அனைத்தும்' என்பதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு!

சமூகநீதி வளர வளர, ஜாதி ஒழியும்!

1

சென்னை, செப். 26  குறிப்பிட்ட மேல்ஜாதியினர்தான் கல்வி, வேலை வாய்ப்புகளை ஆக்ரமித்து இருப்பதால், ‘அனைவருக்கும் அனைத்தும்' என்ற சமத்துவ நெறிக் காக ஜாதிவாரி கணக்கெடுப்பு (சென்சஸ்) தேவைப்படு கிறது.  அதனை வலுப்படுத்தவே இத்தகைய கருத்தரங் குகள் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்!''

நேற்று (25.9.2023) மாலை சென்னை காமராஜர் அரங்கத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் ஓ.பி.சி. பிற்படுத்தப் பட்டோர் துறை சார்பில் ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பின் அவசியமும் - முக்கியத்துவமும்'' என்ற தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  கருத்துரையாற்றினார்.

அவரது கருத்துரை வருமாறு:

மிகுந்த எழுச்சியோடு இந்தியாவினுடைய சமூகநீதிப் பாதுகாப்புக்கு எது அடிப்படையானதோ அந்த அடிப் படையான தேவை - ஜாதி வாரி கணக்கெடுப்பு என்பது இந்தக் காலகட்டத்தில் மிகமிக முக்கியமானது. அதனு டைய அவசியம், அதனுடைய தேவை - முக்கியத்துவம் இவற்றையெல்லாம் எந்த மக்கள் உணரவேண்டுமோ, அந்த ஒடுக்கப்பட்ட மக்கள், அதிலும் குறிப்பாக இருக் கின்ற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட சமுதாய மக் களாகிய அவர்கள் உணரவேண்டும். அந்த நோக்கத்தை நாம் இந்த நேரத்தில் தெளிவுபடுத்தினால்தான், சமூகநீதி என்பது வெறும் அரசமைப்புச் சட்டத்தினுடைய முகப் புரையில் இருக்கின்ற ஏட்டுச்சுரைக்காயாக இல்லாமல், மிக அழகாக எனக்குமுன் இங்கே உரையாற்றிய தலைவர்கள் அதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தக் கூடிய அளவிற்கு நடத்தக் கூடிய பொருள் பொதிந்த ஒரு கருத்தரங்கம் இது.

இன்னுங்கேட்டால், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய பிற்படுத்தப்பட்ட சமூக பிரிவு இருக்கிறதே, அது இன்றைக்குக் காட்டியிருப்பது இந்தியாவில் இருக் கின்ற அத்துணை மாநிலங்களுக்கும் வழக்கம்போல் தமிழ்நாடு வழிகாட்டி இருக்கிறது. அதற்காக எல்லோ ரையும் பாராட்டவேண்டும்.

எனக்குத் தெரிந்து ஒரு கருத்தரங்கம் அய்ந்து மணிநேரம் நடைபெற்று இருக்கிறது என்று சொன்னால், இது ஒரு வரலாறுதான். இங்கே எல்லா கருத்துகளையும் மிக அருமையாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள், தோழர்கள் - மிகவும் தேவையானதுதான்.

சமூகநீதி அரசமைப்புக்கானது - 

அதனை சீர்குலைப்பதா?

சமூகநீதி என்பது அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றிருக்கிறது. அந்த அரசமைப்புச் சட்டத்தில் இடம் பெற்றதையே, இப்பொழுது ஒன்றியத்தில் மோடி தலைமையில் இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி எவ்வளவு பெரிய மோசடியை செய்து கொண்டிருக்கிறது என்பதற்கு அடையாளம்- மோசடி என்ற வார்த்தையை நான்  திட்டவட்டமாகத் தெரிவிக் கிறேன்.

இந்த இடத்தில் பேசினால், வழக்கு வரும் என்று பாலகிருஷ்ணன் சொன்னார். ஏற்கெனவே ஒரு வழக்கு வந்திருக்கிறது. அடுத்து இதற்காக ஒரு வழக்கு வந்தால் மிகவும் நல்லதுதான்.

ஏனென்றால், மக்கள் மன்றத்தில் பேசுவதைவிட, மிகவும் முக்கியம் நீதிமன்றத்தில் பேசவேண்டிய அவ சியம் - அதுவும் உச்சநீதிமன்றம் போன்ற இடங்களில் பேசவேண்டிய தேவை அதிகமாக இருக்கிறது.

இட ஒதுக்கீடு என்பது இருக்கிறதே, அது சலுகையல்ல; நிறைய பேருக்கு இந்த அடிப்படையைச் சொல்லிக் கொடுக்கவேண்டும். இதுவரையில் அந்த அடிப் படையை நம் மக்களுக்குச் சொல்லிக் கொடுக்கவில்லை.

எங்களுக்கெல்லாம் ஒரு பெரிய திருப்தி என்னவென்றால், இங்கே சகோதரர் திருமா அவர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார். காங்கிரசே இப்பொழுது திராவிடர் கழகமாகி விட்டதா?  என்று.

உண்மையை எப்பொழுதும் ஒன்றாகத்தான் நிற் போம் நாங்கள். ஏனென்றால், எங்களைப் பொறுத்த வரையில் கொள்கை ரீதியாக ஒன்றாகத்தான் இருக்கி றோம்.

காமராஜர் ஆட்சியாக இருந்தாலும், ஓமந்தூரார் ஆட்சியாக இருந்தாலும் - அந்தக் காலத்திலேயே ஓமந் தூராரை ‘‘தாடியில்லாத இராமசாமி இவர்'' என்றார்கள்.

காமராஜரை ‘‘கருப்புக் காக்கை'' என்று இராஜ கோபாலாச்சாரியார் வருணித்தார். 

ஆகவே, இந்தக் கொள்கைதான் மிகவும் முக்கியம்.

இப்பொழுது ஒரு பெரிய திருப்பம் ஏற்பட்டு இருக்கிறது- அதுதான் சமூகநீதி.

காங்கிரசில் ஏற்பட்டுள்ள ஒரு திருப்பம்!

சமூகநீதியில், இன்றைக்கு இவ்வளவு பெரிய திருப்பம் ஏற்பட்டு இருப்பதற்கு - இதுபோன்று இந்தியா முழுவதும் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு இருக்கவேண்டும் என்று சொல்லி, ஒடுக்கப்பட்ட சமுதாய மக்கள், யார் இது வரையில் அழுத்தப்பட்டு இருந்தார்களோ, யார் மிதிக்கப் பட்டு இருந்தார்களோ, அவர்களை மேலே கொண்டுவா என்று சொல்லக்கூடிய ஒரு திருப்பம் காங்கிரசில் ஏற்பட்டு இருக்கிறது என்றால், அது இன்றைய காலகட்டத்தில் ஏற்பட்டு இருக்கின்ற திருப்பம் - வரவேற்கத்தகுந்த திருப்பமாகும்.

இங்கே சகோதரர்கள் திருமா அவர்களும், இளங்கோ அவர்களும் உரையாற்றும்பொழுது சொன்னார்கள், ‘‘இன்றைய  காங்கிரசினுடைய தலைமை, சமூகநீதிக்கே முன்னுரிமை கொடுக்கக்கூடிய தலைமை. இதற்குமுன் எந்தக் காலகட்டத்திலும் இல்லாதது  இப்பொழுது இருக்கிறது.

அன்னை சோனியா காந்தி அவர்களானாலும் - இன்றைக்கு நாடே நம்பிக் கொண்டிருக்கின்ற ஒரே ஒரு நட்சத்திரம் இருக்கிறது என்றால், அது ராகுல்காந்தி அவர்கள்தான் என்பது மறுக்கப்பட முடியாத உண்மை.

அவர் எந்தக் கட்சிக்குத் தலைவர் என்பது முக்கியமல்ல - இந்தியாவிற்கே வழிகாட்டக்கூடிய ஒரு இளைய, புதிய நம்பிக்கையுள்ள ஒரு தலைவர்.

அவர்மீது என்ன உங்களுக்கு இவ்வளவு பாசம் என்று நீங்களெல்லாம் கேட்கலாம்.

கொள்கை ரீதியாக 

நண்பர்கள் யார்? எதிரிகள் யார்?

ஒரு தலைவருக்கு முதல் தகுதி என்னவென்றால், நம்முடைய கொள்கைக்கு, யார் கொள்கை எதிரிகள்? கருத்தியல் ரீதியாக, கொள்கை ரீதியாக யார் எதிரிகள்? கொள்கை ரீதியாக யார் நண்பர்கள் என்பதை அடையாளம் காணுவதுதான்.

அதனைத் தெளிவாக அடையாளங்கண்டு கொண் டிருப்பதுதான் இன்றைய தலைமை.

அதேபோன்று, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவராக வந்திருக்கின்ற திரு.மல்லிகார்ஜூனே கார்கே. அவருடைய காலம், அற்புதமான திருப்பங்கள் ஏற்படக்கூடிய, வாய்ப்புகளை உருவாக்கி இருக்கின்ற காலம்.

காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டி லிருந்து, ஏன் தந்தை பெரியார் வெளியே வந்தார்? 50 சதவிகித இட ஒதுக்கீட்டு தீர்மானத்தை காங்கிரஸ் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதற்காகத்தான்.

1919 ஆம் ஆண்டிலேயே 

தந்தை பெரியாரின் கோரிக்கை!

50 சதவிகித இட ஒதுக்கீடு என்பது இருக்கிறதே உயர்ஜாதிக்காரர்கள், மற்றவர்கள் வேண்டுமானா லும் எடுத்துக்கொள்ளுங்கள்; இன்னொரு 50 சத விகிதத்தை ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, பாதிக்கப் பட்ட மக்களுக்குத் தாருங்கள்'' என்ற தீர்மானத்தை, தந்தை பெரியார் அவர்கள் 1919 இல் காங்கிரசில் சேர்ந்த நாளிலிருந்தே வலியுறுத்தி வந்தார்.

சென்னை மாகாண சங்கம் என்று ஆரம்பித் தார்கள்; காங்கிரசில் சேருவதற்கு முன்பே அந்தக் கருத்தை உண்டாக்கினார். காங்கிரசினுடைய அமைப்புகளில் சமூகநீதிக்கு முக்கியத்துவம் இருந்தது. 1920 இல் தலைவராகிறார் தந்தை பெரியார். 1921 இல், திருநெல்வேலி, திருவண்ணா மலை, திருப்பூர் என்று இப்படி வரிசையாக ஒவ்வொரு ஆண்டும் வகுப்புவாரி உரிமையை வலியுறுத்தி தீர்மானம் கொண்டு வருகிறார்கள். அதனை உயர்ஜாதி ஆதிக்கத்தினர் தடுத்துக் கொண்டே வருகிறார்கள்.

அதனால்தான், வேறு வழியில்லாமல் காஞ்சிபுரத்தில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டிலிருந்து வெளியே வருகிறார். 

இந்த வரலாறு இன்றைய இளைஞர்களுக்குத் தெரியவேண்டும்.

காங்கிரசை விட்டு பெரியார் விலகியது ஏன்?

இன்றைக்கு எப்படி மாறுதல் வந்தது என்றால், ஆங்கிலத்தில் ஒரு சொற்றொடர் உண்டு  ‘‘The wheel has come full circle'' என்று.

அதுபோன்று மிகமுக்கியமாக வருகின்ற நேரத்தில், அகில இந்திய காங்கிரஸ் தலைவராக வந்தவுடன், மல்லி கார்ஜூன கார்கே ஒரு தீர்மானம் கொண்டு வந்தார்.

ராகுல் காந்தி அவர்களுடைய கருத்தே தீர்மானமாக வருகிறது.

முதலில், காங்கிரஸ் கமிட்டி அமைப்பிலேயே, வகுப் புரிமை, சமூகநீதி தத்துவம் இருக்கவேண்டும் என்று.

இதுதான் பெரியாருக்கு வெற்றி! அன்றைக்கு நான் ‘விடுதலை'யில் அறிக்கை எழுதினேன்.

இதற்காகத்தானே பெரியார் அவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறினார். 

‘‘அனைவருக்கும் அனைத்தும்!''

சமூகநீதியினுடைய தத்துவம் என்ன?

சமூகநீதியினுடைய தத்துவம் ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்று பெரியார் அவர்கள் இரண்டே வார்த்தையில் சொன்னார்.

தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாளினை - சமூகநீதி நாளாகக் கொண்டாடக்கூடிய நம்முடைய ‘திராவிட மாடல்' ஆட்சியினுடைய ஒப்பற்ற முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், பெரியாருடைய வாசகத்தையே, உறுதிமொழியில் கொண்டு வந்தார்.

‘‘அனைவருக்கும் அனைத்தும்'' - தயவு செய்து நன்றாக எண்ணிப் பாருங்கள். உயர்ஜாதிக்காரர்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கோ, முன்னேறிய ஜாதிக்காரர்கள் என்று சொல்லக்கூடியவர்களுக்கோ இட ஒதுக்கீடு இல்லை என்று நாம் சொல்லவில்லை; கழுத்தைப் பிடித்து வெளியே தள்ளவில்லை; அல்லது தூக்கி எறியவில்லை.

அதற்குப் பதில் என்ன சொல்லுகிறோம், ‘‘உங்கள் பங்கு எவ்வளவோ அதை அனுபவித்துக் கொள்ளுங்கள்; இவருக்கு எவ்வளவு பங்கோ, அதை இவர் அனு பவித்துக் கொள்ளட்டும்; அவரவர் பங்கை அவரவர் அனுபவிக்கட்டும் என்பதுதான் ‘‘அனைவருக்கும் அனைத்தும்'' - அதுதான் சமூகநீதி.

சரி, அவரவர் பங்கு என்பது எப்பொழுது தெரியும்?

கணக்கெடுத்தால்தான் தெரியும்.

இங்கே உரையாற்றிய அத்துணை பேரும் சொன் னார்கள்; இளங்கோ அவர்களும் சொன்னார்; நான் அந்தக் கருத்தை வழிமொழிகிறேன்.

ஜாதியை ஒழிக்கவேண்டும் என்போர் - ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கோருவது ஏன்?

ஒரு விசித்திரமான கருத்தரங்கமாக இருக்கும் சில பேருக்கு. எப்படி என்றால், யார் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்று சொல்கிறார்களோ, அவர்கள் எல்லாம் ஜாதிவாரிக் கணக்கெடுப்பு கேட்கிறார்களே என்று. இன்றைக்கும், நாளைக்கும் எங்களுடைய கொள்கை ஜாதியை அழிக்கவேண்டும், ஒழிக்கவேண்டும் என்பதுதான். Annihilation of Caste  இதுதான் அம்பேத்கர் அவர்கள் கொடுத்த தலைப்பு.

ஜாதியை அழிப்பதற்குமுன் ஜாதி இருக்கிறதே- உலக நாடுகளுக்கும், நம்முடைய நாட்டிற்கும் அடிப்படையில் என்ன வேறுபாடு?

மற்ற நாடுகளில் எல்லாம் மனிதர்கள் பிறக்கிறார்கள். நம்முடைய நாட்டில்தான் உயர்ஜாதிக்காரன், தாழ்ந்த ஜாதிக்காரன், தொடக்கூடிய ஜாதிக்காரன், தொடக்கூடாத ஜாதிக்காரன், படிக்கக் கூடிய ஜாதிக்காரன், படிக்கக் கூடாத ஜாதிக்காரன், படித்தால் நாக்கை அறுக்க வேண்டும்; கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றவேண்டும் என்ற சட்டம் இன்றைக்கும் தர்மமாக - ஸநாதன தர்மமாக இருக்கிறது அது. மனுநீதி- அந்த மனுநீதிதான் இந்திய அரசமைப்புச் சட்டமாக வர வேண்டும்  என்பதுதானே ஆர்.எஸ்.எஸினுடைய கொள்கை.

அரசமைப்புச் சட்டத்திற்குப் பதில் மனுதர்மம் இருக்கவேண்டும் என்பதுதான் ஆர்.எஸ்.எஸ். தலைவரின் கருத்து!

ஆர்.எஸ்.எஸ். ஏடு தலையங்கம் எழுதியிருக்கிறது. ஆர்.எஸ்.எஸ். தலைவர் சொல்கிறார், மனுநீதி இருக்க வேண்டிய இடத்தில், இப்படி ஒரு அரசமைப்புச் சட்டம் இருக்கலாமா? என்று கேட்கிறார்.

ஆகவே, மனுநீதியில் என்ன சொல்லப்பட்டு இருக்கிறது?

உயர்ஜாதிக்காரர்கள் படிக்கவேண்டும் என்பதைப் பற்றியெல்லாம் இங்கே தோழர்கள் உரையாற்றும்பொழுது சொன்னார்கள்.

ஆகவே, அந்த அடிப்படையை நினைத்துப் பார்க்கும்பொழுது, பாதிக்கப்பட்ட மக்களுக்குப் பரிகாரம் தேவை.

பாலம் கட்டும்வரை மாற்றுப் பாதை!

ஓரிடத்தில் பந்தி நடைபெறுகிறது; சாப்பாடு குறை வாக இருக்கிறது; வந்திருக்கின்றவர்களின் எண்ணிக் கையோ அதிகம். அப்பொழுது என்ன செய்யவேண்டும்? நீண்ட நாள்களாக சாப்பிடாமல் இருக்கின்றவர்களை முதல் பந்தியில் உட்கார வையுங்கள் என்று சொல்கிறோம்.

யார், யார் பசியேப்பக்காரர்கள் என்பதைக் கணக் கெடுக்கவேண்டும்; அதேபோன்று புளியேப்பக்காரன் - நிறைய சாப்பிட்டுவிட்டு, அஜீரணத்திற்காக மருந்து சாப்பிடுகிறானே அவனைக் கொண்டு போய் முன்னால் அமர வைத்து - பசியேப்பக்காரனே, நீ வராதே, நீ பார்த்தாலே எங்களுக்குத் தீட்டாயிடும்; நாங்கள் சாப்பிடுவதை நீ பார்க்கக்கூடாது என்று இப்படி ஜாதிப் பெயரைச் சொல்லிக் கொண்டிருக்கின்றபொழுது, ஜாதி ஒழியவேண்டும் என்பது எங்களுடைய கொள்கை. ஆனால், அது இன்றைக்கு இருக்கின்ற காரணத்தினால், இந்த நாட்டில், ஜாதி அடிப்படையில் கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல்கிறோம்.

பிறக்கும்பொழுதும் ஜாதி - சாகும் பொழுது ஜாதி - சுடுகாட்டிலும் ஜாதி. ஒரு மனிதனுக்குத் தொல்லையே, உயிரோடு வாழும் வரையில்தான். ஆனால், இந்த ஜாதித் தொல்லை இருக்கிறதே, உயிர் போன பிறகும், சுடுகாட்டில் போய் நிற்கிறது இந்த ஜாதி.

ஆகவேதான், நாங்கள் ஜாதி ஒழிப்புக்காரர்கள்; பின் ஏன், ஜாதி வாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று சொல் கிறோம் என்றால், ஜாதியைக் காப்பாற்ற அல்ல. உங் களைக் காப்பாற்ற, மக்களைக் காப்பாற்ற, சமூகநீதியைக் காப்பாற்ற ஜாதிவாரிக் கணக்கெடுப்பு தேவை.

ஓரிடத்தில் பாலம் கட்டவேண்டும்; பாலம் கட்டும் வரை மாற்றுப் பாதையில் செல்லவேண்டி இருக்கும். இதுதான் ஜாதி ஒழிப்பு இலக்கணம் - இலக்கு. இதுதான் இட ஒதுக்கீடு, இதுதான் சமூகநீதி. அந்த சமூகநீதி வேண்டும் என்றால், ஒரு மாற்றுப் பாதை தேவை.

உடனே கேட்பார்கள், எவ்வளவு நாள்கள்தான் மாற்றுப் பாதையில் சென்றுகொண்டிருக்கவேண்டும் என்று எதிர்த்தரப்பினர் கேட்டால், அவர்களுக்கு ஒரே பதில், ‘‘எவ்வளவு நாளைக்கு நீ பாலம் கட்டுவதைத் தாமதிக்கின்றாயோ, அவ்வளவு காலத்திற்கு இந்த மாற்றுப் பாதை தேவை.'' அது எங்களுக்காக அல்ல. 

இட ஒதுக்கீடு கொடுத்தால், நீதிமன்றத்திற்குச் செல் கிறார்கள்; அங்கே நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு எப்படி இருக்கிறது என்று எடுத்துச் சொல்லிவிட்டார்கள். இன் றைக்கு உச்சநீதிமன்றத்தில், மிகப்பெரும்பான்மையான இருக்கின்ற மக்கள், இட ஒதுக்கீட்டின் அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட மக்கள்தான். அன்றைக்கு மண்டல் எடுத்த கணக்கெடுப்பின்படி 52 சதவிகிதம். ஆனால், இன்றைக்கு 80 சதவிகிதம்.

ராகுல்காந்தி அழகாகக் கேட்டார், ‘‘ஓபிசியினுடைய அடிப்படை என்ன? எத்தனை பேர் இருக்கிறார்கள்?'' என்று.

நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜெயக்குமார் அவர்கள் அந்த வார்த்தையை மிக அழகாக எடுத்துச் சொன்னார்.

எத்தனை சதவிகிதம் இருக்கிறார்கள் என்று கேட்டதில் என்ன தவறு இருக்கிறது?

உச்சநீதிமன்ற நீதிபதி பதவிகளில் 

இட ஒதுக்கீடு உண்டா?

10

உச்சநீதிமன்றத்தில் எத்தனை பேர் நீதிபதியாக இருக்கிறார்கள்; 34 நீதிபதிகள். அந்த 34 பேரில், எஸ்.சி. சமுதாயத்தைச் சேர்ந்தவர் ஒன்றோ, இரண்டோதான். அதேபோன்று ஓ.பி.சி. இரண்டே பேர்தான்.  அதுவும் கருநாடகத்தில் இருந்து சென்றவர் ஒருவர், தமிழ்நாட் டிலிருந்து சென்ற இன்னொருவர்.

இவர்கள்தான், இத்தனைக் கோடி மக்களுக்குப் பிரச்சினை ஏற்படும்பொழுது தீர்ப்பு கொடுக்கவேண்டும்.

என்ன கேட்கிறோம்? ஏன் ஜாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கச் சொல்கிறோம் - ஜாதி ஒழிப்புக்காரர்களுக்கு என்ன அவசியம் என்பதை நன்றாகப் புரிந்து கொள் ளுங்கள்.

இட ஒதுக்கீடு கொடுத்திருக்கிறீர்களே, எத்தனை சதவிகிதம் கொடுத்திருக்கிறீர்கள்?

இத்தனை சதவிகிதம் கொடுத்திருக்கின்றோம் என்கிறார்கள்.

சரி, உங்கள் ஜாதிக்காரர்கள் என்று சொல்கிறீர்களே, கணக்கெடுப்பு புள்ளிவிவரம் இருக்கிறதா? 

அங்கே போனால் புள்ளி விவரம் கேட்கவேண்டியது. இங்கே நிர்வாகத்தில் ஆதிக்கம் செலுத்திக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாரே, அவரும் சொல்லுகிறார், ஜாதி வாரி கணக்கெடுப்பு எடுக்கமாட்டோம் என்கிறார்.

அப்படியென்றால் என்ன அர்த்தம்?

நாங்கள் சமூகநீதி அடிப்படையில் உங்களுக்கு இட ஒதுக்கீடு கொடுக்கமாட்டோம் என்பதுதானே அதன் அர்த்தம்.

இட ஒதுக்கீடு கொடு என்று நாங்கள் நியாயம் கேட் பதற்காகத்தான் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதாகும்.

ஜாதியைக் காப்பாற்ற அல்ல - சமூகநீதிக்காகத்தான்!

ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்று கேட்பதி னுடைய அடிப்படையே, ஜாதியைக் காப்பாற்ற அல்ல; சமூகநீதியைக் காப்பாற்றத்தான் என்பதை நன்றாகத் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

காரணம் என்னவென்றால், இட ஒதுக்கீட்டை - மனுதர்மப்படி யார் உண்டாக்கியது? இட ஒதுக்கீட்டை நாம் உண்டாக்கவில்லை.

ஒடுக்கப்பட்டவர்களோ, தாழ்த்தப்பட்டவர்களோ, பிற்படுத்தப்பட்டவர்களோ, பெண்களோ இட ஒதுக்கீட்டை உண்டாக்கவில்லை.

இன்றைக்கு இட ஒதுக்கீடு ஏன் தேவைப்படுகிறது?

அருள்கூர்ந்து நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்; புரிய வைக்கவேண்டியது நம்முடைய கடமை.

முதலில் ஆரம்பித்தது அவர்கள்தான்.

பிராமணர்களுக்குக் கல்வி

சத்திரியர்களுக்கு ஆட்சி

வைசியர்களுக்கு வியாபாரம்

சூத்திரர்கள் அடிமையாக இருக்கவேண்டும்.

பஞ்சமர்கள் அதற்கும் கீழே - 

இவை எல்லாவற்றிற்கும் கீழே எல்லா ஜாதிப் பெண் களும் - அது உயர்ஜாதிப் பெண்களாக இருந்தாலும்.

இதைத்தான் பாபாசாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் அழகாகச் சொன்னார், ‘‘படிக்கட்டு ஜாதி முறை'' என்று.

ஏணிப் படிக்கட்டில் மேலே, கீழே, அடுத்தது, அடுத்தது என்று வைத்திருக்கிறார்கள்.

இன்னொரு அழகான உதாரணத்தையும் சொன்னார் - நான்கு மாடி கட்டடத்தில், மேலே வசிப்பவர் அங்கேயே இருக்கிறார்; கீழே இருப்பவர், கீழே இருக்கிறார். அந்தக் கட்டடத்திற்கு ஒரு விசித்திரமான சூழல் என்னவென் றால், படிக்கட்டு கிடையாது. மேலே இருப்பவன், மேலேயே இருப்பான்; கீழே இருப்பவன், மேலே போக முடியாது.  மேலே இருக்கிறவன், கீழே வரமாட்டான். அந்தக் கட்டடத்திற்குப் படிக்கட்டு கட்டித்தா என்று சொல்வதுதான் ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பதாகும்.

அப்படி படிக்கட்டு கட்டினால், மேலே இருப்பவர் கீழே இறங்கி வரலாம்; கீழே இருப்பவர் மேலே போகலாம் என்றுதான் சொல்கிறோம்.

ஜாதி ஒழிந்துவிட்டதா?

‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்று சொல்லும்பொழுது, 100-க்கு 3 பேராக இருப்பவர்கள், அவர்களுடைய பங்கை எடுத்துக் கொள்ளட்டும்; 10 பேர் இருக்கிறார்களா, பத்து பேருக்குரிய பங்கை எடுத்துக்கொள்ளட்டும். மீதி 90 பேருடைய பங்கைக் கொடுக்கவேண்டும் அல்லவா! 

அப்படியில்லாமல், 100-க்கு 100 பங்கையும் அவர் களே அனுபவித்துக்கொண்டு, மற்றவர்களை வெளியே துரத்திவிட்டார்கள்.

இப்பொழுது, மற்றவர்களுக்கு இடம் வேண்டும் என்று கேட்கிறோம். பாதுகாப்பாக இருக்கவேண்டும் என்றால், ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்படவேண்டும்.

ஏனென்றால், ஜாதி என்பது எல்லா இடத்திலும் இருக்கிறது. ஜாதி ஒழிப்புக்குப் பணியாற்றுபவர்கள் வேறு. ஆனால், இன்றைக்கும் ஆணவக் கொலைகள் நடைபெறுகின்றனவே, எப்படி?

சொந்தப் பெண், வேறு ஒரு ஜாதியில், ஒடுக்கப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞனைத் திருமணம் செய்துகொண்டார்கள் என்றவுடன், கூலிப் படையை வைத்துக் கொல்கிறார்களே, அந்த மனப்பான்மையினுடைய கொடுமை என்ன? ஜாதி மனப்பான்மைதானே!

அப்படியென்றால், ஜாதி இருக்கிறதா? இல்லையா? வெளிநாடுகளில் ஜாதி என்றால் என்னவென்று கேட்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்குத் தெரியாது.

அவர்களுக்குத் தெரிந்த ஏற்றத்தாழ்வு என்பது - பொருளாதார ஏற்றத்தாழ்வுதான்; சமூக ஏற்றத்தாழ்வு என்பது அவர்களிடையே கிடையாது.

ஆனால், அது இங்கே இருக்கின்ற காரணத்தி னால்தான், நம்முடைய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், 

We the People, என்று தொடங்கப்பட்டு, Justice, social, economic and political   அதாவது முதலில் எடுத்தவுடன் சமூகநீதி; இரண்டாவது பொருளாதார நீதி; மூன்றாவது அரசியல் நீதி.

ஆகவேதான், இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றுவதற்கு, சமூகநீதியை நிலைநாட்ட ஜாதிவாரியாகக் கணக்கெடுப்பு நடத்தியாகவேண்டும்.

சமூகநீதி வளர, வளர ஜாதி ஒழியும்!

இட ஒதுக்கீடு வந்தால், சமூகநீதி வளர வளர, ஜாதி ஒழியும். அதிலொன்றும் சந்தேகமேயில்லை. மிகப்பெரிய அளவிற்கு நம் மக்கள் படிக்கிறார்கள்; அதனால், சமத்துவம் வருகிறது. ஏற்படுகின்ற வாய்ப்புகள் தானாகவே ஏற்படும்.

இதற்கு நேர் எதிரானதுதான் நண்பர்களே, 

ஆர்.எஸ்.எஸ். - ஜாதியைக் காப்பாற்றுவது- வருணாசிரம தர்மத்தைக் காப்பாற்றுவது.

ஆர்.எஸ்.எஸ். தலைவர் யாரோ ஒருவர் அந்தக் காலத்தில் சொல்லியிருக்கிறார் என்று நினைக்காதீர்கள்; இன்றைக்கு வந்திருக்கின்ற விஸ்வகர்மா யோஜனா திட்டத்தினுடைய சூழ்ச்சி என்ன?

18 வயது நிரம்பிய பிள்ளைகள் கல்லூரிக்குச் செல்லக்கூடாது; அதற்குப் பதில் செருப்புத் தைக்கிறவர் பிள்ளை, செருப்புத் தைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்; துணி வெளுக்கிறவர் பிள்ளை, துணி வெளுக்கக்கற்றுக்கொள்ளுங்கள்; சிரைக்கிறவர் பிள்ளை, சிரைக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.

நல்ல கத்தி வாங்கிக் கொள்வதற்காக, உங்களுக்கு 500 ரூபாய் சலுகைக் கொடுக்கிறோம் என்று சொன்னால், என்னங்க அர்த்தம்?  பேனா பிடிக்கவேண்டிய நம்மு டைய பிள்ளைகள், மறுபடியும் கத்தியைப் பிடிக்க வேண்டுமா?

நாக்கில் தேனைத் தடவுகிறார்கள்; தூண்டிலில் மண்புழுவை வைத்து மீனைப் பிடிப்பதுபோன்று, வட்டியில்லாத கடன் தருகிறோம்; குறைந்த வட்டி; 5 சதவிகித வட்டி என்று சொல்கிறார்கள்.

நீதிமன்றங்கள் எழுப்பும்  

வினாக்கள் என்ன?

ஒரு லட்சம் ரூபாய் தருகிறார்களே என்று நம்மாட்கள் புரியாமல் சொல்கிறார்கள். 

அந்தப் பணத்தை கடனாகத்தான் தருகிறார்கள்; அவர் வீட்டுப் பணத்தையா எடுத்துத் தருகிறார்? நம் கட்டிய வரிப் பணத்தைத்தானே தருகிறார்கள்.

ஆகவேதான், அவர்கள் ஒருபக்கத்தில் ஜாதியைக் காப்பாற்றுகிறார்கள் என்று இங்கே எல்லோரும் சொன் னார்கள்.

ஆகவே, ஜாதிவாரி கணக்கெடுப்பு வேண்டும் என்பதை ஒரு பக்கம் உயர்நீதிமன்றத்தில் கேட்கிறார்கள்; வன்னியர்கள், மற்றவர்களுக்கு எல்லோருக்கும் இட ஒதுக்கீடு கொடுத்தார்கள். அப்பொழுது என்ன கேட்டார்கள், ஜாதி வாரி கணக்கெடுப்புப் புள்ளிவிவரம் இருக்கிறதா? அப்படி இல்லை என்றால், அது செல்லாது என்று சொன்னார்கள்.

மகாராட்டிரத்தில் உள்ள மராட்டியர்கள் பிற்படுத்தப் பட்டவர்கள் - அதற்கும் கணக்கெடுப்பு ஜாதி வாரியாக இருக்கிறதா? என்று நீதிமன்றத்தில் கேட்கிறார்கள்.

சரி, அவ்வளவு நியாயம் பார்க்கின்ற, தராசு பிடிக்கின்ற உயர்ஜாதி நீதிபதிகள், 10 சதவிகித இட ஒதுக்கீட்டினை உயர்ஜாதி ஏழைகளுக்குக் கொடுக்கப்பட்டபொழுது கேட்டார்களா?

அது என்ன? ஏழைகளில், உயர்ஜாதி ஏழைகள். ஏழைகள் அதிகம் இருப்பதே, கீழ்ஜாதிக்குள்தான் இருக் கிறார்கள்.

நூறு நாள் வேலைத் திட்டத்தில் 

பார்ப்பனர்களா உழைக்கிறார்கள்!

மகாத்மா காந்தி 100 நாள் வேலைத் திட்டத்தில் பணி யாற்றும் பெண்கள், ஆண்கள் எல்லாம் யார்? அவர்கள் எல்லாம் அதானிக்கோ, அம்பானிக்கோ சொந்தக் காரர்களா? எங்கள் சகோதரிகள், எங்கள் தாய்மார்கள், எங்களுடைய பிள்ளைகள், எங்களுடைய தோழர் கள்தானே!

எந்த உயர்ஜாதிக்காரன், எந்தப் பார்ப்பான், எந்த முன்னேறிய ஜாதிக்காரன் - உயர்ஜாதி ஏழைகள் என்று சொல்லுகிறார்களே, அவர்களில் யார் நூறு நாள் வேலைத் திட்டத்தில் பணியாற்றுகிறார்கள் என்பதைக் காட்டுங்கள் பார்ப்போம்.

ஆனால்,  அது செல்லும் - நீதிமன்றத் தீர்ப்பு. அதற்கு ஜாதிவாரி கணக்கெடுப்பு புள்ளிவிவரத்தைக் கேட் டார்களா?

50% இட ஒதுக்கீட்டுக்குமேல் போகக்கூடாது என்றால், உயர்ஜாதியினருக்கு 

10 விழுக்காடு கொடுத்தது எப்படி?

69 சதவிகித இட ஒதுக்கீட்டிற்காக தமிழ்நாடு போராடி, அதில் வெற்றி பெற்று - அதனை நிலைக்க வைத்து - 9 ஆவது அட்டவணை பாதுகாப்பில் வைத்த பிறகு, அதன் கிட்டே போக முடியவில்லை.

ஆனால், 69 சதவிகித இட ஒதுக்கீடு வரும்பொழுது, ‘‘இது என்ன அநியாயம்? 50 சதவிகிதத்திற்குமேல் போய்விட்டதே, இவர்களுக்கு; எப்படி கொடுத்தார்கள்?'' என்று கூப்பாடு போட்டார்கள்.

இப்பொழுது, இவர்களுக்கு, உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகிதம் வருகிறது என்றவுடன், அதைப்பற்றி மூச்சே விடவில்லை. 

சரி, 50 சதவிகிதம் தீர்ந்து போய்விட்டதே, இந்த 10 சதவிகிதத்தை எங்கே இருந்து கொடுக்கிறீர்கள்?

உயர்ஜாதியிலிருந்து கொடுக்கிறோம் என்றார்கள்.

ஏழைகளுக்குக் கொடுக்கிறோம் என்றால், எல்லா ஜாதி ஏழைகளுக்கும் அல்லவா கொடுக்கவேண்டும். அதேபோன்று எல்லோருக்கும் கொடுக்கவேண்டும்.

‘‘அனைவருக்கும் அனைத்தும்'' என்பதுதான் சமூகநீதி.

எவ்வளவு பித்தலாட்டம், எவ்வளவு மோசடி இருக் கிறது என்பதற்கு அடையாளம், நமக்கு 50 சதவிகிதத் திற்குமேலே போனால், தகுதி, திறமை  கெட்டுப்போகிறது என்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு, உயர்ஜாதிக் காரர்களுக்கு வந்தால், அது நியாயமாம்.

இங்கே, உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தவில்லை. காரணம், திராவிட ஆட்சி, ‘திராவிட மாடல்' ஆட்சி நடைபெறு வதால், அதனை நடைமுறைப்படுத்த முடியாது என் பதில் உறுதியாக இருக்கிறார் நம்முடைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

ஆனால், புதுச்சேரியில், உயர்ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியிருக் கிறார்கள். முன்னேறிய ஜாதியினர் என்ற பட்டியலில், 5 சதவிகிதம்தான் மொத்தமே இருக்கிறார்களாம். 5 சதவிகித மக்களுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு.  இது எவ்வளவு பெரிய முரண்பாடு.

இதையெல்லாம் எடுத்துப் பேசவேண்டும்; புரிய வைக்கவேண்டுமே!

இந்த நேரத்தில், இவற்றையெல்லாம் எடுத்து, மக்களிடம் தெளிவாகக் கொண்டுபோய்ச் சேர்க்க வேண்டும் என்ற கவலையோடு, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினுடைய பிற்படுத்தப்பட்டோர் பிரிவு இதனை செய்திருப்பது பாராட்டத்தகுந்ததாகும்.

தோழர்களே, இதனை ஒரே ஒரு கருத்தரங்கத்தோடு நிறுத்தாதீர்கள்; ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற கருத்தரங்குகளை நடத்துங்கள்.

வட மாநிலங்களில் 

பிரச்சாரம் அதிகம் தேவை!

இன்றைக்கு நமக்குப் பெரிய வாய்ப்பாக, அகில இந்திய காங்கிரசின் தலைமை - இளம் தலைமை இந்தக் கருத்தை முன்னிறுத்தி சொல்வதினால், வடபுலத்தில் இந்தக் கருத்தை அதிகமாக மக்களிடம் பரப்பவேண்டும்.

1951 ஆம் ஆண்டு அரசமைப்புச் சட்டத்தின் முத லாவது திருத்தத்தை தந்தை பெரியார் போராடியதின் வாய்ப்பாகக் கொண்டு வந்து, அதனை காமராஜர் செய்தார் என்பதையெல்லாம் இங்கே சொன்னார்கள். தமிழ்நாட்டில் மட்டும்தான் வகுப்புவாரி உரிமை இருந்தது. முதலாவது அரசமைப்புச் சட்டத் திருத்தம் வந்ததால், வழக்கு வந்ததால் என்ன லாபம் என்றால், மறைமுக நன்மை என்னவென்றால், இந்தியா முழுவதும் உள்ள இருக்கின்ற பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அதனால் விடியல் ஏற்பட்டது.

ஆகவே, தமிழ்நாடு, இந்தியாவிற்குக் கொடுத்தது அன்றைக்கு. அதேபோல, இன்றைக்கும் நீங்கள் காங்கிரஸ் கமிட்டியின்மூலமாக, இந்தியா முழுமைக்கும் இதை கொண்டு போய்ச் சேர்க்கக் கூடிய வாய்ப்பை உருவாக்கியிருக்கிறீர்கள்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் இந்தக் கருத்தைச் சொல்லுங்கள்; தெளிவான கருத்துகளைச் சொல்லுங்கள்.

சமூகநீதி என்பது சலுகையல்ல -

சமூகநீதி என்பது பிச்சையல்ல -

சமூகநீதி என்பது நம் பிறப்புரிமை!

ஆகவே, அந்தப் பிறப்புரிமையை வலியுறுத்த வேண்டும் என்றால், எந்த இடத்தில் கண்ணிவெடி வைத் திருக்கிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ளவேண்டும். அந்தக் கண்ணிவெடியைப் புதைத்து வைத்திருக்கின்ற இடம்தான் - ‘‘ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்தாதே'' என்று சொல்வது. அந்தக் கண்ணிவெடியைக் கண்டு பிடித்துத் தூக்கிப் போடுவதுதான் - ஜாதிவாரி கணக் கெடுப்பு என்ற ஏற்பாடு.

ஆகவே, அதை சிறப்பாக செய்துள்ள அத்துணை பேருக்கும் நன்றி!

தென்னாட்டில் பி.ஜே.பி.,க்கு இடமில்லை!

தெளிவாக, இதனை வடநாட்டுக்காரர்களுக்குச் சொல்லவேண்டும்; தென்னாட்டைப் பொறுத்தவரையில் இங்கே பி.ஜே.பி.,க்கு இடமில்லை என்று அனுப்பியாகி விட்டது.

வடநாடும் அதனை செய்யவிருக்கிறது என்பதுதான் மிக முக்கியம்.

இன்னும் 6 மாதங்களில் வரவிருக்கும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் இந்தியா கூட்டணிதான் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கவிருக்கிறது.

இப்பொழுது இவர்கள் செய்யாவிட்டாலும், அப் பொழுது செய்வோம். அன்றைக்கு இதேபோன்று, அழைத்துப் பாராட்டுக் கூட்டம் நடத்துவோம். 

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு உத்தரவுப் போட்ட ஒன்றிய அரசாங்கமே, வாழ்க, வருக! என்று சொல்லக்கூடிய அளவிற்கு வாய்ப்புகளை உருவாக்கு வோம்.

அந்த முயற்சிகளைத் தொடருங்கள், தொய்வில் லாமல் தொடருங்கள்!

வாழ்க பெரியார்!

வளர்க சமூகநீதி!

வருக புதுயுகம்!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கருத்துரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையேற்று அனைவரையும் வரவேற்று உரையாற்றினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் பிற்படுத்தப்பட்டோர் (ஓபிசி) பிரிவுத் தலைவர் டி.ஏ.நவீன் முன்னிலை வகித்தார்.

கருத்தரங்கில் தமிழ்நாடு சிறுபான்மையினர் ஆணை யத்தின் தலைவர் சா.பீட்டர் அல்போன்ஸ், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவர், திருவள்ளூர் மக்களவை உறுப்பினர் டாக்டர் கே.ஜெயக்குமார், மதிமுக பொதுச்செயலாளர், மாநிலங்களவை உறுப்பினர் வைகோ, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் சட்ட மன்ற உறுப்பினர் தி.வேல்முருகன், மனித நேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தமிழ்நாடு மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தமிழ்நாடு மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், இந்திய யூனியன் முசுலீம் லீக் தேசிய தலைவர் பேராசிரியர் கே.எம்.காதர்மொகிதீன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர், சிதம்பரம் மக்களவை உறுப்பினர் தொல்.திருமாவளவன், தி.மு.க அமைப்புச் செயலாளர்  நாடாளுமன்ற மேனாள் உறுப்பினர் டி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோர்  கருத்தரங்க உரையாற்றி னார்கள்.

அகில இந்திய காங்கிரஸ் கட்சி கோவா மாநில பொறுப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நன்றி கூறினார்.

கருத்தரங்கில் நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த், சட்டமன்ற மேனாள் உறுப்பினர் உ.பலராமன், ஆ.கோபண்ணா,  காங்கிரசு கட்சியின் பிற்படுத்தப்பட் டோர் பிரிவு பொறுப்பாளர்கள், மாவட்ட, மாநில பொறுப் பாளர்கள், பல்வேறு கட்சிகள், அமைப்புகளின் பொறுப் பாளர்கள்,  கல்லூரி மாணவர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

 

ஜாதிவாரி கணக்கெடுப்பு மறுப்பு எதிர்க்கட்சிகளின் ஆயுதமாக மாறும்


2024-ஆம் ஆண்டு நடைபெற இருக்கும் தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஓரணியில் திரள வேண்டும் என காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல்காந்தி உள்பட பல்வேறு எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்தக் கூட்டணி இன்னும் உறுதிப்படுத்தப் படவில்லை. அதேசமயம் ஜாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு உச்சவரம்பை அகற்றுவதற்கான கோரிக்கை அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஒரே பக்கத்தில் நிறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியின்போது, 2011-இல் சமூக, பொருளாதார மற்றும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதன் விவரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இந்தக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடவும், அதன டிப்படையில் ஜாதிகளுக்கான இடஒதுக்கீட்டை நிர்ணயிக்க வேண்டும் என்றும் பல்வேறு கட்சிகள் ஒன்றிய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. பீகாரில் ஆளும் 'மகாத்பந்தன்' கூட்டணியில் அங்கம் வகிக்கும் அய்க்கிய ஜனதா தளம் மற்றும் ராஷ்டிரிய ஜனதா தளம், உத்தரப்பிரதேசத்தின் சமாஜ்வாடி கட்சி மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவை ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. தமிழ்நாட்டில் நாமும் வலியுறுத்தி வருகிறோம்.

இந்த நிலையில், காங்கிரஸ் கட்சியும் இதை வலியுறுத்தியுள்ளது. சமீபத்தில் கருநாடகாவின் கோலாரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய ராகுல்காந்தி, "2011-ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட இதர பிற்படுத் தப்பட்டோர் கணக்கெடுப்பு விவரங்களை ஒன்றிய அரசு வெளியிட வேண்டும். ஆனால் பிரதமர் மோடி இதனை ஒரு போதும் செய்யமாட்டார். பிரதமர் மோடிக்கு இதர பிற்படுத்தப் பட்டோர் (ஓபிசியினர்)மீது அக்கறை இல்லை. ஆனால் காங்கிரஸ் அரசு நிச்சயம் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடும்" என்றார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளைத் தொடர்ந்து, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். பா.ஜ.க. தனது வாக்கு வங்கியை ஒருங்கிணைக்க இந்துத்துவா கொள்கையைப் பயன்படுத்த வாய்ப்புள்ளதால், ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் இடஒதுக்கீடு உச்சவரம்பை அகற்றுவது ஆகியவை 2024 தேர்தலில் எதிர்க்கட்சிகளின் முக்கிய கேள்வியாக மாறி யிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். 

இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1872-ஆம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடவடிக்கை தொடங்கப்பட்டது. ஆங்கிலேயர்கள் 1931-ஆம் ஆண்டு வரை இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்திய ஒவ்வொரு முறையும் அதில் ஜாதி தொடர்பான தகவல்களும் பதிவு செய்யப்பட்டன. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு 1951 ஆம் ஆண்டு தனது முதல் மக்கள் தொகைக் கணக்கெடுப்பை நடத்தியபோது, ​​தாழ்த்தப்பட்ட ஜாதியினர் மற்றும்  பழங்குடியினர் மட்டுமே ஜாதியின் பெயரால் வகைப்படுத்தப்பட்டனர்.

 1980களில் ஜாதி அரசியலை அடிப்படையாகக் கொண்ட பல மாநில கட்சிகள் தோன்றியபோது நிலைமை மாறியது.

அரசியலில் உயர்ஜாதியினர் என்று அழைக்கப்படுபவர்களின் மேலாதிக்கத்திற்கு சவால் விடும் வகையில் இந்தக் கட்சிகள், தாழ்த்தப்பட்ட ஜாதியினர் என்று அழைக்கப்படுபவர்களுக்கு அரசு கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு வழங்குவதற்கான பிரச்சாரத்தைத் தொடங்கின.

சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய ஜாதிகளுக்கு இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆராய இந்திய அரசு 1979 ஆம் ஆண்டில் மண்டல் ஆணையத்தை அமைத்தது.

ஓபிசி பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க மண்டல் கமிஷன் பரிந்துரைத்தது. ஆனால் இந்தப் பரிந்துரை 1990 ஆம் ஆண்டு தான் செயல்படுத்தப்பட்டது. இதைத் தொடர்ந்து நாடு முழுவதும் பொதுப்பிரிவு மாணவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரம் இடஒதுக்கீட்டுடன் இணைக்கப்பட்டதால், அரசியல் கட்சிகள் அது தொடர்பான கோரிக்கையை அவ்வப்போது எழுப்பத் தொடங்கின. இறுதியாக 2010இல், ஏராளமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பைக் கோரியபோது, ​​அப்போதைய காங்கிரஸ் அரசு சம்மதித்தது. சமூக-பொருளாதார  - ஜாதிக் கணக்கெடுப்பு 2011 இல் நடத்தப்பட்டது. ஆனால் இதன் மூலம் பெறப்பட்ட ஜாதி தொடர்பான தகவல்கள் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

இதேபோல் கருநாடகாவில் கடந்த 2015-ஆம் ஆண்டு ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இதில் பெறப்பட்ட தரவுகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை.

பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த கடந்த ஆண்டு ஜூன் மாதம் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த ஆண்டு ஜனவரி 7 ஆம் தேதி மாநில அரசு கணக்கெடுப்புப் பணியைத் தொடங்கியது.

இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட உள்ள இந்தப் பணியின் முதல் கட்டத்தை மே 31-ஆம் தேதிக்குள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டத்தில், பீகாரில் வசிக்கும் மக்களின் ஜாதி, துணை ஜாதி மற்றும் சமூக-பொரு ளாதார நிலை தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்படும். பீகார் அரசு நடத்தும் இந்த ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக் கெடுப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஜாதியைக் காப்பாற்றிக் கொண்டு, அதே நேரத்தில் அதன் கணக்கெடுப்பை மறுதலிப்பது பிஜேபியின் மலிவான அரசியலே! உயர்ஜாதி ஆதிக்கம் வெளிச்சத்துக்கு வந்து விடுமோ என்ற அச்சமும்கூட.

 

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் கூடுதலாக ஜாதிகளை சேர்க்க மாநிலங்களுக்கு அதிகாரம் மசோதா மக்களவையில் எதிர்ப்பின்றி நிறைவேறியது


v5

புதுடில்லிஆக.11 இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் எந்தெந்த சாதிகளை சேர்ப்பது என முடிவெடுக்க மாநிலங்களுக்கு அதிகாரம் அளிக்கும் அரசியல் சட்ட திருத்த மசோதா மக்கள வையில் நிறைவேறியதுஇடஒதுக் கீட்டு உச்சவரம்பை நீக்க தி.மு.காங்கிரஸ்உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.

27 சதவீத இடஒதுக்கீட்டுக்கான இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டி யலில் (.பி.சி.) எந்தெந்த சாதிகளை சேர்ப்பது என்பதை முடிவு செய்யும் அதிகாரத்தை மாநிலங்களுக்கு மீண்டும் அளிப்பதற்கான 127ஆவது அரசமைப்பு சட்ட திருத்த மசோ தாவை ஒன்றிய அரசு உருவாக்கி உள்ளதுஇம்மசோதாவை நேற்று முன்தினம் நாடாளுமன்ற மக்கள வையில் ஒன்றிய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் வீரேந்திர குமார் தாக்கல் செய்தார்.

இந்தநிலையில்மக்களவையில் நேற்று (10.8.2021) இந்த மசோதா விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப் பட்டதுஅப்போதுபெகாசஸ் உளவு விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள்அமைதியாக இருக்கைக்கு திரும்பிவிவாதத்தில் பங்கேற்றனர்.

மழைக்கால கூட்டத்தொடரில்இந்த மசோதா மீது மட்டுமே அமைதியாக விவாதம் நடந்ததுஒன்றிய அமைச்சர் வீரேந்திர குமார்இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதாவரலாற்று சிறப்புமிக்கதுஇந்த மசோதாவால் 671 ஜாதிகள் பலனடையும் என்று கூறினார்.

காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிவிவாதத்தை தொடங் கினார்அவர் பேசியதாவது:-

இதர பிற்படுத்தப்பட்டோர் மசோதாவை காங்கிரஸ் முழுமன தாக ஆதரிக்கிறது.

பஞ்சாப்உத்தர பிரதேசம்உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் அரசியல் ஆதாயம் பெறுவதற்காக இதை ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ளது.

தமிழ்நாட்டில் 69 சதவீத இடஒதுக்கீடு அமலில் உள்ளதுஅதே சட்டபூர்வ உரிமையை மற்ற மாநிலங்களுக்கும் வழங்க வேண்டும்மாநிலங்களுடன் பேசி, 50 சதவீதத்துக்கு மேல் இடஒதுக்கீடு அளவை உயர்த்த வேண்டும்.

நலிந்த பொதுப்பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க ஒன்றிய அரசு மசோதா கொண்டு வந்ததுபோல்இடஒதுக்கீட்டில் 50 சதவீத உச்சவரம்பை நீக்க மசோதா கொண்டுவர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தி.மு.சார்பில் பேசிய டி.ஆர்.பாலுவும் இடஒதுக்கீட்டு உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும்அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாடி), லாலன்சிங் (ஐக்கிய ஜனதாதளம்), சுப்ரியா சுலே (தேசியவாத காங்கிரஸ்), ரிதேஷ் பாண்டே (பகுஜன் சமாஜ்ஆகிய உறுப்பினர்களும் 50 சதவீத உச்ச வரம்பை நீக்க வேண்டும் என்றும்சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண் டனர்.

அப்னா தளம் நாடாளுமன்ற உறுப்பினரும்ஒன்றிய அமைச்ச ருமான அனுப்ரியா படேல்அகில இந்திய  மஜ்லிஸ் கட்சி நாடாளு மன்ற உறுப்பினர் அசாதுதின் ஒவைசி ஆகியோரும் இடஒதுக்கீட்டு உச்சவரம்பை நீக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.

அனுப்ரியாஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்தாழ்த்தப்பட் டோர் முஸ்லிம் களுக்கு இட ஒதுக்கீடு அளிக்குமாறு ஒவைசி கோரிக்கை விடுத்தார்சிவசேனாஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர் களும் மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்தனர்.

விவாதம் முடிந்தநிலையில்நேற்று (10.8.2021) இரவு மசோதா மீது ஓட்டெடுப்பு நடந்தது.

386 உறுப்பினர்கள் மசோதா வுக்கு ஆதரவாக வாக்களித்தனர்இதனால் மசோதா நிறைவேறியது.

தமிழ்நாட்டில் ஜாதி வாரி கணக்கெடுப்பு தேவை


காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம்

சென்னை, செப். 13- இடஒதுக் கீட்டின் பலன்கள் மக்களுக்கு துல்லியமாக சென்றடைய தமிழ் நாட்டில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தீர் மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாட்டில் மக்களவைத் தேர் தலை எதிர்கொள்வது தொடர் பாக கட்சியின் மூத்த நிர்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம், மாநிலத் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் சத்தியமூர்த்தி பவ னில் 11.9.2023 அன்று நடை பெற்றது.

கூட்டத்தின் முடிவில் கே.எஸ்.அழகிரி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் மக்களவை தேர்தலுக்கு தயாரா வது தொடர்பாக சோழ மண்டல காங்கிரஸ் வாக்குச்சாவடி உறுப்பி னர்கள், நகர, மாநகர, ஒன்றியத் தலைவர்கள் உள்ளிட்ட நிர்வாகி கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தை கும்பகோணத்தில் அண்மையில் நடத்தி இருந்தோம். 

அடுத்ததாக திண்டுக்கல், தேனி ஆகிய மக்களவைத் தொகுதி நிர் வாகிகள் கூட்டம் 21ஆ-ம் தேதியும், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம் பரம் தொகுதி நிர்வாகிகள் கூட் டம் 24ஆ-ம் தேதியும், திருவள்ளூர் தொகுதிக்கு 30ஆ-ம் தேதியும், விருதுநகர், தென்காசி தொகுதி களுக்கு அக்.8-ஆம் தேதியும், கன்னி யாகுமரி தொகுதிக்கு அக்14ஆ-ம் தேதியும், தூத்துக்குடி, திருநெல் வேலி தொகுதிகளுக்கு அக்.22ஆ-ம் தேதியும் நடைபெற உள்ளன. 

மற்ற தொகுதிகளுக்கான தேதிகள் பின் னர் அறிவிக்கப்படும்.

எப்போதோ எடுக்கப்பட்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி இட ஒதுக்கீடு செயல்படுத்தப் பட்டு வருகிறது. இதன் பலன்கள் துல்லியமாக மக்களுக்கு சென்ற டைவதில்லை.

இட ஒதுக்கீட்டின் பலன்கள் பாரபட்சமின்றி, சமமாக, துல்லி யமாக மக்களை சென்றடைய தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்று இக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விரைவில் முதலமைச்சர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வலியுறுத்துவோம். பிர தமர் மோடி, இந்தியாவின் பெயரை மாற்றி இருக்கலாம்.

ஆனால் ஜி_20 மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் அனை வரும் "இந்தியா" என்று தான் கூறினர். ஒரே நாடு, ஒரே தேர்தலை அமல்படுத்த பிரதமர் மோடி முயற்சிக்கலாம். நாட்டில் சட்டம், நீதிமன்றங்கள் உள்ளன. அதில் அவரது முயற்சி தோற்கடிக்கப் படும். இவ் வாறு அவர் பேசினார்.

இக்கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் ஆருண், பீட் டர் அல்போன்ஸ்,  மாநில துணைத் தலைவர்கள் பொன்.கிருஷ்ண மூர்த்தி, உ.பலராமன், நாடாளு மன்ற உறுப்பினர்கள் செல்லக் குமார், ஜெயக்குமார், மாணிக்கம் தாகூர், விஜய்வசந்த், அசன் மவு லானா உள்ளிட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், மேனாள் நாடா ளுமன்ற உறுப்பினர்கள் பெ.விஸ் வநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

செவ்வாய், 7 நவம்பர், 2023

திருவிழாக்களில் பாகுபாடா? தமிழ்நாடு ஆதி திராவிடர் நலத்துறை ஆணை

Viduthalai  August 03, 2022  தமிழ்நாடு,

 சென்னை, ஆக. 3- மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் நடைபெ றும் திருவிழாக்களில் எவ்விதப் பாகுபாடும் காட்டக் கூடாது என தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் முதன் முறையாக திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் புவிசார் குறியீடு பெறும் நோக்கில் மே 13,14,15 ஆகிய மூன்று நாட் களில், "ஆம்பூர் பிரியாணி திரு விழா 2022” (20க்கும் மேற்பட்ட பிரியாணி வகைகள் மற்றும் 30 க்கும் மேற்பட்ட அரங்குகள்) நடைபெறும் என்று திருப் பத்தூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்திருந்தார்.

இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடை பெற்ற ஆலோசனைக் கூட் டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர், திட்ட இயக்குநர், துணை ஆட்சியர், வட்டாட்சி யர், நகர மன்றத் தலைவர்கள், ஊராட்சி ஒன்றியத் தலை வர்கள், பேரூராட்சித்தலைவர் கள் உட்படப் பலர் பங்கேற் றனர்.

அப்பொழுது பேசிய மாவட்ட ஆட்சியர் அமர் குஷ் வாஹா, ஆம்பூரில் நடை பெறும் பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி தவிர அனைத்து வகையான பிரியாணி வகை களும் கிடைக்கும் என்று தெரிவித்தார். மேலும் இது தொடர் பாக அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பிலும் ஏன் மாட் டிறைச்சி தவிர்க்கப்படுகிறது என்பதற்கான காரணத்தைக் குறிப்பிடவில்லை.

மேற்கண்ட செய்திக் குறிப் பையும் விளம்பரத்தையும் கண்ட ஆம்பூரில் உள்ள தாழ்த் தப்பட்ட அமைப்புகள், இது ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதி ராகக் கடைப்பிடிக்கப்படும் உணவுத் தீண்டாமை என்று எதிர்ப்புக் குரல் எழுப்பியதோடு மட்டுமின்றி, ஒருவேளை அப் படி நடந்தால் தாங்கள் மாவட்ட நிர்வாகம் நடத்தும் பிரியாணி திருவிழாவுக்கு எதிரிலேயே ‘பீப் பிரியாணி' கடைகளை நடத்துவோம் என் றும் அறிவித்தனர்.

இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தொழிலாளர் விடுதலை முன் னணியின் மாநிலத் துணைச் செயலாளர் ஆம்பூரைச்சேர்ந்த சி.ஓம் பிரகாசம், தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் மாநில ஆணை யத்திற்கு 12.05.2022 அன்று கோரிக்கை மனு ஒன்றை அளித்தார்.

அதில் பின்வருமாறு குறிப் பிட்டிருந்தார்:

ஆம்பூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் சுமார் 2 லட்சத்திற்கும் மேற் பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வசித்து வருகிறோம். எங்களின் முக்கிய உணவாகிய மாட்டி றைச்சியை அரசு நடத்தும் விழாவில் அனுமதிக்க மாட் டோம் என்று எங்கள் மீது உணவுத் தீண்டாமையை அதி காரிகள் நிகழ்த்துகின்றனர். ஆட்டிறைச்சி மற்றும் கோழி இறைச்சி சாப்பிடாத மாட்டி றைச்சி மட்டுமே சாப்பிடக் கூடிய எங்களைப் போன்ற வர்கள் அவ்விழாவில் பங்கேற்க முடியாத சூழலை தீண்டா மையை ஒழிக்க வேண்டிய அரசு அதிகாரிகளே உருவாக் குகிறார்கள். இது எங்கள் மீது நிகழ்த்தப்பட்ட உளவியல் ரீதி யான வன்முறையாகவே நாங் கள் உணர்கிறோம். ஆணையம் என்னுடைய புகாரை ஏற்று மாட்டிறைச்சி பிரியாணியை விழாவில் அனுமதித்து நீதி வழங்க வேண்டுமாய் கேட் டுக்கொள்கிறேன்.

-இவ்வாறு அதில் குறிப்பிட் டிருந்தது.

இப்புகாரைப் பரிசீலித்த தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற் றும் பழங்குடியினர் ஆணை யம், "அரசின் மாவட்ட நிர்வா கம் நடத்து கின்ற 20 வகை யான பிரியாணி திருவிழாவில் மாட்டிறைச்சி பிரியாணியை மட்டும் புறக்கணித்து இருப் பது, அங்கு வசிக்கும் ஏறக் குறைய இரண்டு லட்சம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிரான அதி காரப்பூர்வமான பாகுபாடா கும். இதற்கு ஏன் தங்கள் மீது நட வடிக்கை எடுக்கக் கூடாது” என்று விளக்கம் கேட்டு, ஓர் அறிவிக்கையை 12.05.2022 அன்று திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியது.

மேற்கண்ட அறிவிக்கை மின்னஞ்சல் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பப்பட்ட வுடன் மழையைக் காரணம் காட்டி பிரியாணி திருவிழாவை ஒத்திவைப்பதாக ஆட்சியர் அறிவித்தார்.

அதுமட்டுமல்ல, அடுத்த நாள் வெளிவந்த ஆங்கில "தி இந்து ” (13.05.2022) நாளேடுக்கு அளித்த பேட்டியில், "பிரியாணி திருவிழாவை ஒத்தி வைத்து விட்டதால் தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத்தின் உத்தரவு செல்லத்தக்கது அல்ல” என்றும் தெரிவித்திருந்தார்.

மாவட்ட ஆட்சியரின் இத் தகைய பேட்டி ஆணையத்தை அவமதிப்பதாக அமைந்துள் ளது; இதற்கென அவர்மீது தனி நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றாலும் ஒரு மாவட்டத்தின் தலைமை நிர்வாகப் பொறுப்பை அவர் வகிப்பதால் மக்கள் மத்தியில் அவருடைய மதிப்பு குறைந்து விடக்கூடாது என்ற அடிப் படையில் ஆணையம் அத்த கைய நடவடிக்கை எதையும் மேற்கொள்வதைத் தவிர்த்து விட்டது.

மேலும், ஆணையத்தின் அறிவிக்கைக்கு 07.06.2022 அன்று பதில் அறிக்கை அனுப் பிய திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர், ஆணையம் தனது அறிவிக்கையில் குறிப்பிட்டி ராத பன்றி இறைச்சியைப் பற்றி கருத்து தெரிவித்திருக் கிறார். பிரியாணி செய்வதற்காக பன்றி இறைச்சி எங்குமே பயன்படுத்தப்படுவதில்லை என்றாலும். ஆம்பூரில் உள்ள முஸ்லிம் மக்களின் ஆதரவைப் பெறுவதற்காக இத்தகைய தொரு வாதத்தை ஆட்சியர் முன் வைத்திருந்தார்.

எனினும் அவர் எதிர்பார்த்த எந்த விளைவையும் அது ஏற்படுத்தவில்லை. எது எப்படி இருப்பினும் சர்ச்சைக்குரிய பிரியாணி திருவிழாவில் மாவட்ட நிர்வாகம் ஜாதி ரீதியாக மக்களிடம் பாகுபாடு காட்டவில்லை என்ற ஆட் சியரின் பதிலை ஆணையம் ஏற்கிறது.

திருப்பத்தூர் மாவட்ட ஆட் சியரின் பதிலை ஆணையம் ஏற்றுக் கொண்டாலும், அரசு ஏற்பாடு செய்யக்கூடிய பிரி யாணி திருவிழாவில் மாட்டி றைச்சி பிரியாணி தவிர்க்கப் படக் கூடாது என்பதையும், அப்படித் தவிர்த்தால் அது பாகுபாட்டுக்கு வழி வகுக்கும் என்பதையும் சுட்டிக்காட்டி, இனிவரும் காலங்களில் நடை பெறும் திருவிழாக்களில் மாவட்ட நிர்வாகம் பாகுபாட் டுக்கு வழிவகுக்கக் கூடாது என்ற உத்தரவை தமிழ்நாடு ஆதி திராவிடர் மற்றும் பழங் குடியினர் மாநில ஆணையம் பிறப்பிக்கிறது.

ஆணையத்தின் இவ்வுத் தரவு, தலைமைச் செயலர், உள் துறைச் செயலர் மற்றும் அனைத்து மாவட்டங்களில் உள்ள உயர் அதிகாரிகளுக்கும் அனுப்பப்படுகிறது.

இவ்வாறு ஆதிதிராவிடர் பழங்குடியினர் மாநில ஆணை யம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.