பக்கங்கள்

செவ்வாய், 31 ஜனவரி, 2017

69% இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கவேண்டும்




சென்னை, செப்.24_ தமிழ்நாட்டில் 69 சத விகித இட ஒதுக்கீட்டைக் காப்பாற்றவேண்டும் என்று விடுதலை சிறுத் தைகள் கட்சியின் தலை வர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அறிக்கை வருமாறு:

தமிழ்நாட்டில் நடை முறையிலிருக்கும் 69 விழுக்காடு இடஒதுக்கீட் டைப் பாதுகாக்க சமூக நீதியில் அக்கறை உள்ள அனைத்து இயக்கங்களும் முன்வரவேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.

இந்தியாவிலேயே, தமிழ்நாட்டில்தான் 69 விழுக்காடு இடஒதுக்கீடு நடைமுறையில் உள்ளது.  மண்டல் குழு தொடர் பான உச்சநீதிமன்றத் தீர்ப்பில் இடஒதுக்கீட்டின் அளவு 50 விழுக்காட் டிற்குமேல் போகக் கூடாது என கூறப்பட் டது. அதற்குப் பிறகு வந்த பல்வேறு உச்சநீதிமன்றத் தீர்ப்புகளும் இந்த 50 விழுக்காட்டு வரம்பை உறுதிப்படுத்தியுள்ளன.  அதை மாற்றுவதற்கு நாடாளுமன்றத்தில் சட் டம் எதுவும் இயற்றப் படாத நிலையில் உச்ச நீதிமன்றம் விதித்த அந்த வரம்பே தற்போது ஏற்றுக் கொள்ளப்பட்ட நியதி யாக விளங்குகிறது.

இடஒதுக்கீடு தொடர் பான உச்ச நீதிமன்றத்தின் வரம்புக்கு அதிகமாக தமிழகத்தில் இடஒதுக்கீடு வழங்கப்பட்டு வருவதை எதிர்த்து வழக்குத் தொடுக் கப்பட்டபோது அன் றைக்கு முதல்வராக இருந்த செல்வி ஜெய லலிதா அவர்கள் இட ஒதுக்கீடு தொடர்பான தமிழக சட்டத்திற்குப் பாதுகாப்பு அளிக்கும் பொருட்டு அதனை அர சமைப்புச் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில் சேர்க்கச் செய்தார்.  ஆனால், 2007ஆம் ஆண்டு ஜனவரி 11 ஆம் நாள் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் 1973ஆம் ஆண் டுக்குப் பிறகு 9 ஆவது அட்டவணையில் சேர்க் கப்பட்ட எந்தவொரு சட்டத்தையும் உச்சநீதி மன்றம் ஆய்வு செய்து ரத்து செய்யலாம் என்று கூறிவிட்டது.  அதன் விளைவாக, 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக சட்டத்திற்கு இருந்த பாதுகாப்பு பறிக் கப்பட்டு விட்டது.

இந்நிலையில், உச்ச நீதிமன்றம் இது தொடர் பாக இரண்டு வாரத்திற் குள் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நேற்று  உத்தரவிட்டுள்ளது. தற் போதுள்ள அரசியல் சூழலில் 69 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் சட்டத் திற்கு ஆபத்து ஏற்பட் டுள்ளது.  இதனைக் கவ னத்தில்கொண்டு இந்தச் சட்டத்தைப் பாதுகாத்தி டவும் சமூகநீதியைக் காப்பாற்றிடவும் உடன டியாக கவனம் செலுத்த வேண்டுமென தமிழக அரசையும், சமூகநீதி யின்பால் பற்றுக்கொண்ட இயக்கங்களையும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கேட்டுக்கொள் கிறது.

இடஒதுக்கீட்டின் அளவை தீர்மானித்துக் கொள்ளும் அதிகாரம் மாநில அரசுகளுக்கே வழங்கப்பட வேண்டும். உச்சநீதிமன்றம் 9 ஆவது அட்டவணை தொடர் பாக வழங்கிய தீர்ப்பை மறு ஆய்வு செய்வதற்கு மத்திய அரசு முன்வர வேண்டும்.  இந்தக் கருத் துக்களை வலியுறுத்திடு மாறு அனைவரையும் வேண்டுகிறேன்.

இவ்வாறு திருமா வளவன் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பு: இது குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின் படி அனைத்துக் கட்சிக் கூட்டம் சென்னை பெரியார் திடலில் வரும் 30 ஆம் தேதி காலை 10.30 மணிக்கு நடைபெற உள்ளது!
--விடுதலை,24.9.14

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக