பக்கங்கள்

ஞாயிறு, 2 செப்டம்பர், 2018

69 விழுக்காடு

69 விழுக்காடு ஒன்றும் அதிகமல்ல!

இந்த இட ஒதுக்கீடு (கல்வி - வேலை வாய்ப்புகளில்) 69 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது  - அதிக எண்ணிக்கையே அல்ல; அவர்களது மொத்த ஜனத்தொகையைக் கணக்கிடும் போது இது குறைவுதான்! 100-க்கு 3 பேர்களாகவும் (உ.பி., உத்தரகாண்ட்டில் - மட்டும் 9 முதல் 12 விழுக்காடு வரை பார்ப்பனர் - வடநாட்டில் 10, 5 விழுக்காடு முன்னேறிய ஜாதியினர்) தென்னாட்டில் நால் வருண அமைப்பில் இடையில் உள்ள இரண்டு அமைப்புகளான சத்திரியர், வைசியர்' என்ற பிரிவே இல்லை (நீதிமன்றங்களே ஒப்புக்கொண்ட தீர்ப்பு ஆனபடியால்) சுமார் 10, 15 சதவிகிதம்தான் வடமாநிலங்களில் உண்டு.

69 சதவிகித இட ஒதுக்கீட்டை அளிக்கும் 76 ஆம் அரசியல் சட்டத் திருத்தம் - 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் அமைந்துள்ள சட்ட அங்கீகாரம் பெற்றது.

அதை செல்லுபடியற்றதாக்கிட பார்ப்பனர்களும் மற்ற முன் னேறிய ஜாதியினராகிய பார்ப்பன அம்புகளும் உச்சநீதிமன் றத்திற்கு சதா படையெடுப்பது, மூக்குடைபடுவது - தொடர்கிறது. (ஏற்கெனவே உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ஜஸ்டீஸ் கபாடியா தலைமையில் இது செல்லும் என்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது).

. சட்டத்தில் 'Res Judicata' என்ற ஒரு அம்சம் உண்டு; போட்ட வழக்கினையே - அது விசாரணையில் தள்ளுபடி செய்து விட்ட பிறகு, மீண்டும் போட்டு கோர்ட்டுகளின் மதிப்புமிகு நேரத்தை வீணடிக்கக் கூடாது.

சட்டப்படி அது தவறு; செல்லாத ஒன்றாகும்.

2. 9 ஆவது அட்டவணைப் பாதுகாப்புடன் உள்ள சட்டம் இந்த சட்டம். இந்திய அரசியல் சட்டத்தின் 9 ஆவது அட்டவணையில்   257 A - The Tamil Nadu Backward Classes, Scheduled Castes and Scheduled Tribes (Reservation of Seats in Educational Institutions and of Appointments or Posts in the Services Under the State) Act, 1993 (Tamilnadu act 45 of 1994) என்ற பாதுகாப்புடன் 76 ஆவது அரசியல் சட்டத் திருத்தமாக Constitution (Seventy - Sixth Amendment) Act 1994 - Sec 2 (w.e.f) 31.8.1994) இதன் பிறகு நியாயமாக இதை விசாரிக்கவே உச்சநீதிமன்றம் உள்பட எந்த நீதிமன்றமும் எடுத்துக் கொள்ளக்கூடாது.

அதையும்மீறி, எடுத்துக்கொண்ட சில வழக்குகளில் உச்சநீதி மன்றமே, ‘'Once a matter is settled it cannot be unsettled again''   முடிவு செய்துவிட்ட ஒரு விஷயத்தை மீண்டும் கிளப்புவதும் முடியாது, கூடாது'' என்று கூறிய நிலையில், திரும்பத் திரும்ப ஏன் இந்தக் கண்ணாமூச்சி விளையாட்டு? புரிந்துகொள்ளுங்கள், ஆதிக்கவாதிகளின் சட்ட அட்டகாசத்தை!

- கி.வீரமணி அறிக்கையின் பகுதி

- விடுதலை நாளேடு, 23.8.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக