பக்கங்கள்

வெள்ளி, 30 நவம்பர், 2018

மதுரைக் கோவில் நுழைவும் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட சாந்து பட்டரின் குடும்பமும்

மதுரைக் கோவில் நுழைவும் ஜாதிப் பிரஷ்டம் செய்யப்பட்ட சாந்து பட்டரின் குடும்பமும்
--------------------------------------------------------------------




1939ஆம் ஆண்டு ஜூலை 8ஆம் தேதி காலை ஐந்து ஒடுக்கப்பட்டவர்களையும் ஒரு நாடாரையும் அழைத்துக்கொண்டு தமிழ்நாடு அரிஜன சேவா சங்கத்தைச் சேர்ந்த இரண்டு மேல் ஜாதி அதிகாரிகள் மீனாட்சியம்மன் திருக்கோவிலுக்குள் நுழைந்தனர். கோவிலின் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். நாயுடுவும் பிற ஊழியர்களும் அவர்களை வரவேற்று மீனாட்சி சன்னதிக்கு அழைத்துச் சென்று சாமியைக் கும்பிட வைத்தனர்.
அதற்கு அடுத்த நாள் , ஜூலை 9ஆம் தேதி முத்து சுப்பர் பட்டர் என்பவர் காலை வழிபாட்டை முடித்துவிட்டு , மாலையில் கதவுகளைத் திறக்க மறுத்தார். சுத்தீகரண சடங்குகளைச் செய்யாமல் கோவில் கதவுகளைத் திறக்க முடியாது என்று கூறினார். சாவிகளைப் பெற நிர்வாக அதிகாரி செய்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
வெளியூருக்குச் சென்றிருந்த சாந்து பட்டர் என்பவர் அன்று இரவு ஊர் திரும்பினார். அடுத்த நாள் காலையில் கோவில் பூட்டுகள் உடைக்கப்பட்டு, பூஜைகள் நடைபெற்றன. இதற்குப் பிறகு பூஜைக்கு வராத பட்டர்கள் அனைவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். கிட்டத்தட்ட சாந்து பட்டரைத் தவிர மற்றவர்கள் அனைவரும் நீக்கப்பட்டனர். திருநெல்வேலியிலிருந்து பட்டர்கள் அழைத்துவரப்பட்டு பூஜைகள் நடந்தன.
1939லிருந்து 1945வரை இந்த பட்டர்கள் கோவிலிலிருந்து நீங்கியிருந்தனர். இது தொடர்பாக பல வழக்குகள் தொடரப்பட்டு, முடிவில் சமரச ஏற்பாடு செய்யப்பட்டது. அதன்படி, 'சுத்தீரகணச் சடங்கு ஏதும் செய்யப்பட மாட்டாது. நிர்வாக அதிகாரியின் உத்தரவே இறுதியானது' போன்ற நிபந்தனைகளை ஏற்று 1945ல் பட்டர்கள் திரும்பவும் கோவிலுக்குள் வந்தபோது, அவர்களுக்கு நிர்வாகத்திலும் கோவிலுக்குள் தங்கள் நிலையிலும் பழைய செல்வாக்குக் கிடைக்கவில்லை. ஆனால், சாந்து பட்டரின் குடும்பம் ஒதுக்கிவைக்கப்பட்டது.
யார் இந்த சாந்து பட்டர்?
-----------------------------------
சாந்து பட்டர் என்பது எல்லோரும் அவரை அழைக்கும் பெயர். அவருடைய முழுமையான பெயர் சாமிநாதபட்டர். அவருடைய மனைவியின் பெயர் விஜயலட்சுமி. இவருடைய பிறப்பு - இறப்பு குறித்த முழுமையான விவரம் தெரியவில்லை. இவர்களுக்கு பிச்சை பட்டர், கல்யாணசுந்தரம், சுப்பிரமணியன், சதாசிவம் என நான்கு மகன்கள். இதில் முதல் மகன் திருப்பரங்குன்றத்தில் ஒருவருக்கு சுவீகராம் செய்துதரப்பட்டுவிட்டார். 
மதுரைக் கோவிலில் திருமேனிகளுக்கு பூஜைசெய்யும் 40 வீட்டு பட்டமார்களில் அதிகம் படித்தவர் சாந்து பட்டரே. அந்த காலகட்டத்திலேயே பத்தாம் வகுப்புக்கு இணையான படிப்பை முடித்திருந்தார். மிக நேர்மையானவர். மனிதர்கள் அனைவரும் சமமென நினைத்தவர்.
ஆனால், கோவில் நுழைவுக்கு ஆதரவாக இருந்ததால், சக பட்டர்களால் மரணம் வரை இவர் ஒதுக்கிவைக்கப்பட்டார்.
"அவர் இந்தத் தெருவில் நடந்துவந்தால் அவர் மீது சாணியைக் கரைத்து ஊற்றுவார்கள்" என்கிறார் அவருடைய மகன் சுப்பிரமணியன். ஒரு முறை தன் தந்தை சாந்து பட்டரிடம், இப்படி பிரச்சனை வருமெனத் தெரியுமில்லையா, எதற்காக ஒடுக்கப்பட்டவர்களை கோவிலுக்குள் அனுமதிக்கும் விவகாரத்தில், கோவில் நிர்வாகத்திற்கு ஆதரவாக இருந்தீர்கள் என சுப்பிரமணியன் சாந்து பட்டரிடம் கேட்டார்.
"ஹரிஜனும் பக்தன்தானே. அவா உள்ள வர்றது நேக்கு தப்பா தெரியலைப்பா" என்றாராம் சாந்து பட்டர்.
இந்த விவகாரத்தில் பெரும் துணையாக நின்ற ராஜாஜி, கவர்னர் ஜெனரலாக இருந்தபோது மதுரை வந்தார். அப்போது சாந்து பட்டரை சந்திக்க விரும்பினார். கோவில் நுழைவுப் போராட்டத்தில் முன்னணியில் நின்ற வைத்தியநாதய்யர், சாந்து பட்டரை அழைத்துச் சென்றார்.  செல்லும் வழியில் "கவர்னர் ஜெனரலைப் பார்க்கும்போது, பசங்களுக்கு ஏதேனும் வேலை கேளுப்பா" என்றார் வைத்தியநாதய்யர். ஆனால், அதற்கு மறுத்துவிட்டார் சாந்து பட்டர். "அவங்க படிச்ச படிப்புக்கு வேலை கிடைச்சா போறும்" என்றாராம்.
கோவில் நுழைவு நியாயமெனக் கருதியதோடு, அந்த முயற்சியில் கோவிலின் நிர்வாக அதிகாரி ஆர்.எஸ். நாயுடுவுக்கும் உறுதுணையாக இருந்த சாந்து பட்டர் சாகும்வரை தன் ஜாதியினரால் புறக்கணிக்கப்பட்டிருந்தார். பட்டர்களின் வீடுகளில் நடக்கும் எந்த நல்லது கெட்டதுக்கும் அவருக்கு அழைப்பு வராது. இவர்கள் வீட்டு விசேஷத்திற்கு யாரும் வரமாட்டார்கள்.
சாகும்வரை புறக்கணிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டு, தனிமரமாக இருந்து இறந்துபோனார் சாந்து பட்டர்.
சி.ஜே. ஃபுல்லர் எழுதிய Servants of the Goddess: The Priests of a South Indian Temple புத்தகத்தில் சாந்து பட்டரைப் பற்றிய குறிப்புகள் இருக்கின்றன. ஆனால், அவரது புகைப்படம் இல்லை.
அவரது சந்ததிகளைத் தேடிப்பிடித்து, சாந்து பட்டர் என்ற சாமிநாதபட்டரின் புகைப்படத்தைக் கண்டெடுத்தேன். அவரது புகைப்படம் வெளியாவது இதுவே முதல் முறையென நினைக்கிறேன்.
கோவில் நுழைவுக்கு ஆதரவாக இருந்ததால், செய்யப்பட்ட ஒதுக்கல் இப்போதும் தொடர்கிறதா? இதைப் பற்றி அடுத்த பதிவில் எழுதுகிறேன்.
--------------------------------------------------
படம் 1. சாந்து பட்டர் என்ற சாமிநாத பட்டர்.
படம் 2. சாந்து பட்டர் வசித்த வீட்டில் இருந்த கல்வெட்டு.
படம் 3. மதுரைக் கோவில் நுழைவின்போது எடுக்கப்பட்ட படம்.
நன்றி: Muralidharan Kasi Viswanathan

வியாழன், 22 நவம்பர், 2018

பார்ப்பன சாம்ராஜ்யம்

*பார்ப்பன சாம்ராஜ்யம் 2 மாத கடின உழைப்பிற்குப் பிறகு இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பார்ப்பன மக்கள் தொகை எவ்வளவு உள்ளதென்பதை அறிய முயற்சித்துள்ளது. இதனடிப்படையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.பார்ப்பனர்கள் தங்கள் பலமறிந்து ஒற்றுமையாக செயலாற்றுவார்கள்*
(1) ஜம்மு காஷ்மீர் : 2 லட்சம் + 4 லட்சம் புலம் பெயர்ந்தவர்கள்.
(2) பஞ்சாப் : 9 லட்சம் பார்ப்பனர்கள்.
(3) ஹரியானா : 14 லட்சம் பார்ப்பனர்கள்
(4) ராஜஸ்தான் : 78 லட்சம் பார்ப்பன..
(5) குஜராத் : 60 லட்சம் பார்ப்பன..
(6) மஹாராஷ்ட்ரா : 45 லட்சம்.
(7) கோவா : 5 லட்சம்.
(8) கர்நாடகா : 45 லட்சம்.
(9) கேரளா : 12 லட்சம்.
(10) தமிழ் நாடு : 36 லட்சம்.
(11) ஆந்திரா : 24 லட்சம்.
(12) சத்தீஷ்கர் : 24 லட்சம்.
(13) ஒரிசா : 37 லட்சம்.
(14) ஜார்கன்ட் : 12 லட்சம்.
(15) பீஹார் : 90 லட்சம்.
(16) மேற்கு வங்கம் : 18 லட்சம்.
(17) மத்திய பிரதேசம் : 42 லட்சம்.
(18) உத்திரபிரதேசம் : 2 கோடி பார்ப்பனர்கள்.
(19) உத்தராகன்ட் : 20 லட்சம்.
(20) இமாச்சல் : 45 லட்சம்.
(21) சிக்கிம் : 1 லட்சம்.
(22) அஸ்ஸாம் : 10 லட்சம்.
(23) மிசோரம் : 1.5 லட்சம்.
(24) அருணாச்சல் : 1 லட்சம்.
(25) நாகாலந்து : 2 லட்சம்.
(26) மணிப்பூர் : 7 லட்சம்.
(27) மேகாலயா : 9 லட்சம்.
(28) திரிபுரா : 2 லட்சம்.

மொத்தத்தில்= 850 லட்சம்.

*இந்திய மக்கள் தொகையில் 5%*....

பாரப்பனர்கள் அதிகம் உள்ள மாநிலம் := உத்திரபிரதேசம்.

பார்ப்பனர்கள் குறைவாக வாழும் மாநிலம் := சிக்கிம்.

பார்ப்பன..ஆதிக்கம் அரசியலில் அதிகமுள்ள மாநிலம் := மேற்கு வங்கம்.

பார்ப்பன...அதிகமுள்ள மாநிலம் : ஜார்கண்ட் மாநில மக்கள் தொகையில் 20% பார்ப்பன....

பொருளாதாரத்தில் பார்ப்பன...பின்தங்கிய மாநிலம் := கேரளா மற்றும் பொருளாதாரத்தில் வலிமையாக உள்ள மாநிலம் := அஸ்ஸாம்.

பார்ப்பன...அதிகமாக முதலமைச்சர்களான மாநிலம் := ராஜஸ்தான்.

பார்ப்பன  MP க்களை அதிகம் கொண்ட மாநிலம் := உத்திரபிரதேசம்

லோக்சபாவில் பார்ப்பனர்கள் := 48%

ராஜ்யசபாவில் பார்ப்பனர்கள் := 36%

பார்ப்பன கவர்னர்கள் := 50%

பார்ப்பன கேபினெட் செயலர்கள் := 33%

மந்திரிகளின் செயலர்களில் பார்ப்பன...54%

இந்திய தலைமைச் செயலர்களில் பார்ப்பன....62%

பர்சனல் செகரட்டரிகளில் பார்ப்பன...70%

*அரசியலில் = 58.7 %*

பல்கலைக்கழகங்களில் பார்ப்பன வாய்ஷ் சான்ஷ்லர்கள் := 51%

சுப்ரீம் கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 56%

ஹை கோர்ட்டில் பார்ப்பன நீதிபதிகள் := 40%

வெளிநாட்டு தூதர்களில் பார்ப்பனர்தள் := 41%

பப்ளிக் அன்டர்டேகிங் துறைகளில் பார்ப்பன...மத்திய அரசில் := 57%, மாநில அரசுகளில் := 82%

வங்கிகளில் பார்ப்பனர்கள் := 57%

ஏர்லைன்ஷ் சில் பார்ப்பனர்கள் := 61%

IAS ல் பார்ப்பனர்கள் := 72%

IPS ல் பார்ப்பனர்கள் := 61%
தொலைக்காட்சி கலைஞர்கள் மற்றும் பாலிவுட்டில் := 83%

CBI மற்றும் Custom  சில் பார்ப்பனர்கள் := 72%

*அரசின் முக்கிய துறையில் பார்பனர்கள் வேலை செய்வது = 61.8%*

*இட ஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் முழு இடங்களையும் திருட்டு தனமாக ஆக்கிரமித்துக் கொண்டுள்ளனர்*

இது எப்படி *சாத்தியம்* என யோசித்தால் புரியும் பார்ப்பனன் *சூழ்ச்சி*

இச்செய்தியை ஒவ்வொரு குடிமக்களிடமும் சுனாமியைப் போல பரப்புங்கள். இதையறிந்த பிறகாவது உண்மையுணர்ந்து ஒற்றுமை உண்டாகட்டும்!!
நன்றி: சுப்பிரமணியம் ராமசாமி

வியாழன், 15 நவம்பர், 2018

இந்தியாவா? ஹிந்துஸ்தானா?



1) Hindustan Petroleum Corporation Ltd.
2) Hindustan Lever Ltd.
3) Hindustan Zine Ltd.
4) Hindustan Telephone Ltd.
5) Hindustan Ship yard Ltd.
6) Hindustan Cable Ltd.
7) Hindustan Paper Corporation Ltd.
8) Hindustan Copper Ltd.
9) Hindustan Handicarfts
10) Hindustan Safety Glass Works
11) Hindustan Iron & Streel Co. 
12) Hindustan Antibiotics Ltd.
13) Hindustan Aeronutics Ltd.
14) Hindustan Machine Tools Ltd.
15) Hindustan Vegetable 
Oil Corportaion Ltd.
16) Hindustan Organic Chemicals Ltd.
17) Hindustan Motors Ltd.
18) Hindustan Instruments Ltd.
19) Hindustan Latex Ltd.
20) Hindustan Insecticides Ltd.
21) Hindustan Newsprint Ltd.
22) Hindustan Photo Film Ltd.
23) Hindustan Foods Ltd.
24) Hindustan Steel 
Authority of India Ltd.
25) Hindustan Univerisity
Federation in Book and 
Unitary in practice

புத்தகத்தில் கூட்டாட்சி நடை முறையில் ஒற்றை ஆட்சி. வடவர்கள் நல்லவர்கள் அல்ல, நம்மவர்களும் அல்ல என்று  அறிஞர் அண்ணா கூறியது நூற்றுக்கு நூறு சரி என்று தெரிகிறது அல்லவா?

தகவல்: கல்பாக்கம் வ.வேம்பையன்

மறைமலை நகர்

- விடுதலை ஞாயிறு மலர், 10.11.18

பார்ப்பனப் பண்ணையம்

நாடு ஏன் கடந்த நாலாண்டில் நாசமாகப் போனது .


மோடி ஏன் நாட்டை வீழ்த்தினார் . இதோ வீழ்த்தியவர்கள் விவரம்:-

1. குடியரசு தலைவரின் செயலகத்தின் மொத்த இடுகைகள் 49.

இவர்களில் 39 பிராமணர்கள்.

எஸ்சி -எஸ்டி - 4. ஓ.பி.சி.-06

2. குடியரசு துணைத் தலைவரின் செயலகத்தின் பதவிகள். 7

7 பதவியிலும் பிராமணர்கள் இருக் கிறார்கள்.

எஸ்சி -எஸ்டி -00. ஓ.பி.சி. -00

3. கேபினட் செயலாளர் பதவிகள் 20.

பிராமணர்கள். 17

எஸ்சி -எஸ்டி - 01 . ஓ.பி.சி.-02

4. பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதவிகள்.

பிராமணர்கள். 31

எஸ்சி -எஸ்டி-02. ஓபிசி- 02

5. விவசாயத் திணைக்களத்தின் மொத்த இடுகைகள் - 274.

பிராமணர்கள்.  259

எஸ்சி -எஸ்டி -05. ஓ.பி.சி.-10

6. அமைச்சகத்தின் மொத்த இடு கைகள் -1379

பாதுகாப்பு அமைச்சகம் 1379.

பிராமணர்கள். 1300

எஸ்சி -எஸ்டி- 48. ஓ.பி.சி. -31

7. சமூக நல & சுகாதார அமைச்ச கத்தின் மொத்த இடுகைகள் 209.

பிராமணர்கள். 132

எஸ்சி -எஸ்டி- 17.  ஓ.பி.சி. -60

8. நிதி அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 1008.

பிராமணர்கள். 942

எஸ்சி -எஸ்டி- 20. ஓ.பி.சி.-46

9.  பிளானட் அமைச்சகத்தில் மொத்தம் 409 பதவிகள்.

பிராமணர்கள். 327

எஸ்சி -எஸ்டி-19.  ஓ.பி.சி.-63

10. தொழில் அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 74.

பிராமணர்கள். 59

எஸ்சி -எஸ்டி- 4.  ஓ.பி.சி. -9

11. கெமிக்கல்ஸ் மற்றும் பெட் ரோலிய அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 121. பிராமணர்கள்.  99

எஸ்சி -எஸ்டி-00. ஓ.பி.சி. -22

12. கவர்னர் மற்றும் லெப்டினன்ட்

கவர்னர் ஒட்டுமொத்தம் - 27

பிராமணர்கள். 25

எஸ்சி -எஸ்டி-00. ஓ.பி.சி. -2

13. தூதுவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் 140.

பிராமணர்கள். 140

எஸ்சி -எஸ்டி -00. ஓ.பி.சி.-00

14. மத்திய அரசு பல்கலைக்கழக துணைவேந்தர் 108.

பிராமணர்கள்.  100

எஸ்சி -எஸ்டி-03. ஓ.பி.சி- 05

15. மத்திய பொதுச் செயலாளர்

பதவிகள் 26.

பிராமணர்கள். 18

எஸ்சி -எஸ்டி - 01.  ஓ.பி.சி.-7

16. உயர் நீதிமன்ற நீதிபதி 330.

பிராமணர்கள்.  306

எஸ்சி -எஸ்டி- 04.  ஓ.பி.சி. -20

17. உச்ச நீதிமன்ற நீதிபதி 26.

பிராமணர்கள். 23

எஸ்சி -எஸ்டி-01: ஓ.பி.சி.-02

18. மொத்த அய்ஏஎஸ் அதிகாரி 3600.

பிராமணர்கள். 2750

எஸ்சி -எஸ்டி-300 . 350 ஓ.பி.சி..

கோயில்கள், ஜோதிடம், எதிர்காலம் போன்றவை ஒரே பிராமணர்களில் 100% ஆகும். நாட்டின் மக்கள் தொகையில்

3%க்கும் குறைவான பிராமணர்கள் எவ்வாறு 90% பதவிகளைப் பெற்றனர்?

கடவுள் மதத்தின் பெயரிலா ?

மூட நம்பிக்கையின் பெயரிலா ?

அல்லது அது நம்முடைய காரியமா ?

அதை யோசியுங்கள் ...

3 விழுக்காடு பெரியதா? 97 விழுக்காடு பெரியதா?

ஆண்டாண்டு காலமாக 3விழுக்காடே பெரிதாக எங்கள் வாழ்க்கை நடைமுறை.

சகோதரர்களே, இதை முடிந்த அளவுக்கு பகிர்ந்து கொள்ளுங்கள்.

பிராமணர்களின் நிறத்தை விளக் குங்கள். அரசியலமைப்பு ஒதுக்கீட்டை பாதுகாக்கவும்.

(டில்லியினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம், 'யங் இந்தியா' எனப் படும் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2018 ஆம் ஆண்டில் கிடைக்கிறது இத்தகவல்)

தகவல்:

டாக்டர் சோம.இளங்கோவன்

- விடுதலை ஞாயிறு மலர், 10.11.18

புதன், 14 நவம்பர், 2018

வகுப்புரிமை வரலாறு

ஒரு நண்பரின் பின்னூட்டத்திற்கு பதிலளிக்க எழுதினேன். தனிப் பதிவாக நீண்டுவிட்டது. இது வரலாற்று பெருவெள்ளத்தின் சிறுஅளவே. வாசியுங்கள் வரலாற்றை!
*************************
#வகுப்புரிமை
#முதல்_அரசானை
இந்தியா முழுவதும் சமூகநீதிக்கான குரல் பல ஆண்டுகளாக எழுப்பப்பட்டு வந்தாலும் சென்னை மாகாணத்தை பொறுத்தவரை
இரட்டையாட்சி நிர்வாகத்தின் கீழ் அமைந்த நீதிக்கட்சியின் ஆட்சி் 16/09/1921அன்று முதல் வகுப்புரிமை ஆணையை வெளியிட்டது. ஆனால் ஆதிக்க சாதியினரின் முட்டுக்கட்டையால்  இதை முழுமையாக நடைமுறைப்
படுத்த இயலவில்லை.

#காங்கிரசிற்கு_நிபந்தனை
அதே காலகட்டத்தில்... சட்டமன்றத்திற்குள் நுழைந்து நிர்வாக பொறுப்பை ஏற்கவேண்டும் என்ற குரல்கள் காங்கிரசு கட்சியில் ஒலிக்கத் துவங்கியிருந்தது. ஈரோடு நகர் மன்றத் தலைவராக இருந்து அதோடு சேர்த்து பல்வேறு பதவிகளை உதறிவிட்டு  காங்கிரசில் சேர்ந்த பெரியார் சேரும்போதே எதிர்காலத்தில் காங்கிரசு கட்சி தேர்தலில் போட்டியிடும் நிலையை எடுத்தால் பார்ப்பனரல்லாத மக்களுக்கு உரிய வகுப்புவாரி பிரதிநிதித்துவம் கொடுக்கப் படவேண்டும் என்ற நிபந்தனையுடன் காங்கிரசில் சேர்ந்தார்.

இதே கோரிக்கையை 1922, 1923,1924 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற காங்கிரசு மாநாடுகளில் தீர்மானமாக முன்வைத்த நிலையில் தொடர்ந்து பார்ப்பன தலைவர்களால் வஞ்சகமாக முறியடிக்கப்பட்டு இறுதியாக 1925 காஞ்சிபுரம்  மாநாட்டிலிருந்தும், காங்கிரசு கட்சியிலிருந்தும்  வெளியேறினார் பெரியார்!

#முத்தையாவின்_அரசானை
நீதிக்கட்சி ஆதரவுடன் அமைக்கப்பட்ட டாக்டர் சுப்பராயன் ஆட்சியில் பத்திரப் பதிவுத்துறை அமைச்சராக இருந்த முத்தையா முதலியார் வகுப்புவாரி பிரதிநிதித்துவ அரசாணையை செழுமைபடுத்தி 04/11/1927 அன்றுமுதல் துணிச்சலுடன் செயல்படுத்தினார்.
இதன்படி பார்ப்பனர்க்கு 16%
பார்ப்பனரல்லாதார்க்கு 44%
இசுலாமியர்க்கு 16%
கிறித்தவர்க்கு 16%
ஆதி திராவிடர்க்கு 8%
என்ற வகையில் இட ஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது.

பூரிப்படைந்த பெரியார்
"இனி பிறக்கும் குழந்தைகளுக்கு முத்தையா என்று பெயர் சூட்டுங்கள்" என்று உச்சிமுகர்ந்து பாராட்டினார்.

#வகுப்புரிமைகொடு
#வருகிறேன்_காங்கிரசிற்கு
29/10/1933 குடிஅரசு இதழில் வெளிவந்த "இன்றைய ஆட்சி முறை ஏன் ஒழிய வேண்டும்?" என்ற தலையங்கத்தில் புரட்சி
வாடை வீசுகிறதென்று வெள்ளையர் அரசாங்கம் தேசத்துரோக குற்றம் சாட்டி எழுதிய பெரியாரையும், குடியரசு இதழின் வெளியீட்டாளர் பெரியாரின் தங்கை கண்ணம்மாளையும் கைது செய்தது.
இந்த வழக்கில் கோவை சிறையில் அடைக்கப்பட்டார் பெரியார்.
வேறொரு வழக்கில் அதே சிறையிலிருந்த ராஜாஜி பெரியாரை மீண்டும் காங்கிரசில் சேர அழைத்தார்.

அப்போது பெரியார் ராஜாஜியிடம் விதித்த இரண்டு நிபந்தனைகள்:
1) கடவுள் மத எதிர்ப்பை கைவிட மாட்டேன். அதேவேளை காங்கிரசு மேடைகளில் இதை கலக்காமல் தனியாக பரப்புரை செய்வேன்.
2) பார்ப்பனரல்லாத மக்களின் வகுப்புவாரி இட ஒதுக்கீட்டை காங்கிரசு கொள்கையளவில் ஏற்கவேண்டும்.

இரண்டிற்கும் காந்தியும்- காங்கிரசும் ஒப்பவில்லை.
பெரியார் காங்கிரசில் சேரவில்லை.

#மத்தியஅரசில்_இடஒதுக்கீடு
1934 தேர்தலில் பெரியார் நேரடியாக ஆதரித்து பிரச்சாரம் செய்த பொப்பிலி அரசர் ஆட்சியில் 1935ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தில் உள்ள மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் பார்ப்பனரல்லாத மக்களுக்கு தனி இட ஒதுக்கீடு அரசாணை வெளியிடப்பட்டது. இதன்படி அன்றைய வெள்ளையர் ஆட்சியின் மத்திய பணிகளிலும், தனியார்கள் நடத்தி வந்த இரயில்வேயிலும் பார்ப்பனரல்லாத மக்கள் வேலைவாய்ப்பு பெற்றனர்.

இதற்கு தூண்டுகோலாக இருந்தவர் தந்தை பெரியார்!
பெரியாரின் முயற்சியால் வெள்ளையர் அரசிடம் இதற்காக வாதாடி இந்த உரிமையை பெற்றுத் தந்தவர்கள் நீதிக்கட்சி அறிஞர்களான சர்.இராமசாமி முதலியார் மற்றும்
டாக்டர் ஏ.கிருஷ்ணசாமி ஆகியோர்.

#இடஒதுக்கீட்டில்_உள்ஒதுக்கீடு
1927ல் இருந்து நடைமுறைப்படுத்தப்பட்டு வரும்
இட ஒதுக்கீடு முறையில் பெரியாருக்கு ஒரு மனக்குறை இருந்தது. ஏனெனில் பொத்தாம் பொதுவாக பார்ப்பனரல்லாதார் என்று வழங்கப்பட்ட இட ஒதுக்கீட்டில் பெரிதும் பார்ப்பனர்களுக்கு அடுத்த நிலையில் இருந்த உயர்சாதியினரே பெரிதும் பயனடைந்தனர். அதற்கு அடுத்த நிலையில் இருந்த மக்களுக்கு முழுமையான வாய்ப்பு கிடைக்கவில்லை.
நுணுக்கமாக இதை கவனித்த பெரியார் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு இட ஒதுக்கீட்டில்
பலன் கிடைக்க வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தில் திருத்தம் செய்யப்பட வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

04/08/1940 அன்று திருவாரூரில் பெரியார் தலைமையில் நடைபெற்ற நீதிக்கட்சியின் 15வது மாகாண மாநாட்டில் வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்ற தலைப்பில் கீழ்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

"தற்போதுள்ள வகுப்புவாரி பிரதிநிதித்துவ எண்ணிக்கை திராவிடர்களுக்கும், ஆதிதிராவிடர்களுக்கும் மிகவும் குறைவாக இருப்பதால் ஜனசங்கியைக்கு(மக்கள்தொகை) ஏற்றபடி அவ்விகிதங்கள் ஏற்படுத்தப்பட வேண்டுமென்றும், அவ்விகிதப்படி உத்யோகங்கள் அடையும் வரை அதிகமாக பிரதிநிதித்துவம் அமைந்திருக்கும் கூட்டத்தாருடைய நியமனம் நிறுத்தி வைக்கப்பட வேண்டுமென்றும் சர்க்காரைக் கேட்டுக் கொள்கிறது. இதே முறை அகில இந்திய சர்க்கார் உத்யோகங்களிலும் கையாளப் படவேண்டுமென்று இந்திய சர்க்காருக்கு தெரிவித்துக் கொள்வதுடன் வரப்போகும் சீர்திருத்த சட்டத்திலேயே இவை குறிக்கப்பட வேண்டுமென்றும் இம் மாநாடு தீர்மானிக்கிறது"

இதன் தொடர்ச்சியாக
1944 டிசம்பர் 29,30,31 மூன்று நாட்கள் உத்திரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடைபெற்ற
அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டிற்கு தலைமை தாங்கினார் தந்தை பெரியார். உடன் சென்றவர் பேரறிஞர் அண்ணா. அந்த மாநாட்டிலேயே அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவைக்கு தலைவராக்கினார்கள் பெரியாரை!

#அம்பேத்கரின்_அரியமுயற்சி
இந்த காலகட்டத்தில் 1942ல் அமைக்கப்பட்ட இடைக்கால மத்திய அமைச்சரவையில் அமைச்சராகும் வாய்ப்பு அண்ணல் அம்பேத்கரை தேடி வந்தது. அதை நல்லமுறையில் பயன்படுத்திக் கொண்ட அம்பேத்கர் மத்திய அரசின் வேலைவாய்ப்புகளில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 8.33% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தார்.

#ஓமந்தூரார்_ஆட்சி
1937ல் சென்னை மாகாணத்தில் நீதிக்கட்சி ஆட்சி இழந்தது. ஆயினும் அது கொண்டு வந்த வகுப்புவாரி பிரதிநிதித்துவம் தொடர்ந்தது.

அடுத்து ராஜாஜியும், பிரகாசமும் சென்னை மாகாணத்தை ஆண்டனர்.
அதற்கடுத்து 1947ல் ஆட்சிக்கு வந்தார் ஓமந்தூர்
ராமசாமி ரெட்டியார்.

பெரியாரின் இடையுறாத வலியுறுத்தலின் விளைவாக 21/11/1947 அன்று பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 14% ஒதுக்கீடு செய்து ஒமந்தூர் ராமசாமி ரெட்டியார் ஆட்சி நடைமுறைபடுத்தியது.

இதை பொறுக்க முடியாத பார்ப்பனர்கள் ஓமந்தூர் ராமசாமியை "தாடியில்லாத ராமசாமி" என்று வசைபாடினார்கள் என்பது வரலாறு.

#சுதந்திர_இந்தியாவில்
#இடஒதுக்கீட்டை_இழந்தோம்!
1948 குமாரசாமி ராஜா ஆட்சிக்கு வந்தார்.
வெள்ளையர் காலம் முதல் நடைமுறையில் இருந்த இட ஒதுக்கீடு சுதந்திர இந்தியாவில் பறிபோகும் நிலை வந்தது.
1950ல் அரசமைப்பு சட்டம் அமலுக்கு வந்த பிறகு அனைவரும் சமம். எனவே இனி இடஒதுக்கீடு செய்யக்கூடாது என்று பார்ப்பனர்கள் வழக்கு போட்டார்கள். உயர்நீதிமன்றம் இட ஒதுக்கீட்டிற்கு தடை விதித்தது. உச்சநீதிமன்றம் தடையை உறுதிபடுத்தியது.

கொதித்தெழுந்த பெரியார் 03/12/1950 அன்று திருச்சியில் "வகுப்புரிமை மாநாடு" கூட்டினார். முதல் இட ஒதுக்கீட்டை கொண்டுவந்த எஸ்.முத்தையா முதலியார் பெரியாருடன் இணைந்து மாநாட்டில் முழக்கமிட்டார்.

அணைத்துக்கட்சியினரும், தமிழக மாணவர்களும், பார்ப்பனரல்லாத மக்களும் இட ஒதுக்கீடு உரிமை காக்க போராடினர்.

போராட்டங்களில் கலந்து கொண்டு நம் மாணவர்கள் படிப்பை கெடுத்துக் கொள்ளக் கூடாது....இப்போதுதான் முதல் தலைமுறையாக படிக்கத் துவங்கியிருக்கிறோம். எனவே படிப்பை கவனியுங்கள் என்று அறிவுறுத்தும் பெரியார்
முதன்முதலாக "நமது கல்வி வேலைவாய்ப்பு உரிமை பறிக்கப்படும் நிலையில் படித்து என்ன பயன்? மாணவர்களே!
வகுப்புரிமையை காத்திட போராடுங்கள்!" என்று அறைகூவல் விடுத்தார்.
களத்தில் குதித்தது மாணவர் பெரும் படை.
ஊர்தோறும் உணர்ச்சி பெருக்கு! மத்திய அமைச்சர்களுக்கு கருப்புக் கொடி காட்டினார்கள் திராவிடர்கழகத்தினர். அனைத்துக் கட்சிகளும் ஆர்ப்பரித்து போராட்டங்களை நடத்தின.

அப்போது தமிழ்நாடு காங்கிரசு கட்சியின் தலைவராக இருந்த காமராசர், பெரியாரை விட்டு பிரிந்து நின்ற அண்ணா அனைவரும் அவரவர்க்கு உரிய முறையில் வகுப்புரிமை காக்க போராடினார்கள், வாதாடினார்கள் என்றாலும்  போராட்டப் புயலின் மய்யமாய் திகழ்ந்தவர் பெரியாரே!

#அரசியலமைப்பு_சட்டத்தில்
#முதல்திருத்தம்.
தமிழ்நாட்டில் எழுந்த மக்கள் கிளர்ச்சியின் விளைவு...            இட ஒதுக்கீட்டிற்காக முதன்முதலாக இந்திய அரசியல் சட்டத்தின் 15வது பிரிவு திருத்தப்படும் தீர்மானம் பிரதமர் நேரு அவர்களால் கொண்டு வரப்பட்டு 01/06/1951 அன்று 15வது விதியில் 4வது உட்பிரிவாக சேர்க்கப்பட்டது.
வகுப்புரிமைக்கு வந்த ஆபத்து நீங்கியது.
தமிழ்நாட்டில் பார்ப்பனரல்லாத மக்களின் வகுப்புரிமைக்கு இந்திய அரசியலமைப்பு சட்டம் திருத்தப்படுவதற்கு பெரிதும் காரணமாய் அமைந்தது அண்ணல் அம்பேத்கரின் அறிவு!

#அம்பேத்கரின்_அறிவாற்றல்
அம்பேத்கருக்கு முன்பே அரசியலமைப்பு சட்டத்தின் வரைவு ஒன்றை பி.என்.ராவ் என்பவர் உருவாக்கியிருந்தார்.
அதில் விதி 12ல் 3வது பிரிவு "அரசு பணிகளில் எந்த வகுப்பு குடிமக்களுக்கு வேண்டுமானாலும் அரசு இட ஒதுக்கீடு செய்யலாம்" என்று இருந்தது. இதன் மூலம் அதிகார செல்வாக்கு பெற்ற உயர்குடியினரே அரசு பணிகளை அபகரித்து கொள்வார்கள் என்பதை நுட்பமாக உணர்ந்து கொண்ட அண்ணல் அம்பேத்கர் "எந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடிமக்களுக்கு வேண்டுமானாலும்" என்று திருத்தி அதை அரசமைப்பு சட்டத்தின் விதி 16ல் 4வது உட்பிரிவாக சேர்த்தார். இதனால்தான் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு செய்திட அரசியல் சட்டத்தை இலகுவாக திருத்த முடிந்தது.
இன்று ஆண்டபரம்பரை எனும் மயக்கத்தில் திரியும் பிற்படுத்தப்பட்ட மக்கள் அம்பேத்கரின் அரிய பணியை அறிந்து கொள்ள வேண்டும்.
அவருக்காக அல்ல...நமக்காக!

#இன்றைய_நிலை
விரிவு கருதி சுருக்கமாக சொன்னால்....அதன் பிறகு தமிழ்நாட்டை ஆண்ட திராவிடக் கட்சிகள் தொடர்ந்து உயர்த்திக் கொண்டு வந்ததுதான் இன்று மாநில அரசில் 69% இட ஒதுக்கீடு!

திராவிடர் இயக்கத்தினர், மற்றும் வடபுலத்திலுள்ள
சமூகநீதி சிந்தனையாளர்களின் இடைவிடாத முயற்சியால், மண்டல் கமிசன் மூலமாக வி.பி.சிங் அவர்களின் பெரும்பணியால்  பெற்றதுதான் மத்தியஅரசில் 27% இட ஒதுக்கீடு!
ஆனால் இந்த ஒதுக்கீடுகளின் பலனையும் முழுமையாக அனுபவிக்க இயலாத வகையில் நீதிமன்றத்தின் குறுக்கீடுகள்,
நீட் தேர்வுகள், தனியார் மயமாக்கல் என இன்றுவரை பார்ப்பனீயம் முயன்று கொண்டே இருக்கிறது.

இன்று ஓரளவிற்காவது நாம் கல்வி- வேலைவாய்ப்புகளில் நிமிர்ந்து நிற்பதற்கு அடித்தளமிட்டவர்களை வந்தேறி என்று தூற்றுதல் எளிது! ஆனால் வரலாற்றை மாற்றுவது கடினம்!

( அடையாளக் குறிப்பாக அன்றைய வழக்கத்தின் படி பெயர்களுக்கு பின்னால் இருந்த ஜாதி குறிப்பிடப்பட்டுள்ளது)
- கட்செவி யில் வந்தது

திங்கள், 12 நவம்பர், 2018

உயர்நீதிமன்றங்களில் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகள்

புதுடில்லி, நவ.12- நாடு முழுவதிலும் உள்ள உயர்நீதிமன்றங்களில் வெறும் 9 சதவீதம் மட்டுமே பெண் நீதிபதிகள் உள்ளனர்.

இந்திய நீதித்துறையின் பொற்காலம் என போற்றும் வகையில் 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் நாட்டின் முக்கிய 4 உயர்நீதி மன்றங்களுக்கு பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். நீதிபதிகள் மஞ்சுளா செலூர் மும்பை உயர்நீதிமன்றத் திற்கும், ஜி.ரோகினி டில்லி உயர்நீதிமன்றத்திற்கும், நிஹிதா நிர்மலா மத்ரே கோல்கட்டா உயர்நீதிமன்றத்திற்கும், இந்திரா பானர்ஜி சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் தலைமை நீதிபதிகளாக இருந்தனர். ஆனால் 2017 ஏப்ரல் 13இல் நீதிபதி ரோகினியும், செப்.,19இல் மத்ரேவும், டிச., 4இல் செலூரும் பணி ஓய்வுபெற்றனர். இந்திரா பானர்ஜி சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். தற்போது சென்னை உயர்நீதிமன்றத்திற்கும் தகில் ரமணியும், காஷ்மீர் உயர்நீதிமன்றத்திற்கு கீதா மிட்டலும் தலைமை நீதிபதிகளாக உள்ளனர். மொத்தமுள்ள 24 உயர்நீதி மன்றங்களில் 1221  நீதிபதிகள் பணியிடங்களில் 891 நீதிபதிபணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 70 பேர்களின் பெயர்கள் 2 ஆண்டுகளுக்கு முன் உச்சநீதிமன்றத்தின் கொலீஜியம் அமைப்பால் பரிந்துரைக்கப் பட்டது.

தற்போதுள்ள 891 நீதிபதிகளில் 81 பேர் மட்டுமே பெண்கள். கடந்த ஓராண்டில் மட்டும் 20 க்கும் அதிகமான பெண் நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளது. இவர்களில் 7க்கும் அதிகமானவர்கள் இன்னும் சில ஆண்டுகளில் உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நிய மிக்கப்பட உள்ளனர். கடந்த 68 ஆண்டு கால நீதித்துறை வரலாற்றில் தற்போது 3 பேருடன் சேர்த்து இதுவரை 8 பெண் நீதிபதிகள் மட்டுமே உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

-  விடுதலை நாளேடு, 12.11.18

சனி, 10 நவம்பர், 2018

கிரீமிலேயர் என்னும் கிருமி ஒழிப்பு கருத்தரங்க மாநாட்டில் சமூக நீதி காத்திட தலைவர்கள் உரிமை முழக்கம்

சென்னை, நவ.10 திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கிரீமிலேயர் என்னும் கிருமி ஒழிப்புக் கருத்தரங்க மாநாடு (பிற்படுத்தப்பட்டோ ருக்குப் பொருளாதார அளவுகோல் ஒழிப்பு) நேற்று (9.11.2018)  மாலை நடை பெற்றது.
சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை உணர்த்தி உரிமை முழக்கமிடும் மாநாடாக இம்மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. மண்டல் குழு அறிக் கையின் பரிந்துரைப்படி, மேனாள் பிரதமர் வி.பி.சிங் அரசு ஆணையின்படி மத்திய அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு வேலைவாய்ப்பு களில் 27 விழுக் காடு அளிக்கப்பட வேண்டிய நிலையில், கிரீமிலேயர் எனும் பெயரால்  தடைகள் உருவாக்கப்பட்டு உரிய வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப் படாத நிலைகள், 27 விழுக்காடு முழு மையாக இதுவரை அளிக்கப்படாத அவல நிலைகள் குறித்து தலைவர்கள் புள்ளி விவரத் தகவல்களை முன்வைத்து உரை யாற்றினார்கள். கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையில் சமூக நீதி வரலாறு, வகுப்புரிமை, தந்தை பெரியாரால் சமூகநீதிக்காக இந்திய அரசமைப்பில்  முதல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது மற்றும் 2019 பிப்ரவரியில் சமூகநீதியைப் பாதுகாக்கின்ற அமைப்புகள் ஒன்றிணைந்து டில்லியில் சமூகநீதிக்கான மாநாடு நடத்தப்பட உள்ளதையும்  குறிப்பிட்டு தொடக்கவுரையாற்றினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் பேராசிரியர் அருணன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் கருத் துரையாற்றினர். நிறைவாக, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
நூல் வெளியீடு
கருத்தரங்க மாநாட்டில் வகுப்புரிமை தொடர்பான நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர்.
கிரீமிலேயர் என்னும் கிருமி ஒழிப்புக் கருத்தரங்க மாநாட்டில் பங்கேற்றோர்.
மாநாட்டில் வகுப்புரிமை தொடர்பான நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டார். கிரீமிலேயர் கூடாது ஏன்?, வகுப்புவாரி உரிமை ஏன்? வகுப்புவாரி உரி மையின் வரலாறும், பின்னணியும், சமூக நீதி, மண்டல் குழுவும் சமூகநீதியும், வகுப்புரிமை வரலாறு, எது வகுப்புவாதம்?, 69% இடஒதுக்கீடு சட்டம் ஏன்? எப்படி? எவரால்?, தமிழ்நாட்டில் சமூக நீதி வரலாறு, ஜாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு, வகுப்புரிமைப் போராட்டம் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. 11 நூல்களின் மொத்த நன்கொடை மதிப்பு ரூ.343. மாநாட்டையொட்டி ரூ.89 சிறப்புத் தள்ளுபடி போக, ரூ.250க்கு அளிக்கப்பட்டது.
வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், ப.முத்தையன், தாம்பரம் இலட்சுமிபதி, தங்க.தனலட்சுமி, அம்பத்தூர் இராமலிங்கம், ஆவடி கோபால் உள்பட பலர் பெற்றுக்கொண்டார்கள்.
காங்கிரசு கட்சி மேனாள் சட்டமன்ற உறுப் பினர் உ.பலராமன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவுச் செயலாளர் வீ.கும ரேசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் உள் பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கிரீமிலேயர் என்னும் கிருமி ஒழிப்புக் கருத்தரங்க மாநாட்டில் தமிழர் தலைவர் உரைகேட்க சென்னை மண்டலத்திலிருந்து தென் சென்னை, வடசென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், திருவான்மியூர் உள் ளிட்ட கழக மாவட்டங் களின் பொறுப்பாளர்கள், தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். சமூக நீதியில் அக்கறை கொண்ட பலரும் கட்சி களைக் கடந்து கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டு முடிவில் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் நன்றி கூறினார்.
- விடுதலை நாளேடு, 10.11.18