பக்கங்கள்

சனி, 10 நவம்பர், 2018

கிரீமிலேயர் என்னும் கிருமி ஒழிப்பு கருத்தரங்க மாநாட்டில் சமூக நீதி காத்திட தலைவர்கள் உரிமை முழக்கம்

சென்னை, நவ.10 திராவிடர் கழகத்தின் சார்பில் சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றத்தில் கிரீமிலேயர் என்னும் கிருமி ஒழிப்புக் கருத்தரங்க மாநாடு (பிற்படுத்தப்பட்டோ ருக்குப் பொருளாதார அளவுகோல் ஒழிப்பு) நேற்று (9.11.2018)  மாலை நடை பெற்றது.
சமூகநீதிக்கு ஏற்பட்டுள்ள பேராபத்தை உணர்த்தி உரிமை முழக்கமிடும் மாநாடாக இம்மாநாடு திராவிடர் கழகத்தின் சார்பில் நடைபெற்றது. மண்டல் குழு அறிக் கையின் பரிந்துரைப்படி, மேனாள் பிரதமர் வி.பி.சிங் அரசு ஆணையின்படி மத்திய அரசுப்பணிகளில் பிற்படுத்தப்பட்டவர் களுக்கு வேலைவாய்ப்பு களில் 27 விழுக் காடு அளிக்கப்பட வேண்டிய நிலையில், கிரீமிலேயர் எனும் பெயரால்  தடைகள் உருவாக்கப்பட்டு உரிய வாய்ப்புகள் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு அளிக்கப் படாத நிலைகள், 27 விழுக்காடு முழு மையாக இதுவரை அளிக்கப்படாத அவல நிலைகள் குறித்து தலைவர்கள் புள்ளி விவரத் தகவல்களை முன்வைத்து உரை யாற்றினார்கள். கழகத்துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் வரவேற்புரையில் சமூக நீதி வரலாறு, வகுப்புரிமை, தந்தை பெரியாரால் சமூகநீதிக்காக இந்திய அரசமைப்பில்  முதல் சட்டத்திருத்தம் செய்யப்பட்டது மற்றும் 2019 பிப்ரவரியில் சமூகநீதியைப் பாதுகாக்கின்ற அமைப்புகள் ஒன்றிணைந்து டில்லியில் சமூகநீதிக்கான மாநாடு நடத்தப்பட உள்ளதையும்  குறிப்பிட்டு தொடக்கவுரையாற்றினார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கம் பேராசிரியர் அருணன், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளர் கோ.கருணாநிதி ஆகியோர் கருத் துரையாற்றினர். நிறைவாக, திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையேற்று சிறப்புரையாற்றினார்.
நூல் வெளியீடு
கருத்தரங்க மாநாட்டில் வகுப்புரிமை தொடர்பான நூல்களை தமிழர் தலைவரிடமிருந்து ஏராளமானோர் பெற்றுக் கொண்டனர்.
கிரீமிலேயர் என்னும் கிருமி ஒழிப்புக் கருத்தரங்க மாநாட்டில் பங்கேற்றோர்.
மாநாட்டில் வகுப்புரிமை தொடர்பான நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டார். கிரீமிலேயர் கூடாது ஏன்?, வகுப்புவாரி உரிமை ஏன்? வகுப்புவாரி உரி மையின் வரலாறும், பின்னணியும், சமூக நீதி, மண்டல் குழுவும் சமூகநீதியும், வகுப்புரிமை வரலாறு, எது வகுப்புவாதம்?, 69% இடஒதுக்கீடு சட்டம் ஏன்? எப்படி? எவரால்?, தமிழ்நாட்டில் சமூக நீதி வரலாறு, ஜாதியை ஒழிக்கவே இடஒதுக்கீடு, வகுப்புரிமைப் போராட்டம் ஆகிய நூல்கள் வெளியிடப்பட்டன. 11 நூல்களின் மொத்த நன்கொடை மதிப்பு ரூ.343. மாநாட்டையொட்டி ரூ.89 சிறப்புத் தள்ளுபடி போக, ரூ.250க்கு அளிக்கப்பட்டது.
வடசென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் ஆ.வெங்கடேசன், ப.முத்தையன், தாம்பரம் இலட்சுமிபதி, தங்க.தனலட்சுமி, அம்பத்தூர் இராமலிங்கம், ஆவடி கோபால் உள்பட பலர் பெற்றுக்கொண்டார்கள்.
காங்கிரசு கட்சி மேனாள் சட்டமன்ற உறுப் பினர் உ.பலராமன், கழகப்பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், வெளியுறவுச் செயலாளர் வீ.கும ரேசன், அமைப்புச் செயலாளர் வி.பன்னீர் செல்வம், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், சென்னை மண்டல செயலாளர் தே.செ.கோபால் உள் பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். கிரீமிலேயர் என்னும் கிருமி ஒழிப்புக் கருத்தரங்க மாநாட்டில் தமிழர் தலைவர் உரைகேட்க சென்னை மண்டலத்திலிருந்து தென் சென்னை, வடசென்னை, ஆவடி, தாம்பரம், திருவொற்றியூர், திருவான்மியூர் உள் ளிட்ட கழக மாவட்டங் களின் பொறுப்பாளர்கள், தோழர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். சமூக நீதியில் அக்கறை கொண்ட பலரும் கட்சி களைக் கடந்து கலந்துகொண்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டு முடிவில் தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் நன்றி கூறினார்.
- விடுதலை நாளேடு, 10.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக