பக்கங்கள்

வியாழன், 8 நவம்பர், 2018

பிற்படுத்தப்பட்ட வகுப்பு இளைஞர்கள் நன்றியுடன் போற்றப்பட வேண்டியவர் அர்ஜூன்சிங்



அர்ஜூன்சிங் 88ஆவது பிறந்த நாளில் (5.11.2018) பிற்படுத்தப்பட்ட வர்கள் அனைவரும் அவரைப் போற்றிட கடமைப்பட்டவர்கள் ஆவர்.

அர்ஜூன்சிங் 5.11.1930இல் பிறந்தார். 4.3.2011 இல் மறைந்தார்.

பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மண்டல் குழு பரிந்துரையின்படி மத்திய அரசுப்பணி களில் 27 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்தவர் 1990இல் பிரதமராக இருந்தவரும், சமூக நீதிக்காவலருமாகிய வி.பி.சிங் ஆவார்.

அவரைத் தொடர்ந்து, மண்டல் குழு பரிந்துரைப்படி, பல்கலைக்கழகங்கள, கல்லூரி களில் உயர் கல்வி பயில் வதற்காக பிற்படுத்தப்பட்ட வர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதற்காக 2006ஆம் ஆண்டில் 93ஆவது அரசமைப் புச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றி, பிற்படுத்தப் பட்டவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பை அளித் தவர் அர்ஜூன்சிங். அதனா லேயே பார்ப்பனர்கள், உயர் ஜாதியினருக்கு எதிரானவரானார்.

காங்கிரசு தலைமையிலான அய்க்கிய முற்போக்கு கூட்டணியின் முதல் முறை ஆட்சியின்போது மத்திய மனிதவளம் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றவர் அர்ஜூன்சிங் ஆவார். இடஒதுக்கீட்டுக்கு எதிரானவர்களின் போராட்டங்களை புறந்தள்ளி, மண்டலுக்கு எதிராக சித்தரிக்கப்பட்ட போராட்டங்களை யெல்லாம் ஒதுக்கிவிட்டு, அவருடைய நிலைப்பாட்டில் உறுதியாக இருந்தவர். மண்டல் குழு பரிந்துரையின் இரண்டாம் அத்தியாயத்தை  நடைமுறைப்படுத்திய காரணத்தாலேயே அர்ஜூன்சிங் அரசியலிலிருந்து முன்னதாகவே வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இந்திய ஜனநாயகத்தை உள்ளடக்கி, இந்தியர்களில் சுமார் 60 விழுக்காட்டினரின் உயர்வுகுறித்து அவர் சிந்தித்தார். இன்று அய்.அய்.டி., அய்.அய்.எம்., மத்திய பல்கலைக்கழகங்கள், எய்ம்ஸ் உள்ளிட்ட உயர்கல்வி  நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மாணவர்கள் குறைந்த பட்சம் 27 விழுக்காட்டினர் படிக்கிறார்கள் என்றால், அதற்கு காரணம் அர்ஜூன்சிங் எடுத்த முயற்சியே ஆகும். உயர்கல்வியில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு  இடஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்ததே காரணமாகும்.

வி.பி.சிங், அர்ஜூன்சிங் ஆகியோரை உயர்ஜாதியினர்  இழித்துரைக்கலாம். ஆனால், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சார்ந்த இளைஞர்கள் அவர்களின் தொண்டை என்றென்றும் நினைவுகொண்டு போற்றிட வேண்டும்.

பிற்படுத்தப்பட்டவர்களின் முன்னேற்றத்துக்காக பாடுபட்ட துடன், அடிப்படைவாத சக்திகளுக்கு எதிராகவும் களம் கண்டவர் ஆவார்.

- விடுதலை நாளேடு, 6.11.18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக