பக்கங்கள்

புதன், 26 ஜூன், 2019

திராவிடம் அறிவோம் (90)

1979ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒடுக்கீடு பெற ஆண்டு வருவாய் ரூ.9000-க்குள் இருக்க வேண்டும் என்று வருவாய் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. (அரசாணை (நிலை) எண். 1156, நாள். 02.07.1979).

அரசின் இந்த அறிவிப்பு மக்களிடையே கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. அறிவிப்பினைத் திரும்பப் பெறக் கோரி, திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அரசாணையின் நகல்கள் எரிக்கப்பட்டு, அதன் சாம்பல் அரசுக்கு அனுப்பப்பட்டது.

எனினும் அரசு அசைந்து கொடுக்கவில்லை.

இந்த சூழலில், 1980இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அரசு கடும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தலிலிருந்து பாடம் கற்ற அரசு, அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. அதனைத் தொடர்ந்து, வருவாய் உச்ச வரம்பு அரசாணையை அ.தி.மு.க. அரசு திரும்பப் பெற்றது. (அரசாணை (நிலை) எண். 72, நாள். 01.02.1980).
  
அதுமட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு 31%இல் இருந்து 51% ஆக உயர்த்தப்பட்டது. (அரசாணை (நிலை) எண். 73, நாள். 02.02.1980)

- வெற்றிச்செல்வன்

புதன், 19 ஜூன், 2019

தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தின்கீழ் நடவடிக்கை தேவை இல்லையேல், போராட்டம் வெடிப்பது உறுதி!

சமையல் உதவியாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் அவர்களை இடமாற்றம் செய்வதா?


தந்தை பெரியார் பிறந்த மண்ணில் இந்த அவலமா?




சமையல் உதவியாளர்களாகப் பணிக்கு நியமனம் செய்யப்பட்ட இரு தாழ்த்தப்பட்ட பெண்களை, ஊரார் எதிர்ப்பு என்ற காரணம் கூறி, வேறு இடத்திற்கு மாற்றியது சட்டப்படி குற்றமாகும். இதற்குக் காரணமானவர்கள்மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கவேண்டும். எடுக்கா விடின், போராட்டம் வெடிக்கும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மதுரை மாவட்டம் திருமங்கலம் பகுதி யில் உள்ள வலையப்பட்டி என்ற கிரா மத்தில் அங்கன்வாடியில் உதவியாளராகப் பணிபுரிய மாவட்ட ஆட்சியரால் 3.6.2019 அன்று (10 நாள்களுக்கு முன்பு) அன்ன லட்சுமி என்ற தாழ்த்தப்பட்ட சமுக(எஸ்.சி.,)த்தைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டு, பொறுப்பேற்கச் சென்றுள்ளார்.

சமையல் பணி உதவியாளர்கள் தாழ்த்தப்பட்டவர்கள் என்பதால் மாறுதல் செய்வதா?


இவரது பணி குழந்தைகளுக்கான சமையல்  கூட உதவியாளர் பணியாகும். இதை அறிந்த அந்த கிராமத்து மற்ற ஜாதி யினர் இதற்குக் கடும் எதிர்ப்பு தெரிவித் துள்ளனர். அதனால், அவர் வேறு ஒரு கிராமத்திற்கு மாற்றப்பட்டுள்ளார். (இதுவே தவறான முடிவாகும். சட்டத்தை அமல் படுத்தவேண்டிய அதிகாரிகளே இப்படி வளைந்து கொடுக்க ஆரம்பித்தால், நிர் வாகம் நடத்த இயலுமா?)

மற்றொரு தாழ்த்தப்பட்ட சமுகப் பெண் - ஜோதிலட்சுமியை மதிப்பனூர் என்ற ஊரில் அங்கன்வாடி ஊழியராக - சமையல் உதவியாளராக நியமனம் செய்துள்ளார் மாவட்ட ஆட்சியர். அவரும் வேறு இடத் துக்கு மாற்றப்பட்டுள்ளார். இந்த இரு பெண்களாலும் எங்கள் பிள்ளைகள் உண்ணும் உணவு தீட்டுப் பட்டு விடும்'' என்று கூறி, ஜாதி வெறியை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்!

அந்த இரு பெண் ஊழியர்களுக்கும் பாதுகாப்பு இல்லை; அச்சத்தோடு, என்ன செய்வது என்று அறியாமல் வேதனையில் வெந்து கருகுகின்றனர் என்று செய்திகள் வருகின்றன.

ஜனாதிபதியாகக்கூட தாழ்த்தப்பட்டவர் வரலாம் - ஆனால் சமையல் உதவியாளர் பணிக்கு வரக்கூடாதா?


2019 இல்கூட இந்நிலையா?? தாழ்த்தப் பட்ட சமுகத்தினர் ஜனாதிபதி என்றாலும் இந்நிலையா?

அதுவும் பெரியார் மண்ணிலா? தமிழ் நாட்டிலா? வடநாட்டினைப் பார்க்கும் பொழுது, இங்கு வெள்ளை உடை மீது பட்ட கறுப்புப் புள்ளி பளிச்'சென்று தெரியவே செய்யும்.

இதன்மீது தமிழக அரசின் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளும், மாவட்ட ஆட்சியர் அவர்களும் நடவடிக்கை எடுக்கவேண்டும். அந்த கிராமத்தின் ஜாதி வெறியர்களுக்கும், தீண்டாமை ஒழிப்புச் சட்டத்தை மதிக்காமல், ஜாதி ஆணவப் போக்கை நிர்வாணத் தன் மையில் காட்டியவர்களுக்கும் தக்க தண்டனை தேவை! வழக்கும்போட வேண்டும்.

சம்பந்தப்பட்ட தாழ்த்தப்பட்ட பெண் கள்மீது இனிமேல் கற்பனைக் குற்றச்சாற்றுகள் - பொய்ப் புகார்கூட ஜோடனை செய்யப்பட்டு, மேல்ஜாதி என்ற ஆணவம் கோர நிலைப்பாட்டுக் கொடுமையை நியா யப்படுத்த முயலக்கூடும்.

முதலமைச்சர் தலையிடவேண்டும்!


முதல்வரின் துறை காவல் துறை என்ப தால்,  இதில் குற்றமிழைத்தவர்களை தக்க வகையில் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டனை பெற்றுத் தரவேண்டும்.

உதாரணத்திற்குக் கூறுகிறோம்,

மாவட்ட ஆட்சியர் தாழ்த்தப்பட்டவர் என்றால், ஜாதி வெறியர்கள் அவரை நிரா கரிப்பார்களா? ஏற்க மாட்டோம் என்பார் களா?

அரசு மருத்துவமனைக்குச் சிகிச்சைக் காகச் செல்லும்பொழுது, மருத்துவர் தாழ்த் தப்பட்டவராக இருந்தால், மறுப்பார்களா? மறுத்தால் அரசுதான் ஏற்று உடனே மாற்றம் செய்யுமா?

வழக்கை விசாரிக்கும் நீதிபதி, தாழ்த்தப்பட்ட சமுகத்தவர் என்றால், இவரை ஏற்கமாட்டோம் என்று கூறினால், அதை உயர்நீதிமன்றம் ஏற்குமா?

பார்ப்பனர்களின்  சந்தர்ப்பவாதம்


இப்படிப்பட்டவைகளை நாம் எடுத்துக் காட்டி கண்டித்தாலும், பார்ப்பன ஆதிக்க வாதிகள் உடனே என்ன சொல்லுவார்கள்? பார்த்தீர்களா? பார்த்தீர்களா? நாங்களா கலவரம் செய்கிறோம்? பார்ப்பனரல்லாத ஜாதிக்காரர்கள்தானே கலகம் செய்கிறார் கள்'' என்று கூறி, தங்களை ஏதோ  ஜாதி உணர்வுக்கு அப்பாற்பட்டவர் களைப்போல காட்டி, நம் அரைவேக்காடு நுனிப்புல்லர் களை ஏமாற்றுவர்!

விஷ விருட்சத்தின் இந்த ஜாதிப் பழம் என்பதற்கான மூலம் - வேர் அல்லவா? அதிலிருந்துதானே முளைத்தது!

புரட்சியாளர் அம்பேத்கர் கூறிய அடுக்குமுறை ஜாதிய அமைப்பு ‘Graded Inequality' யின் படிக்கட்டு முறையின் தீய விளைவு இப்படித்தான் வெளிப்படுவதும் உறுதி!

தண்டனை கொடுக்கப்பட வேண்டும்


ஜாதி வெறி, ஆணவக் கொலை வெறி போன்ற கொடுமைகள் தமிழ்நாட்டில் தலை தூக்குவதே கூடாது; இதற்குத் தமிழ்நாடு அரசு, திராவிடர் கழகத்தினைப் போன்ற ஜாதிவெறி, ஜாதி தீண்டாமை ஒழிப்பு அமைப்புகளின் பிரச்சாரங்களை ஊக்கப் படுத்த முன்வராவிட்டாலும், குறைந்தபட்சம் தடுக்காமலிருந்தாவது ஒத்துழைப்புத் தந்தால், அதன் பளு - சுமையாவது குறையும்.

போராட்டங்கள் வெடிக்கும்!


அரசு சரியான ஒத்துழைப்புக் கொடுத் தால், தமிழக அரசுக்கும், முற்போக்கு இயக்கங்களுக்கும் முன்தோன்றும் இத் தகைய அறைகூவல்களும் அகலும் வாய்ப் பும் ஏற்படுமே!

தமிழ்நாட்டில் இனிமேலும் இத்தகு அவலம், கொடுமை எங்கும் நடைபெறக் கூடாது.

இதில் மாவட்ட ஆட்சியரும், தமிழக அரசும் சமரசம்' செய்து கொண்டு சட்டத்தின் மரியாதையை, நிர்வாகத்தின் உறுதியைக் குலைத்துவிடக் கூடாது. இல்லையேல் போராட்டங்கள் வெடிப்பது உறுதி!

 


கி.வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

13.6.2019


பட்டியல் இனப்பெண் சமையல் பணியாளராக பணியாற்ற உயர்ஜாதியினர் எதிர்ப்பாம்

வளையாபட்டி, ஜூன் 13- மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்து உள்ள வளையா பட்டியில் அன்னலட்சுமி என்ற பட்டியல் இனப்பெண் அங்கன்வாடி சமையல் பணி யாளராக பணியில் சேர்ந்து உள்ளார். இவர் மதுரை மாவட்ட ஆட்சியாளரிடம் மனு ஒன்றைக் கொடுத்து உள்ளார். அதில் திருமங்கலம் தாலுகாவில் உள்ள வளை யாபட்டியில் குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் வரும் அங்கன்வாடியில் சமை யல் உதவியாளராக பணியில் சேர்ந்துள்ளேன்,

நான் பணியில் சேர்ந்தது முதல் என்னுடைய ஜாதி யைக் குறிப்பிட்டு உயர்ஜாதி யினர் தங்களின் குழந்தை களை அனுப்ப மறுக்கின்றனர். மேலும் கீழவென்னேரி கிரா மத்திலும் அங்கன்வாடியில் பணியில் சேர்ந்த பட்டியல் இனத்தைச்சேர்ந்த சமையல் பணியாளரான ஜோதிலட் சுமி என்றவரிடமும் இதே போல் தீண்டாமைக் கொடுமை நிகழ்ந்துள்ளது,

கிராமத்தில் உள்ள உயர் ஜாதியினர் உயரதிகாரிகளி டம் பட்டியல் இன சமையல் பணியாளர்கள் குறித்து பல் வேறு பொய்புகார்களைக் கூறி அவர்களை மாற்ற கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த தீண்டாமை கொடுமை தொடர்பாக புகார் அளித்த போது வளையாபட்டியில் உள்ள பட்டியல் இன மக்கள் வாழும் வீடுகள் மீது உயர் ஜாதியினர் தாக்குதல் நடத்தி யுள்ளனர்.

இது குறித்து ஜோதி லட்சுமி கூறியதாவது: நான் என்னுடைய சொந்த ஊரி லேயே பணிபுரிய முடியாத நிலையில் உள்ளேன்,

எனது உடல் நலம் குறித்த மருத்துவப் பரிசோதனை சான்றிதழை ஜூன் 4 ஆம் தேதி நிர்வாகத்திடம் அளித் தேன், இருப்பினும் உயர்ஜாதி யினர் ஒன்று சேர்ந்து ஒரு பட்டியல் இனத்தவர் சமைத்த உணவை எங்கள் பிள்ளைகள் சாப்பிடுவதா? என்று கேட்டு நிர்வாகத்தினரை மிரட்டு கின்றனர்.

சில மாதங்களுக்கு முன்பு இதே ஊரில் உள்ள கோவிலினுள் அன்னலட்சுமி மற் றும் ஜோதி லட்சுமி இருவ ரையும் கோவிலில் நுழைந்து வழிபட விடாமல் உயர்ஜாதி யினர் தடுத்தனர், இதனை அடுத்து கோவிலுக்கு வெளியிலேயே தேங்காய் உடைத்து வழிபட்டுச்சென்றனர். மேலும் ஊர் ரேசன் கடை களில் எங்களுக்கு பொருட் கள் வழங்குவதும், ஊரில் முக்கிய நிகழ்வுகளில் எங்க ளைக் கலந்துகொள்ள மறுப் பதும் தொடர்கதையாக உள் ளது, தற்போது ஜோதிலட் சுமிக்கு அவர்கள் ஊருக்கு சிறிது தொலைவில் உள்ள வேறு  ஒரு ஊரில் சமையல் வேலைக்கு மாற்றல் கிடைத்து சென்று வருகிறார்.

ஜூன் 8 ஆம் தேதி மீண்டும் வளையாபட்டி பகுதியில் பட்டியல் இனமக்களின் குடியிருப்பிற்குள் புகுந்த உயர்ஜாதியினர் அங்கிருந்த மோட்டார் சைக்கிள், வீடுக ளில் இருந்து மின்சார மீட் டர் சாதனம் உள்ளிட்டவை களை தாக்கி சேதப்படுத்தினர், இந்த தாக்குதல் தொடர்பாக மாவட்ட காவல்துறை ஆணையர் டி மதியழகன் நேரடியாக நிகழ்விடத்திற்கு சென்று ஆய்வு நடத்தியதில் இத்தாக்குதல் தொடர்பாக விசாரணை நடத்த உத்தர விட்டுள்ளார். மாவட்ட ஆட்சியாளர் சாந்த குமாரும் நிகழ்விடத்திற்கு சென்று சேதங்களைப் பார்வையிட்டு  பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆறுதல் கூறினார்.

-  விடுதலை நாளேடு, 13.6.19

ஞாயிறு, 16 ஜூன், 2019

'நீட்' மோசடி : 'நீட்' தேர்வில், பூஜ்யம் எடுத்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம்?

சென்னை, ஜூன் 16 பஞ்சாப் மா நிலத்தில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மருத்துவக் கல்லூரியில் இடம் பெற்ற 180 மாணவர்களில் 50 மாணவர்கள், இயற்பியல் அல்லது வேதியியல் பாடத் தேர்வில்  ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றுள்ளனர். இதில் 7 மாணவர்கள், பூஜ்யம் மதிப்பெண் பெற்றுள்ளனர். 10 மாணவர்கள், பூஜ்யத்திற்கும் கீழே மதிப்பெண் பெற்றுள்ளனர்.

இவை அனைத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்களை சேர்க்கிறோம் என்ற பேரில், இத்தகைய மோசடி நடைபெற்றுள்ளது.  2017-ஆம் ஆண்டுக்கான மருத்துவப் பட்டப்படிப்பில், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டுள்ள மாணவர்களில் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றுள்ளவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்து சேர்க்கப்பட்டுள்ளனர் என்று 'டைம்ஸ் ஆப் இந்தியா' பத்திரிக்கையின் சார்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.

பஞ்சாப் மாநிலத்தில் 2018-ஆம் ஆண்டில் தனியார் கல்லூரியான அதேஷ் மருத்துவக் கல்லூரி 68 லட்சம் ரூபாய் கட்டணம் வசூலித்து, மாணவர்களை சேர்த்துள்ளது. இதில் பாதிக்கும்  மேற்பட்ட மாணவர்கள், பூஜ்யம், ஒற்றை மதிப்பெண் அல்லது எதிர்மறை மதிப்பெண்கள் பெற்றவர்களாவர். இந்த கல்லூரியில் தான் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் அதிகம் சேர்ந்துள்ளனர்.

இது பஞ்சாப் மாநிலத்தில் நடத்தப்பட்ட ஆய்வு என்றாலும், நாடு முழுவதும் இது போன்ற நிலைமைதான் இருக்கும் என்பது வெளிப்படை. இந்திய மருத்துவக் கழகமோ அல்லது மருத்துவ கவுன்சிலிங் குழுவோ நீட் தொடர்பான அனைத்து மதிப்பெண் விவரங்களையும் வெளிப் படையாக தெரிவிக்காத நிலையில், நீட் தேர்வு என்பது தகுதி அடிப்படையிலான தேர்வு என்ற பொய்யான கருத்தையே சொல்லி வருகின்றனர்.

சுமார் ஏழு லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், மொத்தம் உள்ள 65000 இடங்களில் (இந்த ஆண்டு 70000 இடங்களாக அதிகரிப்பு), பெரும்பாலான இடங்களை,  நீட் தேர்வில் குறைவான மதிப்பெண் பெற்ற அதிக வசதி படைத்தவர்களே இடம் பிடித்துள்ளனர். அதிக மதிப்பெண் பெற்று பண வசதி இல்லாதவர்கள், வாய்ப்பை நழுவவிடுகின்றனர்.

தகுதி, திறமையின் அடிப்படையில்தான் மருத்துவம் படிக்க வேண்டும்; அதற்கு நீட் தேர்வுதான் உரிய தீர்வு என மத்திய பார்ப்பன அரசு முடிவெடுத்து நடைமுறைப்படுத்தியபோது, நீட் தேர்வு என்பது ஒரு மோசடியே, வசதி படைத்தவர்களுக்கும், பார்ப்பனர்களுக்குமே அதிக வாய்ப்பை உருவாக்கும், மருத்துவப்படிப்பு, ஏழை சமுக மாணவர்களுக்கு எட்டாக்கனியாகிவிடும் என முதன் முதலில் இந்த நாட்டிற்கு எடுத்துரைத்தது திராவிடர் கழகம் தான். திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தொடர்ந்து இது குறித்து எச்சரித்து அறிக்கை விடுத்து, போராட்டம் நடத்தினார்.

தற்போது அந்த எச்சரிக்கை உண்மையானது என இன்றைய 'டைம்ஸ் ஆப் இந்தியா'வின் செய்தி உறுதி செய்துள்ளது.

நீட் மோசடியை நாடாளுமன்றத்தில் தோலுரித்துக் காட்டவேண்டிய முக்கிய பணியை தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னெத்து செல்ல வேண்டும். மக்கள் மன்றத்திலும் இதன் உண்மையை மக்களுக்கு தெரியப்படுத்தி, நீட் விலக்கு தொடர்பான தமிழக சட்டமன்றம் அனுப்பிய மசோதாவை நிறைவேற்ற வழிவகை செய்திட வேண்டும்.

- கோ. கருணாநிதி

- விடுதலை நாளேடு, 16.6.19

சனி, 15 ஜூன், 2019

சாதி ஒழிப்பு ஒரே நாளில் நடந்து விடாது.

"பெரியார் சாதிய ஒழிச்சார், ஒழிச்சார் னு சொல்றீங்களே. எந்த சாதிய ஒழிச்சார். சொல்ல முடியுமா?" என்று சங்கீஸ் & நாம் தமிழர் தம்பீஸ் அறிவாளித்தனமாக கேட்பதாக நினைத்து கேட்கிறார்கள்.

அவர்களுக்கு புரியாது. இருந்தாலும் சொல்லிவிடலாம்.

சாதி ஒழிப்பு ஒரே நாளில், ஒரே ஆளால் நடந்து விடாது. அது ஒரு Process; படிப்படியாக தான் அழிக்க முடியும். இரண்டு வருடம் பழகிய சிகரெட்டு பழக்கத்தை நிறுத்துவதே அவ்வளவு எளிதாக முடிவதில்லை. சாதி பல்லாயிரம் வருடங்களாக நம் மூளையில், மனதில் விதைக்கப்பட்ட நஞ்சு. அது நாம் மனது வைக்காமல் அழியாது. எனக்குள் உள்ள சாதிவெறி அழிய வேண்டுமென்றால், அதை நான் தான் அழிக்க வேண்டும். பெரியார் ஏன் அழிக்கவில்லை என்று கேட்க கூடாது..  "ஏன் சாதி ஒழியணும், எப்படி ஒழிக்கணும், ஒழிச்சா என்ன நல்லது நடக்கும்" என்று பெரியார் சொல்லிவிட்டார்.. அந்த மனிதர், வாழ்நாளில் அவரால் முடிந்ததை விட அதிகமாகவே செய்து விட்டார்; சித்தாந்தத்தையும் விதைத்து விட்டார்.

பெரியார் எந்த சாதிய ஒழிச்சாருனு உங்கள பாத்து யாராவது கேட்டா சொல்லுங்க.. பெரியார் இன்னும் சாதிய முழுசா அழிக்கல.. அழிச்சிக்கிட்டே இருக்கார் னு.

அப்படியே இதையும் சொல்லுங்க..
"பெரியார் எனக்குள்ள சாதிய ஒழிச்சிட்டாரு, உனக்குள்ள இன்னும் ஒழிக்கலயா" னு.. புத்தி இருந்தா யோசிப்பான், இல்லன்னா பேசாம போய்டுவான்..
🖤🖤🖤😊

#திராவிடம் #பெரியார் #சாதி

வெள்ளி, 7 ஜூன், 2019

மருத்துவக் கல்லூரிக்கான அகில இந்தியக் கோட்டாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாதாம்!

பிஜேபியின் 2ஆம் பயணம் சமுக அநீதியில் தொடங்குகிறது சமுக நீதியாளர்களை ஒன்றிணைத்துத் தீர்வு காண்போம்!

மருத்துவக் கல்லூரிக்கான அகில இந்தியக் கோட்டாவில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இடஒதுக்கீடு கிடையாதாம்!


அதே நேரத்தில் பொருளாதாரத்தில் பின் தங்கிய பார்ப்பனர் உள்ளிட்ட உயர் ஜாதியினருக்கு  உண்டாம்!




மருத்துவக் கல்லூரியில் எம்.பி.பி.எஸ். சேர்க்கையில் அகில இந்திய  இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டவர்களுக்குரிய   இடஒதுக்கீடு கிடையாதாம். அதே நேரத்தில் பிஜேபி ஆட்சியால் அவசர அவசரமாகக் கொண்டு வரப்பட்ட உயர் ஜாதியினரில் பொருளா தாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 விழுக்காடு இடஒதுக்கீடு செயல்படுத்தப் படுமாம். ஆக, பிஜேபியின்  இரண்டாவது  பயணத் தொடக்கத்திலேயே சமுக நீதிக்குச் சவக் குழி வெட்டப்படுகிறது. சமுக நீதியாளர்களை ஒன்றிணைத்து இதற்கான தீர்வு காணப்படும் என்று திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

மருத்துவத் துறையில் இளநிலைப் பிரிவில் இந்தியாவிலுள்ள மொத்த அரசு மருத்துவக் கல்லூரிகள் 216; அதிலுள்ள   MBBS  இடங்கள் 30,455. இவற்றில் தமிழ் நாட்டில் மட்டும் 25 கல்லூரிகள் (முதல் மாநிலம்) மற்றும் 3,250 இடங்கள் உள்ளன. இவற்றில் 15 சதவீதம் அகில இந்திய தொகுப்பிற்கு வழங்கப்படும், ஆக 4,600 இடங்கள் இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் மத்திய தொகுப்பிற்குத் தருகின்றன. தமிழகம் மட்டும் 490 இடங் களைத் தருகிறது (வேறு எந்த மாநிலத் தையும்விட அதிகம்). இந்த மொத்தமுள்ள  4,600 இடங்களில் மத்திய அரசு SC/ST க்கான இடஒதுக்கீட்டை 22.5 சதவீதம் வழங்குகிறது. ஆனால் OBC - இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை மட்டும் ஒவ்வொரு ஆண்டும் வழங்குவதில்லை. ஏனெனில் இந்த  4,600 இடங்களும் ஒரு கல்லூரியைச் சார்ந்தவை அல்ல, அது ஒரு கூட்டுத் தொகுப்பு தான், எனவே இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக் கீட்டை அமல்படுத்த முடியாது என மோடி அரசு உச்சநீதிமன்றத்தில் வாதிட்டுக் கொண்டிருக்கிறது. தாழ்த்தப்பட்டவர் களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும் பிரித்தாளும் பார்ப்பனத் தந்திரம் இது. அதே அரசு 10 சதவீதம் பொருளாதாரத்தில் பின் தங்கிய உயர் ஜாதியினருக்கான இடஒதுக் கீட்டை  (EWS quota) இந்த வருடமே இந்த 4,600 இடங்களில் அமல்படுத்த வேண்டும் என்று national testing agency  மற்றும் MCI க்கு ஆணையிட்டுள்ளது. இதன் மூலம் 4600 இடங்களை பார்ப்பனர் மற்றும் உயர் ஜாதியினருக்கு உறுதி செய்தாகிவிட்டது. இதர பிற்படுத்தப்பட்டோருக்கு கிடைக்க வேண்டிய 1242 இடங்களை அளிக்காமல் கொல்லைப்புறம் வழியாக அதையும் பார்ப்பனர்களுக்கே தாரை வார்க்கின்றது.

'புதிய இந்தியா - பாரதிய ஜனதா'வில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கும், இந்தியா முழுமையும் உள்ள  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கும் 'முதல் பரிசு' அவர்கள் மருத்துவர்கள் ஆகும் கனவில் மண்ணை அள்ளிக் கொட்டுவதுதான்.

பாரதிய ஜனதா என்பது பார்ப்பனர் நிரம்பி வழியும் கூடாரமாகி விட்டது. எம்.பி.க்களும் சரி, அமைச்சர்களும் சரி  பார்ப்பனர்களே தலைக் கொழுத்த அள வுக்கு அதிகரித்துக் காணப்படுகின்றனர்.

சமுகநீதி என்றாலே எட்டிக்காயென்பது ஆர்.எஸ்.எஸ்., பிஜேபியின் கொள்கை. போதும் போதாததற்கு 50 விழுக்காட்டுக்கு மேல் மத்திய அமைச்சரவையில் பார்ப்பனர் களின் ஆதிக்கம் கொடி கட்டிப் பறப்பதால் அடுத்தடுத்து சமுகநீதியை முற்றிலுமாக சவக் குழிக்கு அனுப்பி விடுவார்கள்.

இதற்கான ஒருதீர்வை தமிழ்நாடு தான் வழிகாட்ட வேண்டும். சமுக நீதியாளர்களை ஒருங்கிணைத்து உரிய பரிகாரம் காண திராவிடர் கழகம் முயற்சிக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

கி. வீரமணி,

தலைவர் திராவிடர் கழகம்

சென்னை

5.6.2019

பார்ப்பன ஆதிக்கம் பாரீர்!


1.            குடியரசுத் தலைவர் செயலகத்தின் மொத்த இடுகைகள்- 49
இவர்களில் 39 பார்ப்பனர்கள் SC, ST - 4 OBC - 6
2.            துணை குடியரசுத் தலைவர் செயலகத்தின் 7 பதவிகள் இங்கே 7 பார்ப்பனர்கள்                         இருக்கிறார்கள். SC - 0 ST- 0 OBC - 0
3.            கேபினட் செயலாளர் பதவிகள் 20 பார்ப்பனர்கள் - 17
SC, ST-1 OBC - 2
4.            பிரதமரின் அலுவலகத்தில் மொத்தம் 35 பதவிகள் பார்ப்பனர்கள் - 31
SC, ST - 2 OBC - 2
5.            விவசாயத் திணைக்களத்தின் மொத்த இடுகைகள் 274 பார்ப்பனர்கள் - 259
SC, ST - 5 OBC - 10
6.            பாதுகாப்பு அமைச்சகம் 1379 பார்ப்பனர்கள் - 1300 SC, ST - 48 OBC - 31
7.            சமுக நல மற்றும் சுகாதார அமைச்சின் மொத்த இடுகைகள் 209 பார்ப்பனர்கள் - 132 SC, ST - 17 OBC - 60
8.            நிதி அமைச்சின் மொத்த இடுகைகள் 1008
'பார்ப்பனர்கள் - 942 SC, ST - 20 OBC - 46
9.            பிளானட் அமைச்சில் மொத்தம் 409 பதவிகள்
பார்ப்பனர்கள் - 327 SC, ST - 19 OBC - 63
10.          தொழில் அமைச்சகத்தின் மொத்தம்:
இடுகைகள் 74 பார்ப்பனர்கள் - 59 SC, ST- 4 - OBC - 9
11.          கெமிக்கல்ஸ் மற்றும் பெட்ரோலியம் அமைச்சகத்தின் மொத்த இடுகைகள் 121        பார்ப்ப னர்கள் - 91 SC, ST-9 OBC - 21
12.          ஆளுநர் மற்றும் துணை நிலை ஆளுநர் 27ஆவது ஒட்டுமொத்தம்         பார்ப்பனர்கள் - 25 SC, ST- 0 OBC - 2
13.          தூதுவர்கள் வெளிநாட்டில் வாழ்ந்து வருகின்றனர் 140 பதவி. பார்ப்பனர்கள் -                              140  SC, ST - 0 OBC - 0
14.          மத்திய அரசு பல்கலைக் கழக துணைவேந்தர் 116 பதவி. பார்ப்பனர்கள் - 108                108         SC, ST- 3 OBC - 5
15.          மத்திய பொதுச் செயலாளர் பதவிகள் 26
பார்ப்பனர்கள் - 18 SC, ST - 1 OBC -7
16.          உயர்நீதிமன்ற நீதிபதி 330 பதவி.  பார்ப்பனர்கள் - 306
SC, ST - 4 OBC - 20
17.          உச்சநீதிமன்ற நீதிபதி 26 பதவி.
பார்ப்பனர்கள் - 23 SC, ST-1 OBC - 2
18.          மொத்த அய்.ஏ.எஸ். அதிகாரி 3600 பதவி. பார்ப்பனர்கள் - 2750
SC, ST - 300 OBC - 350
(டெலினை அடிப்படையாகக் கொண்ட நிறுவனம், 'யங் இந்தியா' எனப்படும் -   தகவல் அறியும்  உரிமைச் சட்டத்தின் கீழ் 2018ஆம் ஆண்டில் வெளியிட்டது)
-விடுதலை ஞாயிறு மலர், 27.4.19

முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடாம்? சரிதானா?



அரசமைப்புச் சட்டத்தில் சமுகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்பதுதான் அளவுகோல். பி.ஜே.பி. மத்திய அரசோ பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்துள்ளது. ஏற்கெனவே திறந்த போட்டியில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய உயர்ஜாதியினருக்கு மேலும் 10 சதவீதம் என்பது கொடுமையல்லவா! அதுவும் யார் அந்த ஏழைகள்? ஆண்டுக்கு எட்டு லட்சம் அதாவது மாதம் 65 ஆயிரம் ரூபாய் வருமானம் உடையவர்கள் ஏழைகளாம்! பணத்திலும் வர்ணபேதம் பாரீர்! இந்த ஏழைகளுக்குத்தான் இடஒதுக்கீடு என்கிறது பி.ஜே.பி. அரசு.
தற்போது மத்திய அரசின் அதிகார மய்யத்தில் 75%
இருக்கும் உயர் ஜாதியினர்க்கு , மேலும் 10% இட ஒதுக்கீடா?
 - விடுதலை ஞாயிறு மலர், 27.4.19

இடஒதுக்கீடு குறித்து ஒரு மருத்துவரின் பார்வை!

கல்லூரியில் ஒன்றாகப் படித்து இப்போது மருத்துவராக இருக்கும் நண்பன் ஒருவன் ரிசர்வேசனை எதிர்த்து சில நாட்கள் முன்பு ஸ்டேட்ஸ் (தற்போதைய நிலை) போட்டிருந்தான்.
சில நாட்கள் முன்பு எனது பழைய நினைவுகள் அடங்கிய ட்ரங்க் பெட்டியை திறந்து பார்த்ததில்   நான் மருத்துவப்படிப்பிற்கு சேர்ந்தது, அதை யொட்டி நிகழ்ந்த நிகழ்வுகள், பத்திரிகை விளம்பரங்கள், எனது ஹால் டிக்கெட், வேதியியல் பரீட்சையின் போது எனக்கு வந்த வைரஸ் காய்ச்சல், அதற்கு காண்பித்த டாக்டர் பழனிச்சாமியின் ப்ரிஸ்க்ரிப்சன், வேலூர் மருத்துவக் கல்லூரியில் எனது அலாட்மண்ட் ஆர்டர் என்று பார்த்துக்கொண்டு சென்றேன்.
அப்போது என்னுடன் வேலூர் மருத்துவக் கல்லூரியில் ஒரே நாளில் சீட் எடுத்த மாண வர்களின் அட்டவணையை டவுன்லோடு செய்து ஒரு நினைவுக்காக ப்ரிண்ட் செய்து வைத்தேன். அதில் அந்த ரிசர்வேசனை எதிர்த்த நண்பன் "ரிசர்வேசன்" சீட்டில் தான் மருத்துவம் படிக்க சேர்ந்திருப்பது தெரிந்தது.
நண்பர்களே...
நம்மில் பலருக்கும் நாம் எந்த சீட்டில் படித்தோம் என்பதே தெரியமாட்டேங்குது!
BC என்பது பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு - 26.5%, BCM பிற்படுத்தப்பட்டோரில் முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு - 3.5%, MBC என்பது மிகவும் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு - 20%, SC என்பது பட்டியலினம் அல்லது ஒடுக்கப்பட்டோர் - 15%. SCA  என்பது பட்டியலினத்துக்குள் அருந்ததியருக் கான உள் ஒதுக்கீடு - 3%, ST என்பது பழங்குடியினருக்கு - 1%/
இது தான் தற்போது தமிழகத்தில் உள்ள ரிசர்வேசன் பாலிசி.
இதில் மீதம் 31% பொது அதாவது யார் வேண்டுமானாலும் போட்டி போட்டுக் கொள்ளலாம்.
நான் கல்லூரியில் சேர்ந்த போது BCM உள் ஒதுக்கீடு கிடையாது. நான் BC பிற் படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டில் மெரிட் சீட் வழங்கப்பட்டு படித்தேன்.
நான் ரிசர்வேசனுக்கு ஆதரவாக பேசுகிறேன்.
ஆனால் அதே கவுன்சிலிங் நாளில் என்னுடன் அதே BC பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டில் பயின்ற நண்பன் இட ஒதுக்கீட்டை எதிர்க்கிறார்.
இப்படி பல பேர் உண்டு .
இந்த 69 % இட ஒதுக்கீட்டில் மருத்துவம் இஞ்சினீயரிங் படித்து விட்டு எங்கேனும் மேற்குலக நாடுகளில் அமர்ந்து கொண்டு ரிசர்வேசனுக்கு எதிராக மீம்/ போஸ்ட் / ரைட் அப் எழுதுவது.
முதல்ல நீங்க அந்த ரிசர்வேசன்ல தான் வந்தீங்கங்குறத மறந்துராதீகப்பு..
ஏத்தி விட்ட ஏணிய எட்டி உதைக்க லாமோ?
ஏனய்யா ... இந்த சமுதாயம் 2000 வருசமா சமமா இல்ல. அத ஒத்துக்கோங்க முதல்ல
ஏன் இப்ப கூட சமமா இல்லை . அதையும் ஒத்துக்கப்பா..
ஒரு சாரார் படிக்கவே விடாம அவன் அப்பன் பாட்டன் பூட்டன் பாத்த வேலைய பாக்குறதுதான் சரினு இந்த சமுதாயம் சொல்லிட்டுருந்துச்சு.
இந்த சமுதாயத்த ஓரளவு சரி பண்ணத் தான் ரிசர்வேசன் வந்துச்சு
பல பேரோட நெனப்பு என்ன தெரியுமா?
ரிசர்வேசன்னா அது தரமற்றதுனு.
அப்படி இல்ல...
புலிக்கும் புலிக்கும் தான் போட்டி இருக்கணும் புலிக்கும் பூனைக்கும் போட்டி வச்சா அது சரிசமமா இருக்குமா? அதுலயும் அந்த பூனையோட காலையும் ஒடச்சு நொண்டி ஆக்கிட்டு போட்டி வைக்கிறது சரியா?
சமீபத்தில் கூட ஒரு போஸ்ட் பார்த்தேன்   NEET PG கவுன்சிலிங்குல் 4000 ஆல் இந்தியா ரேங்க் எடுத்தவருக்கு சீட் கிடைக்கலையாம் 40,000 ஆல் இந்தியா ரேங்க் எடுத்தவனுக்கு சீட் கிடைச்சுருச்சாம்.
இது பெரிய அநீதினு போட்டு பரப்பிட்டு கெடந்தானுங்க
அந்த 40,000 ரேங்க் எடுத்தவன் ஒரு பழங்குடி இனத்தான். -
ஏன்யா.. உனக்கும் அவனுக்கும் ஜோடி போட்றீங்க.. நீ ஏசி கார்ல போறவன் அவன் வெறும் கால்ல நடக்குறவன்
நீ ஏசில தூங்குவ அவன் கொசுக்கடில வண்டு கடில தூங்குவான்
நீ இன்வெர்ட்டர்/ஜெனரேட்டர்னு கரண்ட் போனாக்கூட வசதி பண்ணி படிப்ப.
அவன் தெரு வௌக்கு வெளிச்சத்த மட்டுமே நம்பி படித்தவன். இன்னும் அவன் வீட்டுக்கு கூட முழுசா கரண்ட் வந்து சேரல.
நீ வெளிய சாப்டப்போனா 2000 ரூவா முழுசா ஆகும்.
அவுங்க அப்பனோட ஒரு மாச பொழப்பே அவ்வளவு தான்டா.. நீ ஒரு பீரோ காணாத அளவுக்கு துணிமணி வச்சுருக்கவன் அவனுக்கு உடுத்த ஒன்னு - மாத்த ஒன்னு இது தாண்டா அவன் பொழப்பு
நீ உங்க பரம்பரைல பத்தாவது டாக்டரு; அவன்தாண்டா அவங்க இனத்துலயே மொத டாக்டரு,  உனக்கும் அவனுக்கும் சோடி போட்ற.. இது நியாயமா?
ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை
விடுதலை ஞாயிறு மலர், 4.5.19