பக்கங்கள்

புதன், 26 ஜூன், 2019

திராவிடம் அறிவோம் (90)

1979ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்த போது, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் இடஒடுக்கீடு பெற ஆண்டு வருவாய் ரூ.9000-க்குள் இருக்க வேண்டும் என்று வருவாய் உச்ச வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. (அரசாணை (நிலை) எண். 1156, நாள். 02.07.1979).

அரசின் இந்த அறிவிப்பு மக்களிடையே கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தது. அறிவிப்பினைத் திரும்பப் பெறக் கோரி, திராவிடர் கழகம் தமிழ்நாடு முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. அரசாணையின் நகல்கள் எரிக்கப்பட்டு, அதன் சாம்பல் அரசுக்கு அனுப்பப்பட்டது.

எனினும் அரசு அசைந்து கொடுக்கவில்லை.

இந்த சூழலில், 1980இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. அரசு கடும் தோல்வியைச் சந்தித்தது. தேர்தலிலிருந்து பாடம் கற்ற அரசு, அனைத்து கட்சிக் கூட்டத்தைக் கூட்டியது. அதனைத் தொடர்ந்து, வருவாய் உச்ச வரம்பு அரசாணையை அ.தி.மு.க. அரசு திரும்பப் பெற்றது. (அரசாணை (நிலை) எண். 72, நாள். 01.02.1980).
  
அதுமட்டுமின்றி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீடு 31%இல் இருந்து 51% ஆக உயர்த்தப்பட்டது. (அரசாணை (நிலை) எண். 73, நாள். 02.02.1980)

- வெற்றிச்செல்வன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக