பக்கங்கள்

வெள்ளி, 7 ஜூன், 2019

முன்னேறிய ஜாதி ஏழைகளுக்கு 10% இடஒதுக்கீடாம்? சரிதானா?அரசமைப்புச் சட்டத்தில் சமுகரீதியாகவும், கல்வி ரீதியாகவும் இடஒதுக்கீடு என்பதுதான் அளவுகோல். பி.ஜே.பி. மத்திய அரசோ பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்ஜாதியினருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளித்துள்ளது. ஏற்கெனவே திறந்த போட்டியில் பெரும்பாலான இடங்களை கைப்பற்றிய உயர்ஜாதியினருக்கு மேலும் 10 சதவீதம் என்பது கொடுமையல்லவா! அதுவும் யார் அந்த ஏழைகள்? ஆண்டுக்கு எட்டு லட்சம் அதாவது மாதம் 65 ஆயிரம் ரூபாய் வருமானம் உடையவர்கள் ஏழைகளாம்! பணத்திலும் வர்ணபேதம் பாரீர்! இந்த ஏழைகளுக்குத்தான் இடஒதுக்கீடு என்கிறது பி.ஜே.பி. அரசு.
தற்போது மத்திய அரசின் அதிகார மய்யத்தில் 75%
இருக்கும் உயர் ஜாதியினர்க்கு , மேலும் 10% இட ஒதுக்கீடா?
 - விடுதலை ஞாயிறு மலர், 27.4.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக