"பெரியார் சாதிய ஒழிச்சார், ஒழிச்சார் னு சொல்றீங்களே. எந்த சாதிய ஒழிச்சார். சொல்ல முடியுமா?" என்று சங்கீஸ் & நாம் தமிழர் தம்பீஸ் அறிவாளித்தனமாக கேட்பதாக நினைத்து கேட்கிறார்கள்.
அவர்களுக்கு புரியாது. இருந்தாலும் சொல்லிவிடலாம்.
சாதி ஒழிப்பு ஒரே நாளில், ஒரே ஆளால் நடந்து விடாது. அது ஒரு Process; படிப்படியாக தான் அழிக்க முடியும். இரண்டு வருடம் பழகிய சிகரெட்டு பழக்கத்தை நிறுத்துவதே அவ்வளவு எளிதாக முடிவதில்லை. சாதி பல்லாயிரம் வருடங்களாக நம் மூளையில், மனதில் விதைக்கப்பட்ட நஞ்சு. அது நாம் மனது வைக்காமல் அழியாது. எனக்குள் உள்ள சாதிவெறி அழிய வேண்டுமென்றால், அதை நான் தான் அழிக்க வேண்டும். பெரியார் ஏன் அழிக்கவில்லை என்று கேட்க கூடாது.. "ஏன் சாதி ஒழியணும், எப்படி ஒழிக்கணும், ஒழிச்சா என்ன நல்லது நடக்கும்" என்று பெரியார் சொல்லிவிட்டார்.. அந்த மனிதர், வாழ்நாளில் அவரால் முடிந்ததை விட அதிகமாகவே செய்து விட்டார்; சித்தாந்தத்தையும் விதைத்து விட்டார்.
பெரியார் எந்த சாதிய ஒழிச்சாருனு உங்கள பாத்து யாராவது கேட்டா சொல்லுங்க.. பெரியார் இன்னும் சாதிய முழுசா அழிக்கல.. அழிச்சிக்கிட்டே இருக்கார் னு.
அப்படியே இதையும் சொல்லுங்க..
"பெரியார் எனக்குள்ள சாதிய ஒழிச்சிட்டாரு, உனக்குள்ள இன்னும் ஒழிக்கலயா" னு.. புத்தி இருந்தா யோசிப்பான், இல்லன்னா பேசாம போய்டுவான்..
🖤🖤🖤😊
#திராவிடம் #பெரியார் #சாதி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக