பக்கங்கள்

புதன், 18 ஜனவரி, 2017

ஆந்திரப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றம் பிற்படுத்தப்பட்டோருக்கு 33 விழுக்காடு ஒதுக்கீடு

அய்தராபாத், செப்.7_ நாடாளுமன்ற, சட்டப் பேரவைத் தொகுதிகளில் மூன்றில் ஒரு பங்கு அளவு பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒதுக்கீடு செய்ய அரசியல் சாசனத் தில் வகை செய்யுமாறு மத்திய அரசை வலி யுறுத்தி, ஆந்திரப்பிரதேச சட்டப்பேரவையில் சனிக் கிழமை, ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற் றப்பட்டது.

ஆந்திரப்பிரதேச சட் டப்பேரவையில் பட் ஜெட் கூட்டத் தொடரின் கடைசி நாளான சனிக் கிழமையன்று அந்த மாநில முதல்வர் என்.சந் திரபாபு நாயுடு, இது தொடர்பான தீர்மா னத்தை முன்மொழிந்தார்.

தீர்மானம்

தீர்மானத்தில் கூறப் பட்டிருந்ததாவது:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதிகளில் இட ஒதுக்கீடு செய்வதற்கு அரசமைப்புச் சட்ட ரீதியிலான அங்கீகாரம் அளிப்பதற்கு மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பிற்படுத்தப் பட்ட வகுப்பினரின் எண் ணிக்கையை கணக்கெடுக்க வேண்டும். பிற்படுத்தப் பட்டோர் நலனுக்கென தனி அமைச்சக்கத்தை உருவாக்கவேண்டும். பிற் படுத்தப்பட்டோர் மேம் பாட்டுத் திட்டங்களை நிறைவேற்றுவதற்கென பட்ஜெட் ஒதுக்கீட்டில் 25 சதவிகித நிதியாதாரத்தை ஒதுக்கவேண்டும்.

மேலும், அரசுத்துறை ஊழியர்களில் பிற்படுத் தப்பட்ட வகுப்பினருக்கு பணி உயர்வில் இட ஒதுக் கீட்டை மத்திய அரசு வழங்கவேண்டும்.
ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கைவினைஞர்களின் நலனுக்கான ஆதாரனா திட் டம் ஆந்திரத்தில் மீண்டும் செயல்படுத்தப்படும் என்று அந்தத் தீர்மானத் தில் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து இந் தத் தீர்மானம் ஒருமன தாக நிறைவேற்றப்பட டது.

இந்நிலையில், எதிர்க் கட்சித் தலைவரான ஒய்.எஸ்.ஆர். கட்சித் தலைவர் ஜெகன்மோகன் எழுந்து, ஆளும் தெலுங்கு தேசக் கட்சிக்கு எதிரான கருத்துகளை கூறியதால் அவையில் அமளி ஏற்பட்டது.

தீர்மானம் நிறைவேறிய பிறகு...

அப்போது, பேரவை யில் தீர்மானம் நிறை வேறிய பிறகு அதுகுறித்து பேசுவது மரபல்ல. பேரவை மரபுகளை பின் பற்றுவது குறித்து மாநில அரசு சார்பில் நடத்தப் பட்ட பயிலரங்கில்கூட ஜெகன்மோகன் கலந்து கொள்ளவில்லை என்று பேரவை விவகாரத் துறை அமைச்சர் யனமல ராம கிருஷ்ணுடு கூறினார்.

ஒத்தி வைப்பு

இதைத் தொடர்ந்து பேரவைத் தலைவர் கோடேலா சிவப்பிரசாத், இந்தத் தீர்மானம் குறித்து பேசுவதற்கு ஜெகன் மோகன் ரெட்டிக்குப் போதிய வாய்ப்பு வழங் கப்பட்டுவிட்டது என்று கூறினார். இதையடுத்து தேதி குறிப்பிடாமல் பேர வைக் கூட்டத் தொடரை அவர் ஒத்தி வைப்பதாக அறிவித்தார்.

,விடுதலை,7.9.14

.


உச்சநீதிமன்றத்தில் மீண்டும் சமூக நீதி அமர்வு

புதுடில்லி, ஜன. 17- உச்சநீதிமன் றத்தில் சமூகநீதி தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் தனி அமர்வை, மீண்டும் ஏற்படுத்தி, தலைமை நீதிபதி, ஜே.எஸ். கேஹர் உத்தரவிட்டுள்ளார்.

உச்சநீதிமன்றத்தில் சமூகம் மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த பொது நல வழக்குகளை, வெள்ளிதோறும், இரு நீதிபதி கள் கொண்ட தனி அமர்வு விசாரித்து வந்தது. நீதிபதிகள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், முந்தைய தலைமை நீதிபதி, டி.எஸ். தாக்கூர், இந்த தனி அமர்வை நிறுத்தி வைத்தார்.

இந்நிலையில், புதிய தலைமை நீதிபதியாக பொறுப் பேற்றுள்ள, ஜே.எஸ்.கேஹர், மீண்டும், சமூகநீதி அமர்வு செயல்பட உத்தரவு பிறப்பித்து உள்ளார். ஏற்கெனவே இருந்து வரும் நடைமுறைப்படி, இரண்டு நீதிபதிகள் கொண்ட இந்த அமர்வு, சமூக நீதி தொடர்பான பொதுநல வழக்கு களை வெள்ளி தோறும் விசா ரிக்கும் என, அறிவிக்கப்பட்டு உள்ளது.

-விடுதலை,17.1.17

திங்கள், 9 ஜனவரி, 2017

பிஜேபி ஆளும் ராஜஸ்தானில்  மனுவின் சிலையை அகற்றிட கிளர்ச்சி!


ஜெய்ப்பூர், ஜன.9- ராஜஸ்தான் மாநில உயர்நீதிமன்றத்தின் ஜெய்ப்பூர் அமர்வில், மனுவின் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இதனைஅப்புறப்படுத்திட வேண்டும் என்று மனுநீதி மற்றும் மனுஸ்மிருதி ஆகியவற்றுக்கு எதிராக இயங்கி வரும் மனு விரோதி அபி யான் என்னும் அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிளர்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபடத் திட்ட மிட்டிருக்கிறார்கள்.

சமூக சீர்திருத்தவாதி சாவித்திரிபாய் பூலே பிறந்தநாள் நூற்றாண்டு சிறப்பு மாநாடு ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் நடை பெற்றது. இதில் இதற்கான கிளர்ச்சித் திட் டங்கள் அறிவிக்கப்பட்டன. இக்கிளர்ச்சிகள் ஏப்ரல் 11 அன்று ஜோதிராவ் பூலே பிறந்தநாள் நூற்றாண்டுதினம் வரையிலும் தொடரும் என்றும் அவர்கள் அறிவித்தனர்.

இது தொடர்பாக மநுவிரோத அபியான் அமைப்பின் சார்பில் தூதுக்குழுவினர் ராஜஸ் தான் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியை சந்தித்து ரிட் மனு அளிக்க உள்ளனர். அந்த மனுவை விசாரித்து விரைவில் தீர்ப்பு வழங்கி டவேண்டும் என்று கோர இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

“அதர்மத்தின் அடையாளம்” மனுதர்மம் என்பது உண்மையில் மனுஅதர்மமே என்றும், இவ்வாறு அதர்மத்தைப் போதித்தவரின் சிலை நீதிமன்ற வளாகத்திற்குள் இருக்கக் கூடாது என்றும் Ôமனு விரோத அபியான்Õ அமைப்பினர் தெரிவித்தனர்.

பிரதமர் மோடி, தன்னுடைய அரசாங்கம் பி.ஆர்.அம்பேத்கரின் சமூக நீதியை உயர்த்திப் பிடிப்பதில் உறுதிபூண்டிருப்பதாகக் கூறியிருக் கிறார். அது உண்மையெனில் அவர் உயர் நீதிமன்ற வளாகத்திலிருந்து மனுவின் சிலையை அகற்றிவிட்டு, அம்பேத்கரின் சிலையை வைத்திட முன்வரவேண்டும் என்றும் அவர்கள் கோரியுள்ளார்கள்.
-விடுதலை,9.1.17

சனி, 7 ஜனவரி, 2017

மகாராஷ்டிராவில் மராத்தியர் மற்றும் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு


மும்பை, ஜூன் 27_ மகாராஷ்டிராவில் மராத்தா சமூகத்தினருக்கு 16 விழுக்காடு முஸ்லிம் களுக்கு 5 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத் தில் பெரும்பான்மையாக வசிக்கும் மராத்தா சமூகத் தினரும், சிறுபான்மையின ரான முஸ்லிம்களும் தங்களுக்கு கல்வி மற்றும் அரசு வேலை வாய்ப்பு களில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று நீண்ட காலமாக கோரிக்கை விடுத்துவந்தனர்.

இந்நிலையில்   முதல் வர் சவான் தலைமையில் நடைபெற்ற மாநில அமைச்சரவை கூட்டத் தில் மராத்தா சமூகத்தின ருக்கு 16 விழுக்காடு முஸ்லிம்களுக்கு 5 விழுக் காடு இடஒதுக்கீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட் டது. ஆனால் இந்த இடஒதுக்கீட்டு முடிவுக்கு அம்மாநில பாரதிய ஜனதா கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

-விடுதலை,27.6.14

செவ்வாய், 20 டிசம்பர், 2016

மருத்துவக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சாதனை!

திராவிட இயக்கத்தின் சாதனையைப் பாரீர்!
மருத்துவக் கல்லூரியில் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் சாதனை!
இதனை ஒழித்துக் கட்டத்தான் நுழைவுத் தேர்வு எனும் சதி - எச்சரிக்கை!

தமிழர் தலைவர் ஆசிரியர் சமூகநீதிக்கான அறிக்கை 

தேர்தல் முடிவுகள்  - திராவிட கட்சிகளுக்கு மாற்று ஏதுமில்லை என்பதற்கான நிரூபணம்!  அதிமுக வெற்றி மிகப் பெரியது என்றோ - தி.மு.க. தோல்வி பரிதாபமானது என்றோ சொல்லுவதற்கு இடமேதுமில்லை

நடந்து முடிந்த மருத்துவக் கல்லூரி சேர்க்கையில் திறந்த போட்டியில் தாழ்த்தப்பட்டோரும், பிற்படுத்தப்பட்டோரும் அரும் சாதனையைப் புரிந்துள்ளனர். இந்த நிலையை ஒழித்துக் கட்டத்தான் நுழைவுத் தேர்வு என்ற சதித் திட்டத்தை திணிக்க உயர் ஜாதி வட்டாரம், பிஜேபி, ஆர்.எஸ்.எஸ்., கூட்டம் கச்சைக் கட்டி நிற்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர்
கி. வீரமணி அவர்கள் சுட்டிக்காட்டி விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

2016-2017ஆம் ஆண்டுக்கான மருத்துவக் கல்லூரியில் சேருவதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

ஏறத்தாழ 2853 இடங்களுக்கு 25,379 விண்ணப்பங்கள் வந்துள்ளன.
குறைந்தது 197.75 மதிப்பெண்கள் பெற்ற மாணவர்கள் மட்டுமே இந்த 884 இடங்களைப்  பெறுகின்றனர் .

ஒவ்வொரு பிரிவிலும் மிக அதிகமான மதிப்பெண் பெற்ற மாணவர்களும் தரவரிசைப் பட்டியலில்  அவர்களது மதிப்பெண்ணும், தரவரிசை எண்ணும் வருமாறு:

நம் மக்களிடையே ஒரு பொதுவான எண்ணம் உண்டு அல்லது பரப்பப்படுகிறது; தாழ்த்தப்பட்டோர் 35% மதிப்பெண் பெற்றாலே இடம் கிடைத்து விடும் என்பதுதான் அது.  உயர் வகுப்பினர் என்று எண்ணிக் கொள்பவர்கள் 200/200  வாங்கினால் மட்டுமே அனுமதி என்ற தவறான கருத்தும் பரப்பப்படுகிறது. அது தவறானது என்பதை மேற்கண்ட புள்ளி விவரங்கள் நிரூபிக்கும்.
புள்ளி விவரங்கள் காட்டுவது என்ன?

மேற்கண்ட புள்ளி விவரங்கள் எதைக் காட்டுகின்றன? திராவிட இயக்க ஆட்சியில் 69 சதவீத இடஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு ஒழிப்பு, கல்வி வளர்ச்சிக்கான திட்டங்கள் செம்மையாகத் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருவதால் இத்தகைய "அறுவடை" நிகழ்ந்திருக்கிறது.

திராவிட இயக்கத்திற்கான வெற்றி!

திராவிட இயக்கத்தின் சமூகநீதிக்குக் கிடைத்த மகத்தான வெற்றியல்லவா இது!

மருத்துவக் கல்லூரியில் சேர சமஸ்கிருதம் படித்திருக்க வேண்டும் என்ற பார்ப்பன சூழ்ச்சியை ஒழித்துக் கட்டியது நீதிக்கட்சி அல்லவா! தந்தை பெரியார் அவர்களின் முயற்சி அல்லவா!
+2 தேர்வு மதிப்பெண் அடிப்படைக் காரணமாக கிராமப்புற ஒடுக்கப்பட்ட ஏழை எளிய நடுத்தர இருபால் மாணவர்களும் இந்தச் சாதனையின் வெற்றிச் சிகரத்தை எட்டியுள்ளனர் பாராட்டுகிறோம் - வாழ்த்துகிறோம்!

வெற்றியை வீழ்த்த சதி!

இந்த வெற்றியைத் தட்டிப் பறிக்கத்தான் - ஆண்டாண்டு காலமாக கல்விஉரிமை மறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களின் இந்தச் சாதனையை ஒழித்துக் கட்டத்தான் அகில இந்திய நுழைவுத் தேர்வு எனும் கொடுவாளை கொல்லைப்புற வழியில் தூக்கிக் கொண்டு வருகின்றனர். உயர் ஜாதி வட்டாரமும், பா.ஜ.க., சங்பரிவார்களும் மும்முரம் காட்டுகின்றன; கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தமிழ்நாட்டின் அனைத்துக் கட்சிகளின், தலைவர்கள் சமூகநீதியாளர்கள் ஒன்று திரண்டு,  நாம் போராடிப் போராடிப் பெற்ற இந்த நல்வாய்ப்பைப் பாதுகாத்துக் கொள்ளவும் இதனை ஒழித்துக் கட்ட துடித்துக் கொண்டு நிற்கும் முயற்சிகளைப் புறந்தள்ளவும்,  நுழைவுத் தேர்வை உள்ளே நுழைய விடாமல் நிரந்தரமாகத் தடுத்து நிறுத்தவும் ஒன்றுபட்டு நிற்கத் தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்தியாவுக்கே வழிகாட்டுவோம்!


தந்தை பெரியார் பிறந்த தமிழ்மண் இந்தப் பிரச்சினையில் இந்தியாவுக்கே வழிகாட்டும் ஒரு நிலையை உருவாக்கி, இந்தியா முழுமையும் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக்கும், வளர்ச்சிக்கும் வழி காட்டுவோம்! வழி காட்டுவோம்!!

வாரீர்! வாரீர்!!

கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
-விடுதலை,18.6.16

ஞாயிறு, 18 டிசம்பர், 2016

பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக 15 ஜாதிகள் சேர்ப்பு


புதுடில்லி, டிச.9 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பட்டியலில் புதிதாக 28 ஜாதிகளை சேர்த்து  திருத்தங்கள் செய்ய வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் (என்சிபிசி) பரிந்துரை செய்திருந்தது.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் அளித்த பரிந்துரை யில் குறிப்பிடப்பட்ட 28 ஜாதிகளில் 15 புதிய ஜாதிகளை மட்டும் இதர பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்த்து தற்போது மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
அதில், பீகாரின் கதேரி/இடாபரோஷ், ஜார்கண்ட்டின் ஜோரா, காஷ்மீரின் லபனா ஆகிய 3 ஜாதிகள் இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளன. மற்ற 9 ஜாதிகள் ஏற்கெனவே இதர பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலில் இடம் பெற்றுள்ள சாதிகளின் உட்பிரிவுகளாகும். மீதியுள்ள 3 ஜாதிகள் திருத்தத்தின்மூலமாக இதர பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
மத்திய அரசின் இதர பிற்படுத்தப்பட்டோர்  பட்டியலில் புதிதாக சேர்க்கப்பட்ட 15 ஜாதிகளைச் சேர்ந்த மக்கள், தற்போதுள்ள கொள்கைகளின் அடிப்படையில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் அவர்களுக்கான இட ஒதுக்கீட்டை பெற்று பலனடைவார்கள். அத்துடன் மத்திய அரசு நலத்திட்டங்களின் பலன்களையும் பெற முடியும்.
-விடுதலை,9.12.16

செவ்வாய், 29 நவம்பர், 2016

தமிழ்நாட்டு மக்களும் வி.பி.சிங்கும் ... சு.குமாரதேவன்.,,,


* எத்தனையோ வட இந்தியத் தலைவர்களை தமிழக மக்கள் அவர்களின் பெயர்களைத் தங்கள் குழந்தைகளுக்குச் சூட்டி மகிழ்ந்தனர். ஆனால் அந்தத் தலைவர்களெல்லாம் தமிழர்களை எந்த அளவிற்கு நேசித்தார்கள் என்பதையோ (அ) அவர்கள் எப்படி தமிழர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்தார்கள் என்பதையோ நாம் கண்கூடாக அறிந்ததில்லை. ஆனால்வி.பி.சிங் ஒருவர்தான் தமிழர்களின் இதயத்தோடு மட்டுமல்லாமல் உணர்வுகளோடும் உரிமைகளோடும் ஒன்றாய் இணைந்தவர்.
* பல ஆண்டுகளாய் காவிரிப் பிரச்சினையில் தமிழகத்திற்கு விடிவு கிடைக்காத வேளையில் தான் அங்கம் வகிக்கும் ஜனதா தளம் கர்நாடகாவில் ஆட்சியில் இருக்கும் போதே "காவிரி நடுவர் மன்றம் " அமைக்க உத்தரவிட்டார். அதன் மூலம் தமிழக விவசாயிகளின் நெஞ்சில் நீங்காத இடம் பெற்றார்.
* ஒரு முறை அவர் பிரதமராக இருந்த போது தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் பயங்கரவாதிகள் என்று புலிகளை வைத்து அரசியல் முகவரி தேடியவர்களின் சார்பில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் புலிகள் பயங்கரவாதிகள் தானே? என்று வினா எழுப்பப்பட்டது. பளிச்சென்று வி.பி.சிங் "யார் யார் பயங்கரவாதிகள் என்று அடையாளம் கண்டு முத்திரை குத்த என்னிடம் அந்த ரப்பர் ஸ்டாம்ப் இல்லை" சொன்னார்.
* ஈழத்தை அமளிக் காடாக மாற்றி தமிழர்களைக் கொன்று குவித்த இந்திய ராணுவத்தை திரும்பப் பெற்றார்.
* 1989ம் ஆண்டு நவம்பரில் நடைபெற்ற 10 வது மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் தேசிய முன்னணி ஒரு இடம் கூட வெற்றி பெறவில்லை. ஆனால் முரசொலி மாறனை கேபினட் அமைச்சராக்கி தமிழகத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் அளித்தார். ராஜீவ் காலத்தில் இணை, துணை அமைச்சர்களாகத்தான் தமிழர்கள் இருந்தனர். அதிலும் அதிக M.P. தொகுதிகள் தந்தது
தமிழகமே.
* தமிழகத்தின் சமூக நீதித் தத்துவத்தை சரியாகப் புரிந்து கொண்டு பிற்பட்டோர்க்கான மண்டல் பரிந்துரையினை அமல்படுத்தினார். ஆட்சி கவிழ்க்கப்பட்ட போது அவர் ஆற்றிய அமைதியான, ஆர்ப்பாட்டமில்லாத, அற்புதமான உரை இன்று படித்தாலும் அவரின் ஆழ்ந்த சமூக நீதிக்கான புரிதலைத் தெரிந்து கொள்ளலாம்.
* மண்டலுக்கெதிரான அத்வானியின் ர(த்)த யாத்திரையை தடுத்து நிறுத்தி மத ரீதியான பதட்டத்தைத் தணித்தார்.
* சென்னை விமான நிலையத்தின் பெயர்களாக காமராஜர் மற்றும் அண்ணா பெயரைச் சூட்டி அழகு பார்த்தார்.
* அவரது ஆட்சிக் காலத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நூற்றாண்டு வந்தது. அவரது நூற்றாண்டை ஆண்டு முழுதும் சிறப்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்ததோடல்லாமல் அவரது நூல்களை இந்திய மொழிகளில் மொழிபெயர்க்க உத்தரவிட்டார். பாரத ரத்னா என்ற விருதுக்கு உண்மையான அர்த்தம் Dr.அம்பேத்கருக்கு பாரத ரத்னா கொடுத்த போது தான் தெரிந்தது. 1989 நாடாளுமன்றத் தேர்தல் சுற்றுப் பயணத்தில் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பாபாசாகேப் அம்பேத்கர் சிலைகள் வைக்கப்பட்டதைப் பார்த்து மிகுந்த மகிழ்ச்சியடைந்தார்.
* அவரது 11 மாத ஆட்சிக் காலத்தில் எந்த ஒரு மாநில ஆட்சியையும் 356வது பிரிவைப் பயன்படுத்தி கலைக்காமல் உண்மையான ஜனநாயகம் மலரச் செய்தார்.
* கருப்புப் பணம், ஊழல், வெளிநாட்டில் பணம் பதுக்கல், வரி ஏய்ப்பு போன்றவற்றிற்கு எதிராக உறுதியான நடவடிக்கையை எடுத்தார்.அம்பானி, அமிதாப் பச்சன், வாடியா என்று யாரையும் இவர் ராஜீவ் ஆட்சியில் நிதி மந்திரியாக இருந்த போது விட்டு வைக்கவில்லை. பாதுகாப்பு மந்திரியான போது போபர்ஸ் ஊழலை வெளிக்கொணர்ந்தார். இதனால் ராஜீவுக்கு இருந்த "Mr.Clean" என்ற பிம்பம் சரிந்தது,
* எந்தப் பதவியாக இருந்தாலும் தான் கொண்டுள்ள லட்சியத்தை அடையப் பயன்படுத்துவார். இல்லை எனில் விலகி விடுவார்.
* தேவகவுடா பிரதமர் பதவி விலகியவுடன் மற்ற தலைவர்கள் மீண்டும் வி.பி.சிங்கை பிரதமராக்க முனைந்த போது பிடிவாதமாக மறுத்தார். "நான் அரசியலுக்கு வந்ததன் நோக்கம் நூற்றாண்டுகளாக அரசியல், சமூக, பொருளாதார அதிகாரம் உரிமைகள், சலுகைகள் மறுக்கப்பட்ட சமூகங்களுக்கு அவற்றை வழங்குவதே ஆகும். அவர்கள் எதைக் கேட்கிறார்களோ, எதைப் பெறுகிறார்களோ அது அவர்களுக்கு நியாயமாக உரியது. அந்த சமூகத் தலைவர்கள் அதிகாரம் பெற்று அதைச் சிறப்பாகப் பயன்படுத்தும் போது என் வரலாற்றுப் பங்களிப்பு முழுமை பெறுகிறது. எனவே பதவி முக்கியமில்லை"என்றார்.
* ஆயிரக்கணக்காண டெல்லி குடிசைவாசிகள் அவர்களது வசிப்பிடத்திலிருந்து வெளியேற்றப்பட்டதை எதிர்த்து சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொண்டதல்ல சிறுநீரகச் செயலிழப்பு ஏற்ப்பட்டது அவர் மரணத்திற்குக் காரணமாகி விட்டது.
* தமிழத்தில் உள்ள திராவிடர் இயக்கத் தலைவர்கள் மேலும் தமிழர்கள் மேலும் தனி அன்பைச் செலுத்திய வி.பி.சிங்கின் முழுமையான பெயரான
"விஸ்வநாத் பிரதாப் சிங் " என்ற பெயரை பலருக்கு கி.வீரமணி சூட்டி மகிழ்ந்தார்.
* அவரது ஓவியங்கள் கவித்துவமானது. அவரது கவிதைகள் ஓவியத் தன்மை வாய்ந்தது. "ஒரு துளி வானம் ஒரு துளி கடல்" என்பது அவரது கவிதை நூலின் தலைப்பு.வானமும் கடலும் துளியாகத் தெரிந்த அவருக்குப் பதவி ஒரு தூசு தான்.
* வி.பி.சிங் உயிரோடு இருந்த போது அவரது மகன் அஜய் சிங் "செயின்ட் கீட்ஸ்" என்ற தீவில் சொத்து வாங்கியதாக அவதூறு கிளப்பினர்.ஆவணங்கள்
போலியாகத் தயாரித்தனர். ஆனால் பின்பு அதைத் தயாரித்தவர்கள் வெட்கித் தலை குனிந்தனர். தன் மொத்த சொத்துக்களை பூமிதான இயக்கத்திற்குத் தந்த அவரின் மகனா வெளிநாட்டில் உள்ள தீவில் நிலம் வாங்குவார்?
வி.பி.சிங் அரசியலின் அதிசயம்.
தமிழர்கள் நாம் நன்றியுடன் நினைவில் கொள்வோம்.
வாழ்க வி.பி.சிங் .
-விடுநலை,27.11.16