பக்கங்கள்

வியாழன், 29 அக்டோபர், 2015

ஜாதியப் பாகுபாடுகளைக் கண்டித்து பவுத்தத்தைத் தழுவிய 90 தாழ்த்தப்பட்டவர்கள்


அகமதாபாத்தில் அதிரடி, இந்துத்துவாவுக்கு சவுக்கடி
அகமதாபாத், அக்.25_  அகமதாபாத்தில் அதிரடி யாக, இந்துத்துவாவுக்கு சவுக்கடி கொடுக்கின்ற வகையில், இந்து மதத்தில் நிலவிவருகின்ற ஜாதிய பாகுபாடுகளைக் கண் டித்து   தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 90 பேர் பவுத்தத்தைத் தழுவி யுள்ளார்கள்.
பாரதீய ஜனதா கட்சி ஆண்டு வரும் அரியானா மாநிலத்தில் தொடர்ச்சி யாக தாழ்த்தப்பட்டவர் களை உயிருடன் கொளுத்தி கொன்றுவரும் நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் பவுத்தத்தைத் தழுவியுள் ளார்கள் என்பது குறிப் பிடத்தக்கது.
மத்தியில் பி.ஜே.பி. ஆட்சி பொறுப்பேற்றதி லிருந்து தாழ்த்தப்பட்ட வர்களுக்கு எதிரான வன் முறைகள் வாயிலாக நாடு முழுவதும் தாழ்த்தப்பட்ட வர்கள் பாகுபாடுகளுடன் நடத்தப்பட்டுவருகின்றனர் என்பதை எடுத்துக்காட் டும் விதமாக பல்வேறு கவலைக்குரிய நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.
நாட்டின் பல பகுதி களில் இன்னமும் தங் களின் வாழ்வாதாரத்துக் காக போராடவேண்டிய வகுப்பினராகவே தாழ்த் தப்பட்டவர்கள் இருந்து வருகின்றனர். பிற மதங் களில் மாறியவர்கள் அகதி களாகவே பார்க்கப்படுகின்றனர்.
குஜராத்தில் ஜுனாகத் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் 5000 பேர் பவுத்தத்தைத் தழுவி னார்கள். அகமதாபாத் நகரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் உள்ள தோல்காவை அடுத்த சோனார் குய் பகுதியில் புதிதாக கட்டப்பட்ட டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் அரங்கில் 22.10.2015 அன்று குஜராத் புத்திஸ்ட் அகாடமி சார் பில் ஏற்பாடு செய்யப் பட்ட மதமாற்ற விழாவில்  தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 90 பேர் பவுத்த மதத்தைத் தழுவினார்கள்.
மதம் மாறியவர்களில் பெரும்பாலும் 20 வயது முதல் 35 வயது உள்ள இளை ஞர்கள் பவுத்தத்தைத் தழுவியுள்ளார்கள்.
குஜராத் மாநிலத்தில் உள்ள போர்பந்தரில் உள்ள  தி கிரேட் அசோகா புத்த விகாரைச் சேர்ந்த புத்த பிக்குவும், (தம்ம பிரச்சாரக்) புத்த நெறி பரப்புநரும், அகில பாரதிய பிக்ஷு மகா சங்கத்தின் குஜராத் மண் டல பொதுச் செயலாள ருமான பிக்ஷு பிரக்ன்யா ரத்னா என்பவர் மூலமாக பவுத்தத்தைத் தழுவியவர் கள்    அனைவரும் தீக்ஷை பெற்றனர். அவ்விழாவில் சுமார் 500_க்கும் மேற்பட் டவர்கள் கலந்துகொண் டனர்.
மதம் மாறியவர்களில் ஒருவரான 27 வயது இளைஞர் பாமினி தெல் வாடியா எனும் எம்பிஏ பட்டதாரிப் பெண் கூறும் போது, “நான் எல்லோரும் சமம் என்றே கருதுகிறேன். ஆனால், இந்து மதத்தில் அதுபோன்ற சமத்து வத்தைக் காண முடிய வில்லை. மேலும், டாக்டர் அம்பேத்கர் கொள்கை களை, நான் ஏற்றுக் கொண்டவள். அம்பேத் கர், தாமாகவே இந்து மதத¢தைவிட்டு வெளி யேறி பவுத்தத்தைத் தழு வினார். அவருடைய வழி யைப் பின்பற்றி நாங்களும்  பவுத்தத்தை ஏற்றுக் கொண்டுள்ளோம்’’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
பாமினியின் கணவ ரான அய்.அய்.எம். முது நிலை பட்டதாரி குணால், அவருடைய பெற்றோர் அபிலேஷ் மற்றும் ஹிரா பென், குணாலின் சகோ தரர் ராகுல் ஆகியோரும் அவ்விழாவில் பங்கேற்று பவுத்தத்தைத் தழுவி னார்கள்.
குஜராத் புத்திஸ்ட் அகாடமியின் செயலாளர் ரமேஷ் பாங்கர் கூறு கையில், “பவுத்தத்தால் ஈர்க்கப்பட்டு பவுத்தத் தைத் தழுவ விரும்பியவர் கள் 90 பேரைக்கொண்டு மதமாற்ற விழாவை நடத்தி உள்ளோம்.  இந்து மதம், முற்றிலும் மூட நம்பிக் கைகளைக் கொண்டுள் ளது. மேலும், ஜாதி அமைப்பு முறைகளைக் கொண்டு காலகாலமாக குறிப்பிட்ட வகுப்பினத்த வர்களைத் தீண்டத்தகாத வர்களாகவே நடத்தி வருவதாகும்’’ என்று குறிப் பிட்டார்.

.-விடுதலை,25.10.15

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக