பக்கங்கள்

ஞாயிறு, 30 அக்டோபர், 2016

காவல்துறையினர் பாதுகாப்புடன் கோயிலுக்கு சென்ற தாழ்த்தப்பட்டவர்கள்


திருவண்ணாமலை,அக்.28அர சமைப்புச்சட்டம் வலியுறுத்து கின்றசமத்துவத்தைநடை முறைப்படுத்தும்வகையில் கோயிலுக்குள் தாழ்த்தப்பட் டவர்களை அனுமதிக்கக் கோரி செய்யாறு வட்டம் நமாண்டி கிராமத்தில் உள்ள துலுக்கானத்தம்மன் கோயிலில் தாழ்த்தப்பட்டவர்கள்கிளர்ந் தெழுந்து கோயில் நுழைவுக் கான போராட்டத்தை நடத்தி யுள்ளார்கள்.

நமாண்டிகிராமம்,அரு கமை கிராமமான அரிகரப் பாக்கம் கிராமம் ஆகிய இரண்டுகிராமங்களின்எல் லைப்பகுதியில் அக்கோயில் அமைந்துள்ளது. நூற்றாண்டு களாக உள்ள அக்கோயிலுக்குள் தாழ்த்தப்பட்டவர்கள் செல் வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்த நிலையில், நமாண்டி கிராமத்தைச் சேர்ந்த துடிப்பான இளைஞர் பி.சுதாகர் மாவட்ட ஆட்சியரிடம்கடந்தஜூலை மாதத்தில் கோயில் நுழைவுக் கான உரிமை கோரியும், கோயிலுக்குள் சென்று வழி படுவதற்கு உதவுமாறும் கோரி இருந்தார்.

 

சமாதானக்கூட்டம்

அவர்கோரிக்கையை அடுத்து, செய்யாறு சார் ஆட் சியர் டி.பிரபுசங்கர் தலை மையில் கிராமப் பிரதிநிதிக ளுடன் சமாதானக் கூட்டம் நடைபெற்றது.

ஜாதியின்பெயரால்,எவர் ஒருவரின் அடிப்படை உரிமை களையும் யாரும் மறுப்பது கூடாது என்று கூட்டத்தில் தீர்மானம் ஆனது.

1988ஆம் ஆண்டு முதல் இந்து அறநிலையத்துறையின் நிர்வாகத்தின்கீழ்உள்ளதுலுக் கானத்தம்மன்கோயில்அந்த கிராமத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட பிரிவினருக்கு சொந்தமானது என்று உரிமை கோரி வந்துள் ளனர்.ஆகவே, அந்தகுறிப் பிட்ட பிரிவினருக்கு உரிமை யான நிலையை மாற்ற முடி யாது  என்று அவர்கள் தரப்பு கூறியதாக அலுவலர்கள் தெரி விக்கின்றனர்.

சமாதானப் பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையில் சுமுக தீர்வு எட்டப்படவில்லை. ஆகவே, அக்கோயிலுக்குள் சென்று வழிபட விரும்பும் தாழ்த்தப்பட்டவர்களுக்கு காவல்துறையின் பாதுகாப்பு வழங்குவதென அரசுத்துறை அலுவலர்கள் முடிவு செய் தார்கள்.அம்முடிவைஅடுத்து, துலுக்கானத்தம்மன் கோயி லில்சட்டவிரோதமாகபூட்டப் பட்டிருந்தகதவின் பூட்டு உடைக்கப்பட்டது. அதன் பின்னர்காவல்துறையினர், வருவாய்த்துறையினர், இந்துஅறநிலையத்துறை யின்அலுவலர்கள்ஆகியோர்  முன்னிலையில் தாழ்த்தப்பட் டவர்கள்வழிபடுவதற்காகஅக் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட் டார்கள்.

 

சுதந்திர உணர்வு பெற்றோம்

என்னுடன் படித்தவர்கள், மற்றவர்கள் வழிபடும்போது, அக்கோயிலுக்குள்சென்றுவழி படுவதற்குநாங்கள்செல்லும் போது தடுத்து நிறுத்தப்பட்டதால் பெரிதும் வேதனைக்குள்ளாகி இருந்தோம் என்று மெக்கானிக் சுதாகர் கூறுகிறார்.

மேலும் அவர் கூறும்போது,

“கோயில் திருவிழாக் காலங் களில் பல இடங்களிலிருந்தும் 10ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் வந்தாலும், கோயிலுக்குள் செல்ல முடியாமல் தடுத்து நிறுத்தப்பட்டு வந்த நிலை இருந்தது.

25.10.2016 அன்று கோயி லுக்குள்செல்லும்போதுஎங் களின் கண்களில் நீர் பெருக் கெடுத்து ஓடியது. அப்போதுதான் நாங்கள் சுதந்திரம் பெற்றதாக உணர்ந்தோம். அந்த நிலையை வார்த்தைகளால் விளக்கிவிட முடியாது. அரசுத்துறை அலு வலர்கள் எங்களுக்கு ஆதரவாக, கோயிலுக்குள் செல்வதற்கு எங்களுக்குபாதுகாப்புஅளித் தார்கள்.அவர்களுக்குஎங்கள் நன்றியைத் தெரிவித்துக்கொள்கி றோம்.

ஆனாலும்,26.10.2016பக லிலிருந்துகோயிலைச்சுற்றி யுள்ள பகுதியில் தாழ்த்தப்பட் டவர்கள்கோயிலுக்குள்செல் லக்கூடாது என்கிற கருத்தில் உள்ளவர்கள்பலரும்கூட்டம் கூட்டமாக கூடியிருந்ததால் பதற்றமானநிலைஏற்பட்டது. காவல்துறையினர் அப்பகுதி களில் இருப்பதால் பாதுகாப்பாக உணர்கிறோம்’’ என்றார்.

 

சார் ஆட்சியர்

சார் ஆட்சியர் பிரபு சங்கர் கூறும்போது,“நமாண்டிகிரா மத்தைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட வர்கள்கோயிலுக்குள்செல்வ தற்கான உதவியைக் கோரினார் கள்.ஆரம்பத்திலேயேசமூக நல்லிணக்கத்தைப்பேணிப் பாதுகாப்பதற்காகபிரச்சினையில் சுமுகத்தீர்வுகாணவிரும்பினோம். அதனால்,சமாதானக்கூட்டத்தைக் கூட்டினோம். அரிகரப்பாக்கத்தைச் சேர்ந்த வர்களைஅழைத்து தாழ்த்தப் பட்டவர்களைகோயிலுக்குள் செல்ல விடாமல் தடுப்பது ஏன்? என்று பதில் அளிக்கக்கோரினோம். ஆனால், இதுவரையிலும் அவர்கள் அசைந்துகொடுக்க முன்வரவில்லை. ஆகவே, சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்கிற அரசமைப்பின் உரிமையை நிறைவேற்றும் வகையில் எங்கள் கட மையை ஆற்றியுள்ளோம். நாங்கள் உரிய ஏற்பாடுகளை செய்யும்வரை தாழ்த்தப்பட்டவர்கள் சட்டத்தின் மீது நம்பிக்கை வைத்து மிகவும் அமைதியுடன் இருந்தார்கள்’’ என்றார்.

ஏற்கெனவே கோவில் தொடர்பாக இரு தரப்பினரிடையே செய்யாறு சார் ஆட்சியர் அலுவலகத்தில் சமாதானக் கூட்டம் நடத்தப்பட்டது. இதையடுத்து கடந்த 5ஆம் தேதி கோயிலை திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால் உள்ளாட்சி தேர்தல் அறி விக்கப்பட்டதால்,சட்டஒழுங்குபிரச்சி னையை தவிர்க்க கோயில் திறக்க வில்லை. இருப்பினும் நமண்டி கிராமத் தைச் சேர்ந்த ஒரு பிரிவினர் கோயிலை திறக்குமாறு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில் கோயில் பூட்டப்பட்டு 3 மாதங்களுக்குப் பிறகு காவல்துறை, வருவாய்த்துறை, இந்து சமய அறநிலையத்துறை உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகளால் திறக்கப்பட்டது.

மீண்டும் சீல்வைப்பு

கோயில்திறக்கப்பட்டதை எதிர்த்து அரிகரப்பாக்கம் கிராம மக்கள் இரு நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு  போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர் களிடம் மாவட்ட காவல்துறை கூடு தல் கண்காணிப்பாளர் ரங்கராஜன், வட்டாட்சியர் பெருமாள் ஆகியோர் பேச்சுவார்த்தைநடத்தினர்.பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப் படாத நிலையில், அரசுத் துறை அதிகாரிகளால் கோயிலுக்கு சீல் வைத்து பூட்ட முடிவெடுக்கப்பட்டது. அம்முடிவின்படி அறநிலையத்துறை ஆய்வாளர் ராஜா கோயிலை பூட்டி சீல் வைத்தார்.
-விடுதலை,28.10.16

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக