கொச்சி, நவ.3 கேரள மாநி லத்தில் திருவாங்கூர் தேவஸ் வம் சார்பில் யது கிருஷ்ணன் முதல் தாழ்த்தப்பட்ட அர்ச்ச கராக நியமிக்கப்பட்டார். அவரைத் தொடர்ந்து தற்போது கொச்சி தேவஸ்வத்தின் சார் பில் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவரான உமேஷ் கிருஷ் ணன் அர்ச்சகராக நியமிக்கப் பட்டுள்ளார்.
150 ஆண்டு கால மன்னபுரம் சிவன் கோயிலில் 22 வயது தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த யதுகிருஷ்ணன் திரு வாங்கூர் தேவஸ்தானத்தில் அர்ச்சகராக கடந்த மாதம் பணி நியமனம் செய்யப்பட்டார். திருவாங்கூர் தேவஸ்தான வாரி யத்தைத் தொடர்ந்து, கொச்சி தேவஸ்வம் ஜாதி தடைகளைத் தகர்த்து, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உமேஷ் கிருஷ்ணன் என்பவரை அர்ச்சக ராக நியமனம் செய்துள்ளது.
நிஜலிக்குளம் மகாதேவா கோயிலில் 1.11.2017 அன்று அர்ச்சகராக உமேஷ் கிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அன்று காலை 8 மணிக்கு அவர் தம் குடும்பத்தினருடன் கோயிலுக்குள் சென்றார். கொச்சி தேவஸ்வம் அலுவ லர்கள் மற்றும் ஊழியர்கள் அவர்களை வரவேற்றார்கள். அதன்பின்னர் தேவஸ்வம் அலுவலரால் பணி நியமன ஆணை உமேஷ் கிருஷ்ணனி டம் அளிக்கப்பட்டது. வருகைப் பதிவேட்டில் கையொப்ப மிட்டு, கோயிலின் அர்ச்சகர் பொறுப்பை உமேஷ் கிருஷ் ணன் ஏற்றுக்கொண்டார். அத னைத் தொடர்ந்து கோயிலின் சாவி ஏற்கெனவே பொறுப்பில் இருந்த அர்ச்சகரால் உமேஷ் கிருஷ்ணனிடம் ஒப்படைக்கப் பட்டது.
அர்ச்சகராகப் பொறுப் பேற்ற உமேஷ் கிருஷ்ணன் தன்னுடைய ஆசிரியர்கள் மற் றும் அனைவருக்கும் நன் றியைத் தெரிவித்துக் கொண் டார்.
சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் கே.யு.அருணன் கோயிலுக்கு நேரில் சென்று அர்ச்சகராகப் பொறுப்பேற்ற உமேஷ் கிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார். ஏராள மானவர்கள் கோயிலில் திரண்டு அர்ச்சகராக பொறுப் பேற்ற உமேஷ் கிருஷ்ணனுக்கு வாழ்த்து தெரிவித்தார்கள்.
தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உமேஷ் கிருஷ்ணன் மன்னாக்கட் கண்ணன் சாந்தி மற்றும் கன்னூர் இளையாவூர் தந்திரி பிரகாஷ் சர்மா ஆகி யோரிடம் Ôதந்திர சாஸ்த்திராÕ பயிற்சி பெற்று, கட்டூர் நந்தி லாத்துபறம்பு பகவதி கோயி லில் கடந்த 12 ஆண்டுகளாக பூஜைகளை செய்து வந்துள் ளார். தற்போது, கொச்சி தேவஸ் வத்தின் கட்டுப்பாட்டில் உள்ள நிஜலிக்குளம் மகாதேவா கோயிலில் முதல் தாழ்த்தப் பட்ட அர்ச்சகராகப் பொறுப் பேற்றுள்ளார் என்பது குறிப் பிடத்தக்கது.
நிஜலிக்குளம் மகாதேவா கோயிலில் அர்ச்சகராகப் பணி யாற்றி ஓய்வு பெறுகின்ற பி.என். பாலகிருஷ்ணன் எம் பிராந்திரியிடமிருந்து அர்ச்சகர் பொறுப்பை உமேஷ் கிருஷ்ணன் ஏற்றுக்கொண்டார்.
உமேஷ்கிருஷ்ணன் பெற்றோர், மனைவி, குழந் தைகள் மற்றும் குடும்பத்தைச் சேர்ந்த உறவினர்கள் வரலாற்று சிறப்புமிக்க அந்நிகழ்வில் உடனிருந்தார்கள்.
-விடுதலை நாளேடு, 3.11.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக