அய்தராபாத், நவ.11 தமிழ கத்தைபோல முசுலிம்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் தனியாக இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ் உறுதி அளித்துள்ளார்.
தெலங்கானா மாநில சட்டப் பேரவையின் குளிர்கால கூட்டத் தொடர் அய்தராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று கேள்வி நேரத்தின்போது, சிறுபான்மையினர் இடஒதுக் கீடு குறித்து பிரச்சினை எழுப் பப்பட்டது.
இதுகுறித்து முதல்வர் கே.சந்திரசேகர ராவ் பதிலளிக் கும்போது, “தமிழகத்தைப் போல, தெலங்கானா மாநிலத் திலும் முசுலிம்களுக்கு தனி யாக இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு ஒப்புதல் வழங்குமாறு மத்திய அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட் டத் தொடரின்போது இந்த விவகாரம் தொடர்பாக தெலங் கானா ராஷ்டிர சமிதி கட்சி எம்.பி.க்கள் போராடவும் தயா ராக உள்ளனர். கடந்த 10 ஆண்டுகால காங்கிரசு ஆட்சி யில் முசுலிம்களின் நலனுக்காக வெறும் ரூ.932 கோடி செலவு செய்யப்பட்டது. ஆனால் நாங்கள் ஆட்சிக்கு வந்த கடந்த மூன்றறை ஆண்டு காலத்தில் முசுலிம்களின் நலத் திட்டங் களுக்காக ரூ.2,146 கோடி செலவு செய்துள்ளோம்” என்றார்.
- விடுதலை நாளேடு,11.11.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக