பக்கங்கள்

திங்கள், 13 நவம்பர், 2017

வாகன நிறுத்துமிடத்தில் பெண்களுக்கு தனி இடஒதுக்கீடு

பெங்களூரு, அக்.30 கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள ஒரு முக்கிய சாலையில், வாகனம் நிறுத்துமிடத்தில், பெண்கள் வாக னங்கள் நிறுத்த, 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு,  அமலுக்கு வந்ததுள்ளது.

கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான, காங்., ஆட்சி நடக்கிறது. தலைநகர் பெங்களூருவில், போக்குவரத்து நெருக்கடி அதிகம் உள்ள, பிரிகேட் சாலையில், வாகனங்களை நிறுத்துவதில், பெரும் பிரச்சினை நிலவுகிறது. இதையடுத்து, பெண்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு, 20 சதவீத தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பெங்களூரு மாநகராட்சி மேயர் சம்பத்ராஜ் பேசியதாவது: வாகனம் நிறுத்து மிடத்தில், பெண்களுக்கு, 20 சதவீதம் தனி இடஒதுக்கீடு வழங்கும் வசதி, நாட்டிலேயே முதன் முறையாக, பிரிகேட் சாலையில் அமல் படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில், 22 கார்கள் நிறுத்த, இட வசதி உள்ளது. இதில், எட்டு முதல், 10 கார்களை நிறுத்த, பெண்களுக்கு மட்டும் வாய்ப்பளிக்கப்படும்.

இது போன்ற திட்டம், அனைத்து வாகன நிறுத்துமிடங்களிலும் கட்டாயமாக செயல்படுத் தப்படும். பேருந்து, ரயில் உட்பட பல பொது சேவைகளில், பெண்களுக்கு இடஒதுக்கீடு சலுகை அளிக்கப்பட்டுள்ளது போல, வாகன நிறுத்துமிடத்திலும் இடஒதுக்கீடு சலுகை அளிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.

- விடுதலை நாளேடு,30.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக