பக்கங்கள்

வியாழன், 9 நவம்பர், 2017

தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு அளித்தால்தான் அனுமதி: பீகார் முதல்வர் நிதிஷ்குமார்பாட்னா, நவ.9 தனியார் துறைகளிலும் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் வலியுறுத்தியுள்ளார்.


பீகார் மாநில முதல்வர் நிதிஷ்குமார் கூறுகையில்,  “தனி யார் துறைகளிலும் இட ஒதுக் கீடு வழங்கப்படுவதுகுறித்து தேசிய அளவிலான விவாதம் நடத்தப்பட வேண்டும் என்பது என்னுடைய கருத்தாகும்’’ என் றார்.  பாஜகவுடன் கூட்டணி யில் இருந்தபோதிலும், அய்க் கிய ஜனதா தளம் தலைவர் பீகார் மாநில முதல்வர்   நிதிஷ்குமார் மேலும் கூறுகையில், “இடஒதுக்கீடு தனியார் நிறுவ னங்களிலும் கட்டாயம் அளிக் கப்பட வேண்டும். தனியார் நிறுவனங்களில் பணியா ளர்கள் நியமனங்களில் இட ஒதுக்கீடு அளிப்பதை உறுதிப் படுத்தாமல் நிறுவனங்களுடன் ஒப்பந்தங் களில் கையெழுத்திடக்கூடாது’’ என்றார்.

தனியார் துறைகளில் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்ட மக் களுக்கு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீட்டை அளிக்க வலி யுறுத்தி அதற்கான சட்டத்தை இயற்ற வேண்டும் என்று தேசிய பிற்படுப்பட்டோருக் கான ஆணையம் பரிந்துரை செய்தது. இந்த ஆண்டின் தொடக்கத்தில் அதை மறுத்து விட்டதுடன், அதற்குரிய எவ்வித நடவடிக்கை களையும் எடுக்க முன்வர வில்லை. தனியார் துறைகளில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை கட்டாயம் அளிப்பதற்கான சட்டம் இயற்றப்பட வேண்டும் என்று தேசிய பிற்படுத்தப்பட் டோர் ஆணையம் கடந்த ஆண்டு பரிந்துரை செய்தது. வேலை வாய்ப்புகளில்   பிற் படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப் பட்டவர்கள், பழங்குடியினத் தவர் களுக்கு இடஒதுக்கீட்டை அளிப்பதற்கு தனியார் துறை கள், தாமாக முன்வர  வேண் டும் என்று உணவுத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ் வான் குறிப்பிட்டிருந்தார்
- விடுதலை நாளேடு,9.11.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக