திங்கள், 13 நவம்பர், 2017

பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ரூ.30 ஆயிரம் ஆந்திராவில் ஜனவரி முதல் அமல்

அமராவதி, அக்.30 பிற்படுத்தப்பட்டோர் (பிசி) வகுப்பைச் சேர்ந்த ஏழைப் பெண்களின் திருமணத்துக்கு ஆந்திர அரசு தலா ரூ. 30,000 வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரி 1ஆ-ம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. இதற்காக இந்த ஆண்டு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

ஆந்திர அரசு வரும் புத்தாண்டு பரிசாக, பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த ஏழைப் பெண்களின் திருமண திட்டத்தை அமல்படுத்த உள்ளது. இத்திட்டத்தின் கீழ், மணப்பெண்ணுக்கு திருமணத்தின்போது ரூ. 30,000 தொகைக்கான வங்கி வரைவோலை வழங்கப்பட உள்ளது. இதற்கான மணமகள், மணமகன் விவரங்களை பெற்றோரே ஆன்லைனில் பதிவு செய்யும் வசதி செய்யப்பட உள்ளது. வெள்ளை ரேசன் அட்டை கொண்ட அனைத்து பி.சி. வகுப்பினரும் இதற்கு தகுதியானவர்கள் என்றும், மணமக னுக்கு 21 வயதும் மணமகளுக்கு 18 வயதும் நிரம்பி இருத்தல் அவசியம் என்றும் அரசு தெரிவித்துள்ளது. இதற்கான அரசாணை அடுத்த மாதம் வெளியாகவுள்ளது. இந்தத் திட்டத்துக்காக ஆண்டுக்கு ரூ. 300 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப் படும் என்று ஆந்திர அரசு தெரிவித்துள்ளது.

இதன் மூலம் ஆண்டுக்கு 1 லட்சம் பேர் பயனடைய உள்ளதாக மாநில பிற்படுத்தப்பட் டோர் நல வாரியம் தெரிவித்துள்ளது.

- விடுதலை நாளேடு,30.10.17

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக