லக்னோ, நவ.2 பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தில் வேறு ஜாதி பெண்ணுடன் காதல் கொண்ட இளைஞர், அவர் குடும்பத்தினருக்கு நடுத்தெருவில் அவமரியாதை செய்யப்பட்ட அவலம் அரங்கேற்றப்பட் டுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிஜ்னோர் மாவட் டத்தில் இசுலாமாபாத் கிராமத்தில் ஓர் இளைஞர் வேறு ஜாதிப் பெண்ணை விரும்பினார். அதனால், அவ்விளை ஞரின் பெற்றோர், சகோதரர்கள் மூவர், ஒரு சகோதரி ஆகிய அத்துணைப் பேரையும் வீட்டைவிட்டு வெளியே இழுத்துவந்து, அவர்களுக்குச் செருப்பு மாலை அணி வித்து, இழிவுபடுத்தியுள்ளனர்.
அக்குடும்பத்தில் உள்ள இளைஞர் ஒருவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பாக, வேறு ஜாதிப் பெண்ணை விரும்பி, கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பாக அவர் களிருவரும் கிராமத்தைவிட்டு வெளியேறி திருமணம் செய்து கொண்டனர்.
அண்மையில் அவ்விளைஞரின் இளைய சகோதரர் அதே கிராமத்தைச் சேர்ந்த வேறு ஜாதிப்பெண்ணிடம் காதல்வயப்பட்டார். தகவல் அறிந்த இரு பெண்களின் குடும்பத்தினரும் சேர்ந்து இளைஞர்களின் குடும்பத் தினரைத் தாக்கியுள்ளனர். மேலும் அக்குடும்பத்தினரை வீட்டிலிருந்து வெளியே இழுத்துசென்று செருப்பு மாலைகளைப் போட்டு பொதுமக்கள் மத்தியில் அக் குடும்பத்தினரை இழிவுபடுத்தியுள்ளனர். அக்குடும்பத் தினரை இழிவுபடுத்தும் அவலத்தை காட்சிப்பதிவாக்கி, சமூக ஊடகங்களில் பதிவேற்றியுள்ளனர்.
உ.பி.யில் நடப்பது ராமராஜ்ஜியம் தானே!
ராமனின் செருப்பு 14 வருடம் ஆண்ட பகுதியில் என்ன தான் நடக்காது?
-விடுதலை நாளேடு, 2.11.17
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக