நாக்பூர், ஜூலை 21 நாக்பூர் நகர் சட்டமன்ற விடுதி அரங்கத்தில், நேற்று (20.7.2019) மகாராட்டிரம் மற்றும் அருகாமை மாநில பிற்படுத்தப் பட்டோர் அமைப்பின் தலைவர்களின் கூட்டம் பலிராஜ் தோத்தே, பிரதீப் தோப்லே ஆகியோர் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கலந்து கொண்டு, தற்போது பிற்படுத்தப்பட்டோர் எதிர் நோக்கியுள்ள பிரச்சினைகளை ஒன்றுபட்டு எதிர்த்திட வேண்டும் என்று கழகத்தின் வெளியுறவுச் செயலாளரும், அகில இந்திய பிற்படுத்தப்பட்டோர் ஊழியர் நலச் சங்கங்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளருமான கோ.கருணாநிதி வலியுறுத்தினார்.
தந்தை பெரியார், ஆசிரியர் நூல்கள் அளிப்பு
நேற்று (20.7.2019) அன்று நாக்பூர் நகரில், மகாராட்டிரா சட்டமன்ற மேலவை உறுப்பினர் திரு.பிரகாஷ் கஜ்பியீ அவர்களைச் சந்தித்து, தந்தை பெரியாரது நூல்கள், 69% இட ஒதுக்கீடு - ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய நூல்கள் அளிக்கப்பட்டன. மகிழ்வுடன் பெற்றுக் கொண்டார். தந்தை பெரியாரின் தொண்டினையும், திராவிடர் கழகத்தின் தொடர் செயல்பாடுகளையும் பாராட்டினர்.
- விடுதலை நாளேடு, 21.7.19
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக