சென்னை, ஜன.23 பொருளாதார ரீதியாக உயர்ஜாதியில் பின்தங்கியுள்ளவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு அளித்து அவசர அவசரமாக மத்திய பா.ஜ.க. அரசு சட்டத் திருத்தம் கொண்டு வந்து நிறைவேற்றியதோடு, உடனடியாக அமல் படுத்தவும் ஆணை பிறப்பித்து விட்டது.
இதனை எதிர்த்து நாடெங்கும் ஆர்ப்பாட்டங்களும், கடும் விமர்சனங்களும் எழுந்துள்ளன.
மத்திய அரசின் சட்டத் திருத்தத்தை எதிர்த்து திராவி டர் கழகத்தின் சார்பில், துணைத் தலைவர் கலி.பூங் குன்றன் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக் கினை நேற்று (22.1.2019) தாக்கல் செய்துள்ளார்.
நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம் பாலாஜி ஆகியோர் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. ஏற்கெனவே தி.மு.க. சார்பில் அதன் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி எம்.பி., மனு ஒன்றினைத் தாக்கல் செய்துள் ளார். அந்த வழக்குடன் திராவிடர் கழகத்தின் சார்பில் போடப்பட்டுள்ள இந்த வழக்கும் சேர்த்து விசாரிக்கப்படும்'' என்று நீதிபதிகள் கூறினர்.
இந்த வழக்குக்குப் பதில் அளிக்கும்படி மத்திய அரசுக்கு நீதிபதிகள் தாக்கீது பிறப்பித்துள்ளனர்.
உச்சநீதிமன்றத்தில்
இதேபோன்றதொரு வழக்கை உச்சநீதிமன்றத்திலும் வர்த்தகப் பிரமுகர் தெஹ்சீன் பூனாவல்லா என்பவரும் தொடுத்துள்ளார்.
- விடுதலை நாளேடு, 23.1.18
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக