பக்கங்கள்

வெள்ளி, 17 ஆகஸ்ட், 2018

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பினரில் வசதி படைத்தவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது: அரசு சார்பில் கருத்துபுதுடில்லி, ஆக. 17 அரசு பணி களில்எஸ்.சி., எஸ்.டி.வகுப் பினருக்கு பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்குவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் 12 ஆண்டுகளுக்கு முன்பு எம்.நாகராஜ் வழக்கில் ஒரு தீர்ப்பை வழங்கியது.

2006 ஆ-ம் ஆண்டு வழங்கிய இந்தத் தீர்ப்பில், எஸ்.சி., எஸ்.டி.,வகுப்பினரில்வசதி படைத்தவர்களுக்கு (கிரீமிலே யர்) அரசு பணி பதவி உயர்வில் இட ஒதுக்கீட்டின் பலனை வழங்க தேவை இல்லை என்று கூறப்பட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பை 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு மீண்டும் பரிசீலிக்க வேண்டுமா என்பது தொடர்பான விசாரணை, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதி பதி தீபக் மிஸ்ரா அமர்வு முன்பாக நடந்து வருகிறது.

2006- ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்புக்கு எதிராக இடைக்கால உத்தரவு எதுவும் பிறப்பிக்க முடியாது என உச்சநீதிமன்றம் கடந்த மாதம் 11- ஆம் தேதி மறுத்து விட்டது.

இந்நிலையில்அந்தவழக்கு உச்சநீதிமன்றத்தில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலை மையில் நீதிபதிகள் குரியன் ஜோசப், ஆர்.எப். நாரிமன், சஞ்சய் கிஷன் கவுல், இந்து மல்கோத்ரா ஆகியோரை கொண்ட அரசியல் சாசன அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது மத்திய அரசின் சார்பில் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் ஆஜ ரானார். அவர், இட ஒதுக்கீட்டின் பலனைஎஸ்.சி.,எஸ்.டி.வகுப் பினரில் பின்தங்கிய நிலையில் இருப்பவர்கள் பெறுவதை உறுதி செய்யும் வகையில், அந்த இனத்தினரில் வசதி படைத்தவர்களை விலக்கி வைக்கலாமா? என்ற கேள்விக் குப் பதில் அளித்து வாதாடினார்.

அப்போது அவர் கூறிய தாவது:-

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பி னரில் வசதி படைத்தவர்கள் என்பதால் இட ஒதுக்கீட்டின் பலனை மறுக்க முடியாது.

அப்படி அவர்களுக்கு இட ஒதுக்கீட்டின் பலன்களை மறுத்து, எந்தத் தீர்ப்பும் வழங் கப்பட்டது இல்லை.

அந்த வகுப்பினரில் குறிப் பிட்ட சிலர் வசதி படைத்த வர்களாக இருக்கலாம். ஆனால், ஜாதி மற்றும் பின்தங்கிய நிலை இன்னும் அவர்களுடன் சேர்ந்தே இருக்கிறது.

இட ஒதுக்கீட்டின் பலனை பெறுவதில் இருந்து எஸ்.சி., எஸ்.டி.,வகுப்பினரில்குறிப் பிட்ட பிரிவினரை விலக்கி வைக்கலாமாஎன்றகேள்விக் கானபதிலைகுடியரசுத் தலைவரும், நாடாளுமன்றமும் தான் முடிவு செய்ய முடியும். இதில் நீதித்துறையினருக்கு வேலை இல்லை.

எஸ்.சி., எஸ்.டி., வகுப்பைச் சேர்ந்தவர்கள், தங்கள் சொந்த ஜாதியில்தான் திருமணம் செய்ய வேண்டியது இருக்கிறது. அந்த வகுப்பினரில் நல்ல நிலையில் இருப்பவர்கள்கூட உயர் ஜாதியில் திருமணம் செய்ய முடியாது. இதில் உண்மை நிலை என்னவென்றால், ஒரு சிலர் வசதியான நிலைக்கு வந்து விட்டாலும்கூட, அவர்களது ஜாதியும், பின்தங்கிய நிலையும் அவர்களிடம் இருந்து நீங்கி விடுவது இல்லை. பாகுபாடு பார்க்கும் ஜாதி அமைப்பு நமது தேசத்தின் வாய்ப்புக்கேடானது.

இவ்வாறு அவர் வாதிட்டார்.

- விடுதலை நாளேடு 17.8 .18

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக