பக்கங்கள்

வெள்ளி, 11 ஜனவரி, 2019

பொதுப் பிரிவினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு

புதுடில்லி, ஜன.11 பொதுப்பிரிவு மக்களுக்கு கல்வி, வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக் கீடு வழங்குவதற்கான மசோதா நிறைவேற்றப்பட்டதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் பொதுநலன் வழக்கு தொடரப் பட்டுள்ளது. பொருளாதாரத்தில்பின்தங் கிய பொதுப்பிரிவு மக்களுக்கு கல்வி, அரசு வேலைவாய்ப் புகளில் 10 சதவீத இடஒதுக்கீடு செய்ய, மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இதைத் தொடர்ந்து, இதற்கான அரசியல் சாசன 124 ஆவது சட்டத் திருத்த மசோதாவை முதலில் மக்களவையில் தாக்கல் செய்து மத்திய அரசு நிறைவேற்றியது. இந்த மசோதா நேற்று முன் தினம் மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, திமுக, அதிமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றப்பட்டது. இது, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பி, சட்ட மாக அறிவிக்கப்பட உள்ளது.

இந்நிலையில், இந்த சட் டத்தை எதிர்த்து சமத்துவ இளைஞர்கள்சங்கம்சார்பில் உச்சநீதிமன்றத்தில்நேற்று பொதுநலன் வழக்கு தொடரப் பட்டுள்ளது. அதில்,முன்னேறிய பிரிவினருக்கு 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதா, இந்திய அரசியல் சாசன சட் டத்துக்குஎதிரானது.இது,இட ஒதுக்கீடுசட்ட அடிப்படையை மாற்றும் விதமாக உள்ளது. இந்த  மசோதா நிறை வேற்றப் பட்டதைரத்துசெய்துஉத்தர விட வேண்டும் என கூறப்பட்டுள் ளது. இந்த மனு விரைவில் விசா ரணைக்கு வரும் என தெரிகிறது.

-  விடுதலை நாளேடு, 11.1.19

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக